திங்கள், 25 மார்ச், 2013

மண்ணுரிமை அவசியம்!மண்ணுரிமை அவசியம்!

போராட்டங்கள் மூலம், 25 ஆயிரம் பழங்குடியினருக்கு, அவர்களின் நிலங்களை மீட்டு தந்துள்ள, சி.கே. ஜானு:நான், கேரள மாநிலம், முத்தங்கா காட்டுப் பகுதியின், பழங்குடி இனத்தை சேர்ந்தவள். வறுமையால் பள்ளிக்கு செல்லாமல், ஏழு வயதிலேயே விறுகு பொறுக்கும் வேலைக்கு சென்றேன். பல வேலைகள் செய்தாலும், மூணு வேளை கஞ்சிக்கு உத்திரவாதம் இல்லை.ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், சட்டப் பாதுகாப்புடன், மரங்களை கடத்த உருவாக்கப்பட்டது தான் வனத் துறை. வனத்தை பாதுகாக்க போகிறேன் என, காலம் காலமாய் குடியிருந்த பழங்குடிகளை நிர்கதியாக விரட்டியடித்து, வனத்தை அழித்து, மரங்களை வெட்டி, வனத் துறை மூலம் கடத்துவது, இன்னும் தொடர்கிறது.கேரளாவில், ஏழைகளின் தோழன் எனும் இடதுசாரி கட்சிக்கும், முதலாளிகளின் கைப்பாவையான காங்கிரஸ் கட்சிக்கும் கொள்கை வேறுபட்டானாலும், பழங்குடி மக்களை ஏமாற்றுவதில் வேறுபடவில்லை. 1992ம் ஆண்டு பழங்குடிகளை ஒன்றிணைத்து, நாங்கள் இழந்த எங்கள் மண்ணின் மீதான உரிமையை மீட்டெடுக்க, "கோத்ரா மகா சபை'யை உருவாக்கி, பல போராட்டங்கள் செய்தேன்.எங்களின் ஒற்றுமையை சீர்குலைக்க, அனைத்து கட்சிகளும் பழங்குடியினர் பிரிவை ஆரம்பித்து, பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபட்டனர். இதனால், அரசியல் கட்சிகள் எங்களை ஏமாற்றி, பிழைப்பு நடத்துவதை புரிந்து கொண்டேன்.

கடந்த, 2003ம் ஆண்டு, எங்களின் முத்தங்கா காட்டுப் பகுதியில், "இனிமேல் இதுதான் எங்கள் நிலம்' என்ற முழக்கத்தோடு போராடினேன். போலீசின் தாக்குதலால், ரத்தக் கறைகள் மட்டுமே கிடைத்தன. இறுதியாக திருவனந்தபுரத்தில் உள்ள, கேரள அரசின் தலைமை செயலகத்தை சுற்றி, 1,000 குடிசைகள் அமைத்து முற்றுகையிட்டோம்.போலீசின் கொடூர தாக்குதலை சமாளித்து, 48 நாட்கள் தொடர்ந்த போராட்டத்தால், இனி வேறு வழியில்லை என, கேரள அரசு பணிந்தது. 25 ஆயிரம் பழங்குடியினரின் இடங்களை மீட்டேன். நாங்கள் வாழும் வரையில், எங்கள் மண்ணின் மீதான உரிமையை, நிலை நாட்டினோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக