கருத்துகள்(10)
தமிழர்களுக்கு தனியாக ஒரு மாநிலம் அமைத்துக் கொடுக்கலாமே
இலங்கையில்? இந்தியாவில் தமிழ்நாடு என்று ஒரு மாநிலம் இருப்பதைப் போல
இலங்கையில் ஈழம் என்று ஒரு மாநிலம் அமைக்கலாமே? இலங்கை இப்போது சீனாவுடன்
கூட்டு சேர்ந்து கொண்டு இந்தியாவின் கண்ணில் விரலை விட்டு ஆட்டுகிறது.
இந்தியாவுக்கு தமிழர்களை சமாளிப்பதா இல்லை இலங்கையை ஆதரிப்பதா என்று
தெரியவில்லை. இந்திய ஆட்சியாளர்கள் எதிலுமே தெளிவில்லாமல் உள்ளனர். தெளிவாக
இது தான் எங்கள் நிலைப்பாடு என்று இலங்கையிடம் சொல்ல பயம்.
1. "வட இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்ட சிங்களர்களின்
உரிமைகளைப் பாதுகாப்பதில்தான் இந்தியா கவலை கொள்ள வேண்டும்''என்றும், "2500
ஆண்டுகளுக்கு முன்பு கலிங்கத்தில் இருந்து எட்டு குடும்பங்களாக அரிஹத்
மஹிந்தாவும் சங்கமித்ராவும் வந்த நிகழ்வை இப்போதும் இலங்கை கொண்டாடி
வருகிறது.அந்த வகையில் தற்போது இலங்கையில் உள்ள 75 சதவீத சிங்கள சமூகத்தின்
பூர்விகம் கலிங்கத்தையும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் இருந்தும்
உருவானதாக நம்பப்படுகிறது. இலங்கையில் உள்ள சிங்கள மக்கள் ஒடிசா, வங்கம்
ஆகியவற்றை பூர்விகமாகக் கொண்டவர்கள்." என்றும் இலங்கைத்காண டெல்லியில்உள்ள
அதன் தூதர் திரு.கரியவாஸம் அவர்களின் ஒப்புதல் வாக்குமூலம் தந்துள்ளது
ஈழதமிழர்களின் தனிதமிழ் ஈழ சுதந்திர நாடு கோரிக்கையை . முற்றிலும்
ஏற்புடையதாக்கு கிறதே! மேலும், "2500 ஆண்டுகளுக்கு முன்பு கலிங்கத்தில்
இருந்து எட்டு குடும்பங்களாக அரிஹத் மஹிந்தாவும் சங்கமித்ராவும் வந்த
நிகழ்வை இப்போதும் இலங்கை கொண்டாடி வருகிறது' என்றால் தமிழ்நாட்டின்
காலடியில் கிடக்கும்இஇலங்கை தீவில் கால் பதிக்க தமிழனுக்கு தடம்
தெரிந்திருக்கவில்லையா என்ன?
2. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், கடாரம் கொண்டான்/வென்றான்
மற்றும் , கங்கை கொண்ட சோழன் எனற பெயர்கள் காரணப்பெயர்களே. ஈழத்திலும் நம்
தமிழ் முன்னோர்கள் இருந்தனர்,வாழ்ந்திருருந்துவந்தனர் , அரசு
கொண்டிருந்தனர். ஐரோப்பிய காலணி ஆட்சியினர் இரு இன மக்களின் முடியாட்சி
காலத்தையும் முடிவுக்குகொண்டு வந்து இரு இன மக்களின் தனித்தனியான
பகுதிகளையும் ஒருங்கிணைத்து ஒரே நாடாக்கி காலணியட்சியை
வலுபடுத்திகொண்டனர.சுதந்திரத்துக்கு பின் ஒத்து வரவில்லை என்றால், அதாவது
ஐம்பது ஆண்டுக்கும் மேலாக, தர்ழ்களின் உரிமைகள் ஒருக்கபட்டு பிறகு
அவர்களும் தனி நாடு கேட்டு போராடி வருவதால், இனி இரு இன மக்களும் பிரிந்து
தனித்தனியே அவரவர் வரலாற்று படியான வாழ்விடங்களில் தனிதனி நாடு கொண்டு
வாழ்வதுதானே முறையும் அறமும் ஆகும். இன்னும் சொல்லபோனால் இலங்கைத் தூதர்
கரியவாஸம் சொல்லுவதைவிட மாறுபட்ட சிங்கள் குடியேற்ற வரலாறும் உண்டு-
அதுதான் இந்திய துணை கண்டத்தில் உள்ள தனது நாட்டிலிருந்து நாடு
கடத்தப்பட்டு படகில் தனது துணைகளுடன் தீவில் வந்திறங்கி குடியேறிய இளவரசன்
விஜயனின் வாரிசுகள்தான் சிங்களர்கள் என்று அவர்களின் புனித நூலான
3. மகாவம்சமே குறிப்புகளை தருகின்றது. இதை ஒட்டித்தான்
தீவு ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்றபின் சிங்கள அரசு இளவரசன்
விஜயனின் வருகையை கொண்டாடும் விதமாக ( commemorative )அஞ்சல்தலையை ( postal
stamp)வெளியிட்டிருந்தது. அதோட தனது கப்பல் படையின் விழாவில் ஒரு
கப்பலுக்கும் விஜயனின் பெயரை சூடி மகிழ்ந்தது. விஜயனின் வரலாறு
இழிவானதுஎன்பதால் திரு.காரியவாசம் இப்போது கலிங்கத்தில் இருந்து எட்டு
குடும்பங்களாக அரிஹத் மஹிந்தாவும் சங்கமித்ராவும் வந்த நிகழ்வை
முன்னிறுத்தி சொந்தம் பிடிக்கிறார். செய்யட்டும். ஆயினும் இவர்
முழுத்ர்தீவையும் சிங்களுர்க்கே எந்த ஒரு வகையிலும்சொந்தம் கொள்ள முடியாது.
தமிழரின் பகுதிகளை -தமிழ் ஈழத்தை- தமிழர்களுக்கே விட்டுவிடவேண்டும்.
இவரென்ன கரியவாசமா அல்லது இந்தியர்களின் முகத்தில் கரி பூசும் வாசமா ,இல்லை காதில் பூ சுற்றும் வாசமா
சிங்களர்களின் பூர்வீகம் வட இந்தியா: இலங்கை தூதரின் நச்சுப்பரப்புரை
பதிவு செய்த நாள் :
புதன்கிழமை, மார்ச் 27,
9:49 AM IST
புதுடெல்லி, மார்ச். 27-
ஜெனீவா ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் கடந்த 21-ந் தேதி இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கு முன்னதாக டெல்லியில் உள்ள இலங்கை தூதர் பிரசாத் கரியவாஸம் இலங்கைக்கு சாதகமான ஆதரவை இந்திய ஊடகங்கள் மூலம் பெறும் முயற்சியில் ஈடுபட்டார்.
`சிங்களர்கள் வட இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்கள்' என குறிப்பிட்டு அனுப்பிய இ-மெயில் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. அந்த இ-மெயில் தகவலில் 12 சதவீத தமிழ் மக்களுக்காக இந்தியா கவலை கொள்கிறது. ஆனால் இலங்கையில் உள்ள 75 சதவீத சிங்கள சமூகத்தினர் ஒடிசா மற்றும் வடஇந்தியா மாநிலங்களை சேர்ந்தவர்கள். அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில்தான் இந்தியா கவலைப்பட வேண்டும்'' என்று கூறியுள்ளார்.
பிரசாத் கரியவாஸத்தின் இ-மெயில் முகவரியில் இருந்து இலங்கையை தலைமையிடமாக கொண்ட தனியார் ஊடக மக்கள் தொடர்பு நிறுவனத்துக்கு கடந்த 19-ந்தேதி இந்த இ-மெயில் அனுப்பப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் மூலம் இந்த இ-மெயில் டெல்லியில் உள்ள ஊடக நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
வடநாட்டுத் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் பிரசாத் கரியவாஸம் ரகசிய பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இலங்கை தூதர் பிரசாத் கரியவாஸத்தின் விஷம பிரசார இ-மெயில் டெல்லியில் உள்ள ஊடகங்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.
இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாக தமிழ்நாட்டில் தீவிர போராட்டங்கள் நடந்து வரும் வேளையில் பிரசாத் கரியவாஸத்தின் விஷம பிரசாரம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் பணியாற்றும் வெளிநாட்டு தூதர்கள் உள்நாட்டு அரசியல் நடவடிக்கையில் பிரச்சினை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடக்கூடாது என்ற கட்டுப்பாடு நடைமுறையில் உள்ளது. அதையும் மீறி இலங்கை தூதர் பிரசாத்கரிய வாஸம் ரகசிய பிரசாரத்தில் ஈடுபட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

நாட்டின் மைந்தர்கள் தமிழர்கள் !!!!
|
அவன் சொன்னது உண்மை என்று
வைத்துகொண்டாலும் பிளைக்கபோனவந்தான் சிங்களன் என்பதை அவர்கள் வாயாலயே
ஒத்துகொண்டார்கள், எனவே குமரிகண்டம் முதல் இலங்கையை ஆண்ட தமிழர்களுக்கு
உடனடியாக அவர்கள் நாட்டை முழுவதுமாக திருப்பி தர வேண்டும்.
|
எப்போதுமே வந்தேறிகளால்தான் தமிழன் வஞ்சிக்க்படுகிரண் ,,,
|
இலங்கையிலிருந்து சுமார் ஆயிரம்
கிலோமீட்டருக்கு அப்பாலிருந்து வட இந்தியர்கள் இலங்கைக்கு குடி பெயர்ந்தனர்
என்றால் வெறும் இருபது கடல் மையிலுக்கு அப்பாலிருந்து தமிழன் வட
இந்தியர்களுக்கு முன்னால் இலங்கைக்கு குடி பெயர்ந்திருப்பான். ஆகையால்
இலங்கையில் தழர்களுக்கே முதலுரிமை வடக்கிலிருந்து வந்தவனுக்கு இருக்க
முடியாது.
|
சிங்களர்கள் வட இந்தியாவை
பூர்விகமாக கொண்டவர்கள் ஆகையால் இலங்கை என்று ஒரு தனி நாடு கிடையாது
இந்தியாவை சேர்ந்தது என்று ஒப்புக்கொள்ளுவார்களா சிங்களர்கள்.
|