வியாழன், 28 மார்ச், 2013

இலங்கைக்கு எதிரான தீர்மானம்: செயலலிதாவுக்கு வேல்முருகன் பாராட்டு

இலங்கைக்கு எதிரான தீர்மானம்: செயலலிதாவுக்கு வேல்முருகன் பாராட்டு
 
இலங்கைக்கு எதிரான தீர்மானம்: ஜெயலலிதாவுக்கு வேல்முருகன் பாராட்டு
புதுச்சேரி, மார்ச் 28-

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நட்புநாடு என்று நாடகமாடி இனப்படுகொலை நடத்தும் இலங்கையின் முகமூடியை கிழிக்க, தமிழீழம் அமைய இதுவரை எந்த ஆட்சியாளர்களும் செய்யாத, செய்யத் துணியாத நடவடிக்கைகள் தமிழக சட்டமன்றத்தில் முதல்-அமைச்சரால் நடந்துள்ளது.

தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு எடுக்க கோரி, சர்வதேச போர்க்குற்ற விசாரணை வேண்டி, இலங்கையின் மீதான பொருளாதார தடை விதிக்க மற்றும் இலங்கை நட்பு நாடு என்ற சொல்லினை இந்தியா இனி கைவிட வேண்டும் என்ற இன முழக்கங்களை வழங்கிய தமிழக முதல்-அமைச்சரை பாராட்டுகிறோம்.

தமிழர் உரிமை காக்க முதல்-அமைச்சர் எடுத்துள்ள முயற்சிகள் மற்றும் தன்னெழுச்சியான மாணவர்களின் எழுச்சி மற்றும் பொதுமக்களின் திரட்சி ஒரு புத்தொளியை தமிழினத்திற்கு தரும் என நம்புகிறோம். சாதி, சமய அரசியல் பேதங்களுக்கு அப்பால் தமிழர் அனைவரும் ஒன்றிணைந்து இனம் காக்க வேண்டிய தருணமிது.

தமிழக வாழ்வுரிமை கட்சி - அரசியல் மாச்சரியங்களை கடந்து முதல்வர் தமிழகத்தின் வளர்ச்சிக்கும், தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கும் எடுக்கின்ற ஒவ்வொரு முயற்சியையும் பாராட்டி நன்றி சொல்கிறது.

உதாரணத்திற்கு கெயில் நிறுவனத்திற்காக விவாசய நிலங்களை கையகப்படுத்தலைவிடுத்து, விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலன் காத்திட உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதையும், தமிழக தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதை தடுத்து நிறுத்திட நீர்வள ஆதாரத்தை பேணுவது உள்பட ஒட்டுமொத்த தமிழர்களின் வாழ்வுரிமைக்காக குரல் கொடுக்கும் தமிழக முதல்வருக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி என்றும் ஆதரவாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக