புதன், 27 மார்ச், 2013

நுண்ணூட்டச் சத்து!







நுண்ணூட்டச் சத்து!

நுண்ணூட்டச் சத்துகளின், தேவை மற்றும் முக்கியத்துவத்தை விளக்கும், மருத்துவர்வெங்கடேஷ் மன்னார்: நான், ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவன். சென்னை ஐ.ஐ.டி.,யின், முன்னாள் மாணவன். கனடா நாட்டின், "மைக்ரோ நியூட்ரியன்ட் இனிஷியேடிவ்' என்ற அமைப்பின் தலைவராகவும், வேதியியல் விஞ்ஞானியாகவும் உள்ளேன். நுண்ணூட்டச் சத்து குறைபாட்டை நீக்கும் பணியில், உலகம் முழுவதும் ஈடுபட்டுள்ளேன்.
புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்பு போன்ற சத்துகள், உடலின் மொத்த வளர்ச்சிக்கு அதிகம் தேவைப்படுவதால், அவற்றில் மட்டுமே, கவனம் செலுத்துகிறோம். ஆனால், தினசரி உணவில் மில்லி கிராம் அளவே தேவைப்படும், வைட்டமின் ஏ, இரும்புச் சத்து, போலிக் அமிலம், துத்தநாகம் போன்ற நுண்ணூட்டச் சத்துக்களை, சரியான விழிப்புணர்வு இன்றி சேர்க்காமல் போனால், மூளை வளர்ச்சியில் குறைபாடு, கண் பார்வை இழப்பு ஏற்படுகிறது.இக்குறையை நீக்க, அயோடின் மற்றும் இரும்புச் சத்துக்களை, உப்பில் கலந்து பயன்படுத்தும் நுட்பத்தை கண்டறிந்தேன். குழந்தை பிறந்து,ஒன்பது மாதங்கள் துவங்கி, வயதாகும் வரை, ஆரோக்கியமான மூளை வளர்ச்சிக்கு, அயோடின்கட்டாயம் தேவை.

நுண்ணூட்டச் சத்தை, குறைந்த அளவே பயன்படுத்தினாலும், மூளை வளர்ச்சியில் துவங்கி, எலும்புகளுக்கு வலிமை தருவது வரை, உடலின்முக்கிய உறுப்புகள் ஆரோக்கியமாக செயல்பட, இவை தான் முக்கியம். உதாரணமாக, உடலில் உள்ள திரவம் சீராக இயங்க, ரத்தத்தின், பி.எச்., அளவைகட்டுப்படுத்த, சோடிய மும்; உடல் முழுவதும் ஆக்சிஜனை கொண்டு செல்லும் ரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கு, இரும்புச்சத்தும்; இதயத்தின் துடிப்பு சீராக இருக்க மெக்னீசியமும்உதவுகிறது.தென்னிந்தியர்கள், உமி நீக்கிய, "பாலிஷ்' செய்யப்பட்ட வெள்ளை நிற அரிசியை உண்பதால், ஆப்ரிக்க மற்றும் வங்கதேசமக்களை விட, இக்குறைபாட்டால் அதிகம் பாதிக்கின்றனர்.இதனால் தமிழக அரசு, 2004ம் ஆண்டு முதல், பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவு திட்டத்தில் அயோடின், இரும்புச் சத்து கலந்த உப்பையே பயன்படுத்துகின்றனர்.













கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக