சனி, 30 மார்ச், 2013

இலங்கையில் முசுலிம்களுக்கு எதிராகப் புத்தமதத்தினர் கலவரம்

இலங்கையில் முசுலிம்களுக்கு எதிராக ப் புத்தமதத்தினர் கலவரம்
இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக புத்தமதத்தினர் கலவரம்
கொழும்பு, மார்ச் 30-

உலகத்திற்கே அமைதியைப் போதித்த புத்தரின் கோட்பாடுகளைப் பின்பற்றும் புத்த மதத்தினர், தற்போது வன்முறையில் ஈடுபடத்துவங்கியுள்ளனர். மியான்மரில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறைகள் தற்போது அதிகரிக்கத் துவங்கியுள்ளன.

இந்நிலையில், வியாழன் அன்று இரவு, இலங்கையின் தலைநகரான கொழும்புக்கு அருகே உள்ள பெப்பிலியானா என்ற இடத்தில், முஸ்லிம் ஒருவரின் கடை அடித்து நொறுக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இதில் பலர் காயமடைந்துள்ளதாகவும், பல வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.

பொது பால சேனா என்ற புத்தப்படைப் பிரிவினர், முஸ்லிம் மக்கள் ஹலால் என்ற முத்திரையை உணவுப்பொருட்களின் மீது பயன்படுத்துவதைத் தடைசெய்யக் கோரி வந்தனர். 20 மில்லியன் மக்கள்தொகையில் 10 சதவிகிதத்தினரே முஸ்லிம் என்பதால் மற்றவர்களை இது அவமதிப்பதாகும் என்பது இப்பிரிவினரின் கருத்தாகும்.

எனவே, இந்த சம்பவத்தில் அவர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்ற யூகங்கள் எழுந்தன. ஆனால், ஞானசேகரா என்ற இப்பிரிவின் தலைவர் இதனை மறுத்துள்ளார்.முஸ்லிம்களின் தீவிரப்பற்றினைத்தாம் தாங்கள் எதிர்ப்பதாகவும், மக்களை அல்ல என்றும் தெரிவித்தார்.

இது எதேச்சையாக நடந்த ஒரு விஷயம் என்றும், மற்றொரு இனக்கலவரத்தைத் தாங்கள் விரும்பவில்லை என்றும் அவர் கூறினார்.  இலங்கையின் காவல்துறையினரும், சிறப்புப் படைப்பிரிவினரும் நிலைமையைக்கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக