செவ்வாய், 26 மார்ச், 2013

மனைவி-மகளுடன் சரண் அடைய வந்தவரை த் தீவிரவாதி என்பதா?: உமர் அப்துல்லா

மனைவி-மகளுடன் சரண் அடைய வந்தவரை த் தீவிரவாதி என்பதா?: உமர் அப்துல்லா
மனைவி-மகளுடன் சரண் அடைய வந்தவரை தீவிரவாதி என்பதா?: உமர் அப்துல்லா
சம்மு, மார்ச்சு. 26-

சம்மு-காசுமீர் மாநில முதல் மந்திரி உமல் அப்துல்லா, இன்று மத்திய அரசை கடுமையாக தாக்கி கருத்து தெரிவித்துள்ளார்.

ஜம்முவில் செய்தியாளர்களிடையே பேசிய அவர் கூறியதாவது:-

டெல்லியில் கைது செய்யப்பட்ட லியாகத் அலி ஷா, டெல்லியில் உள்ள வணிக வளாகத்தினுள் தாக்குதல் நடத்தும் நோக்கத்தில் வந்ததாக டெல்லி போலீசார் கூறுகின்றனர்.

இந்த கூற்றை காஷ்மீர் போலீசார் மறுக்கின்றனர். போராளிகள் மறுவாழ்வு திட்டத்தின்படி, மாநில போலீசாரிடம் முன் அனுமதி பெற்று சரணடைய வந்ததாக எங்கள் மாநில போலீசார் நம்புகின்றனர்.

தீவிரவாத தாக்குதல் நடத்த வரும் நபர், குடும்பத்தையும் உடன் அழைத்துக் கொண்டு வருவாரா? என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

லியாகத் அலி ஷா தீவிரவாத தாக்குதல் நடத்துவதற்காக டெல்லிக்கு வரவில்லை. அவர் கையில் துப்பாக்கியை பிடித்துக்கொண்டு வரவில்லை... மாறாக, தனது மனைவி மற்றும் மகளின் கரங்களை பிடித்துக் கொண்டு வந்துள்ளார்.

ஜம்மு, காஷ்மீரில் தாக்கம் ஏற்படுத்தும் என தெரிந்திருந்தும் அப்சல் குருவை தூக்கிலிட துணிந்த மத்திய அரசு, அதே துணிச்சலுடன் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டு வரும் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகார சட்டத்தையும் ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக