ஞாயிறு, 24 மார்ச், 2013

இந்தியாவின் ஒளி ஓவிய க் கலைஞர் செசுவின் ரெபெல்லோ...:-எல்.முருகராசு.

இந்தியாவின் ஒரே ஓர் ஒளி ஓவிய க் கலைஞர்  செசுவின் ரெபெல்லோ...:-எல்.முருகராசு.


கோவையில் புகைப்பட பள்ளி நடத்திவருபவர் லோகநாதன்.,இவரை ஒரு முறை பேட்டி காணச் சென்ற போது,எனது மாணவர் ஒருவர் இருக்கிறார், சின்ன வயதுதான்(23) மிகவும் வித்தியாசமான கலைஞர்,அவரைப்பற்றி எழுதுங்களேன் என்றார்.

அந்த வித்தியாசமான கலைஞர்தான் ஜெஸ்வின் ரெபெல்லோ.

அவரிடம் போனில் பேசி நீங்கள் எடுத்த படங்களை என் பார்வைக்கு "மெயில்' செய்யுங்களேன் என்றேன், அதன்படி அவரும் சில படங்களை அனுப்பிவைத்தார்.

படங்கள் அனைத்தும் வித்தியாசமாக இருந்தாலும் அதன் தொழில்நுட்பம் புரியவில்லை,அது பற்றி அவரிடம் கேட்டபோது அவர் தந்த விளக்கம் மேலும் குழப்பத்தையே ஏற்படுத்தியது.சரி அடுத்த வாரம் வருகிறேன் இந்த புகைப்படக்கலை பற்றி ஒரு நேர்முக விளக்கம் கொடுக்கமுடியுமா என்று கேட்டபோது,தாரளமாக என்றார்.

அதன்படி கோவை போயிருந்தபோது இரவு பத்து மணிக்கு மேல் அவருடனான சந்திப்பு நிகழ்ந்தது.ஒரு பையில் கேமிரா சாதனாங்களும்,இன்னோரு பையில் வித,விதமான விளக்குகள்,நிறைய மின் வயர்கள் என்று ஒரு நவீன "எலக்ட்ரீசியன்' போல உற்சாகமாக அறிமுகமானார்.

அதன் பிறகு அவர் தந்த நேர்முக விளக்கங்கள் பிரமாண்டமாக இருந்தது.

நல்ல திறந்தவெளி இருட்டில் இவர் கற்பனை செய்து வைத்திருக்கும் விஷயத்தை வித்தியாசமான விளக்குகளை சுழலவைத்து,ஆடவைத்து,உருவங்களின் மீது ஒடவைத்து படம் எடுக்கிறார்.ஒரு படம் எடுக்கு மூன்று மணி நேரமுமாகலாம்,மூன்று நாட்களும் கூட ஆகலாம்.

ஒளி ஒவியம் (லைட் பெயின்டிங்)என்றழைக்கப்படும் இது போன்ற 80 புகைப்படங்களை இவர் எடுத்துவைத்துள்ளார்.உலகம் முழுவதிலும் இந்த ஒளி ஒவியத்தை மட்டுமே எடுக்கும் புகைப்படக்கலைஞர்கள் நிறைய பேர் உள்ளனர்,அவர்களில் சிறந்தவர்கள் என்று 73 பேரை பட்டியலிட்டு அவர்களது புகைப்படங்களை மும்பையில் கண்காட்சியாக வைத்திருந்தனர். இந்த கண்காட்சியில் இடம் பெற்ற ஒரே இந்திய ஒளி ஒவிய படம் ஜெஸ்வினுடையது மட்டுமே.

இவரது புகைப்படங்களை பார்த்த கண்காட்சி ஏற்பாட்டாளர்கள், நேரில் வந்து, உலகம் முழுவதிலும் இருந்து வந்துள்ள பார்வையாளர்களுக்கு "டெமோ' கொடுக்கும்படி அழைத்திருந்தனர்,ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக இவரால் போகமுடியாமல் போய்விட்டது.

நான் இந்த ஒளி ஒவியம் என்று சொல்லக்கூடிய புகைப்படங்களை பற்றி தற்செயலாக இணையதளத்தில் படித்ததும் பிடித்துப்போனது,இது போன்ற புகைப்படங்களை எடுப்பதில் மனது சந்தோஷப்படுகிறது.யாராலும் செய்யமுடியாததை செய்கிறேன் எனும்போது மனசு பெருமிதமும் படுகிறது.இது முழுக்க,முழுக்க எனது மனத்திருப்திக்காக மட்டுமே எடுக்கிறேன் என்றார்.

உங்களது தொழிலுக்கு இடையூறு இல்லாமல் இந்த வித்தியாசமாக புகைப்படங்களை கண்காட்சியாக மக்களிடம் கொண்டு செல்லுங்கள் என்று கூறி வாழ்த்தினேன்.,வாழ்த்த விரும்புபவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்:9944252470.

முக்கிய குறிப்பு:ஜெஸ்வின் ரெபெல்லோவின் புகைப்படங்களை காண சிவப்பு பட்டையில் உள்ள போட்டோ கேலரி பகுதியை கிளிக் செய்யவும்.

 
 


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக