வியாழன், 28 மார்ச், 2013

நேர்ச்சி(விபத்து)களில் சிக்குபவர்களுக்கு இலவசப் பண்டுவம்: மத்திய மந்திரி

நேர்ச்சி(விபத்து)களில் சிக்குபவர்களுக்கு இலவச ப் பண்டுவம்: மத்திய மந்திரி
விபத்துக்களில் சிக்குபவர்களுக்கு இலவச சிகிச்சை: மத்திய மந்திரி
புதுடெல்லி, மார்ச் 28:-

சாலை விபத்துக்குள்ளாகும் நபர்களுக்கு எல்லா ஆஸ்பத்திரிகளுக்கும் இலவச சிகிச்சையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. மத்திய சாலை போக்குவரத்து அமைச்சம் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. லோம்பார்ட் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கும் இடையே இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சமீபத்தில் கையொப்பமாகி உள்ளது.

சாலை விபத்துக்களை பொருத்த வரையில் விபத்து நடத்த பின்னர் முதல் ஒரு மணி நேரம் என்பது உயிரை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிற்து என்பதால் சோதனை முயற்சியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி சி.பி.ஜோஷி கூறியுள்ளார்.

இந்த புதிய ஒப்பந்தத்தின்படி விபத்து நடந்த இடத்திற்கு வந்து காயமடைந்தவர்களை அருகாமையில் உள்ள ஆஸ்பத்திரிகளில் அனுமதிப்பது, அடுத்த 48 மணி நேரம் வரையிலான சிகிச்சை செலவுகளை ஏற்றுக் கொள்வது உள்ளிட்ட முதலுதவி பணிகளை இன்சூரன்ஸ் நிறுவனம் ஏற்றுக் கொள்ளும்.

இந்த திட்டத்திற்காக ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகையைக் கொண்டு உயிர்காக்கும் உபகரணங்களுடன் கூடிய ஆம்புலன்ஸ், மருத்து பணியாளர்கள், தகவல் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்ட முதல்கட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.

முதல்முறையாக குர்கான்-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் மட்டும் அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்த திட்டம் படிப்படியாக அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக