செவ்வாய், 15 ஜனவரி, 2013

உ.த.ஆ.நி.- தேசியக் கருத்தரங்கம் - அயல்நாட்டுத்தமிழ் இலக்கியங்கள்

உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்

தேசியக் கருத்தரங்கம்
( 2013 பிப்ரவரி 14, 15 )
அயல்நாட்டுத் தமிழ் இலக்கியங்கள்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சிறப்புமிக்க தமிழ் உயராய்வு மையமாகச் செயல்பட்டு வருகின்றது. இந்நிறுவனத்தில் செயல்பட்டுவரும் புலங்களில் ஒன்று அயல்நாட்டுத் தமிழர் புலம். பல்வேறு நாடுகளில் வாழ்ந்துவரும் தமிழர்களைப் பற்றிய முழுமையான தகவல்களைச் சேகரித்துப் பராமரிப்பதும் அவர்கள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளுதலும் இப்புலத்தின் முக்கிய நோக்கங்களாகும்.

நிறுவனப் பணிகளின் தொடர்ச்சியாக இப்புலம் அயல்நாட்டுத் தமிழ் இலக்கியங்கள் எனும் பொருண்மையில் இரண்டு நாள் தேசியக் கருத்தரங்கினை 2013 ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 14, 15 ஆகிய நாட்களில் நடத்தத் திட்டமிட்டுள்ளது. தேசியக் கருத்தரங்கத் தொடக்கவிழா மற்றும் நிறைவு விழா உள்ளிட்டு 6 அமர்வுகளாக நடத்தப்படும் இக்கருத்தரங்கின் கட்டுரைகள் தொகுப்பாக இந்நிறுவன வெளியீடாகக் கருத்தரங்க நாளன்று வெளியிடப்படும். இக்கருத்தரங்கில் பங்கேற்கும் பேராளர்களின் கட்டுரைகளுக்கு மதிப்பூதியம், நாள்படி( ஆய்வுக் கட்டுரை வழங்கும் நாள்களுக்கு மட்டும் ) வழங்கப்படும்.

கீழ்க்காணும் ஏதாவது ஒரு பொருண்மையில் இக்கருத்தரங்கில் அளிக்கப்பெறும் ஆய்வுக் கட்டுரைகளை அமைத்து வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    அயலகத் தமிழரும் தமிழ் இலக்கியப் படைப்புகளும்

    அயல்நாட்டுத் தமிழ்ப் படைப்பாளிகள்

    அயலகத் தமிழ் இலக்கிய வரலாறு

    அயலகத் தமிழ் இலக்கியமும் சமூகமும்

    அயலகத் தமிழர்களின் இணையதள இலக்கியப் படைப்புகள்

    அயலகத் தமிழ் இலக்கியங்களில் மொழிநடை

    அயலகத் தமிழர் படைப்பிலக்கியங்களின் பரவலாக்கமும் மொழிபெயர்ப்பும்

தங்களது பங்கேற்பு இசைவினை உடனே தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

கட்டுரையாளர்கள் கவனத்திற்கு

    ஆய்வுக் கட்டுரை வந்து சேரவேண்டிய இறுதி நாள் 28.01.2013

    ஆய்வுக் கட்டுரைகள் தமிழ் (அ) ஆங்கிலத்தில் அமையலாம்.

    ஆய்வுக் கட்டுரைகள் தமிழ் எழுத்து வடிவம் டேம் பாண்ட்ஸ் ( Tam Fonts ) இல் அமைய வேண்டும்.

    பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், படைப்பாளிகள், மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் கட்டுரை அனுப்பலாம்.

    கருத்தரங்கத் தேர்வுக் குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் மட்டுமே கருத்தரங்க ஆய்வுக் கோவையில் வெளியிடப்படும்.

    கட்டுரைகளை kchiling@yahoo.co.in என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

கட்டுரைகள் அனுப்பவேண்டிய முகவரி

முனைவர் கு.சிதம்பரம்
முதுநிலை ஆராய்ச்சியாளர்
அயல் நாட்டுத் தமிழர் புலம்.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
தரமணி, சென்னை 600113
மின்-அஞ்சல் - kchiling@yahoo.co.in
கைபேசி 9500106269

கருத்தரங்கத் தலைவர்
முனைவர் கோ.விசயராகவன்
இயக்குநர்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
தரமணி, சென்னை 600113
                கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர்கள்    
முனைவர் மு.வளர்மதி
இணைப் பேராசிரியர்
அயல் நாட்டுத் தமிழர் புலம். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தரமணி, சென்னை 600113
கைபேசி - 9840119610          முனைவர் கு.சிதம்பரம்
முதுநிலை ஆராய்ச்சியாளர்
அயல் நாட்டுத் தமிழர் புலம்.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தரமணி, சென்னை 600113
கைபேசி - 9500106269          முனைவர் து.ஜானகி
முதுநிலை ஆராய்ச்சியாளர்
அயல் நாட்டுத் தமிழர் புலம்.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தரமணி, சென்னை 600113
கைபேசி - 9500012272
                               
                               
                               
                               
                               
                                http://www.ulakaththamizh.org/20130214_Diaspora_Tamil_Literature.aspx

                               
                               
                                                               
                                               

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக