பெண்களுக்கு எதிரான குற்றங்களை த் தடுக்க கேரளா புது ச் சட்டம்
திருவனந்தபுரம்: பாலியல் பலாத்காரத்தால், பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை
செய்தால், அதற்கு காரணமான குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும்,
புது சட்டம், கேரளாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.கேரளாவில், பெண்களுக்கு
எதிரான குற்றங்களில் ஈடுபடுவோரை தண்டிக்கும் வகையில், சட்டத்தை கடுமையாக்க
முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, பொது இடங்களில், பெண்களை கேலி
செய்தல்; வாகனங்களிலோ, நிகழ்ச்சிகளிலோ, அருகே அமர்ந்துள்ள பெண்ணை
தொடுவது; சில்மிஷம், அவமரியாதை செய்வது போன்றவை, இனிமேல்
குற்றச்செயல்களாக கருதப்படும்.இவற்றிற்கு, ஏழு ஆண்டுகள் வரை, கடுங்காவல்
தண்டனை அளிக்கும் வகையில், புதிய சட்ட மசோதா தயாரிக்கப்பட்டு உள்ளது.
மேலும், உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ, பெண் பாதிக்கப்பட்டு, தற்கொலை
செய்து கொண்டாலோ, இறக்க நேரிட்டாலோ, குற்றவாளிக்கு, அதிகபட்சமாக தூக்கு
தண்டனை விதிக்கப்படும்.மேலும், மொபைல்போனை பயன்படுத்தி, பெண்களை
அவமானப்படுத்துதல், தொந்தரவு செய்தல், ஆபாச, எஸ்.எம்.எஸ்., அனுப்புதல்,
படமெடுத்தல் போன்றவற்றிற்கும், அதிகபட்சமாக, ஆயுள் தண்டனை விதிக்கும்
வகையில், சட்டம் கொண்டு வரப்பட உள்ளது.இதற்கான மசோதா, கேரள மாநில
சட்டசபையின், அடுத்த கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக