புதன், 16 ஜனவரி, 2013

இலங்கையில் கேள்விக்குறியாகும் நீதித்துறை

இலங்கையில் கேள்விக்குறியாகும் நீதித்துறை:  பன்னாட்டு நீதித்துறை ஆணைக்குழு கவலை

இலங்கையில் தலைமை நீதிபதி மீது குற்றம் சாட்டி அவர் பதவி விலக்கப்பட்ட பின்னர், புதிய நீதிபதியாக மொஹான் பீரிஸ் நியமிக்கப்பட்டார். அவரது நியமனம் குறித்து சந்தேகம் எழுப்பியுள்ள சர்வதேச நீதித்துறை ஆணைக்குழு, இந்தச் சம்பவம் இலங்கையின் நீதித்துறையைக் கேள்விக் குறியாக்கியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. 
மொஹான் பீரிஸ் முன்னர் இலங்கையில் நீதித்துறையில் பல்வேறு பதவிகளையும் வகித்துள்ளார். இருந்தாலும், அவர் ஆளும் அரசைப் பாதுகாப்பதில் முக்கியக் கூட்டாளியாகச் செயல்பட்டவர். இலங்கையில் சட்டத்துறை அதிகாரியாகவும், இலங்கை அதிபரின் சட்ட ஆலோசகராகவும் இருந்துள்ளார். அந்தக் காலங்களில், இலங்கை அரசுக்கு எதிராகக் கூறப்பட்ட மனித உரிமை மீறல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் இருந்து அரசைக் காப்பதில் முக்கியப் பங்கு வகித்துள்ளார். இப்படிப்பட்ட பின்னணி உள்ள ஒருவர், இலங்கை நீதித்துறைக்கு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டது இலங்கை நீதித்துறைக்கே பெரிய சவால் என்றும், பின்னடைவு என்றும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக