வியாழன், 17 ஜனவரி, 2013

3,500 ஆண்டுகளுக்கு முன்பே ஏறுதழுவல்


3,500 ஆண்டுகளுக்கு முன்பே சல்லிக்கட்டு: நீலகிரி பாறை ஓவியங்களில் ஆதாரம்


ஊட்டி: ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு, 3,500 ஆண்டுகளுக்கு முன்பே நடந்ததற்கான ஆதாரங்கள், நீலகிரியில் உள்ள பாறை ஓவியங்களில் காணப்படுகின்றன.நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில், பழங்கால மனிதர்களின் வாழ்க்கை முறை, கலாசாரம், பாரம்பரியம் குறித்த சான்றுகள், பாறை ஓவியங்களிலும், வரலாற்று சின்னங்களிலும் காணப்படுகின்றன. இதை, பல தொல்லியல் ஆய்வாளர்களும் உறுதிபடுத்தியுள்ளனர். கோத்தகிரி, கரிக்கையூர் பொரிவரை; தெங்குமரஹாடா வனங்கப்பள்ளம்; ஊட்டி அருகே இடுஹட்டி, கொணவக்கரை மற்றும் வெள்ளரிக்கம்பை; மசினகுடி அருகே சீகூர் பகுதிகளில், பல்வேறு கால கட்டங்களில், மனித வாழ்க்கை குறித்த வரலாற்று ஆதாரங்கள், பாறை ஓவியங்களாக காட்சியளிக்கின்றன.கோத்தகிரி, கரிக்கையூர் பகுதியில் உள்ள பாறைகளில், 3,500 ஆண்டுகளுக்கு முன், மனிதர்கள், கால்நடைகளுடன் வாழ்ந்ததற்கான ஆதாரங்களும், ஜல்லிக்கட்டு குறித்த ஆதாரங்களும் உள்ளன.ஊட்டியை சேர்ந்த, தொல்லியல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் கூறியதாவது:நீலகிரி மாவட்டத்தின் பல இடங்களில், பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன. இதில், கரிக்கையூர், பொரிவரை பகுதிகளில் காணப்படும் ஓவியங்கள், இடை கற்காலத்தை சேர்ந்தவை. கால்நடைகளுடன் மனிதன் நடத்திய வீர விளையாட்டு குறித்த ஆதாரங்கள் இங்குள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

1 கருத்து:

  1. அருமையான படம்.
    இப்படங்கள் நன்கு பாதுகாக்கப்படவேண்டியன.
    அன்புடன்
    நாக.இளங்கோவன்

    பதிலளிநீக்கு