வியாழன், 17 ஜனவரி, 2013

குழந்தைகளுக்குச் சேமிப்பைக் கற்றுக் கொடுங்கள்!


சொல்கிறார்கள்

குழந்தைகளுக்கு ச் சேமிப்பை ்றக் ள்!


பினான்சியல் பிளானர் பி.பத்மநாபன்: இன்றைய இளைய தலைமுறை, இ.எம்.ஐ., லேயே வாழ விரும்பும் தலைமுறையா மாறிக்கிட்டிருக்கு. 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் போது, இ.எம்.ஐ.,ல ஒரு பிளாட் வாங்குறாங்க. அடுத்து, சம்பளம், ஒரு லட்சம் ரூபாய் ஆகும் போது, அடுத்த, இ.எம்.ஐ., போட்டு, இன்னொரு பிளாட் வாங்குறாங்க. இவங்களுக்கு, பணத்தோட, "வேல்யூ'வும் தெரியறதில்லை; பொருளோட, "வேல்யூ'வும் தெரியறதில்லை. இதுக் கெல்லாம் முதன்மையான காரணம், பெத்தவங்க தான். உங்க குழந்தைக்கு, சின்ன வயசிலேயே, பணத்தை எப்படி சேமிக்கிறதுங்கிறதைக் கத்துக் கொடுங்க. அவங்க கேட்பதையெல்லாம் வாங்கித் தராதீங்க. வளர வளர, உங்க சம்பளத்தை, எந்த விஷயத்துக்கெல்லாம் செலவு செய்றீங்கன்னு சொல்லி, புரிய வைங்க. ஒரு அரசன்கிட்ட, புலவர் ஒருத்தர் வந்து, அரசனை புகழ்ந்து பாடறார். புலவரோட பாடல்ல மயங்கின அரசன், புலவர்கிட்ட, "என்ன வேணும்னாலும் கேளு; செய்றேன்'னு சொல்றார். புலவரோ, "சதுரங்க கட்டத்துல இருக்கிற கட்டங்கள் எத்தனை யோ, அத்தனை நெல் மணிகள் கொடுத்தா போதும்'னு கேட்கிறார். அரசரும், கொடுக்க ஏற்பாடு செய்கிறார். இரண்டாவது கட்டத்துக்கு, இரண்டோட மடங்கான, நாலு நெல்மணிகளை கேட்கிறார். மூன்றாவது கட்டத்துக்கு, நாலோட மடங்கான, பதினாறு நெல்மணிகளை கேட்கிறார். இப்படியே எண்ணிக்கை அதிகமாயிட்டே போகுது. 64வது கட்டத்துக்கு வந்த போது, நாட்டிலேயே அவ்வளவு நெல் இல்லைங்கிற நிலை ஏற்படுது. சேமிப்பு எப்படி பெருகும்கறதுக்கு, உதாரணமா, பொருளாதார நிபுணர்கள் சொல்ற கதை இது. எல்லா பெற்றோரும் தங்களோட குழந்தைகளுக்கு கட்டாயம் சொல்ல வேண்டிய கதையும் கூட! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக