திங்கள், 14 ஜனவரி, 2013

மஞ்சு விரட்டில் அரசு கவனம் செலுத்துமா?


சல்லிக்கட்டுக்கு அரசு கவனம் செலுத்துமா?

 
ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச் சங்க செயலர் ஒண்டிராஜா: தமிழகத்தில், அதிக அளவில் ஜல்லிக்கட்டு நடந்து வந்த மாவட்டங்களில், தற்போது, சில இடங்களில் மட்டும், ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.ஜல்லிக்கட்டு நடத்த, பெரிய ஊர்களுக்கு, 5 லட்சம்; சிறிய ஊர்களுக்கு, 2 லட்சம் என, டெபாசிட் தொகை கேட்கின்றனர். ஒரு சிறிய கிராமத்தில் இவ்வளவு பெரிய தொகையை எப்படி செலுத்த முடியும்?டெபாசிட் தொகை செலுத்தி, ஜல்லிக்கட்டு நடந்து, யாரேனும் காயம்பட்டோ, உயிரை இழந்தாலோ, அவர்களுக்கு, அந்த டெபாசிட் தொகையில் இருந்து தான், பணம் அளிக்கப்படுகிறது. இதனால், மீண்டும் அந்தக் கிராமத்தினர், டெபாசிட் தொகையை, அடுத்த வருட ஜல்லிக்கட்டுக்குச் செலுத்த வேண்டி இருக்கிறது.இந்த பிரச்னையால், ஏற்கனவே ஜல்லிக்கட்டு நடந்து வந்த பாதி கிராமங்களில், அது நிறுத்தப்பட்டுள்ளது.இதற்கு பதிலாக, ஜல்லிக்கட்டு நடக்கும் ஒரு நாளுக்கு மட்டும், ஒரு குறிப்பிட்ட தொகைக்கு, இன்சூரன்ஸ் செய்யலாம். இதன் மூலம், டெபாசிட் பணம் செலுத்த வேண்டியிருக்காது. காயம்பட்ட, உயிரிழந்த வீரர்களுக்கு நிவாரணத் தொகையும், இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் கிடைக்கும். உயர் நீதிமன்றம் விதித்துள்ள நிபந்தனைகளால், கடந்த மூன்று ஆண்டுகளாக உயிர் இழப்புகள், விபத்துகள் குறைந்துள்ளன என்பது உண்மை; அதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், அவர்கள் விதித்துள்ள வழிமுறையின்படி, ஒரு புதிய காளையை ஜல்லிக்கட்டில் அனுமதிக்க வேண்டுமானால், அந்த காளையை, நான்கு கோணங்களில், 16 புகைப்படங்கள் எடுத்து, அரசு கால்நடை மருத்துவரிடம் கையொப்பம் பெற வேண்டும்.போட்டோவுக்கு, 800 ரூபாய், டி.டி., எடுக்க, 500 ரூபாய், காளையை அரசு டாக்டரிடம் அழைத்துச் செல்ல ஆகும் வாகனச் செலவு என, கிராமத்து மனிதனால் தாங்க முடியாத அளவு செலவு கள் அதிகரித் துள்ளன.விண்ணப்பங்கள் அனைத்தும், ஆங்கிலத்தில் இருப்பதால், டி.டி., போன்ற நடைமுறைகளை, கல்வியறிவு பெறாத கிராமத்து மனி தனால் எதிர் கொள்ள முடிவதில்லை. அரசு, தகுந்த நடவடிக் கை எடுத்தால், ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் காளைகள் எண்ணிக்கை அதிகரிக்கும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக