குற்றவாளியைத் தூண்டி விட்டு உதவிய இந்திய அரசும் குற்றவாளியாக இருக்கையில் பட்சேவைக்காப்பாற்றித்தானே ஆக வேண்டும். எனவே, இந்தியாவிற்கு வேண்டுகோள் விடுக்காமல் உலக நாடுகளிடம் உண்மையை விளக்கி நீதி காண முயல வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
இலங்கையில் எஞ்சியிருக்கும் தமிழர்களைப் பாதுகாக்க வேண்டும்:
பழ. நெடுமாறன் வலியுறுத்தல்
First Published : 23 Jul 2011 04:15:51 AM IST
மதுரை, ஜூலை 22: இலங்கையில் எஞ்சியிருக்கும் தமிழர்களையாவது பாதுகாக்க வேண்டும் என்பதை தலையாயப் பிரச்னையாகக் கருதி மத்திய அரசை தமிழக அரசு நிர்பந்திக்க வேண்டும் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் வலியுறுத்தினார். ஈழத் தமிழர், தலித் கிறிஸ்தவர், தமிழக மீனவர் மற்றும் கச்சத்தீவு மீட்பு போன்ற பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு காண மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி மதுரையில் ஒன்றிப்பு கிறிஸ்தவ மனித உரிமை அமைப்பு சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பழ.நெடுமாறன் பேசியது: இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலை குறித்து ஐ.நா. சார்பில் குழு அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. அக்குழு ராஜபட்சவை ஒரு போர்க் குற்றவாளி என்று அறிவித்தது. அதன் பின்னரும் ராஜபட்சவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த முடியவில்லை. இதுகுறித்து மத்திய அரசு எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. ஆனால், ராஜபட்சவைக் காப்பாற்றத் தேவையான அனைத்தையும் செய்து வருகிறது என்றார்.
இக்கருத்தைத் தினமணி வெளியிடவில்லை.
பதிலளிநீக்கு