சிங்கள அரசின் இனக்கொலைக் குற்ற விசாரணை என்பதை ம.தி.மு.க தெளிவாகக் குறிப்பிட்டுள்ளதை வெளியிட்டு விட்டுப் போர்க்குற்ற விசாரணை எனச் சுருக்கலாமா? போராட்டங்கள் வெற்றி பெற வாழ்த்துகள்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
தில்லியில் ஆர்ப்பாட்டம் நடத்த மதிமுக தீர்மானம்
First Published : 22 Jul 2011 02:56:10 PM IST
சென்னை, ஜூலை.22: இலங்கையை போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்த வலியுறுத்தி இந்தியாவிலும், உலக நாடுகளிலும் அதற்கு ஆதரவு திரட்டும் நோக்கத்தில் தில்லியில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என மதிமுக தீர்மானித்துள்ளது.மதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்களின் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம் :*பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டெம்பர் 15 ஆம் தேதியன்று திருநெல்வேலியில் திறந்தவெளி மாநாடு.*அ.தி.மு.க அரசு, தன் போக்கை மாற்றிக்கொண்டு, சமச்சீர் கல்வியை, சமநிலைக் கல்வியை உடனடியாக நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும்.*தமிழக உரிமை காக்கவும், கேரள அரசின் அக்கிரமப் போக்கைத் தடுக்கவும், மதுரை மாநகரில் ஆகஸ்ட் 17 ஆம் தேதி உண்ணாநிலை அறப்போராட்டம்*சிங்கள ராணுவ வீரர்களுக்கு, தமிழகத்தில் குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் அளிக்கப்படும் பயிற்சியை நிறுத்த வேண்டும்.*சிங்கள அரசின் இனக்கொலைக் குற்றத்தை விசாரணைக்கு உட்படுத்த வலியுறுத்தி தலைநகர் தில்லியில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கருத்துகள்


By sdfsdf
7/22/2011 10:31:00 PM
7/22/2011 10:31:00 PM


By மனம் ஒடிந்த தமிழன்
7/22/2011 9:22:00 PM
7/22/2011 9:22:00 PM


By Vadivel
7/22/2011 9:17:00 PM
7/22/2011 9:17:00 PM


By கே சுகவனம்
7/22/2011 6:20:00 PM
7/22/2011 6:20:00 PM


By Meenakshisundaram
7/22/2011 5:34:00 PM
7/22/2011 5:34:00 PM


By வெட்டி மாஸ்டர்
7/22/2011 5:19:00 PM
7/22/2011 5:19:00 PM


By keebeeyees
7/22/2011 5:04:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *7/22/2011 5:04:00 PM