தேசிய மொழிகளின் கல்வி, தேசிய மொழிகளின் வழிக்கல்வி, தேசிய இனங்களின் உரிமை முதலியவற்றை ஒடுக்கவே பொது நுழைவுத் தேர்வு. தமிழ்நாடு போல் பிற மாநிலங்களும் எதிர்த்து இதனை நிறுத்த வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை:
அடுத்த ஆண்டு முதல் பொது நுழைவுத் தேர்வு
First Published : 22 Jul 2011 03:42:32 AM IST
புது தில்லி, ஜூலை 21: மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு அடுத்த ஆண்டு முதல் நாடு தழுவிய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்திய மருத்துவ கவுன்சில் (எம்.சி.ஐ.) சில மாதங்களுக்கு முன் மத்திய, மாநில அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்குப் பொது நுழைவுத்தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தவேண்டும் என அறிவித்தது. இந்திய மருத்துவ கவுன்சிலின் இந்த முடிவுக்கு தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனை தொடர்ந்து மருத்துவ படிப்புக்குப் பொது நுழைவுத்தேர்வு நடத்தும் திட்டத்தை மத்திய சுகாதார அமைச்சகம் நிறுத்தி வைத்தது. இந் நிலையில் மத்திய சுகாதாரத் துறை செயலாளர் சந்திர மௌலி தலைமையில் தில்லியில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் மருத்துவ கவுன்சில் ஆட்சிக் குழுவின் (கவர்னிங் கவுன்சில்) தலைவர் புருஷோத்தம் லால், சி.பி.எஸ்.இ. தலைவர் வினீத் ஜோஷி உள்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அடுத்த ஆண்டு முதல் மத்திய, மாநில அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் மாணவர்களைச் சேர்ப்பதற்கு பொது நுழைவுத்தேர்வு நடத்தவேண்டும் என கூட்டத்தில் முடிவு மேற்கொள்ளப்பட்டது. இதுதொடர்பான விவரங்களை இணையதளத்தில் வெளியிடுவது என்றும், பொதுமக்களின் கருத்துகளைக் கேட்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக