சரியான கருத்து. கல்வியும் மருத்துவமும் எவ்வகைப்பாகுபாடுமின்றி எல்லார்க்கும் எளிதில் கிடைக்கும் நிலை வர வேண்டும். அரசு அன்பளிப்பாகத தர எண்ணும் பொருள்களைத் தரமான நிலையில் குறைந்த விலையில் அனைவருக்கும் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
கல்வி, மருத்துவம் தவிர வேறு இலவசங்கள் கூடாது: ராமதாஸ்
First Published : 22 Jul 2011 03:23:05 AM IST
Last Updated : 22 Jul 2011 04:19:44 AM IST
மாநில துணைப் பொதுச் செயலர் பொன்.கங்காதரன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, முன்னாள் சட்டமன்ற உறுப்பின
காஞ்சிபுரம், ஜூலை 21: தமிழகத்தில் கல்வி மற்றும் மருத்துவம் தவிர வேறு எதுவும் இலவசமாக வழங்கக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார். காஞ்சிபுரம் மேற்கு மற்றும் தெற்கு மாவட்ட பொதுக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் மேலும் கூறியது: தமிழ்நாட்டில் நடப்பது அரசியலே அல்ல, அரிசியல். ரூபாய்கு 3 படி அரிசி, ரூபாய்க்கு ஒரு படி அரிசி, ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, இப்போது 20 கிலோ இலவச அரிசி என்று அரசியல் இப்போது அரிசியலாக மாறியுள்ளது. இலவச மிக்ஸி கிரைண்டர், டி.வி. கொடுப்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. கல்வியும், மருத்துவமும் தவிர வேறு எதையும் இலவசமாக கொடுக்கக்கூடாது. கல்வியை இலவசமாக கொடுத்து, வேலைவாய்ப்பை உருவாக்கினால், இலவசமாக கொடுக்கும் பொருள்களை அவர்களே வாங்கிக் கொள்வார்கள். சங்க காலத்தில் தமிழர்கள் வீரத்துடன் போருக்கு சென்றனர். தற்போது தமிழர்கள் பாருக்கு செல்கின்றனர். கல்விக் கூடங்களை அரசு நடத்த வேண்டும். ஆனால் அது தனியாரிடம் விடப்படுகிறது. ஆனால் டாஸ்மாக் மதுக்கடைகளை அரசு நடத்துகிறது. இதனால்தான் போருக்கு சென்ற தமிழன் பாருக்கு செல்லும் நிலை உருவாகியுள்ளது. விவசாயிகள் பலர் நகப்புறங்களை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர். விவசாய நிலங்கள் ரியல் எஸ்டேட்டுகளாக மாற்றப்படுகின்றன. எந்தக் காரணத்துக்காகவும் விவசாய நிலங்களை எடுக்கக் கூடாது என்று நாங்கள் விவசாயிகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். தமிழகத்தில் பாமக தோல்வி அடைந்ததற்கு பலர் பல்வேறு காரணங்களை கூறினர். இளைஞர்கள் நம் கட்சியில் இருந்திருந்தால் இந்தத் தோல்வி நமக்கு ஏற்பட்டிருக்காது. உடனடியாக அவர்களை கட்சியில் சேர்க்கும் முயற்சியில் இறங்குங்கள். அரை குறை சமச்சீர் கல்வி: ஏற்கெனவே சமச்சீர் கல்வி கொண்டு வரப்பட்டபோதே நான் சமச்சீர் கல்வி அரைகுறையாக கொண்டு வரப்படுகிறது. இது சமச்சீர் கல்வி அல்ல சமரச கல்வி என்றும் கூறியிருந்தேன். முத்துக்குமரன் கமிட்டி அறிக்கையை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும் கூறினேன். அந்த அரைகுறை சமச்சீர் கல்வியையும் அமல்படுத்தாமல் தடுக்கும் முயற்சியில் தற்போதுள்ள அதிமுக அரசு ஈடுபட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் என்ன தீர்ப்பு வரும் என்று தெரியவில்லை. சமச்சீர் கல்வியை தமிழகத்தில் அமல்படுத்தாவிட்டால் பாமகவினர் வீதியில் இறங்கி போராடுவர் என்றார் ராமதாஸ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக