இலங்கை - ஈழக் கூட்டரசு நாடுகளாக உரிமை யுடைய நாடுகளின் கூட்டமைப்பு தோன்றினால் மட்டுமே அமைதியைஎதிர்பார்க்கலாம். அதற்கு முதலில் தமிழ் ஈழம் ஏற்கப்பெற வே ண்டும். ௨.) உண்மையான இலங்கை வரலாறு சிங்களவர்களுக்கும் பிற நாட்டினருக்கும் பாடமாக வைக்கப்பட வேண்டும். சிங்களப் பிடியில் இருக்கும் வரை தமிழினம் அடியோடுஅழிக்கப்படும்வரை பேச்சு தொடரும்; இனப்படுகொலை தொடரும்.
இங்ஙனம் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
இலங்கையில் அனைத்து மக்களுக்கும் சமவாய்ப்பு: ஹிலாரி கிளிண்டன்
First Published : 21 Jul 2011 03:40:39 AM IST
Last Updated : 21 Jul 2011 04:28:19 AM IST
சென்னை, ஜூலை 20: இலங்கையில் அனைத்து மக்களுக்கும் சமவாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் வலியுறுத்தினார். சென்னை கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் "21-வது நூற்றாண்டுக்கான தொலைநோக்குப் பார்வை' என்ற தலைப்பில் புதன்கிழமை அவர் பேசியது: இலங்கையில் அனைத்து மக்களுக்கும் சிறப்பான எதிர்காலத்தை உருவாக்கும் வகையில் சம வாய்ப்பும், நம்பிக்கையும் வழங்கப்பட வேண்டும். அந்த நாட்டு அரசியல் தீர்வுக்கான முன்மாதிரியாக இந்தியாவின் அரசியலமைப்பு முறையை எடுத்துக் கொள்ளலாம். அரசியல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் சமவாய்ப்பு அளித்தால் அனைத்துக் குடிமக்களும் எவ்வளவு முன்னேற்றம் அடையலாம் என்பதற்கு சென்னை ஓர் உதாரணம். இந்திய-அமெரிக்க வர்த்தகம் அதிகரிப்பு: 21-ம் நூற்றாண்டின் வரலாறு ஆசியாவில் எழுதப்படும். இந்தியா மற்றும் அதன் மாநில அரசுகள் எடுக்கும் முடிவுகள் ஆசியாவின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும். இந்தியா, அமெரிக்கா இடையே நடைபெறும் பேச்சுவார்த்தைக்குப் பலன் கிடைக்க ஆரம்பித்துள்ளது. பேச்சுவார்த்தையால் இருதரப்பு வர்த்தகம் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. மரபுசாரா எரிசக்தி ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளோம். அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் மீது இன்டர்நெட் வழியாகத் தாக்குதல் தொடுப்பதைத் தடுப்பது குறித்துப் பேசி வருகிறோம்."இந்தியாவுக்கான பாஸ்போர்ட்' என்ற திட்டத்தின் மூலம் இந்தியாவில் படிக்க வரும் அமெரிக்க மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்தும் பேச்சு நடத்தப்பட்டது. ஆப்கனை கைவிடவில்லை: ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறப்படுவது உண்மைதான். அந்த நடவடிக்கை 2014-ல் முடிவடையும். ஆப்கானிஸ்தானில் அமைதி ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் பங்கேற்கும் பாகிஸ்தான் முடிவை வரவேற்கிறோம். 21-ம் நூற்றாண்டின் முக்கியமானப் பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டுமானால் இந்தியா, சீனா, அமெரிக்க நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இந்தியாவும், அமெரிக்காவும் மத்திய கிழக்கு நாடுகளிலும், வட ஆப்பிரிக்காவிலும் ஏற்பட்டு வரும் ஜனநாயக மாறுதல்களை ஆதரிக்க வேண்டும். தேர்தலை நடத்துவதற்கான முன்மாதிரி அமைப்பாக உள்ள இந்தியத் தேர்தல் ஆணையம், எகிப்து, ஈராக் உள்ளிட்ட நாடுகளில் தேர்தலை நடத்துவதில் உதவி வருகிறது. பர்மாவில் ஜனநாயகத்துக்காகப் போராடிய ஆங்சான் சூகி விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஆனால், மேலும் பல்வேறு அரசியல் கைதிகள் சிறையில் உள்ளனர். அங்கு பொதுமக்கள் நடத்தப்படும் விதம் மிகவும் வருந்தத்தக்கது. அதேபோல், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளிலும் பிரச்னைகள் உள்ளன. கிழக்கத்திய நாடுகளில் கவனம் செலுத்தும் வகையில் புதிய கொள்கையை இந்தியா வகுத்துள்ளது. கிழக்கத்திய நாடுகளைத் தவிர, மேற்குப் பகுதி நாடுகளின் விவகாரங்களிலும் இந்தியா கவனம் செலுத்துவதை அமெரிக்கா ஆதரிக்கும் என்றார் ஹிலாரி கிளிண்டன்.நடிகர் கமல்ஹாசன், கார்த்தி சிதம்பரம், பின்னணிப் பாடகி சின்மயி, அப்பல்லோ மருத்துவமனைத் தலைவர் டாக்டர் பிரதாப் ரெட்டி உள்ளிட்ட பிரமுகர்களும், கல்லூரி மாணவ, மாணவியரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக