First Published : 08 Jul 2011 03:07:47 AM IST
Last Updated :
சென்னை, ஜூலை 7: அறிமுகமில்லாத வெளிநாட்டு எண்களிருந்து வரும் "மிஸ்டு கால்களை' திரும்ப தொடர்பு கொள்ள வேண்டாமென வாடிக்கையாளர்களை பி.எஸ்.என்.எல். கேட்டுக் கொண்டுள்ளது. அந்நிறுவனம் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: பி.எஸ்.என்.எல். செல்போனுக்கு +2392879106, +2392 879062, +2392879051, +2392879106 உள்ளிட்ட எண்களிலிருந்து மிஸ்டு கால் வருகிறது. இது சாவ் டோம் உள்ளிட்ட மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள தீவு நாடுகளிலிருந்து வரும் அழைப்பாகும். இந்த எண்களை திரும்ப அழைத்தால் வெளிநாட்டு எண்களை (ஐ.எஸ்.டி.) அழைப்பதற்கான பணம் எடுக்கப்படுகிறது என புகார்கள் வந்துள்ளன. எனவே அறிமுகமில்லாத வெளிநாட்டு எண்களில் இருந்து "மிஸ்டு கால்' வந்தால் அதனை திரும்பத் தொடர்பு கொள்ள வேண்டாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக