கம்யூனிஸ்டு கட்சியின் போராட்டம் வெற்றி பெற வைகோ வாழ்த்து
First Published : 07 Jul 2011 12:35:37 PM IST
Last Updated : 07 Jul 2011 12:38:48 PM IST
சென்னை, ஜூலை.7: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஜூலை 8-ம் தேதி மேற்கொள்ளவிருக்கும் அறப்போராட்டம் வெற்றிபெற மதிமுக பொதுச்செயலர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: இலங்கைத் தீவில் ஈழத் தமிழினப் படுகொலை செய்த சிங்கள அரசின் அதிபர் மகிந்த ராஜ பட்சவையும் இப்படுகொலையில் ஈடுபட்ட கொடியோரையும் அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றக் கூண்டில் நிறுத்தித் தண்டிக்கவும், இலங்கை அரசுக்குப் பொருளாதார தடை ஏற்படுத்தவும் மக்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் குறிக்கோளுடன் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி தமிழகத்திலும், இந்திய நாடெங்கிலும் ஜூலை 8-ஆம் தேதி மேற்கொள்ள இருக்கும் அறப்போராட்டம் மகத்தான வெற்றி பெறவும், போராட்டத்தின் நோக்கம் நிறைவேறும் வகையில் மக்கள் ஆதரவு திரளவும் மதிமுக சார்பில்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக வைகோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள்
எல்லாத் தமிழர்களும் அவசியமாக July 8 -ல், நடத்தப் படவுள்ள போராட்டத்தில் கலந்துக் கொள்ள வேண்டும். இது இலங்கைத் தமிழர் வாழ்வுப் பிரச்சனை மட்டுமன்றி எல்லாத் தமிழர்களின் சுயமரியாதை, மானப் பிரச்சனையாகும்.ஈழத்தில் போர்க்குற்ற விசாரணைப் பற்றி இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கப் போவதில்லை, ஐ நா வில் போர்க் குற்ற விசாரணையை எதிர்கொள்ள இலங்கைக்கு முழு ஆதரவுக் கொடுக்கும் என்றும் வெளியுறவு செயலர் நிருபாம ராவ் அறிவித்திருப்பது தமிழக சட்டச் சபையில் கொண்டுவந்த 2 தீர்மானங்களை அவமதிப்பதுப் போல் உள்ளது; இது அனாகரீகமான செயல்;மேலும் உலகிலுள்ள கோடானுக் கோடி தமிழர்களின் மனங்களை புண்படுத்துவதுமாக வுள்ளது; ஈழப் போரின் போது, இலங்கைக்கு இந்தியா செய்த ராணுவ உதவிகள், ஐ நா வில் இலங்கைக்கு கொடுத்த பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கையில் இலங்கை விசயத்தில் இந்தியா மேற்கொண்ட நிலைப் பற்றி மத்திய அரசு வெள்ளை அறிக்கை மூலம் உண்மையை சொல்லவைக்க வேண்டும்; போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்; இதன் மூலம் ஈழத்தில் தமிழர்களுக்கு மத்தியில் ஐ நா மூலம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டிய அவசியத்தை மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும்;
By பழனிசாமி T
7/7/2011 2:36:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் 7/7/2011 2:36:00 PM