சனி, 9 ஜூலை, 2011

changing the name of West Bengal: மேற்கு வங்கப் பெயர் மாற்றம்: மார்க்சியப் பொதுவுடைமைஆதரவு

வங்கம் என்றால்  வளைவு எனப் பொருள். அதனால்தான் கையில் அணியும் வளைவான அணிகலனுக்கு வங்கி எனப் பெயர் வந்தது. வங்கம் என்பது வளைவைத் தொடர்ந்து வளைவான நீர்ப்பகுதியையும் அடுத்து நீர்ப்பகுதியில் மோதும்அலையையும் அடுத்து அலைகடலில் செல்வதற்கு அமைக்கப்பட்ட வளைவான கலனான கப்பலையும் குறித்தது. வளைவான கடலோரம் அஃதாவது வங்கக்கடலோரம் அமைந்த நிலத்திற்கு வங்கம் எனப் பெயரிட்டனர் பழந்தமிழர்கள். காளிக்கோட்டம் கல்கத்தா என்றானது போல் தமிழர் நிலமாகிய வங்கம் பின்னர் பங்கம் என்றும் வங்காளம் பங்காளம் என்றும் ஆகிப் பெங்கால் என்றானது. எனவே, ஒருகாலத்தில் இன்றைய இந்தியப் பகுதி முழுமையும் தமிழ் நிலமாக இரு்நதது என்பதை அடுத்து வரும் தலைமுறையினரும் உணரும் வகையில் வங்கம் எனப் பெயரிடுவது உதவியாக அமையும். (ஆனால் பெயரிடுவோர் நோக்கம் அதுவல்ல) 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


மேற்கு வங்கப் பெயர் மாற்றம்: மார்க்சிஸ்ட் ஆதரவு

First Published : 09 Jul 2011 03:33:28 AM IST


கொல்கத்தா, ஜூலை 8: மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை மாற்றப் போவதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளதற்கு அங்குள்ள பிரதான எதிர்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. இது குறித்துக் கருத்துத் தெரிவித்த மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவர் சூரியகாந்த மிஸ்ரா "மார்க்சிஸ்ட் கட்சி ஆட்சியின் போதே மாநிலப் பெயர் மாற்றத்துக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. எப்படி மாற்றலாம் என்று சில பெயர்கள் கூட ஆலோசிக்கப்பட்டன. ஆனால் முடிவெடுக்கப்பட முடியவில்லை' என்றார். அம்மாநிலத்தின் பல்வேறு தரப்பினரும் மம்தா பானர்ஜியின் இம்முயற்சியை வரவேற்றுள்ளனர்.வங்கம், வங்க தேசம், வங்காளம், வங்கப் பிரதேசம் உள்ளிட்ட சில பெயர்கள் புதிய பெயருக்கான பரிசீலனையில் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  "வங்கம் என்பது மேற்கு வங்க மாநிலத்திலிருந்த ஒரு பழங்கால அரசாகும். ராமாயணம் மற்றும் மகாபாரதத்தில் வங்கம் என்ற பெயரைப் பார்க்க முடியும்' என்று பல தரப்பினர் கூறுகின்றனர். "ஆங்கில அகர வரிசையில் மேற்கு வங்க மாநிலத்தின் பெயர் கடைசிப் பகுதியாக வருவதால் அனைத்து மாநிலங்களுக்கான விவாதங்களின் போது மற்ற மாநிலத்தவர் அனைவரும் பேசிய பிறகே மேற்கு வங்கத்த்துக்கு வாய்ப்பு கிடைக்கிறது. அதனால் ஆங்கில அகர வரிசையில் முதலில் வருகிற வகையில் மேற்கு வங்கத்தின் பெயர் மாற்றப்பட வேண்டும்' என்று அங்குள்ள பல அரசு அதிகாரிகள் கருதுகின்றனர்.  "வங்க மாநிலத்தின் கிழக்குப் பகுதி வங்க தேசமாகத் தனியாகப் பிரிந்த பிறகு வங்க மாநிலத்தை மேற்கு வங்கம் என்று அழைப்பதில் அர்த்தமில்லை' என்று சில வரலாற்று அறிஞர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக