தமிழ் ஈழ ஆதரவு நிலையால் தஞ்சாவூரில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் பங்கேற்க முடியாமல் போனதுபோல் அந்த நிலையில் இருந்து திசை மாறியதால் செம்மொழி மாநாட்டில் பங்கேற்கும் வாய்ப்பைப்பெற்றவர். காலத்தின் கோலம் இவ்வாறிருப்பினும் சிறந்த இலக்கியத்திறனாய்வாளர் என்ற முறையிலும் சங்கத்தமிழில் புலமை மிக்கவர் என்ற நிலையிலும் இவரது மறைவிற்குத் தினமணி வாசகர்கள் சார்பில் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இங்ஙனம் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
மூத்த தமிழறிஞர்
கார்த்திகேசு சிவதம்பி காலமானார்
First Published : 07 Jul 2011 03:28:10 AM IST
சென்னை, ஜூலை 6: இலங்கையைச் சேர்ந்த மூத்தத் தமிழறிஞரும், இலக்கிய விமர்சகருமான கார்த்திகேசு சிவதம்பி (79) கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் மாரடைப்பால் புதன்கிழமை காலமானார். அவருக்கு மனைவி ரூபாவதியும், மூன்று மகள்களும் உள்ளனர். இவர் சங்க இலக்கியம் முதல் இப்போதைய தமிழ் சினிமா வரை பல்வேறு துறைகளில் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். தமிழின் மிகச்சிறந்த இலக்கிய விமர்சகர்களில் ஒருவராகப் போற்றப்பட்டவர். 1932-ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் உள்ள கரவெட்டி என்னும் ஊரில் பிறந்த அவர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார். இங்கிலாந்தில் பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் "பண்டைத் தமிழகத்தில் நாடகம்' என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டார். அவரது ஆய்வுகள் "பலதுறை சங்கம ஆய்வு' என்ற முறையில் அமைந்திருக்கும். பல அறிவுத் துறைகளின் துணைகொண்டு ஒரு கருத்தை நிறுவுவதில் வல்லவர். "தமிழ்ச் சமூகம் ஒரு புரிதலை நோக்கி', "பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் நாடகம்', "மதமும் மானுடமும்' "தமிழ்ச் சிறுகதைகள் தோற்றமும் வளர்ச்சியும்', "இலங்கைத் தமிழர் யார், எவர்', "தொல்காப்பியமும், கவிதையும்' "தமிழ்ப் பண்பாட்டில் சினிமா' உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட புத்தகங்களை அவர் எழுதியுள்ளார். சென்னைப் பல்கலைக்கழகம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் கௌரவ பேராசிரியராக இருந்தார். உலகத் தமிழ் மாநாடு உள்பட பல்வேறு மாநாடுகளில் 200-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளார். கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் ஆய்வரங்கத்தின் தலைவராக இருந்தார். இந்த மாநாட்டின் மிகப்பெரிய விளம்பரமாக அவரது பங்கேற்பை அப்போதைய தமிழக அரசு செய்தது. இலங்கைத் தமிழர் விடுதலைப் போராட்டத்தின் ஆதரவாளர். இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்தபோது, அமைதிக் குழுவில் இடம்பெற்றிருந்தார். தஞ்சை உலகத் தமிழ் மாநாட்டில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் என்று திருப்பி அனுப்பப்பட்டார்.
கருத்துகள்
ஈழத் தமிழர்கள் ரத்த வெள்ளத்தில் மிதக்கும் போதும், தமிழச்சிகள் கூட்டுப் பாலியல் கொடுமைக்குள்ளாக்கப்பட்டு பிணமாக்கப்பட்டபோதும் தமிழ்த் தாயை வாழவைக்கும் பொருட்டு கோவை செம்மொழி மாநாட்டில் கலந்து கொண்டு, கருணாநிதி பரிவாரத்தை வாழ்த்திய கார்த்திகேசு கருணாநிதி தம்பி மரணமுற்றதற்காக வருந்துகிறேன். ஜனார்த்தனன்
By ஜனார்த்தனன்
7/7/2011 4:56:00 PM
7/7/2011 4:56:00 PM
பட் கீப் சிலேன்ட் ஒன முல்லிவைக்கள் படுகொலை ஜோஇன் ஹான்ட்ஸ் வித் அண்டி பாமில் போர்செஸ்
By க.vijayakumar
7/7/2011 11:07:00 AM
7/7/2011 11:07:00 AM
அனைவரின் எதிர்ப்பையும் மீறி தமிழ் செம்மொழி மாநாட்டில் கருணாநிதிக்காக கலந்து கொண்டார் சிவத்தம்பி . ஆனால் இன்று அவர் உயிருடன் இல்லை . கருனாநித்யிடம் இருந்து இன்னும் இரங்கல் வரவில்லை. கருணாநிதி இரங்கல் தெரிவிப்பார் என்று நான் நம்பவில்லை.
By செந்தில்
7/7/2011 10:11:00 AM
7/7/2011 10:11:00 AM
அனைவரின் எதிர்ப்பையும் மீறி தமிழ் செம்மொழி மாநாட்டில் கருணாநிதிக்காக கலந்து கொண்டார் சிவத்தம்பி . ஆனால் இன்று அவர் உயிருடன் இல்லை . கருனாநித்யிடம் இருந்து இன்னும் இரங்கல் வரவில்லை. கருணாநிதி இரங்கல் தெரிவிப்பார் என்று நான் நம்பவில்லை.
By செந்தில்
7/7/2011 8:24:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
7/7/2011 8:24:00 AM
இர
பதிலளிநீக்குங்கல் செய்தியைத்தினமணி வெளியிடவில்லை. வாழ்க தினமணியின் நடுவுநிலைமை!