தான் இன்னும் இராசபக்சேவின் அடிமைதான். எனவே, தன் உயிரைப் பறிக்க வேண்டா என அவருக்கு நினைவூட்டுகிறார் போலும். பாணாந்துறைக் கோயிலைப்பற்றிக் கூறுகிறாரே, தமிழ்க்கோயில்கள் எல்லாம் புத்த விகாரையாக மாற்றப்படும் எனச் சிங்களத் தளபதி அறிவித்து அதன்படி அவை இடிக்கப்பட்டனவே! அவை பற்றி ஏன் ஒன்றும் கூறவில்லை. இந்துக்களையெல்லாம் கொடூரமான முறையில் அழித்துவிட்டு யாருக்காக இந்து புத்த அமைதி (சமாதானம்) எனப் பேசுகிறார். அறம் வெல்லும் பொழுது கருணாவை அழிவில் இருந்து மீட்க யாராலும் இயலாது. இங்ஙனம் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சந்தர்ப்பவாத அரசியல்: கருணா
First Published : 08 Jul 2011 02:28:57 PM IST
Last Updated : 08 Jul 2011 02:46:36 PM IST
கொழும்பு, ஜூலை.8: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்தர்ப்பவாத அரசியலை நடத்தி வருகிறது என இலங்கை அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் என்கிற கருணா தெரிவித்துள்ளார்.கொழும்பில் சரவணமுத்து விளையாட்டரங்கு இருக்க முடியுமென்றால், வடக்கில் ஏன் இலங்கை அதிபர் ராஜபட்ச பெயரில் மைதானம் இருக்கக் கூடாது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.கிழக்கிலும் ராஜபட்சவின் பெயரில் விளையாட்டு அரங்கு ஒன்றை அமைச்குமாறு தாம், அமைச்சர் பசில் ராஜபட்சவிடம் கோருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.பாணந்துறையில் பிரபாகரனின் தந்தை அமைத்த கோயில் ஒன்று உள்ளதாகவும், அதனைச் சிங்கள மக்கள் இடிக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இந்த நிலையில் வடக்கில் புத்த விகாரை ஒன்று இருப்பதில் என்ன தவறு என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.இந்து – புத்த சமாதானத்தை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.அரந்தாலா, தலதா மாளிகை மற்றும் பஸ் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் தேவையென்றால் அரசினால் விடியோ தொகுப்பு ஒன்றை தயாரிக்க முடியும் என்ற போதிலும், சமாதானத்தை நிலைநாட்டுவதே அரசின் நோக்கமாக அமைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக