திங்கள், 4 ஜூலை, 2011

50 ஆண்டுகளுக்குப் பிறகு பழங்காலக் கோவில் திறப்பு: கம்போடியாவில் கோலாகலம்

அங்கூரில் ௧௦ நூற்றாண்டுகள் தமிழ் மன்னர்கள் ஆட்சி செய்துள்ளனர். பெரும்பாலான கோயில்கள் தமிழ் மன்னர்களால் கட்டப்பட்டவையே! இக்கோயிலும் தமிழ்  மன்னர்களால் கட்டப்பட்டதே!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

50 ஆண்டுகளுக்குப் பிறகு பழங்காலக் கோவில் திறப்பு: 
கம்போடியாவில் கோலாகலம்

First Published : 04 Jul 2011 12:28:43 AM IST


சியம் ரீப், ஜூலை 3: கம்போடியா நாட்டில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த பழங்காலக் கோவில் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.  11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அக்கோவில் புனரமைப்புப் பணிகளுக்காக 1960-ம் ஆண்டு மூடப்பட்டது. பிரமிடு வடிவத்தில் அங்கூர் கோவில் என்றழைக்கப்படும் அக்கோவில் பிரான்ஸ் நாட்டு தொல்லியலாளர்களின் உதவியுடன் சுமார் 14 மில்லியன் டாலர் செலவில் புனரமைக்கப்பட்டது.  இவ்வளவு ஆண்டுகளுக்குப் பிறகு கோவில் மீண்டும் திறக்கப்படுவதையொட்டி கம்போடியாவில் அந்நாட்டு மன்னர் நரஉத்தமசிகாமணி மற்றும் பிரான்ஸ் நாட்டுப் பிரதமர் பிரான்கோசிஸ் ஃபில்லோன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற கோலாகலமான விழாவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய பிரான்ஸ் பிரதமர், அங்கூர் கோவிலின் புனரமைப்பு தனித்துவம் வாய்ந்தது, சிறப்பு வாய்ந்தது என்றார். கம்போடிய மன்னர் தனது நாட்டு மக்கள் சார்பாக பிரான்ஸ் அரசுக்கு நன்றி தெரிவித்தார்.  1960-ம் ஆண்டு தொடங்கப்பட்ட அங்கூர் கோவில் புனரமைப்புப் பணிகள் 1970-ம் ஆண்டு கம்போடிய நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டுக் கலவரம் காரணமாக தடைபட்டன. அப்போது புனரமைப்புப் பணிகளுக்குத் தேவையான ஆவணங்கள் அந்நாட்டு கம்யூனிஸ்ட்களால் அழிக்கப்பட்டன. பிறகு 1995-ம் ஆண்டு புனரமைப்பு மீண்டும் தொடங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக