கிண்டலாக எழுதி உள்ளார். இன்று ௧௯௩ ஆவது நாடு தெற்குச் சூடான். நாளை ௧௦௪ ஆவது நாடு தமிழ் ஈழம். ௨௩ ஆண்டுகள் போராட்டத்தில் வாகை சூடிய தெற்குச் சூடான் போல் ௫௦ ஆண்டுகளாகப் போராடும் தமிழ் ஈழம் விடுதலையாகாத காரணம் இந்திய அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் கட்சித்தலைமைக்குக் கொத்தடிமைகளாக உள்ள மக்களுமே! இந்த நிலை விரைவில் மாறித் தமிழ் ஈழம் மலரட்டும்! வளரட்டு்ம்! தழைத்தோங்கட்டும்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
South Sudan சனிக்கிழமை, ஜூலை 09, 12:50 PM IST
ஜுபா, ஜூலை 9-
ஆப்பிரிக்காவில் உள்ள சூடான் நாட்டை 2 ஆக பிரிக்க வேண்டும் என கோரி கடந்த 20 ஆண்டுகளாக உள் நாட்டு போர் நடந்தது. அதில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
அதை தொடர்ந்து கடந்த 2005-ம் ஆண்டு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தலையீட்டின் பேரில் சூடானை 2 ஆக பிரித்து தெற்கு சூடான் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து நடந்த வாக்கெடுப்பில் பெருவாரியான மக்கள் ஆதரவாக வாக்களித்தனர். இதையடுத்து தெற்கு சூடான் என்ற புதிய நாடு இன்று உதயமாகிறது.
இது ஐ.நா. சபையால் அங்கீகரிக்கப்பட்ட 193-வது நாடாகும். மேலும் அது ஆப்பிரிக்கா கண்டத்தின் 54-வது நாடு என்ற பெருமையை பெறுகிறது. தெற்கு சூடானின் தலை நகராக ஜுபா அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
புதிய நாடாக உதயமாவதை தொடர்ந்து இன்று அங்கு சுதந்திர தின விழா கொண்டாடப் படுகிறது. வாண வேடிக்கையுடன் வண்ணமயாக கொண்டாடப்படும் இந்த விழாவில் உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் துணை ஜனாதிபதி அமீது அன்சாரி பங்கேற்கிறார். அதற்காக அவர் தெற்கு சூடானுக்கு புறப்பட்டு சென்றார்.
கருத்து
தெற்கு சூடான் மக்களுக்கு எமது உளங்கனிந்த சுதந்திரநாள் வாழ்த்துக்கள் - தமிழர் விடுதலை இயக்கம் | |
எங்களுக்கு தமிழ் ஈழம் ஒன்றும் தேவையில்லை. இப்போ இருக்கிற அமைதியான, சமாதானமான ஸ்ரீலங்காவே போதும்.
| |
இதைபோலவே தமிழ் ஈழம் உருவாகநும் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக