செவ்வாய், 5 ஜூலை, 2011

இலங்கைப் போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை: வரவர ராவ் வலியுறுத்தல்

இலங்கை போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை: வரவர ராவ் வலியுறுத்தல்

First Published : 05 Jul 2011 11:19:51 AM IST


நெல்லூர், ஜூலை.5: இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து பாரபட்சமில்லாத, சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையை ஆந்திர மாநில புரட்சி எழுத்தாளரும், நக்ஸலைட் ஆதரவாளருமான வரவர ராவ் வலியுறுத்தியுள்ளார்.மாவட்ட அளவிலான புரட்சிகர எழுத்தாளர்கள் சங்கத்தின் கருத்தரங்கில் பங்கேற்பதற்காக நெல்லூர் வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இலங்கை அரசின் உத்தரவின்பேரிலேயே அந்த நாட்டின் ராணுவ வீரர்கள் போர் நடைபெற்றபோது அப்பாவி பொதுமக்களை பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கி உள்ளனர். ஐநா சபை விசாரணை நடத்துவதன் மூலமே அந்த குற்றங்களை வெளிச்சத்துக்கு கொண்டுவர முடியும் என வரவர ராவ் தெரிவித்தார்.இலங்கையில் நடப்பவை குறித்து அறிந்து கொள்ள ஊடகத்தினரையும், சர்வதேச அமைப்புகளையும் அந்த நாட்டு அரசு சுதந்திரமாக அனுமதிப்பதை ஐநா சபையும், சர்வதேச பொதுநல சமூகமும் உறுதிசெய்ய வேண்டும் என்று வரவர ராவ் விருப்பம் தெரிவித்தார்.மேலும் இலங்கையுடனான இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கை குறித்தும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவியேற்ற பின்னர் அந்த நாட்டுக்கு அளிக்கப்பட்ட ராணுவ உதவிகள் குறித்தும் மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று ராவ் கோரிக்கை விடுத்தார்.
கருத்துகள்

சரியாக சொன்னார்
By sreenathan
7/5/2011 4:30:00 PM
இவனுக்கு இருக்கும் சூடு சொரணை தைரியம் கூட நம்ம கலைஞருக்கு இல்லையே என்று தான் வருத்தமாக இருக்கு.
By வரத்
7/5/2011 4:24:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக