எல்லாம் நல்லதற்கே! தமிழர் நிலத்தில் தமிழர்க்கு உரிமையில்லை என்பதை இறையாண்மை நடிகர்கள் புரிந்து கொள்ளட்டும்! வன்கொடுமைச் சிங்களத்தின் அடாவடித்தனததை மனச்சான்றுள்ள நாடுகள் புரிந்து கொண்டு மண்ணின் மைந்தர்கள் மாண்புறத் திகழத் தமிழ் ஈழத்தை விரைவில் ஏற்க வழி வகுக்கும்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
தமிழர்களுடன் அரசியல் அதிகாரப் பகிர்வு இல்லை: இலங்கை அரசு
First Published : 08 Jul 2011 02:28:57 AM IST
கொழும்பு, ஜூலை 7: இலங்கையில் தமிழர்களுடன் எந்தவிதமான அரசியல் அதிகாரப் பகிர்வும் செய்து கொள்ளமாட்டோம் என்று இலங்கை அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.இதனால் இலங்கையில் தமிழர்கள் இரண்டாம் தர குடிமக்களாகவே இருக்கும் அவலநிலை தொடரும் என்றே தெரிகிறது.இலங்கை நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை, மூத்த அமைச்சர் நிமல்ஸ்ரீபால டி சில்வா இது குறித்துப் பேசியது: இலங்கையில் பல ஆண்டுகளாக நிலவி வரும் தமிழர் பிரச்னையைத் தீர்க்க, அரசியல் அதிகாரப் பகிர்வு செய்து கொள்ளப்படமாட்டாது. அந்த வாய்ப்பை இலங்கை அரசு என்றுமே அளிக்காது. எனினும் தமிழர் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பது குறித்து பல்வேறு கட்சியினருடன் பேசி அவர்களின் கருத்துகளைக் கேட்டு வருகிறோம். பிரச்னைக்கு நல்ல தீர்வு காணப்படும். அரசியல் அதிகாரப் பகிர்வு திட்டத்தை பெரும்பாலான நாடுகள் ஏற்றுக்கொண்டது இல்லை அவர்.
தமிழ் உணர்வுள்ள(!) தினமணி இக்கருததைப் பதியவில்லை.
பதிலளிநீக்கு