திங்கள், 4 ஜூலை, 2011

Thamizh develop department in Pudhucheri: புதுவையில் தமிழ் வளர்ச்சித்துறை அமைக்கப்படும்: முதல்வர் என்.இரங்கசாமி

புதுவை அரசிற்கும் தனித்தமிழ் இயக்கத்திற்கும் பாராட்டுகள். தமிழ்ப்பற்றில்லாத அல்லது தமிழ் அறியாத அயலவர்களை இத்துறைப் பொறுப்பில் நியமிக்காமல் தமிழாய்ந்த தமிழ் உணர்வாளர்களை நியமிக்க வேண்டுகோள். ஆட்சியிலும் கல்வியிலும் வழிபாட்டிலும் ஊடகத்திலும் தமிழே தலைமையிடம் பெற வழிகாணட்டும்! 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

புதுவையில் தமிழ் வளர்ச்சித்துறை அமைக்கப்படும்: 
முதல்வர் என்.ரங்கசாமி

First Published : 04 Jul 2011 12:46:28 AM IST


புதுச்சேரி தனித்தமிழ் இயக்கம் சார்பில் நடந்த சிலப்பதிகார விழாவில் பேசுகிறார் முதல்வர் என்.ரங்கசாமி.
புதுச்சேரி, ஜூலை 3: புதுச்சேரியில் தமிழ் வளர்ச்சித்துறை அமைக்கப்படும் என்று முதல்வர் என்.ரங்கசாமி தெரிவித்துள்ளார்.  புதுச்சேரியில் தனித்தமிழ் இயக்கம் சார்பில் சிலப்பதிகார விழா அண்மையில் நடந்தது. இதில் முதல்வர் ரங்கசாமி கலந்துகொண்டு பேசியது: தனித்தமிழ் இயக்கத்தின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று புதுச்சேரியில் தமிழ் வளர்ச்சித்துறை அமைக்கப்படும். அனைத்துத் துறைகளிலும் தமிழ் ஆட்சி மொழியாகப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.  விழாவில் தனித்தமிழ் இயக்கத் தலைவர் எழுதிய ஆத்திச்சூடி என்ற ஆங்கில மொழிபெயர்ப்பு நூலை பேராசிரியர் இர.கணபதி வெளியிட, பாவலர் சுந்தரமுருகன் வெற்றுக்கொண்டார். அசோக் ஆனந்து எம்எல்ஏ, பேராசிரியர் நா.இளங்கோ, புலவர்கள் அரிமதி தென்னகன், துரை.மாலிறையன், க.பொ.இளம்வழுதி, இலக்கியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக