சனி, 9 ஜூலை, 2011

Singapore president about Bose: போசு பற்றிய புத்தகத்தை வெளியிட்டார் சிங்கப்பூர் அதிபர்

நேதாஜி பற்றிய புத்தகத்தை வெளியிட்டார் சிங்கப்பூர் அதிபர்

First Published : 07 Jul 2011 01:15:42 AM IST


சிங்கப்பூர், ஜூலை 6: இந்தியாவின் மறைந்த சுதந்திரப் போராட்டத் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோûஸப் பற்றிய வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை சிங்கப்பூர் அதிபர் வெளியிட்டு அவரைப் பற்றி நினைவுகூர்ந்தார்.  ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறைப் பேராசிரியரும், நேதாஜியின் உறவினருமான சுகதோ போஸ் எழுதிய நேதாஜியின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை சிங்கப்பூர் அதிபர் எஸ்.ஆர்.நாதன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.  அப்போது அவர் நேதாஜியைப் பற்றி நினைவுகூர்ந்தார். 1940-களில் நேதாஜி ஆற்றிய உரைகள்தான் பிரிட்டிஷார் பற்றிய உண்மையான தோற்றத்தை தனக்கு உணர்த்தியது என்று நாதன் குறிப்பிட்டார். அவரது உரையைக் கேட்ட நாளிலிருந்து இன்று வரை தான் அப்போது எடுத்த நிலைபாட்டையே கடைபிடிப்பதாகவும் அவர் கூறினார்.  மேலும் நேதாஜியின் உரைகளே தனக்கு முதல் அரசியல் பாடமாக அமைந்தது என்று குறிப்பிட்ட நாதன், இந்தியாவில் ஆட்சி புரிந்தபோது பிரிட்டிஷார் கொடூரமாக நடந்து கொண்ட விதம் பற்றி நேதாஜி விவரித்ததையும் அவர் நினைவுகூர்ந்தார்.  நேதாஜி ஆசியாவைச் சேர்ந்த முக்கியமான தேசியவாதி என்றும், ஒருமுகச் சிந்தனையாளர் என்றும் நாதன் நேதாஜியைப் பற்றிக் குறிப்பிட்டார். இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஆகியவற்றின் சுதந்திரப் போராட்டத்தில் நேதாஜியின் பங்கு பற்றியும் அவர் விவரித்தார். 1943-ம் ஆண்டு ஜூலை மாதம் சிங்கப்பூர் வந்த நேதாஜி, நாடு கடந்த இந்திய விடுதலைப் போரட்டத்தை அரசியல்ரீதியாக அங்கு வாழும் மக்களிடம் கொண்டு சென்ற விதம் பற்றியும் நினைவுகூர்ந்தார்.  "பேரரசரின் எதிர்ப்பாளர்கள்:சுபாஷ் சந்திர போஸýம், பேரரசுக்கு எதிரான இந்தியப் போராட்டமும்' என்ற 388 பக்கமுள்ள நேதாஜி பற்றிய புத்தகத்தை ஹார்வார்டு பல்கலைக் கழகத்தின் பிரசுரம் வெளியிட்டுள்ளது.  1897-ம் ஆண்டு ஒரிசாவில் பிறந்த நேதாஜி பிரிட்டிஷ் இந்திய குடிமைப் பணித் தேர்வில் தேறினார். பின்னர் தேசப்பற்றினால் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். பிரிட்டிஷாரால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டபோது சாதுர்யமாக தப்பி 1943-ல் சிங்கப்பூர் சென்றார். அங்கு இந்திய தேசிய ராணுவத்தை புனரமைத்து விடுதலைப் போராட்டத்தை தொடர்ந்தார். நாடு விடுதலையடைவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் 1945-ல் நடந்த விமான விபத்து ஒன்றில் மறைந்தார்.
கருத்துகள்

நேரு குடும்பம் முற்றில்லுமாக நல்ல பல தலைவர்களின் உண்மைகளை மறைத்து விட்டன. சிங்கபூருக்கு நன்றி.
By நசீ, canada
7/7/2011 4:03:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக