திங்கள், 11 ஜூலை, 2011

Indonesia naval force arrested 87 eezham thamizhs: இலங்கைத் தமிழர்கள் 87 பேரைக்கைது செய்தது இந்தோனேசிய்க் கடற்படை

யிர் பிழைப்பதற்காகத் தப்பிச் செல்பவர்களைத் தளையிடுவது மனித நேயமல்ல; அறமுமல்ல என இந்தோனேசியா உணர வேண்டும். ஈழத்தமிழர்கள் அனைவரும் சம உரிமையுடன் நல்வாழ்வு வாழும் வகையில் தன் நாட்டில் வசதிகள் செய்து தரவேண்டும். எனவே பிடிக்கப்பட்ட அனைவரையும் உடனே விடுவித்து வேண்டிய உதவிகளைச் செய்ய வேண்டும். இந்தோனேசியா கலை பண்பாட்டுக் கூறுகளில் தமிழின் தாக்கம் மிகுதி என்பதை உணர்ந்து அதற்கான  நன்றியாகவாவது இவ்வாறு மனித நேயமும், தமிழ் நேயமும் பேண வேண்டும். இங்ஙனம் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 
இலங்கைத் தமிழர்கள் 87 பேரை கைது செய்தது இந்தோனேசிய கடற்படை

First Published : 10 Jul 2011 11:44:03 AM IST


ஜாகர்தா, ஜூலை 10- இலங்கைத் தமிழர்கள் 87 பேரை இந்தோனேசிய கடற்படை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அவர்கள் அனைவரும் தஞ்சம் கோரி நியூசிலாந்து நாட்டில் நுழைய திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், பாதி வழியிலேயே அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்தோனேசிய கடற்படையினரால் கைது செய்யப்பட்டதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. மேலும், அவர்கள் பயணம் செய்த "அலிசியா" என்ற கப்பலும் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட அனைவரும் இந்தோனேசியாவுக்கு கொண்டு செல்லப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக