புதன், 7 ஏப்ரல், 2010

எதற்காக எதிர்க் கட்சி? முதல்வர் கேள்வி



சென்னை, ​​ ஏப்.​ 6:​ ஆளுங்கட்சி எடுக்கின்ற ஒரு நடவடிக்கையைப் பாராட்டத் தொடங்கினால்,​​ பிறகு எதற்காக எதிர்க்கட்சி?​ என்று முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பினார்.காலாவதியான மருந்துகள் பிரச்னை தொடர்பாக,​​ பேரவையில் செவ்வாய்க்கிழமை அவர் அளித்த பதில்:"அரிசி கடத்தப்படும் போது அது பிடிக்கப்படுகிறது.​ அதைப் பிடித்ததற்கு ஒரு பாராட்டும் இல்லை.​ ஆனால்,​​ பிடிபட்ட சரக்கு தமிழகத்தில் இருந்து செல்கிறது.​ நமது மாநிலத்தில் இருந்து செல்லும் சரக்கு,​​ கள்ளச் சரக்கு என்பதால்,​​ அரசின் மீது குற்றம்சாட்ட அது பயன்படுமா என்று தான் பார்க்கின்றனர்.அதைப் பிடித்தவர்களை,​​ அதைத் தடுத்தவர்களைப் பாராட்ட வேண்டாமா என்ற எண்ணம் நமக்கு ஏற்படுவதில்லை.​ பொதுவாக எதிர்க்கட்சிகளுக்கு அந்த எண்ணம் ஏற்படாது.​ ஏற்படவும் கூடாது.​ அப்படி ஏற்பட்டால்,​​ ஆளுங்கட்சி எடுக்கின்ற ஒரு நடவடிக்கையைப் பாராட்டத் தொடங்கினால் பிறகு எதற்காக எதிர்க்கட்சி?​ தேவையில்லை.எனவே,​​ பாராட்ட மாட்டார்கள்.​ பாராட்டக் கூடாது என்ற எண்ணம் நாங்கள் ​(திமுக)​ எதிர்க்கட்சியாக இருந்த போது கூட இப்படித் தான் இருந்தது.​ ஆனால்,​​ இப்போது நீங்கள் இருப்பதைப் போல இவ்வளவு முரட்டுத்தனமாக இல்லை'' என்றார் முதல்வர் கருணாநிதி.
கருத்துக்கள்

கலைஞரின் நேர்மையைப் பாராட்ட வேண்டும். திமுக எதிர்க்கட்சியாக இருந்தபொழுது என்ன நடந்ததாம் என யாரும் கேட்கும் முன்னரே உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார். எதிர்க்கட்சி என்றாலே எதிர்க்கும் கட்சி என்ற ஆன பின்பு அதனிடம் பாராட்டை எதிர்பார்க்கத் தேவையில்லை.(கண்டிப்பாக எதிர்க்கட்சியினர் தனக்குப் பட்டமளித்து ஒரு மா பெரும் பாராட்டு விழா நடத்துவார்கள் எனஎதிர்பார்த்திருக்க மாட்டார்.) நல்லவை தொடரட்டும்! அல்லவை அகலட்டும்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
4/7/2010 4:19:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக