ஞாயிறு, 4 ஏப்ரல், 2010

மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாலையோரம் வசிப்பவர்களையும் சேர்க்க வேண்டும்: கருணாநிதி



சென்னை, ஏப்.3- மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாலையோரம் வசிப்பவர்களையும், அரவாணிகளையும் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

ஏப்ரல் 1 முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. மேலும், முதன்முறையாக மக்கள் தொகை ஆவணம் தயாரிக்கப்படுவதற்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனினும், நாடு முழுவதும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ள அரவாணிகள் குறித்து உங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன். அவர்களையும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது சேர்த்துக் கொள்ள தேவையான வழிமுறையை கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், அரசு எத்தகைய நலத்திட்டங்களை கொண்டு வந்தாலும், 'சாலையோரம் வசிப்பவர்கள்' இன்னும் உள்ளனர். வழக்கமாக அவர்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது விடுபட்டு விடுகிறார்கள். கணக்கெடுப்பில் அவர்களையும் சேர்த்துக்கொள்ள முயற்சி எடுக்குமாறு பரிந்துரைக்கிறேன்.

இவ்வாறு கருணாநிதி தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

கருத்துக்கள்

மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் அனைத்து வகை மக்களையும் உட்படு்த்த வேண்டும். பலரது எண்ணத்தை முதல்வர் எதிரொலித்துள்ளதுபோல் நடைபாதை வாசிகளையும் திருநங்கையரை 3ஆம் பால் அல்லது அலிப்பால் எனக்குறிப்பிட்டும் கணக்கெடுக்க வேண்டும். அதுவே உண்மையான கணக்கெடுப்பாகும். கணக்கெடுப்பின் அடிப்படையில் இவர்களுக்கான நிலையான மறுவாழ்வுத் திட்டததை முதல்வர் அறிமுகப்படு்த்த வேண்டும். பிற மாநிலங்களும் அதனைப் பின்பற்றவேண்டும். கணக்கெடுப்பு தொடங்கி விட்டமையால் உடனடியாக இவற்றிற்கான வினா விவரங்களைச் சேர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.காலங்கட்ந்தேனும் எழுதிய முதல்வருக்குப் பாராட்டுகள்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
4/4/2010 4:09:00 AM

பராசக்தி படத்துல ஒருகாட்சி: பர்மாவிலிருந்து சிவாஜி வந்து காரில் பயணிக்க ஏறியவுடன் சாலையோரவாசிகள் பிச்சைகேட்பதை போல. "சரிதான் போ, தமிழ்நாட்டின் முதல்குரலே நல்லா இருக்கே" என்று. திரைக்கதை வசனம் எழுதியவர் இதே மு க ... 60 வருடங்களாகியும் இதே நிலை. சாலையோரவாசிகளை இல்லாமல் ஆக்குவதற்கு / குறைப்பதற்கு வழி தேடுங்கள்... கணக்கெடுப்போடு நின்றுவிடாமல்.. samoogatthai patri sindhittha M K enge? than kudumbatthai mattum ninaikkum ippodhaiya M K enge?

By Jeyam
4/3/2010 11:20:00 PM

இந்த மக்கள்தொகை கணக்கெடுப்பென்பது, அன்றாடம் நடைபெறக் கூடிய செயலாக இருக்க வேண்டும். அன்றன்றைக்கு பிறந்தோர், இறந்தோர், இடமாற்றம் செய்தோர் தகவல்கள் உடனுக்குடன் சேகரிக்கப்பட்டு, சரிபார்க்கப்பட்டு நிறைவு செய்யப்படவேண்டும். இதற்காக மாநில அரசும் மத்திய அரசும் ஒத்துழைக்கும் வகையில் செயல்பாடுகள் அமையவேண்டும். ஒரு பிரஜையின் அடையாள மற்றும் இருப்பிடத் தகவலை மாநில அரசு தெரிவிக்கவேண்டும். மத்திய அரசு அதை உறுதி செய்து அடையாள அட்டை வழங்க வேண்டும். இது அன்றாட நடவடிக்கையாக அமையுமானால் மத்திய மாநில அரசாங்கங்கள் மிகச்செம்மையாக ஆட்சிபுரிய வாய்ப்புண்டு. நடக்குமா?

By Ganesan AS
4/3/2010 11:10:00 PM

தகவல் தொழில் நுட்பத்தில் இந்தியா இன்னும் வல்லமை பெறவில்லை என்பதை அனைவரும் உணர்ந்து கொண்டால் இதுபோன்ற மாயையின் உண்மை புரியும். இதைப்படிக்கும் அனைவரும் தாங்கள் உபயோகப்படுத்தும் வன்பொருள் மென்பொருள் ஆகியவற்றின் உரிமம் யாரிடம் உள்ளது? உரிமத்தை பயன்படுத்த எவ்வளவு விலை? உரிமத்தை திருட்டுத்தனமாக (Piracy) பயன்படுத்துவதால் ஏற்படும் வைரஸ் தாக்குதல், போன்றவற்றை உணர்ந்துகொள்ள முயற்சித்தாலே இந்தியா முன்னேற வழிபிறக்கும். இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பென்பது ஏட்டுக்சுரைக்காய் அது கறிக்குதவாது. ஏப்ரல் மாதம் எடுக்கப்படும் கணக்கெடுப்பு அக்டோபர் மாதத்திற்கு பொருந்தாது. உடற்கூறு தகவலட்டையின் (Biometric Smart Card) விற்பனைப் பெருக்கத்திற்காக ஏதேதோ காரணங்களைச் சொல்லி பெரும்பாலான அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் தகவல் தொழிவ்நுட்ப வல்லுனர்கள் மூளைச் சலவை செய்யப்பட்டு பொதுமக்களின் வரிப்பணம் வீணடிக்கப் படுகிறதென்பது எம் கருத்து.

By Ganesan AS
4/3/2010 11:08:00 PM

இன்றைய தினமணியின் தலையங்கத்திலே வெளிவந்த சில விஷயங்களுக்கு இன்றே பதில் தெரிவிக்கும் விதமாக இந்த செய்தி வெளியாகி இருக்கிறது. கம்பர் இல்லாமல் தமிழ் மாநாடா? என்ற கேள்விக்கு அடுத்த நாளே 'கம்பர் அரங்கம்' இருக்கும் என்று பதில் வந்தது. வாழ்த்துக்கள் தினமணிக்கு. இதே போன்று பழைய மற்ற தலையங்கங்களுக்கும் பதில் கிடைத்தால் நன்றாக இருக்கும். தினமணியும் நடுநிலையோடு சமூக அக்கறையோடு செயல்பட வேண்டும் எப்போதும்..

By குமரன்
4/3/2010 9:51:00 PM

மு க மற்றும் தி மு க வின் முழு முயற்சியால் அடுத்த சென்சசின் போது (தமிழகத்தில்) இவர்களைத் தவிர எல்லோரும் பிளாட்பாரத்திற்கு வந்துவிடுவார்கள். அதற்குத்தான் முன்னேற்பாடு இந்த அறிக்கை!

By MANI
4/3/2010 9:39:00 PM

நீங்களும் அங்காடி தெரு படத்தை பாத்துடீங்களா? சாலையோரம் மக்களை பத்தி திடீர்னு கவலை பட ஆரம்பிச்சிட்டீங்க? அவங்க ஓட்டும் தேவபடுதா?

By Palani
4/3/2010 9:36:00 PM

Well Done & my Hats Off 2 Dinamani... Whatever V read in the 1st Page & Editorial in Ur Issue around 7 am, V get it's photocopy in a Mail Format on Kalaignar TV News as a Fax sent from Omaanthooraar Maaligai 2 South Block,Delhi(WHAT A GENUINE CREATIVITY?!?) Anyhow, a Gud thing happens 2 uplift downtrodden People means OK... A LAUDABLE ACTIVITY... [but till now no response 2 ?s risen & penned by Mr.Tha.Pandian's Article reg. SILENTNESS ON S.L ISSUE published on 2nd April,Yesterday???]

By Nakkeeran Velayutham
4/3/2010 8:58:00 PM

What a great gesture! He is not ashamed that even after 6 decades of free rule such people exist in this land.

By Sankara Narayanan
4/3/2010 8:36:00 PM

Mr.karunanidhi how many days you are acting like.. real and decent politician.. you are not true men.. like Mr.Voiko.. you working for your family only.. not for tamil people.. any have God is watching everything..he will takecare of you. Ram

By Ram
4/3/2010 7:32:00 PM

ARAVANIKALAI AANVARKKATHIL SERTTHU MAITHANAHA MARRUNGAL>IDEL SEX ENRUPOOTTU KAVALAPPADUTTHA VANDAM>AVARGALUM MANITHARKAL>ITHU ORU SURABIEN KURAIPADU.

By ahmed
4/3/2010 7:10:00 PM

பென்னாகரம் தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தலில் டெபாசிட் தொகையை அதிமுக இழந்து நிற்கின்ற நிலையில் - அந்தத் தோல்வியை மறைக்க வேறு எந்த வழியும் தெரியாமல் மின்வாரியத்தின் மீது சேறு வாரி இறைக்கும் முயற்சியில் ஜெயலலிதா ஈடுபட்டுள்ளார். அவரது குற்றச்சாட்டு கற்பனையானது - உண்மைக்கும் அதற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்பதை நான் விளக்கிட விரும்புகிறேன். 2009-2010ஆம் ஆண்டில் தமிழ்நாடு மின்சார வாரியத்தால் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் மொத்த விலையே சுமார் 1000 கோடி ரூபாய் தான். 1000 கோடி ரூபாய்க்கு நிலக்கரி வாங்கிய நிலையில், அதிலே ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு என்று அறிக்கை விட ஜெயலலிதா ஒருவரால் தான் முடியும்

By கருணாநிதி
4/3/2010 7:07:00 PM

ஐயா உங்க வோட்டுவங்கி நெறம்புரதுக்கு அவங்கமட்டும்தான் பாக்கி அவங்களையாவது விட்டு வைக்ககூடாதா? எந்த கட்சிக்காவது ஓட்டு போட்டுட்டு தெருவோரம் தூங்கிட்டு போயிட போறாங்க - அவங்களையும் குறி வச்சு "கலர்டிவி"சேல்ஸ் பன்னிடனும்னு நினைச்சீட்டீங்க.பாவம் தெருவோரம்

By பொறம்போக்கு
4/3/2010 5:47:00 PM

இந்தியாவில் தேடப்பட்டுவரும் சுவாமி நித்தியானந்தா இலங்கையில் தஞ்சம்! இந்தியாவில் பொலிசாரால் தேடப்பட்டுவரும் சுவாமி நித்தியானந்தா இலங்கைக் காடுகளில் மறைந்திருப்பதாக இரகசியத் தகவல் ஒன்று கசிந்திருக்கின்றது. இவருக்கு இங்குப் புகலிடம் கொடுத்திருப்பவர் ஒரு 'பெரும் புள்ளி' என்றும் கூறப்படுகின்றது. இவரைக் காண்பவர்கள் அண்மையிலுள்ள பொலிஸ் நிலையத்திற்குத் தகவல் தரலாம்.

By Rahim
4/3/2010 5:17:00 PM

அம்மா தாங்கள் எடுத்துரைக்கும் ஒவ்வோர் புள்ளி விவரங்களும்..ஏதுமறியா பொதுமக்களுக்கு நிஜமான 'ஷாக்'தான். இப்படிப்பட்ட புள்ளிவிவரங்களோடு..நீங்கள் மக்களை அடிக்கடி சந்திக்க வேண்டும்..நமது கட்சியில்... மஞ்ச துண்டு பெரியவர் செய்யும் ..செய்த ஊழல்களை இன்றைய தலை முறைக்கு எடுத்து சொல்ல 'ஆளில்லை' என்பது ஒரு குறையே.!!.ஊழல் என்ற சொல்லே இந்த மஞ்ச துண்டு பெரியவர் செய்த காரியங்களாலே வந்த சொல்லாய் தமிழகத்தில் உருவானது என்பதும்.. அரிசி, சர்க்கரை.சிமென்ட், பருப்பு,நெடுஞ்சாலை துறை ஊழல், பாலம் கட்டாமலே கட்டியதாய் ஊழல்..கட்டிய கட்டிடமும் ஒரே வாரத்தில் விழுந்து நொறுங்கிய ஊழல்..டாக்டர் பட்டம் வாங்க செய்த ஊழல்..விவசாயிகளை துப்பாக்கி கொண்டு சுட்டபின்..துப்பாகியிளிருந்து தோட்டா வாராது பூவா வரும் என்று கேட்ட திமிர்..மனைவி பெயர், அம்மா பெயர் என்று நெல்லுக்கும் பருப்புக்கும் வைத்த கொடுமை..சட்ட சபையில் பேசிய இரட்டை'அர்த்த பேச்சுக்கள்..இன்னும் பலவற்றை எடுத்து சொல்ல நம்மிடம் 'திறமையான' பேச்சாளர்கள் இல்லை என்பதால்..அப்பாவி மக்கள் இந்த மஞ்ச துண்டு செய்தவற்றை 'அறியாமல்' அப்பாவிகளாய் இருக்கின்றனர்..சில குவாட்டர் விரும்பிகள்

By AZAGIRI MATHURAI
4/3/2010 5:04:00 PM

இந்த மாக்களுக்கு இதெல்லாம் புரியாது. இதுகளுக்கு கரண்ட் வேணாம் கலர் டிவி போதும்,உரம் வேணாம் இலவச அரிசி போதும்,சிமெண்ட் வேணாம் இத்துண்டு வீடு போதும். நல்ல மருந்து வேணாம் கருணாநிதி காப்பீடு போதும் மொத்தத்தில் அஞ்சு வருஷ நல்லாச்சி வேணாம் ஐநூறோ ஆயிரமோ போதும்

By R.Srinivasan
4/3/2010 5:02:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக