செவ்வாய், 6 ஏப்ரல், 2010

ஜீவா பிரபாகரனுக்கு அஞ்சலிமதுரை,ஏப்.5: "தினமணி' மதுரை பதிப்பின் முதன்மைச் செய்தியாளராகப் பணியாற்றி மறைந்த வீர. ஜீவா பிரபாகரனின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலியும், அவரது படத் திறப்பு விழாவும் மதுரையில் திங்கள்கிழமை நடைபெற்றது. மதுரை செய்தியாளர்கள் சங்கத்தில் நடைபெற்ற இந்த விழாவில் அவரது படத்தை, மதுரை மாநகராட்சி மக்கள் தொடர்பு அலுவலரும், உதவி ஆணையருமான (வருவாய்) ரா.பாஸ்கரன் திறந்துவைத்தார். இந்நிகழ்ச்சியில் ஜீவா பிரபாகரனின் குடும்பத்தினர், செய்தியாளர் சங்க நிர்வாகிகள், செய்தியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கருத்துகள்

நல்ல செய்தியாளர். மக்கள் நலம் சார்ந்த செய்திக் கட்டுரைகளில் கருத்து செலுத்தியவர். நல்ல தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துவது தொடர்பாக அவ்வப்பொழுது என்னுடன் உரையாடியதன் மூலம் நண்பரானவர். அவரது செய்திக் கட்டுரைகள் நல்ல மாற்றங்களையும் ஏற்படுத்தின. நேர்மைக்குத் துணை நின்றவர். அவரது எதிர்பாரா மறைவு அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளித்தது.ஓராண்டு நினைவைப் போற்றும் மதுரை செய்தியாளர்கள் சங்கத்தின் நினைவேந்தலில் என் நினைவலைகளையும் பதிகின்றேன். அவர் நினைவில் வாழும் குடும்பத்தினருக்கு நல்ல எதிர்காலம் அமையட்டும்!

By Ilakkuvanar Thiruvalluvan
4/6/2010 3:05:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக