சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற இலக்கிய பீட விழாவில் (கீழ்வரிசை இடமிருந்து) சிறுகதை சிற்பி விருதுபெற்ற படுதலம் சுகுமாரன், தொழிலதிபர் மாம்பலம் ஆ.சந்திரச
சென்னை, ஏப். 3: தமிழகத்தில் உள்ள தொழிற்சாலையில் தயாராகும் புதிய ரக வாகனங்களுக்கு தமிழ்ப் பெயர் வைக்க வேண்டும் என்று தொழிலதிபரும், எழுத்தாளருமான டாக்டர் "திரிசக்தி' சுந்தர்ராமன் (படம்) வலியுறுத்தினார்.÷"இலக்கியப் பீடம்' இதழ் நடத்திய சிறுகதைப் போட்டி, நாவல் போட்டிகளில் தேர்வு செய்யப்பட்ட எழுத்தாளர்களுக்கான பரிசளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.÷இந்த விழாவில் அவர் பேசியதாவது: எழுத்தாளர் சங்கத்துக்கு சுதந்திரம் தேவை என்பதை விட எழுத்துக்குத்தான் சுதந்திரம் முக்கியமானது. சிறந்த விமர்சனமும் ஓர் இலக்கியமே என்பது தமிழர்களுக்கு மறந்துவிட்டது. படைப்புகளைத் திறனாய்வு செய்வதை நாம் மறக்கக் கூடாது. இப்போது தமிழ் இலக்கியம் முடங்கிக் கிடக்கிறது. எதிர்மறையான விஷயங்களையும் ஆக்கப்பூர்வமானதாக கருதும் நிலை உள்ளது. இப்போதெல்லாம் கிராமங்களில் கூட கிராமியம் குறைந்து விட்டது. இதை பழமன் போன்ற எழுத்தாளர்களின் கிராமியம் சார்ந்த படைப்புகளில் மட்டுமே இனி காண இயலும். தமிழை பல்வேறு வழிகளில் நாமே அழிக்க முயற்சிக்கிறோம். இதையும் கடந்து தமிழ் வாழும்.÷கார்களுக்கு தமிழ்ப் பெயரிடலாம்: தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் வெளிநாடுகளைச் சேர்ந்த கார் தயாரிப்பு ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளின் புதிய வகை கார்களுக்கு, தமிழ் உள்ளிட்ட இந்தியாவின் மொழி, பண்பாட்டுக்கு உகந்த பெயர்களை சூட்ட வேண்டும். ÷இந்தோனேசியா, மலேசியா போன்ற நாடுகளில் இந்த நடைமுறை உள்ளது. இத்தகைய நிபந்தனைகளை அந்த நிறுவனங்களுக்கு நாம் விதிக்க வேண்டும்.÷அப்போதுதான் வீதிகள்தோறும் தமிழ் வளரும். நாம் தமிழை விட்டுக்கொடுத்தாலும், தமிழ் நம்மை ஒருபோதும் விட்டுக்கொடுக்காது என்றார் சுந்தர்ராமன். முன்னதாக அமரர் ரங்கநாயகி அம்மாள் நினைவு நாவல் போட்டியில் பரிசு பெற்ற எழுத்தாளர்கள் ஷைலஜா மற்றும் பழமன் ஆகியோருக்கு அவர் பரிசுகளை வழங்கினார்.÷இந்த விழாவில் தமிழக முன்னாள் மேலவை உறுப்பினர் வ. ஈசுவரமூர்த்தி பேசியதாவது:÷மொழியின் மீது பற்று உள்ளதைப் போல நமது சுதந்திரத்தின் மீதும் பற்று இருக்க வேண்டும். கருத்து வேறுபாடும், மோதல்களும் இருந்தால்தான் சுதந்திரம் உள்ளதாக கருதப்படும். தமிழ் இளமையும், பொலிவும் பெற வேண்டுமெனில் பல்துறை அறிவும், தொழில்நுட்ப புரட்சிகளையும் புகுத்தல் வேண்டும்.÷அச்சிட்ட நூல்கள் அனைத்துமே இலக்கியமாகாது. தமிழில் தரமான இலக்கிய விமர்சனம் தேவை என்றார் வ.ஈசுவரமூர்த்தி. முன்னதாக, எழுத்தாளர் படுதலம் சுகுமாரனுக்கு சிறுகதை சிற்பி விருது மற்றும் பொற்கிழியை அவர் வழங்கினார். சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற நளினி சாஸ்திரி, 2-ம் பரிசு பெற்ற அமுதா பி.பாலகிருஷ்ணன், 3-ம் பரிசு பெற்ற பாரதி வசந்தன் மற்றும் சிறப்புப் பரிசு பெற்ற 10 எழுத்தாளர்களுக்கு "தினமணி' ஆசிரியர் கே.வைத்தியநாதன் பரிசுகளை வழங்கி கெüரவித்தார். பரிசு பெற்ற எழுத்தாளர்கள் அனைவரும் ராஜ நாற்காலியில் அமர வைத்து கெüரவிக்கப்பட்டனர்.÷"இலக்கியப் பீடம்' இதழின் ஆசிரியர், எழுத்தாளர் கலைமாமணி விக்கிரமன், இலக்கியப் புரவலர் மாம்பலம் ஆ. சந்திரசேகர், கவிஞர் "சுடர்' முருகையா, "லேடீஸ் ஸ்பெஷல்' இதழாசிரியர் கிரிஜா ராகவன், "தேவதை' இதழாசிரியர் நளினி சுந்தர்ராமன், பேராசிரியை உலகநாயகி பழனி, தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் வேளச்சேரி கிளையின் துணைத் தலைவர் விஜயலட்சுமி மாசிலாமணி, "பொற்றாமரை' இயக்கத் துணைத் தலைவர் சந்திரா கோபாலன், கண்ணன் விக்கிரமன், கலைமாமணி யோகா, தொழிலதிபர் எஸ்.மனோகரன் ஆகியோர் பங்கேற்றனர்.
கருத்துக்கள்
மத்திய அரசு அனைத்து நிறுவனங்களின் முழக்கங்களையும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான பெயர்கள், செயற்கைக்கோள்களுக்கான பெயர்கள் முதலியவற்றையும் சமற்கிருதத்தில்தான் குறிப்பிடுகின்றது. சமற்கிருதத்திற்கு எழுத்து வடிவம் அளித்த உலக முதல் மொழியான தமிழில் பெயர் வைக்க வேண்டும். ஏற்கெனவே வைக்கப்பட்ட வற்றில் எண்பது விழுக்காடு முழக்கங்களும் பெயர்களும் தமிழில் மாற்றப்பட வேண்டும். அந்த வகையி்ல் திரிசக்தி சுந்தரராமன் பேச்சு பாராட்டத்தக்கது.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
4/4/2010 4:32:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * 4/4/2010 4:32:00 AM