தமிழ் வளர்த்த அறிஞர்கள்... சாயுபு மரைக்காயர்
தமிழ், அரபு, மலாய் ஆகிய மூன்று மொழிகளிலும் திறம் பெற்றிருந்த இப்பெரும் புலவர், தமிழின் அனைத்து வகை யாப்புகளிலும் பாடல்களை அமைத்தவர் சாயுபு மரைக்காயர் (1878-1950). இவர் அமுதகவி என்றும் அழைக்கப்பட்டார். சித்த மருத்துவம், யுனானி மருத்துவம் ஆகியவற்றிலும் இவர் சிறந்து விளங்கினார். மனோன்மணிக் கும்மி, உபதேசக் கீர்த்தனம், மும்மணி மாலை ஆகிய நூல்கள் சாயுபு மரைக்காயரின் தமிழாற்றலை வெளிக்காட்டுகின்றன. தமிழ் மொழிக்கும் இஸ்லாமிய இலக்கியத்துக்கும் தொண்டாற்றியவர் இவர்.
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... மு.ராகவையங்கார்
ராகவையங்கார் (1878-1960) வரலாற்று ஆய்வில் வரலாறு படைத்தவர் என்று போற்றப்பட்டவர். இலக்கிய ஆய்வில் புகழ்பெற்றவர். சிலாசனங்களை வெளியிட்டவர். செந்தமிழ் எனும் இதழில் 'வீரத்தாய்மார்' என்று எழுதிய கட்டுரைக்கு பாரதியே பாராட்டி எழுதியிருந்தார். 'இருளிலேயே மூழ்கிக் கிடக்கும் பாரத வாசிகளுக்கு, மகாபாரதம் காட்டத் தோன்றியிருக்கும் சோதிகளில், உங்கள் நெஞ்சிற் பிறந்திருக்கும் நெருப்பு ஒன்றாகும்' என்று பாராட்டி எழுதினார். வேளிர் வரலாறு, ஆழ்வார்களின் கால நிலை, சேரன் செங்குட்டுவன் உள்ளிட்ட நூல்களை படைத்தவர் ராகவையங்கார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக