திங்கள், 5 ஏப்ரல், 2010


நகர்வலம்: அனுமன் பேசிய தமிழ்!தஞ்சை நால்​வர் என்று அழைக்​கப்​ப​டும் சின்​னையா,​​ பொன்​னையா,​​ சிவா​னந்​தம் மற்​றும் வடி​வேலு ஆகி​யோர் இசைக்​கும் பர​த​நாட்​டி​யத்​துக்​கும் அளித்த பங்கு,​​ இரு​நூறு ஆண்​டு​க​ளாக இந்த இரு கலை வடி​வங்​க​ளுக்​கும் ஒரு தனி அந்​தஸ்தை அளித்​தி​ருப்​பதை கலைத்​து​றை​யைச் சார்ந்த எவ​ரும் மறக்க முடி​யாது.​​இந்​தப் புகழ்​பெற்ற நால்​வ​ரில் "கடைக்​குட்டி'யான வடி​வேலு அவர்​க​ளின் இரு​நூ​றா​வது ஆண்டை,​​ தஞ்சை நால்​வர் குரு​கு​லம் சென்ற வாரம் கொண்​டாடி மகிழ்ந்​தது.​மேடை​யில் ஒரு டஜன் நாற்​கா​லி​க​ளைப் போட்டு அத்​த​னை​யி​லும் பாராட்​டுப் பெறு​வோர் அம​ர​வைக்​கப்​பட்​ட​போது,​​ விடி​ய​வி​டிய பேச்​சுக் கச்​சே​ரி​யாக இருக்​கப் போகி​றதோ என்று பயந்​தது உண்மை.​ ஆனால் சங்​கீத கலா​நிதி கே.பி.சிவா​னந்​தம் அவர்​க​ளின் குமா​ரர் சின்​னையா சிவ​கு​மா​ரும்,​​ தஞ்சை நால்​வர் குரு​கு​லத்​தைச் சேர்ந்த இந்து வர்​மா​வும் புத்​தி​சா​லித்​த​ன​மாக முடி​வெ​டுத்​தார்​கள்.​ பாராட் ​டுக்​கு​ரிய கலை​ஞர்​கள் செம்​ப​னார்​கோ​யில் சகோ​த​ரர்​கள் சம்​பந்​தம் -​ ராஜண்ணா,​​ இசைக் கலை​ஞர் பேரா​சி​ரி​யர் டி.ஆர்.சுப்​பி​ர​ம​ணி​யம்,​​ பால​ச​ர​சு​வ​தி​யி​டம் நட​னம் பயின்ற விமர்​ச​கர் நந்​தினி ரமணி,​​ வீணைக் கலை​ஞர் காயத்ரி,​​ நட​னக் கலை​ஞர் பத்​ம​லோ​சனி நாக​ராஜ் என்று மள​ம​ள​வென அவர்​க​ளுக்​குப் பொன்​னாடை போர்த்தி,​​ நினை​வுப் பரிசு வழங்​கி​விட்டு நிகழ்ச்​சிக்​குத் தலைமை வகித்த முன்​னாள் தலைமை தேர்​தல் கமி​ஷ​னர் என்.​ கோபா​ல​சா​மி​யை​யும்,​​ இசைத்​துறை வல்​லு​னர் பி.எம்.​ சுந்​த​ரத்​தை​யும் மட்​டும் பேசச் சொன்​னது கெட்​டிக்​கா​ரத்​த​ன​மான செயல்.​​கோபா​ல​சாமி வெகு இயற்​கை​யா​க​வும்,​​ சுருக்​க​மா​க​வும் பேசக்​கூ​டி​ய​வர்.​ விஷ​யத்​தைத் தாண்டி வெளியே செல்​லாத பேச்​சா​ளர்.​ பி.எம்.​ சுந்​த​ரம் "கடைக்​குட்டி' வடி​வே​லு​வின் ஜாத​கத்​தையே கையோடு கொண்டு வந்​தி​ருந்​தார்!​""தஞ்​சை​யை​விட்டுதிரு​வ​னந்​த​பு​ரம் மகா​ரா​ஜா​வி​டம் போன வடி​வேலு,​​ பின்​னர் தஞ்​சைக்​குத் திரும்​பவே இல்​லை​.​ ரொம்ப ரோஷக்​கா​ரர் வடி​வேலு'' என்​றார் சுந்​த​ரம்.​​​ ஆர்.​ கண்​ணன் எழு​திய "அண்ணா' வாழ்க்கை வர​லாற்றை பென்​கு​வின் புத்​தக நிறு​வ​ன​மும்,​​ சென்னை புத்​த​கச் சங்​க​மும் இணைந்து வெளி​யிட்ட நிகழ்ச்​சி​யில் அமைச்​சர் சசி தரூர் உரை கச்​சி​த​மாக இருந்​தது.​ ஒரு புத்​த​கம் பற்​றிப் பேசும்​போது என்ன என்ன பேச வேண்​டும்,​​ எப்​ப​டிப் பேச வேண்​டும் என்​ப​தற்கு உதா​ர​ண​மாக இருந்​தது.​ சிக்க​லில் மாட்​டிக் கொண்​டு​வி​டும் அமைச்​ச​ரின் உரை அன்று சுவா​ர​சி​ய​மாக இருந்​தது.​ கண்​ணனை ஐ.நா.​ பணிக்கு அழைத்​தது சசி தரூர்​தா​னாம்.​அடுத்து என்ன எழு​தப் போகி​றார் கண்​ணன்?​"பெரி​யார்' என்று தெரி​கி​றது.​புத் ​த​கம் "அண்ணா'சரி​தம் என்​றா​லும்,​​ அவர் வாழ்க்கை நிகழ்ச்​சி​கள் குறை​வா​க​வும்,​​ அர​சி​யல் அனு​ப​வங்​கள் அதி​க​மா​க​வும் இடம் பெற்​றி​ருப்​ப​தா​கக் குறிப்​பிட்​டார்​கள்.​ அதற்​குக் கார​ணம் அண்​ணா​வின் சொந்த வாழ்க்​கை​யை​விட அர​சி​யல் அல்​லது பொது வாழ்க்கை ஒரு திறந்த புத்​த​க​மாக இருந்​தது என்​றும் கூற​லாம்.​​​திருச்​ சூர் ஓவி​யக் கலை​ஞர் சதா​னந்​தன்.​ கவி​தை​யும் ஓவி​ய​மும் இணை​யும்​போது அதற்​குத் தனி மதிப்பு கிடைத்து விடு​கி​றது என்று நம்​பு​கி​ற​வர்.​லலித் கலா அக​ட​மி​யில்,​​ காளி​தா​ச​னின் ரிது சம்​ஹா​ரத்தை வண்ண ஓவி​யங்​க​ளா​கத் தீட்டி வைத்​தி​ருக்​கும் சதா​னந்​தன்,​​ கேரள பாரம்​ப​ரிய பாணி​யைக் கைப்​பற்​றி​யி​ருந்​தா​லும்,​​ அஜந்தா சுவ​ரோ​வி​யங்​க​ளின் தாக்​க​மும் அவற்​றில் தெரி​கி​றது.​ ஆனால் கேர​ளக் கோயில்​க​ளில் காணப்​ப​டும் சுவ​ரோ​வி​யங்​க​ளின் வரை​கோ​டு​க​ளும்,​​ வண்​ண​மும்,​​ பாணி​யும் அவற்​றின் அழ​கைத் தூக்கி நிறுத்​து​கின்​றன.​ இவ​ரு​டைய ரசி​கர்​க​ளில் சிலர் -​ தபலா வாத்​தி​யக் கலை​ஞர் ஜாகிர் உசேன்,​​ நடி​கர் மோகன்​லால்,​​ இதய நோய் சிகிச்சை நிபு​ணர் டாக்​டர் கிரி​நாத் உட்​பட பலர்!​​இன்​னோர் ஓவி​யர் சிவ கேசவ் ராவ்,​​ நம்​மூர் ஆதி​மூ​லம் மாதிரி,​​ காந்​தி​ஜி​யைப் பல கோணங்​க​ளில் வரைந்து மகிழ்ந்​தி​ருக்​கி​றார்.​ கறுப்பு -​ வெள்ளை ஓவி​யங்​க​ளி​டையே சில மஞ்​ச​ளும்,​​ வெளிர் சிவப்​பு​மாக காந்​தி​ஜி​யின் ஓவி​யங்​கள் தனித்​துத் தெரி​கின்​றன.​ "பாபு'வின் முகத்தை அப்​பட்​ட​மா​கச் சித்​தி​ரிக்க,​​ அவ​ரு​டைய பல புகைப்​ப​டங்​களை ஆராய்ந்​தி​ருக்​கி​றார்.​ அவ​ரு​டைய வாழ்க்​கைச் சரி​தத்​தை​யும்,​​ பய​ணங்​க​ளை​யும் கவ​ன​மாக ஆராய்ந்த பிறகே இந்​தச் சித்​தி​ரங்​களை வரைந்​தி​ருக்​கி​றார் இந்த ஆந்​தி​ரப் பிர​தேச குண்​டூர் நகர ஓவி​யர்.​ஆம ​தா​பாத்,​​ தில்லி என்று நடைபெற்ற இந்த ஓவி​யரின் கண்​காட்சி இப்​போது சென்னை லலித்கலா அகாடமி வந்​தி​ருக்​கி​றது.​ ஏப்​ரல் முதல் வாரத்​தில் பூனா நகர் செல்​லும்.​​​சென்னை திரு​வல்​லிக்​கே​ணி​யில் வசிக்​கும் டி.ஆர்.குப்​பு​சு​வா​மிக்கு இப்​போது வயது 86.​ அக்​க​வுண்​டென்ட் ஜென​ரல் அலு​வ​ல​கத்​தில் பணி​யாற்றி ஓய்வு பெற்​ற​வர்.​ இந்த வய​தில் பல​ரும் சாய்வு நாற்​கா​லி​யில் படுத்து ஓய்வு எடுத்​துக் கொள்​வார்​கள்.​ ஆனால் குப்​பு​சு​வாமி வித்​தி​யா​ச​மா​ன​வர்.​ வால்​மீகி காட்​டும் நவ​ர​சங்​கள்,​​ சொல்​லோ​வி​யங்​கள்,​​ உவமை அலங்​கா​ரங்​களை மட்​டும் ராமா​ய​ணத்தி​லி​ருந்து பொறுக்கி எடுத்து,​​ சுமார் 400 பக்​கங்​க​ளுக்கு ​(ஆமாம்,​​ 400 பக்​கங்​க​ளுக்கு)​ ஒரு நூல் எழு​தி​யி​ருக்​கி​றார்.​வால் ​மீ​கி​யின் சுலோ​கங்​க​ளு​டன்,​​ அவற்​றின் பொரு​ளும் தரப்​பட்​டி​ருக்​கின்​றன.​ "ஆராய்ச்​சிக் கண்​ணோட்​டத்​து​டன் அணுகி விஷ​யங்​களை வழங்​கி​யி​ருக்​கி​றார்.​ இந்த நூல் ராமா​யண உபந்​நி​யா​சம் செய்​ப​வர்​க​ளுக்கு மிக​வும் பயன்​ப​டக்​கூ​டி​யது' என்று பாராட்​டி​யி​ருக்​கி​றார் டாக்​டர் எம்.ஏ.வேங்​க​ட​கி​ருஷ்​ணன்.​ ​ "பக்​தர்​கள்' என்ற அத்​தி​யா​யத்​தில்,​​ தாமச பக்​தர்​கள் தங்​களை வெறு​மனே பக்​தர்​கள் என்று காட்​டிக்​கொண்டு திரி​ப​வர்​கள்.​ இரா​ஜஸ பக்​தர்​கள் பக​வானைச் செல்​வத்​திற்​கா​க​வும்,​​ புக​ழுக்​கா​க​வும் வேண்​டு​வர்.​ சாத்​வீக பக்​தர்​கள் தங்​கள் பாவ நிவர்த்​திக்​கும்,​​ நல்​வாழ்க்​கைக்​கும் பக​வானைப் பிரார்த்​திப்​பார்​கள்.​ நிர ​பேக்ஷ பக்​தர்​கள் ஒன்​றை​யும் விரும்​பா​மல்,​​ பக​வான் ஒரு​வ​னையே விரும்பி பூசிப்​ப​வர்​கள்.​ இவர்​கள் பக​வானை மனத்​தில் எப்​பொ​ழு​தும் நிறுத்தி,​​ ப்ரீ​தி​யு​டன் அவரை அடை​வ​தையே வாழ்க்​கை​யின் குறிக்​கோ​ளா​கக் கொண்டு,​​ பக​வத் கைங்​க​ரி​யத்​தையே புரிந்​து​கொண்டு வாழ்​ப​வர்​கள்' என்​கி​றார்.​​சீதை​யி​டம் அனு​மன் பேசிய மொழி தமிழ் மொழியே என்​கி​றார் ஆசி​ரி​யர்.​ "நான் சமஸ்​கிரு​தம் கல​வாத ஓர் இந்​திய மொழி​யில் பேசு​வேன்.​ தேவ​பா​ஷை​யில் பேசக் கூடாது.​ மனுஷ பாஷை​யில் பேச வேண்​டும்.​ சமஸ்​கி​ரு​தம் கல​வாத இந்​திய மொழி தமிழ் ஒன்​று​தான்;​ அதில் பேசு​வேன்' என்று முடிவு செய்து சீதை​யி​டம் அனு​மன் பேசி​னா​ராம்.​ சுருக்​க​மாக,​​ சுவா​ர​சி​ய​மான நூல்
கருத்துக்கள்

முனைவர் மா.இராசமாணிக்கனார் முதலான தமிழறிஞர்களும் சீதையிடம் அனுமன் பேசிய மொழி தமிழே என நிறுவியுள்ளனர். அக்காலத்தில் இந்தியா என அழைக்கப்படும் இன்றயை நிலப் பரப்பு முகழுவதும் பேசப்பட்ட மொழி தமிழே எனச் செந்தமிழ்ச் செம்மல் பேராசிரியர் சி.இலக்குவனார் நிறுவியுள்ளார். எனவே, தென்பகுதியைச் சேர்ந்த அனுமனும் வடபகுதியைச் சேர்ந்த சீதையும் தமிழில் பேசியதில் வியப்பில்லை. ஆனால், வால்மீகியில் தேவபாசையில் தான்பேசக்கூடாது என அனுமன் சொன்னதாகக் குறிப்பு இல்லை. இருவருக்கும தெரிந்த பொதுமொழியில் பேசியுள்ளான்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
4/5/2010 2:27:00 AM

Dear Editor Mr.TR.Kuppusamy's Book Name please.We want to buy and read

By Rangiem N Annamalai
4/2/2010 6:53:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக