சனி, 6 பிப்ரவரி, 2010

தமி​ழில் மொழி பெயர்க்​கும் வசதி​ "மக்​க​ள​வைத் தலை​வரை விரை​வில் சந்​திப்​பேன்'மதுரை, ​​ பிப்.​ 5:​ மக்​க​ள​வைத் தலை​வர் மீரா​கு​மாரை நேரில் சந்​தித்து நாடா​ளு​மன்​றத்​தில் தமி​ழில் மொழி பெயர்ப்பு வசதி வேண்​டும் என வலி​யு​றுத்த இருப்​ப​தாக மத்​திய ரசா​ய​னம் மற்​றும் உரத் துறை அமைச்​சர் மு.க.அழ​கிரி தெரி​வித்​தார்.​​ ​ ​ மது​ரை​யில் அவர் வெள்​ளிக்​கி​ழமை அளித்த பேட்டி:​​ ​ நாடா​ளு​மன்​றத்​தில் தமி​ழில்​தான் பேசு​வேன் என நான் கூறி​ய​தாக அண்​மை​யில் வெளி​யான செய்தி தவ​றா​னவை.​​ ​ நாடா​ளு​மன்​றத்​தில் மொழி பெயர்ப்பு வச​திக்​காக அமைச்​சர்​கள் அம​ரும் இடத்​தில் 8 பொத்​தான்​கள் உள்​ளன.​ முதல் பொத்​தானை அழுத்​தி​னால் ஆங்​கி​லத்​தில் பேசு​வது ஹிந்​தி​யில் மொழி பெயர்த்து தெரி​விக்​கும்.​ அதே​போல் 2}வது பொத்​தானை அழுத்​தி​னால் ஆங்​கி​லத்​தில் பேசு​வது ஹிந்​தி​யில் கேட்​கும்.​ இதே​போல் தமி​ழில் மொழி பெயர்க்​கும் வசதி வேண்​டும் என்​று​தான் நான்,​​ தொல்.​ திரு​மா​வ​ள​வன் முஸ்​லிம் லீக் கட்சி உறுப்​பி​னர் உள்​ளிட்​டோர் வலி​யு​றுத்​தி​னோம்.​ ​ ​ இது​தொ​டர்​பாக எங்​க​ளது கட்​சி​யின் எம்.பி.க்கள் குழு​வி​னர் மக்​க​ள​வைத் தலை​வர் மீரா​கு​மாரை தில்​லி​யில் சந்​தித்​த​போது,​​ நான் இந்​தோ​னே​ஷி​யா​வில் இருந்​தேன்.​ அடுத்த முறை தில்லி செல்​லும்​போது அவ​ரைச் சந்​தித்​துப் பேசு​வேன் என்​றார்.​​ ​ தொழில் வளர்ச்சி நட​வ​டிக்​கை​க​ளுக்​காக வெளி​நாடு செல்​லும் திட்​டம் ஏதும் உள்​ளதா என்று கேட்​கி​றீர்​கள்.​ ​ ஜெர்​மனி,​​ பிரான்ஸ் ஆகிய நாடு​க​ளுக்​குச் செல்​லத் திட்​ட​மி​ருந்​தேன்.​ ஆனால்,​​ அங்கு கடும் குளிர் இருப்​ப​தால்,​​ பய​ணம் ரத்து செய்​யப்​பட்​டுள்​ளது.​ தற்​போது ஆஸ்​தி​ரே​லியா செல்​லத் திட்​ட​மிட்​டுள்​ளேன்.​ விரை​வில் அதற்​கான தேதி அறி​விக்​கப்​ப​டும் என்​றார் அழ​கிரி.
கருத்துக்கள்

அடச்சே! இதற்குத்தானா இந்த அலபபறை எல்லாம். ஏதோ கூட்டரசு அமைப்பில் தேசிய மொழிகளுக்கான சமஉரிமை கேட்டுப் போராடி வெற்றி காண்பார் என்றால் காதில் பூ சுற்றுகிறாரே! உண்மை இதுதான் என்றால் தொடக்கத்தில் இவரது கருத்தைப் பிறர் வரவேற்ற பொழுது இவரது கருத்தை ஏற்குமாறு குமரி அனந்தன் அவர்கள் நாடாளுமன்ற அவைத்தலைவருக்கு மடல் எழுதியதாகச் செய்தி வந்த பொழுது மறுத்திருக்கலாமே! பகுத்தறிவுடன் சிந்தித்தால் கோரிக்கை தவறாகிறதே! ஏன் எனில் நாடாளுமன்றங்களில் இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டும்தான் பேசலாம் என்னும் பொழுது இவர்களுக்கு இந்தி அல்லது ஆங்கிலப் பேச்சு புரியும். எனவே, இந்தி அல்லது ஆங்கில மொழி பெயர்ப்பு போதுமானது. பிற மொழிகளில் பேச உரிமை இல்லாத பொழுது பிற மொழிகளுக்கான மொழி பெயர்ப்பு தேவைப்படவில்லை. அஞ்சாநெஞ்சன் பெயரை வைத்துக் கொண்டு அஞ்சும் நெஞ்சனாகத் தடம் புரளுவது வேதனையாக உள்ளது. தமிழுக்காகத் தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்தவரின் மைந்தன் தமிழுரிமை காக்கத் துணிவார் எனக் கருதியது தவறு போலும்.மத்திய அமைச்சராக இருந்தும் மதுரை மண்டலத்தில் மட்டும் வலம் வந்துகொண்டிருப்பவரிடம் தமிழ்த் தேசிய உரிமையைக் காப்பார் என

By Ilakkuvanar Thiruvalluvan
2/6/2010 10:05:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
தமிழ் மீட்பு தமிழர் மீட்பு நெடுநடைப் பயணம் 2010

05 February, 2010 by admin

தமிழ் மீட்பு தமிழர் மீட்பு நெடுநடைப் பயணத் தொடக்க நிகழ்வு 25/01/2010 திங்கள் மொழிப்போர் ஈகியர் நாளன்று கோடியக்கரைக் கடற்கரையில் காலை 11 மணியளவில் நடைபெற்றது. ம.தி.மு.க ஒன்றியச் செயலாளர் ஜி.பி.இராமமூர்த்தி தலைமை வகித்தார். ம.தி.மு.க வழக்குரைஞர் காசிநாதபாரதி மற்றும் பலர் வாழ்த்துரை வழங்கினர். தோழர் தியாகு நெடுநடைப் பயணக் குறிக்கோள்களை விளக்கி உரையாற்றினார். தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் தங்கியிருந்த இல்லத்தின் உரிமையாளர் திரு சீதாராமன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். உப்பு நீரில் கால் நனைத்துப் பயணம் தொடங்கியது.

கோடியக்கரையிலிருந்து வேதாரண்யம் வழியாக நெடுநடைப் பயணம் இரவு 8 மணியளவில் ஆயக்காரன்புலம் வந்தடைந்தது. ஆயக்காரன்புலத்தில் நெடுநடைப் பயணத்தின் குறிக்கோள் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. ம.தி.மு.க தோழர் எல்.இளங்கோவன் தலைமை வகித்தார். உலகத் தமிழர் பேரமைப்பைச் சார்ந்த பரந்தாமன் தமிழ்த் தேச வெளியீடான ”முத்துக்குமார்: நெருப்பாய் வாழ்ந்தவன்” எனும் நூலை வெளியிட்டுச் சிறப்புரையாற்றினார். பயணக்குழுத் தோழரும் பெண்ணாடம் மனிதநேயப் பேரவை அமைப்பாளருமான பஞ்சநாதன் முதல் நூலைப் பெற்றுக் கொண்டார். இறுதியாக தோழர் தியாகு நெடுநடைப் பயணத்தின் குறிக்கோள்களை விளக்கி உரையாற்றினார்.

வாய்மேடு, கரியாப்பட்டினம், ஓரடியான்புலம், தலைஞாயிறு, மணக்குடி, எட்டுக்குடி, திருக்குவளை, திருப்பூண்டி, வேளாங்கண்ணி மற்றும் பல சிற்றூர்களைக் கடந்து 30.01.2010 ஆம் நாள் மாலை நடைப்பயணம் நாகை வந்தடைந்தது. மாலை 6 மணியளவில் அவுரித் திடல் மறைமலையடிகள் அரங்கத்தில் தமிழ் சார்ந்த அமைப்புகள் சார்பில் நெடுநடைப் பயணத்தை வாழ்த்திப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நடைப் பயணத் தோழர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது. பயணக் குழுவின் சார்பில் அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவி சுதா காந்தி உரையாற்றினார். அவர் தனது உரையில் இப்படிக் குறிப்பிட்டார்:

”இந்தத் தமிழ் மீட்பு தமிழர் மீட்பு நெடு நடைப் பயணத்தின் வாயிலாக தமிழ் மீட்பு நிதியத்திற்கு ஒரு கோடி ரூபாய் திரட்ட வேண்டும் என்று எங்கள் பொதுச் செயலாளர் கூறினார். எப்படி ஒரு கோடி திரட்ட முடியும் என்று நாங்கள் கேட்டதற்கு, தமிழ் நாட்டில் ஆறு கோடித் தமிழர்கள் இருக்கும் போது ஏன் முடியாது என்று திருப்பிக் கேட்டார்.

”வேளாங்கண்ணியிலிருந்து, எங்கள் பயணம் நாகை வந்து கொண்டிருந்த வழியில் நான் ஒரு மூதாட்டியைச் சந்தித்தேன். எதற்காக நடந்து. செல்கிறீர்கள்? எனக் கேட்டார். நான் பயணத்தின் குறிக்கோள்களை விளக்கிச் சொன்னேன். தாய்த் தமிழ் பள்ளிகளுக்காகவும், தமிழ்த் தேசம் ஏட்டிற்காகவும் இயக்க பணிகளுக்காகவும் ஒரு கோடி ரூபாய் திரட்டும் நோக்கத்தை எடுத்துரைத்தேன். உடனே அந்த மூதாட்டி தன் சுருக்குப் பையை எடுத்து அதிலிருந்த சில்லறைக் காசுகளைச் சரிபாதியாய்ப் பிரித்தார். அவருக்கு ஆறு ரூபாய் எடுத்துக் கொண்டு என்னிடம் ஆறு ரூபாயை நன்கொடையளித்தார். என்னை மனமார வாழ்த்தியும் அனுப்பினார். தமிழ்த் தாயே என்னை வாழ்த்தி ஆறு கோடி ரூபாய் கொடுத்ததாக நான் எண்ணிக்கொண்டேன்.”

பயணத்தின் தலைவரும், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளருமான தோழர் தியாகு தனது ஏற்புரையில், மீனவர்களும் உழவர்களும் ஏனையப் பிரிவு மக்களும் தமிழர்களாக ஒன்றுபட்டு போரடுவதின் மூலமே இழந்த உரிமைகளை மீட்க முடியும் என்ற கருத்தை எடுத்துரைத்தார்.

இறுதியாக வைகோ தனது சிறப்புரையில் இப்படிக் குறிப்பிட்டார்:

தமிழ்நாட்டில் குறள்நெறி தமிழ்ப் பண்பாட்டை மீட்டெடுக்க, காவிரி, பவானி, பாலாறு, முல்லைப் பெரியாறு, அமராவதி ஆகிய ஆற்றுரிமைகளை மீட்டெடுக்க, தமிழக மீனவர் உயிரையும் உரிமையையும் பாதுகாக்க இந்தத் தமிழ் மீட்பு தமிழர் மீட்பு நெடுநடைப் பயணத்தை தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தியாகு தொடங்கியுள்ளார்.

”… உடையணியாமல் காட்டுமிராண்டித்தனமாக மனிதன் வாழ்ந்த காலத்தில் ஆடையணியும் நாகரிகத்தைக் கொண்டு வந்தவனே தமிழன்தான். இலங்கையில் தமிழ் இளைஞர்களை நிர்வாணமாக்கி கண்ணைக் கட்டி கையைக் கட்டி உதைத்துத் தள்ளி சுட்டுக் கொல்கிறான் சிங்கள வெறியன். இதற்கு இந்தியாவும் உடந்தையாக உள்ளது. தமிழக முதல்வர் கருணாநிதியும் பதவியே பெரிதென்று இதற்குத் துணை போகிறார்.

”மரக்கலன்களைச் செலுத்திக் கடல் வணிகத்தைப் பெற்றுத் தந்தவனும் தமிழன்தான். இத்தகைய தமிழினம் ஈழத்திலே அழிந்து கொண்டிருந்தபோது இங்கு 61/2 கோடித் தமிழர்கள் இருந்தும் என்ன செய்தோம்.

”நம் தலைநகரான டெல்லிக்கே வந்து இலங்கையில் போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று ராசபக்சே துணிச்சலாகக் கூறினான். ஈழத் தமிழர்களுக்கு எதிராகக் கேடுகள் செய்து இலங்கையில் யுத்தத்தை நடத்தியதே இந்திய அரசுதான். ஈழத்தில் நடந்த இனப் படுகொலைக்கு இந்திய அரசுதான் காரணம்…”

31.02.2010 காலை நாகையிலிருந்து அந்தணப்பேட்டை சென்று தமிழர் தன்மானப் பேரவையின் தலைவர் தோழர் அ.கோ.கஸ்தூரிரங்கன் (ஏ.ஜி.கே) அவர்களை அவர் வீட்டில் பயணக்குழுத் தோழர்கள் சந்தித்தனர். அங்கிருந்து புறப்பட்டு சிக்கல், ஆவரானி-புதுச்சேரி, வடக்காலத்தூர், தேவூர் வழியாக கீழவெண்மணி சென்றடைந்தனர்.

ஒன்றுபட்டத் தஞ்சை மாவட்டத்தில் கூலி உயர்வுக் கேட்டு அதைத் தர மறுத்த நிலப்பிரபுத்துவ வர்கத்துக்கு எதிராகத் தாழ்த்தப்பட்ட உழைக்கும் மக்கள் சங்கம் கண்டு செங்கொடியேந்தி உறுதியோடு போராடினர். இதன் விளைவாக ஆதிக்க வர்க்கம் 44 உயிர்களை ஒரே குடிசையில் உயிரோடு தீயிட்டுக் கொளுத்தியது. அந்த வெண்மணித் தியாகிகளின் நினைவிடத்தில் பயணக் குழுவினர் வீர வணக்கம் செலுத்தி உறுதி மொழி ஏற்றனர். இந்நிகழ்வில் வெண்மணியின் மூத்த தோழர் இராமையனும் கலந்து கொண்டார். அந்தப் புனித மண்ணிலிருந்து இப்பயணத்திற்குக் கொடையாக ஒரு பிடி நெல் கேட்டோம். வசந்தா எனும் அம்மையார் ஒரு பிடி நெல் எடுத்து வந்தார். தோழர் தியாகு அதைத் துண்டேந்தி பெற்றுக் கொண்டார்.

நினைவிடம் முன்பு தோழர் தியாகு சொல்ல சொல்ல பயணக்குழுவினர் ஏற்ற உறுதிமொழி இதுதான்:

“வர்க்கச் சுரண்டலுக்கும் வர்ண சாதி ஒடுக்குமுறைக்கும் எதிராகப் போராடி உயிருடன் எரிக்கப்பட்ட வெண்மணியின் ஈகச் சுடர்களே! நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்திற்கும் வர்ண சாதி ஒடுக்குமுறைக்கும் முற்றுப்புள்ளி வைத்திடவும் தேசிய ஒடுக்குமுறையை எதிர்த்துப் போராடி தமிழ்த் தேசியச் சமூக நீதிப் புரட்சியை நடத்தித் தமிழ்த் தேசிய சமூக நீதிக் குடியரசு அமைக்கும் போராட்டத்திற்கு எம்மை முழுமையாக ஒப்புக் கொடுக்க உங்கள் பெயரால் உறுதி ஏற்கிறோம்.”

கீழவெண்மணியிலிருந்து புறப்பட்டு கீழ்வேளூர், சோழிங்கநல்லூர், திருமருகல், வடகரை, ஆண்டிபந்தல் வழியாக பயணக்குழுவினர் நன்னிலம் சென்றடைந்தனர். வழினெடுகிளும் அறுவடையில் ஈடுப்பட்டிருந்த உழவர்களும், உழவுத் தொழிலாளர்களும் தமிழ் மீட்பு நிதியத்திற்கு நெல் கொடுத்தனர். இன்று 03.02.2010 பயணத்தின் பத்தாம் நாள். இன்னும் முப்பத்தேழு நாட்கள் மீதம் உள்ளன. இன்னும் 800 கிலோமீட்டருக்கு மேல் நடக்க வேண்டியிருக்கும். 12.03.2010இல் குடந்தையில் பயணம் நிறைவடைவதற்கு முன் நூற்றுக் கணக்கான ஊர்களுக்குச் சென்று இலட்சக் கணக்கான மக்களைச் சந்திக்க உள்ளது தமிழ் மீட்பு தமிழர் மீட்பு நெடுநடைப்பயணம். பயணத்தின் வெற்றிக்கும் தமிழ் மீட்பு நிதியத்தின் வளர்ச்சிக்கும் ஒல்லும் வகையெல்லாம் உதவிட உலகத் தமிழர்கள் அனைவரையும் உரிமையுடன் வேண்டுகிறோம்.

குறிப்பு: தமிழ் மீட்பு நிதியத்திற்கு நன்கொடையளிக்க விரும்புவோர். பின்வரும் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தலாம்.

G.Natarajan, State Bank of India, Thanjavur branch, savings bank account number: 10857678873.

Contact number: 0091- 92831 10603, 0091- 97919 58888


Send To Friend |இச் செய்தியை வாசித்தோர்: 1698
அநாதை அகதி நாய் பயலுகளா : இந்தியப் பொலிசார் வார்த்தைகள்

05 February, 2010 by admin

நாடு இல்லாத அகதி நாய்களுக்கு பாவம்னு இடம் குடுத்தா விடுதலையாம்ல வேணும், என்று கூறி தமிழ் நாட்டுப் பொலிசார் செங்கல்பட்டு சிறப்புமுகாமில் இருக்கும் ஈழத் தழிர்களை அடித்துள்ளனர் என சம்பவதை நேரில் கண்டவர் ஒருவர் அதிர்வு இணையத்திற்குத் தெரிவித்துள்ளார். கருணாநிதி தலைமையில் இயங்கும் தமிழ் நாடு அரசின் கோரத்தாண்டவத்தின் உச்சக்கட்டமே இது. இந்திரா கங்கிரசுடன் இணைந்து இவர்கள் ஈழத் தமிழினத்தின் கருவறுக்கத் துணிந்துவிட்டனர். தமிழகப் பொலிசார் பேசிய விதம் பின்வருமாறு:

என்னடா விடுதலை வேண்டிக் கிடக்குது உங்களுக்கு அனாதப் பயலுகளா? நாடு இல்லாத அகதி நாய்களுக்கு பாவம்னு இடம் குடுத்தா விடுதலையாம்ல வேணும்? கிடைக்குற சோரத் தின்னுபுட்டு கிடங்கடா அகதிப் பயலுகளா…..செங்கல்பட்டில் ஒலித்த அதிரடிப்படை அதிகாரி ஒருவரின் குரலில் தான் எத்தனை கம்பீரம், எத்தனை சிறப்பு!!! ஓசிச் சோறு திங்கற உங்களுக்கு என்னடா விடுதலை??? இதுதான் தமிழகக் காவல்துறை ஈழத் தமிழ் மக்கள் மீது அடிக்கும்போது பேசியவார்த்தைகள்.

வாழ்ந்த வீடும் இழந்து, வாழ்வதற்கு இருந்த நம்பிக்கைகளும் இழந்து உப்புச் சப்பற்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை தங்கள் வாழ்க்கையின் நிரந்தர அடையாளமாய்ச் சுமந்து திரியும் ஈழத் தமிழ் அகதிகள் கடைசியில் தமிழகத்திலேயே வைத்து தாக்கப்பட்டிருப்பது வேதனைக்குரியது மட்டுமன்றி கடுமையான கண்டணத்திற்குரியது, ஒவ்வொரு தமிழனும் வெட்க்கி தலைகுனியவேண்டிய ஒன்று.

ஒரு உணர்ச்சி மிக்க இந்தியன் புலம்பல்:

இந்த தேசத்தில், நீங்கள் வங்கிகளைக் கொள்ளையடித்து குற்றம் சுமத்தப்பட்டிருந்தால் உங்களுக்கு நாங்கள் பத்ம பூஷனோ, இல்லை பத்மஸ்ரீயோ கொடுத்துக் கொண்டாடி இருப்போம், உங்கள் குற்றங்களை எங்கள் தேசிய மலக்கிடங்கில் மறைத்து சிதம்பரம் ஐயாவின் வேட்டியைப் போட்டு மறைத்து விடுவோம், நீங்கள் பாவம் வாழ வழியின்றித் தொப்புள் கொடி உறவுகளைத் தேடி வந்தீர்கள், இங்கே பணிபுரியும் காவல்துறை அதிகாரிகளையும் நீங்கள் உங்கள் உறவுகள் என்று கருதி விட்டீர்கள், அவர்களுக்கு கூட்டணி தர்மங்களையும், ஆட்சிக் கட்டில்களையும் காப்பாற்றும் மிக உன்னதமான பணி இருக்கிறது, இந்திய இறையாண்மையை அலுங்காமல் பாதுகாக்கும் அளப்பரிய பணிக்கு இடையூறாக உங்கள் போராட்டம் இருக்குமேயானால் இப்படித்தான் அடிப்பார்கள், அது முள்ளிவாய்க்காலோ இல்லை செங்கல்பட்டோ எதுவாய் வேண்டுமானாலும் இருக்கலாம், வேறுபாடின்றிப் பேரினவாதத்தின் தடிகள் இப்படித்தான் இறங்கும்.

அதிரடிப்படைத் தாக்குதல் நடத்தப்பட வேண்டுமானால் அதற்கு மாவட்ட அளவில் இருக்கும் உயர் அதிகாரிகளின் அனுமதி பெறப்பட வேண்டும், மிகுந்த உணர்வுப் பூர்வமான சிக்கல்கள் நீடிக்கும் ஒரு ஏதிலிகளின் சிறப்பு முகாமில் இது போன்ற தாக்குதல் நடத்தப்பட வேண்டுமாயின் அதற்கு உறுதியாகத் தமிழக அரச தலைவர்களின் வாய்மொழி உத்தரவாவது பெறப்பட்டிருக்க வேண்டும், என்கிற நிலையில் இது அனுமதி பெற்று நடத்தப்பட்ட ஒரு தாக்குதல் என்றே கருத இடமிருக்கிறது.

நீங்கள் ஏழைகளுக்கு வழங்கும் அரிசியைக் கடத்திப் பிழைப்பு நடத்தும் ஒருவராக இருந்தால் உங்களை நாங்கள் ஏற்றுமதியாளர் என்று சிறப்புச் செய்து விரைத்த காவல்துறை வணக்கம் வைப்போம், நீங்களோ பாவம் உழைக்கவும், பொருள் ஈட்டவும் வழி இல்லாத ஈழத் தமிழர்களாய்ப் போனீர்கள், உங்களை அடித்துத் துவைப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.

நீங்கள் மணல் கொள்ளை நடத்தி மானம் கேட்ட வாழ்வு நடத்தும் மதிகெட்டவராக இருந்தால் உங்களுக்கு சாமரம் வீசி வரவேற்கும் அல்லக்கைகளாக நாங்கள் இருந்திருப்போம், நீங்களோ பாவம், பிழைக்கவே வழி இல்லாத பஞ்சப் பரதேசிகள் ஆனீர்கள், உங்களை எப்படி நாங்கள் விட்டு வைப்போம் உரிமைகள் கேட்க????

இவை எல்லாம் போக நீங்கள் தமிழர்களாய் அல்லவா போனீர்கள், தமிழர்களுக்கு வாக்களிக்க உரிமையுண்டு, தேர்வு செய்ய உரிமையுண்டு, ஏனென்றால் நீங்கள் தேர்வு செய்வதற்கு அவர் பணம் அல்லவா கொடுக்கிறார், சோற்றுப் பொட்டலங்களுக்கு வோட்டுப் போடும் சோரம் போன நமக்கு யாரையும் கேள்விகள் கேட்கும் அதிகாரமெல்லாம் எதற்கு??

யாரையும் குறை சொல்லிப் புலம்பிக் கொண்டு திரிவதில் எந்தப் பயனும் இல்லை உறவுகளே, இனி ஒவ்வொரு ஈழத் தமிழ்க் குடிமகனும் அவனுடைய குழந்தைகளும் கல்வியிலும், பொருளாதாரத்திலும் தன்னிறைவு காணும் நிலை பெறப்பட வேண்டும், காலம் வழங்கிய அநீதியைத் துடைத்து வரலாற்றில் வெற்றி

பெற்ற இனமாக மாறும் வெறியோடு உழைப்பதும் திட்டமிட்டு ஒருவருக்கொருவர் உதவும் நோக்கோடு பயணம் செய்வது

பயன் தரும். புலம் பெயர்ந்த மக்கள் நடத்தும் பகட்டு விழாக்களைக் குறைத்து, ஈழத்தின் பெயரில் வாழ்க்கையும் அரசியலும் நடத்தும் போலி வேடதாரிகளைப் பல லட்சம் செலவு செய்து அழைப்பதை விடுத்து இனி வருங்காலங்களில் பொருளாதார ரீதியில் வலுவிழந்து காணப்படும் உறவுகளை கைதூக்கி விடுவதிலும், கல்வி மற்றும் சமூக ரீதியில் இளைய தலைமுறையை மேன்மைப்படுத்தும் பணிகளில் ஈடுபடுவதிலும் தான் முகாம்களில் வாடும் ஏதிலிகளின் வாழ்க்கை உள்ளடங்கி இருக்கிறது.


செய்வார்களா புலம் பெயர் உறவுகள்??

இலங்கைப் போரில் திறம்படச் செயல்பட்ட ​விஜயபாகு படைப் பிரிவுக்கு பாராட்டுகொழும்பு, ​​ பிப்.​ 5: இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக் கட்டப் போரில்,​​ அந்த இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கொல்லப்படுவதற்கு,​​ அந்த நாட்டின் விஜயபாகு தரைப்படைப் பிரிவு பெரும் பங்காற்றியதாக பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.​ முல்லைத்தீவின் புதுக்குடியிருப்புப் பகுதியில் நடைபெற்ற இறுதிக் கட்டப் போரின் போது பிரபாகரன்,​​ அவரது மனைவி மதிவதனி உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் மறைந்திருந்த இடத்தை விஜயபாகு தரைப்படைப் பிரிவு வீரர்கள் சுற்றிவளைத்துத் தாக்கினர்.​ இதில் பிரபாகரன் உள்ளிட்டோர் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் கூறுகிறது.​ இலங்கை ராணுவத்தில் விஜயபாகு படைப் பிரிவு மிகவும் இளைய படைப் பிரிவாகும்.​ இந்தப் படைப் பிரிவுக்கு இலங்கையை ஆண்ட விஜயபாகு மன்னரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.​ விடுதலைப் புலிகளுடனான இறுதிக் கட்டப் போரில் இந்தப் படைப் பிரிவினர் மிகவும் திறமையாகவும்,​​ துணிச்சலாகவும் செயல்பட்டதாகவும் இலங்கை ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.​ இந்தப் படைப் பிரிவில் இடம் பெற்றுள்ள வீரர்களுக்கு,​​ இலங்கை ராணுவ தலைமைத் தளபதி ஜகத் ஜயசூரியா தலைமையில்,​​ வடகிழக்கு மாகாணத்தில் உள்ள ராணுவத் தலைமையகத்தில் கடந்த வாரம் பாராட்டு விழா நடைபெற்றது.​ கடந்த ஆண்டு விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற இறுதிக் கட்டப் போரில்,​​ வன்னிப் பகுதி ராணுவத் தளபதியாக ஜயசூரியா செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.​ இந்தப் படைப் பிரிவில் இடம் பெற்றுள்ள ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் ஒவ்வொருவரையும் பாராட்டி,​​ கெüரவித்தார் ஜயசூரியா என ராணுவம் வெளியிட்ட ​ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.​ இந்த விழாவையொட்டி,​​ விஜயபாகு படைப் பிரிவின் நிர்வாக அலுவலகக் கட்டடத்தையும் ஜயசூரியா திறந்து வைத்தார்.
கருத்துக்கள்

கொலை வெறியர்களுக்குக் கொலை வெறியர்கள் பாராட்டுவதற்கு வாழ்த்துப் பா பாடும் ஆரியர்கள் தமிழ்ப் பெயரில் மறைந்திருந்தாலும் அடையாளம் காணப்படுகிறார்கள். பொன்சேகோ பக்கம் படையணியினர் மாறிப் படைப் புரட்சியில் ஈடுபடக்கூடாது எனச் சிங்கள அரசு படாத பாடு படுகிறது. அதன் ஒரு பகுதியே இந்தப்பாராட்டு மழை. மனித நேயமற்ற ஈவு இரக்கம் இல்லாத கொலைவெறியர்களுக்கு இறைவன் தர உள்ள பாராட்டும் காத்திருக்கிறது. வினை விதைத்தவர்கள் வினையை அறுடை செய்யும் காலம் வெகு தொலைவில் இல்லை.

வெல்க தமிழ் ஈழம் என வாழ்த்தும்

இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/6/2010 3:18:00 AM

மாவீரன் என்று வெறும் பெயரளிவிலே மட்டும் வீரனாயிருந்த பிரபாகரன் எங்கே, விஜயபாகு படையணி எங்கே? தீவிரவாதிகளை அழித்தொழித்த படையணிக்கு வாழ்துகள். தமிழனின் வீரத்தை கொச்சை படுத்திய பிரபாகரன் தமிழரின் வீர வரலாற்றில் ஒரு இழுக்கை ஏற்படுத்திய கோழை, தன இன மக்களையே கொன்று தான் வாழ ஆசை பட்ட ஒரு சுயநலவாதி, நூற்றுகணக்கான மக்கள் போரில் சாக தானும் தன குடும்பம் மட்டும் கடைசிவரை உயிரோடிருந்து சரணடைந்த உலக மகா கோழை.

By Thiru
2/6/2010 12:46:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
தங்கம் விலை: ஒரேநாளில் ரூ.400 குறைவுசென்னை,​​ பிப்.5:​ தங்கம் விலை கிடுகிடுவெனக் குறைந்து வருகிறது.சென்னையில் வெள்ளிக்கிழமை ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.12,008}க்கு விற்பனையானது.​ இது வியாழக்கிழமை விலையைவிட ரூ.400 குறைவாகும்.​ ஒரு கிராம் ரூ.1,501}க்கு விற்பனை செய்யப்பட்டது.வியாழக்கிழமை விலை:​ ஒரு பவுன்:​ ரூ.12,408.ஒரு கிராம்:​ ரூ.1,551.தங்கத்தில் ஏற்பட்டுள்ள இந்த விலை சரிவு நடுத்தர மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.​ இந்த சரிவு மேலும் சில நாட்களுக்கு நீடிக்கலாம் என்று தங்க நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
முதல்வரை சந்தித்தார் அதிமுக எம்.எல்.ஏ.சென்னை,​​ பிப்.​ 5:​ கோவில்பட்டி தொகுதி அ.தி.மு.க.​ எம்.எல்.ஏ.வான எல்.​ ராதாகிருஷ்ணன் சென்னையில் முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார்.முன்னதாக காலையில் அவர் மதுரையில் மத்திய அமைச்சரும்,​​ திமுக தென் மண்டல அமைப்புச் செயலாளருமான மு.க.அழகிரியை சந்தித்துப் பேசினார்.தொகுதி வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக அழகிரியை சந்தித்துப் பேசியதாக அங்கு ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.​ இந்தச் சந்திப்பு நடந்த சில மணி நேரங்களில் ராதாகிருஷ்ணன் மீது அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தார்.தூத்துக்குடி மாவட்ட ஜெ.​ ஜெயலலிதா பேரவைச் செயலாளர் பொறுப்பில் இருந்து ராதாகிருஷ்ணன் நீக்கப்படுவதாக அவர் அறிவித்தார்.பின்னர் மாலையில் சென்னை வந்த ராதாகிருஷ்ணன் கோபாலபுரத்தில் முதல்வரை சந்தித்து அரை மணி நேரம் பேசினார்.இதன்பின், ​​ செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:​ கோவில்பட்டி தொகுதியின் பிரச்னைகளை சட்டப் பேரவையில் பேச அதிமுக தலைமை எனக்கு அனுமதி தரவில்லை.​ இதனால்,​​ தொகுதி வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.பேருந்து,​ ​ சாலை,​​ தண்ணீர் வசதி போன்றவை போதுமானதாக இல்லை.​ அடிப்படை வசதிக் குறைபாடுகள் உள்ள எனது தொகுதி வளர்ச்சி அடைந்து வரும் பகுதியாகும்.அந்தக் குறைகளை நிவர்த்தி செய்யக் கூடிய உரிமை முதல்வருக்கு மட்டுமே உள்ளது என்றார்.திமுகவில் சேருகிறீர்களா என்ற கேள்விக்கு எந்த பதிலையும் கூற முடியாது என்றார் ராதாகிருஷ்ணன்.அழகிரி வரவில்லை...மதுரையில் தன்னை ராதாகிருஷ்ணன் சந்தித்ததும் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய அமைச்சர் மு.க.அழகிரி,​​ "கோவில்பட்டி தொகுதியின் பிரச்னைகள் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்' என்றார்.மாலையில் முதல்வருடனான சந்திப்பின் போது அவர் வரவில்லை.​ தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளர் என்.பெரியசாமி,​​ எம்.எல்.ஏ.​ அப்பாவு உள்ளிட்டோர் மட்டுமே வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.சமீப காலமாகவே அதிமுகவில் அதிருப்தியில் இருந்த ராதாகிருஷ்ணன் திடீரென அழகிரியை சந்தித்ததும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.இவர் முன்னாள் அமைச்சரும்,​​ சில மாதங்களுக்கு முன் திமுகவில் சேர்ந்தவருமான அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளராகக் கருதப்படுபவர்.கடந்த வாரத்தில் சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு செயலாளர்களை ஜெயலலிதா அறிவித்தார்.​ அப்போது கயத்தாறு ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் மாணிக்கராஜா கோவில்பட்டி தொகுதிக்கு செயலாளராக நியமிக்கப்பட்டார்.​ மாணிக்கராஜா கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட முயன்று வருபவர் என்பதாலும்,​​ அவரே இப்போது தொகுதி செயலாளராக அறிவிக்கப்பட்டதாலும் ராதாகிருஷ்ணன் தரப்பினர் அதிருப்தி அதிகமானது.கட்சியில் இருந்து நீக்கப்படாத காரணத்தால் ராதாகிருஷ்ணன் அதிமுக எம்.எல்.ஏ.வாகவே நீடிக்கிறார்.ஏற்கெனவே அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட எஸ்.வி.​ சேகர் இப்போது எக்கட்சியும் சாராதவராக உள்ளார். சட்டப் பேரவையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் அமரும் பகுதியில் அவருக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ராதாகிருஷ்ணன் திமுகவில் சேருவதாக இருந்தால் எம்.எல்.ஏ.​ பதவியை ராஜிநாமா செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.திமுகவில் சேருவது பற்றி எதுவும் கூற முடியாது என இப்போது ராதாகிருஷ்ணன் கூறியிருக்கிறார்.​ இருந்தாலும் அதிமுக தலைமை நடவடிக்கை எடுக்கும் சூழ்நிலை வந்துவிட்ட காரணத்தால் பேரவையில் அவர் திமுகவுக்கு சாதகமாகவே செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.ஏற்கெனவே சட்டப் பேரவையில் திமுகவுக்கு 99 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.​ எஸ்.வி.சேகர் திமுகவுக்கு ஆதரவான கருத்துகளைப் பேசி வருகிறார்.​ ராதாகிருஷ்ணனின் ஆதரவும் கிடைத்தால் கட்சிக்கு ஆதரவாக 101 எம்.எல்.ஏ.க்கள் இருப்பார்கள்.இதுதவிர பென்னாகரம் தொகுதியில் ஓரிரு மாதங்களில் இடைத் தேர்தல் நடக்கவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொள்கை அடிப்படையில் கட்சி மாறுவது தவறல்ல. ஆனால் நாய் பிடிக்கும்-மன்னிக்கவும் ஆள் பிடிக்கும் வேலையில் இறங்குவது யாருக்கும் அழகல்ல. தனக்குப் பதவி கிடைக்காது என அறியும் பொழுது கட்சி மாறுபவர் இதைவிடப் பெரிய வசதி வரும் பொழுது அங்கிருந்தும் மாறமாட்டார் என்று எப்படிக் கூற முடியும். உறுவது சீர் தூக்கும் நட்பும் பெறுவது கொள்வாரும் கள்வரும் நேர் (குறள் 813)என்று தெய்வப்புலவர் பொதுமறையில் கூறியது போல் இதுவும் பரத்தமைக்கும் திருட்டுத்தனத்துக்கும் சமமானதுதான். என்ற பொழுதும் இது வரை தொகுதிக்கு எந்த நன்மையும் செய்ய வில்லை என்பதை ஒப்புக் கொள்ளும் இந்தச் சட்ட மன்ற உறுப்பினர் இடைத் தேர்தலை வர வைத்து அதன் வழித் தன் தொகுதி மக்களை வளம் படுத்த எண்ணுகிறார் போலும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/6/2010 3:01:00 AM

HIYA.....KONDAATTAM.........Innoru DMK MLA Vararungo....JAYALALITHA.......Neeyum DMK il join pannidu... kadaisiyil jaya nee mattum than admk il iruppai...Ippave DMK Member Aidu...........dont waste ur time jaya.

By Raja
2/6/2010 1:15:00 AM

அரசியல்வாதியும் விபச்சாரியும் பெரியளவில் வித்தியாஸம் ஏதும் இல்லை!

By மானஸ்த்தன்
2/6/2010 1:04:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

வெள்ளி, 5 பிப்ரவரி, 2010

Important incidents and happenings in and around the world

ராமேஸ்வரம்:இலங்கை கடற்படையினர் மீண்டும் தாக்குதலை துவக்கிவிட்டதால், தமிழக மீனவர்கள் அச்சத்துடன் கடலுக்கு சென்று வருகின்றனர்.இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல், இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தாக்குவதை நிறுத்திவிட்டு, பாதுகாப்புப் பணியில் மட்டும் ஈடுபட்டு வந்தனர். தேர்தல் முடிந்து மீண்டும் ராஜபக்ஷே வெற்றி பெற்றதை தொடர்ந்து, நேற்று முதல் மீண்டும் கடற்படையினர் தாக்குதலை துவக்கியுள்ளனர்.ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து வழக்கம் போல் நேற்று முன்தினம் 500க்கும் மேற்பட்ட படகுகளில், மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். மாலை 6 மணியளவில் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது, ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களின் படகுகளை வழிமறித்து, வலைகளை வெட்டி கடலில் வீசியுள்ளனர்.மீனவர்களை தாக்கி, அவர்கள் பிடித்து வைத்திருந்த இறால் மீன்களை பறித்துக்கொண்டு, விரட்டியடித்துள்ளனர்.ஜோசப், சேகர், சேசு உட்பட 20க்கும் மேற்பட்ட மீனவர்களின் படகுகளில் இருந்த மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தி விட்டு சென்று விட்டனர். பாதிக்கப்பட்ட மீனவர்கள், மீன் பிடிக்காமல் நள்ளிரவிலேயே ராமேஸ்வரம் திரும்பினர்.இதனிடையே, இரவு முழுவதும் நடுக்கடலில் மீனவர்கள் மீன் பிடித்ததை தூரத்திலிருந்து இலங்கை கடற்படையினர் கண்காணித்ததாக, நேற்று கரை திரும்பிய ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்தனர். இலங்கை தேர்தலில் ராஜபக்ஷே மீண்டும் வெற்றி பெற்றுள்ளதால், இலங்கை கடற்படையினரின் தாக்குதலை ராமேஸ்வரம் மீனவர்கள் இனி தொடர்ந்து சந்திக்க வேண்டியிருக்கும், என படகு உரிமையாளர்கள் தெரிவித்தனர்.


நகல் எடுக்க | எழுத்தின் அளவு: Decrease font Enlarge font |
மின்னஞ்சல் | RSS | Bookmark and Share


வாசகர் கருத்து
Has it any thing to do with Sethusamudram project ?
Or Is India made to realise its stature in this region , to the satisfaction of US ?
by RVS sharma`,Ras al Khaimah,United Arab Emirates 01-02-2010 21:50:11 IST
நாமளும்...அந்த மீனவன் உழைப்பில் வந்த மீனை நல்ல மொத்திட்டு..இப்படி சொரணை இல்லாம கையலகதனமா இருக்கோமே ன்னு நினைக்கும் போது நம்ம பொறப்பே வேஸ்ட் ன்னு தோணுது... இப்படிக்கு கையாலகாத தமிழனுள் ஒருவன்...
by S Zainul,Jubail,Saudi Arabia 01-02-2010 19:42:57 IST
you are right Mr. Thiruvalluvan
by DR. Gokhul,New Delhi,India 01-02-2010 19:15:46 IST
இந்தியாவிலும் இலங்கையிலும் தமிழர்களை அழிப்பது சிங்கள அரசு. ஆதரிப்பது மத்திய அரசு. இதை பற்றிய கவலை ஏதும் இன்றி, விழாக்கள் நடத்தி தனக்குத் தானே பட்டம் சூட்டிக்கொள்வது கின்னஸ் சாதனை இரண்டு மணி நேர உண்ணாவிரத புரட்சி நடத்திய கலைஞர் அரசு. சாகச் செய்பவனை, சாகச் செய்யாமல் சாகின்றாய் தமிழா என்ற பாரதிதாசன் பாடல் உண்மையாக உரைக்கிறது.
by சார்லஸ் ,Raameswaram,India 01-02-2010 18:01:42 IST
திருவள்ளுவன், நீங்கள் சொல்வது மிகவும் சரி...
by Gee Dinesh,Chennai,India 01-02-2010 15:32:55 IST
அருமையான செயல் ! அபாரம்.

பேசி என்ன பிரயோஜனம் ... தேர்தல்னு வந்தால் நாம தமிழ் துரோக கட்சிக்கு தான் காசு வாங்கிட்டு ஓட்டு போட போறோம் .
by mr tamilan,singapore,India 01-02-2010 15:31:52 IST
தமிழ்நாட்டில் ஒரு தமிழன் முதல்வராக இருந்தும், இந்தியாவில் ஒரு தமிழன் பாதுகாப்பு அமைச்சராக இருந்தும் தமிழனுக்கு பயன் இல்லை.
by தஞ்சாவூர் krishna,Doha qatar,India 01-02-2010 15:12:13 IST
இது நம்ம நாட்டின் கையாலாகாத தன்மை, இதில வல்லரசு என்று பீத்தல்
வேறு, ஒரு அடி கொடுத்தால் அவன் அடங்குவான், இந்த லச்சனதில் போனா சைனா நம்மளை பிடிப்பான் ,
அப்பவும் நம்ம நாடு, ஒன்னும் பண்ணாது, சிரிச்சிகிட்டே இருக்கும், எனக்கு நண்பர் திருவள்ளுவன் மாதிரி
விளக்கமா எழுத தெரியாது ,,,,
தப்ப நினைக்காதீங்க
by pma kaja,Dammam,India 01-02-2010 14:10:29 IST
kind attention siva sankar menon and karunanidhi
by r ramamurthi,dubai,India 01-02-2010 13:17:38 IST
திருவள்ளுவனின் கூற்று அனைத்தும் சரியே.....
by A Rakah Dus,Trichy,India 01-02-2010 13:04:53 IST
இதை படிக்கும் பொழுது நெஞ்சு குமுறுகிறது -
மிக சரியாக சொன்னார் இலக்குவனார் திருவள்ளுவன் - மீனவர்களின் வாழ்வாதார உரிமையை மீட்பது எந்நாளோ ?? தமிழன் கலம் செலுத்தி கடல் கடந்த நாடுகளை வென்றான் ஒருகாலத்தில்!! இன்று வயிற்று பிழைப்புக்கு மீன் பிடிக்கவும் இயலாவண்ணம் சூழ்நிலை
by மணிகண்டன் பிள்ளை ,Bangalore,India 01-02-2010 12:37:42 IST
இலக்குவனாரின் கருத்து மிக சரியானது. இந்தியா ஒருபோதும் நம்மை அதன் குடிமக்களாக நினைத்தது கிடையாது. நாம் தான் ஒருமைப்பாடு என்று வாய் கிழிய பேசிக்கொண்டு இருக்கிறோம் .
by s vetri,chennai,India 01-02-2010 10:42:57 IST
இது ஒன்றும் புதிதோ அல்லது எதிர்பராததுவோ அல்லது ஆச்சர்ய பட தக்கதோ அல்லது அதிர்ச்சியோ அல்ல!!! ஆண்மை என்பது சிறிதும் இல்லாத அரசு, தங்களது கட்சிக்கு மத்தியில் மந்திரி பதவியில் மட்டுமே ஆர்வம் உள்ள ஒரு அரசு தமிழகத்தில் இருக்கும் வரை இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடை பெற்றுகொண்டேதான் இருக்கும்.
==========திருநெல்வேலி அரங்கநாத கிருஷ்ணன்.
by TRK தி.அர.கிருஷ்ணன் ,MYLAPORE==CHENNAI==4,India 01-02-2010 10:19:59 IST
திருவள்ளுவன் நீங்க சொன்னது மிகவும் சரி. ஆனால் ஒன்று கூட உண்டு. அது இந்தியா இப்போது இத்தாலியன் கையில்.
by R.S. Master,kanyakumari,India 01-02-2010 10:17:46 IST
அய்யா இலக்குவனார், ஆறு காரணங்கள் மட்டும்தான் உங்கள் மனதில் உதித்ததோ? ஆறுமே மத்திய அரசு சம்மந்தப்பட்டது தானா? தாங்கள் சிங்ககள அபிமானியோ எனதோன்றுகிறது. விளக்கவும்!
by Mr ராஜ்,Washington,United States 01-02-2010 07:31:30 IST
I am just wondering, if Indian Govt. continue ignoring Tamil fisherman, there are chances that few fisherman follow LTTE style sucide attacts. Freedomfighters/Revolutionist/Lierators/Torroist are not born, they were made
by S Guna,Sydney,Australia 01-02-2010 06:54:18 IST
ரொம்ம நல்லது. கீப் இட் அப். இப்போதாவது தமிழ்நாட்டு மரமண்டைகளுக்கு புத்தி வருதா பார்போம்.
by V புலி ,vannai,Sri Lanka 01-02-2010 06:26:15 IST
இந்தத் துயரங்கள் தொடர்வதற்கு 6 காரணங்கள்தாம் இருக்க முடியும். 1.) தமிழர்கள் இந்தியக் கூட்டமைப்பில இல்லை என்ற உறுதியான நம்பிக்ககை மத்திய அரசிற்கு இருக்க வேண்டும். 2.) தனனுடைய ஏவலைத்தான் சிங்களப்படையினர் செய்கிறார்கள் என்ற மன நிறைவு மததிய அரசிற்கு இருக்க வேண்டும். 3.) தான் என்ன செய்தாலும் வெத்துவேட்டுத் தமிழக அரசு ஒன்றும் சொல்லாது; எதுவும் செய்யாது என்ற உறுதிப்பாடு மத்திய அரசிற்கு இருக்க வேண்டும். 4.) தமிழ் நாட்டில் சிறுபான்மையராக ஆகிக் கொண்டிருக்கும் தமிழ் மக்களை மேலும் இல்லாதொழிப்பதையே மத்திய அரசு இலக்காகக் கொண்டிருக்க வேண்டும். 5.) இன உணர்வும் மனித நேயமும் அற்ற தமிழர்களை அழிக்கும் பொழுது தட்டிக் கேட்கத் தனி யரசு ஒன்றும் இல்லையே என்ற துணிச்சல் மத்திய அரசிற்கு இருக்க வேண்டும். 6.)எப்பொழுதாவது வீராவேசமாகப் பேசினாலும் எப்பொழுதும் தமிழ மக்கள் கொத்தடிமைகளே என்ற பட்டறிவு தந்த பாடத்தை நன்கு படித்திருக்க வேண்டும்.

வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

by I. Thiruvalluvan,Chennai,India 01-02-2010 03:19:50 IST