சனி, 30 ஜனவரி, 2016

அலைபேசிக்கணிமை 2016 – தமிழ்க்குறுஞ்செயலிகள் உருவாக்க மாநாடு

அலைபேசிக்கணிமை 2016 – தமிழ்க்குறுஞ்செயலிகள் உருவாக்க மாநாடு

infitt_heading01

அன்புள்ள உத்தமம் உறுப்பினர்கள் அனைவருக்கும் வணக்கம்.
 தை 22 & 23, 2047 / பிப் 5 & 6, 2016  ஆகிய  இருநாளும் உத்தமம் இந்தியக்கிளையின் சார்பாக செல்பேசிக் கணிமை 2016. – தமிழ்க்குறுஞ்செயலிகள் உருவாக்க மாநாடு – கருத்துரை வழங்கும் நிகழ்வு தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் நடைபெற உள்ளதால் அனைத்து உத்தமம் உறுப்பினர்களையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
  செல்பேசிக் கணிமை 2016 குறுஞ்செயலி மாநாடு நிச்சயமாக அனைத்துப் பேராசிரியர்கள் – தமிழ்க் கணியன்கள்(மென்பொருள்) உருவாக்குநர்களுக்குப் பேரளவில் உதவியாக இருக்கும்.
 தமிழில் கணியன்கள்(மென்பொருள்கள்) உருவாக்கினால் நிதி வழங்குவது, அதற்கான தொழில்நுட்பத்திற்கான உதவி என்று மைக்ரோசாப்ட்டு, கூகிள், இன்போசிசு போன்ற  பெரிய நிறுவனங்கள் நமக்கு உதவிட ஆயத்தமாக உள்ளனர். எனவே அனைவரும் கண்டிப்பாகக் கலந்துகொள்ளுமாறு வேண்டுகிறோம்!
மேலும் விவரங்களுக்கு :
முனைவர் துரை.மணிகண்டன் : 94862-65886
துரை.மணிகண்டன் - thurai.manikandan
இப்படிக்கு
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் 
​உத்தமம்



பெங்களூரு மாநகர்த்தொடரிக் கூட்டுக்கழகத்தில் வேலைவாய்ப்பு


பெங்களூரு மாநகரத் தொடரி - bangalore-metro-rail-corporation

பெங்களூரு மாநகர்த்தொடரிக் கூட்டுக்கழகத்தில் வேலைவாய்ப்பு


  பெங்களூரு மாநகர்த்தொடரிக் கூட்டுக்கழக (Bangalore Metro Rail Corporation Limited) அரசு நிறுவனத்தில் 3 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 21 துணை முதன்மைப் பொறியாளர் பணியிடங்களுக்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன!
[No. BMRCL/224/ADM/2016/PRJ நாள்: 20.01.2016]
மொத்தக் காலியிடங்கள்: 21
பணி: துணை முதன்மைப் பொறியாளர் (Deputy Chief Engineer)
காலியிடங்கள்: 07
ஊதியம்: உரூ.37,400 – 67,000 + தர ஊதியம் உரூ.8,700 மொத்தம் உரூ.1,22,039
வயது வரம்பு: 55-க்குள் இருக்க வேண்டும்.
பணி: செயற்பொறியாளர் (Executive Engineer)
காலியிடங்கள்: 14
ஊதியம்: மாதம் உரூ.15,600 – 39,100 + தர ஊதியம் உரூ.6600 மொத்தம் உரூ.69,372
வயது வரம்பு: 50-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் கட்டுமானப் (சிவில்) பிரிவில் இளநிலைப் பொறியியல் (பி.இ) அல்லது இளநிலைத் தொழில்நுட்பப் (பி.டெக்) பட்டம் பெற்றிருக்க வேண்டும். தொடர்புடைய துறையில் 12 – 15 ஆண்டுகள் பணிப் பட்டறிவு (அனுபவம்) பெற்றிருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
General Manager (HR),
Bangalore Metro Rail Corporation Limited,
III Floor, BMTC Complex, K.H.Road,
Shanthinagar, Bangalore – 560027.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேரக் கடைசி நாள்: 20.02.2016
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் தெரிந்து கொள்ள இந்தச் சுட்டியை அழுத்துங்கள் –  http://www.bmrc.co.in/pdf/careers/Notification20012006.pdf.
-செய்தி: நன்றி தினமணி
பெயர்-இ.பு.ஞானப்பிரகாசன் - name_e.bhu.gnanaprakasan



கருநாடகத்தில் வேலைவாய்ப்பில் கன்னடர்களுக்கு முன்னுரிமை

கருநாடகச் சட்டமன்றம், bangalore legislature

கருநாடகத்தில் வேலைவாய்ப்பில்

கன்னடர்களுக்கு முன்னுரிமை

  வேலைவாய்ப்பில் கன்னடர்களுக்கு முன்னுரிமை அளிக்கத் தனியார் நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்று கருநாடகத் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பரமேசுவர(நாயக்கு) அறிவுறுத்தினார்.
  இது குறித்து அவர் பெங்களூரில் செய்தியாளர்களிடம் 21.01.2016 அன்று கூறியதாவது:
  கருநாடகத்தில் உள்ள தனியார் நிறுவனங்களில் 30 விழுக்காடு வரை கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று சரோசினி மகிசி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே பின்பற்றி வருகின்றன.
  பெரும்பாலான நிறுவனங்களும், தொழிலாலைகளும் இதைப் பின்பற்றாமல் புறக்கணித்து வருகின்றன. இது அரசின் பார்வைக்கு வந்துள்ளது. தனியார் நிறுவனங்கள் தங்கள் போக்கை மாற்றிக் கொண்டு, வேலைவாய்ப்பில் கன்னடர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
  சரோசினி மகிசி அறிக்கையை நடைமுறைப்படுத்துமாறு அமைச்சர்களுக்கு முதல்வர் சித்தராமையா ஆணையிட்டுள்ளார். இது குறித்துத் தனியாரிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. அறிக்கை வந்தவுடன், தொழில்துறை அமைச்சர் ஆர்.வி.தேசுபாண்டேயுடன் ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
  தனியார் நிறுவனங்களில் கடைநிலை ஊழியர் பணிகள் கன்னடர்களுக்கு வழங்கப்படுகின்றன. உயர் பதவிகள் வழங்குவதில் முறையின்மை தொடர்கிறது. இதை நிறுவனங்கள் திருத்திக் கொள்ள வேண்டும் என்றார் பரமேசுவர(நாயக்கு).
– தினமணி
-படம்: நன்றி :http://www.nativeplanet.com
பெயர்-இ.பு.ஞானப்பிரகாசன் - name_e.bhu.gnanaprakasan