வெள்ளி, 24 மே, 2019

வெற்றிப்பரிசாக எழுவருக்கும் விடுதலை வழங்குக! - இலக்குவனார் திருவள்ளுவன்

வெற்றிப்பரிசாக எழுவருக்கும்
விடுதலை வழங்குக!
உலகெங்கும் உள்ள சட்டத்தின் ஆட்சியில் தண்டனை பெற்றவர்களைத் தண்டனைக் காலம் முடிவதற்கு முன்பே விடுதலை செய்வதும் ஒரு பகுதியாகும். அண்மையில் இலங்கையில் ‘புத்தபூர்ணிமா’ எனப்படும் வைகாசி விசாகச் சிறப்பு நாளில் 762 தண்டனைவாசிகளை இலங்கை அரசு விடுதலை செய்துள்ளது ஓர் எடுத்துக்காட்டாகும். இதை எல்லாம் அறியாமல் அடிக்கடிச் சிலர் “கொலையாளிகளை விடுதலை செய்யலாமா” என்கின்றனர். எழுவர் விடுதலைக்கு நீதிமன்றம் குறுக்கே நிற்கவில்லை.   ஏனெனில் தண்டனைக்குப் பிறகு விடுதலை செய்வதில் அது தலையிடாது.  அவ்வாறிருக்க ஆளுநர் தமிழக அரசின் முடிவுகளுக்கு எதிராகவும் நீதிமன்ற அறிவுறுத்தலுக்கு முரணாகவும் எழுவர் விடுதலைக்கான கோப்பில் கையாப்பமிடாமல் காலங்கடத்துவது தவறு என்றுதான் எதிர்க்க வேண்டும்.
மேலும் இந்த எழுவரைப் பொறுத்தவரை புலனாய்வுத்துறையினர், காவல் துறையினர், நீதித்துறையினர் என வழக்கு தொடர்பானவர்கள் குற்றம் சாட்டப்பட்ட சாத்தனுக்கு மாற்றாக அப்பாவியான சாத்தனை வழக்கில் சிக்க வைத்தது, இரவிச்சந்திரன் வாக்கு மூலத்தை மாற்றி வைத்தது எனப் பல முறைகேடுகள் நிகழ்த்தியதைக் குறிப்பிட்டு இவர்கள் விடுதலை செய்யப்படவேண்டியவர்கள் எனப் பலமுறை தெரிவித்துள்ளனர். அப்பாவிகளைக் காலத்தை நீட்டித்துச் சிறைகளில் அடைத்து வைத்திருப்பது மனித நேயமல்ல என்ற உணர்வுதான் நமக்கு வரவேண்டும். கொலைக்கு எதிரானவர்கள் போலவும் அறவாணர்கள் போலவும் சட்டம் தெரிந்தவர்கள் போலவும் கொலையாளிகளை விடுதலை செய்யலாமா எனக் கேட்பது அறியாமையும் மனிதநேயத்திற்கு எதிரானதுமாகும்.
அப்பாவிகளான எழுவரும் விடுதலை செய்யப்பெற்றால் உண்மையான குற்றவாளிகளான சு.சா.போன்ற பா.ச.க.வினர் சிக்குவார்கள் எனத்தான் பா.ச.க. விடுதலைக்கு எதிராக இருப்பதாக மக்கள் கருதுவதால் இந்த அவப்பெயரிலிருந்து காப்பாற்றிக் கொள்ளவாவது எழுவர் விடுதலை உடன் நிகழ வேண்டும்.
பா.ம.க. கூட்டணி நிபந்தனைகளில் ஒன்றாக எழுவர் விடுதலைபற்றித் தெரிவித்திருந்ததால், மாபெரும் வெற்றி பெற்றிருக்கும் நரேந்திர(மோடியிடம்) வலியுறுத்தி எழுவர் விடுதலையை அறிவிக்கச் செய்ய வேண்டும். திருவாளர்கள் சுதேந்திரராசா என்கிற சாந்தன்,  சிரீகரன் என்கிற முருகன், பேரறிவாளன் என்கிற அறிவு, திருமதி நளினி, இராபர்ட்டு பயசு, செயகுமார், இரவிச்சந்திரன் ஆகியோருக்கு விடுதலையைத் தன் வெற்றிக்குப் பரிசாகப் பா.ச.க. அளிக்கட்டும்!
 அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்,  எழுத்தைக்காப்போம்!  மொழியைக் காப்போம்!  இனத்தைக் காப்போம்!  தமிழேவிழி!  தமிழா விழி!
[கொலையாளிகளை விடுவிப்பது நியாயமா? எனத் தினமலரில் இன்று(வைகாசி 10, 2050 / 24.05.2019) இஃது உங்கள் இடம் பகுதியில் வந்த மடலுக்குமறுமொழி.]

வியாழன், 23 மே, 2019

இலக்கியச் சிந்தனை நிகழ்வு 586 / குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 50

அகரமுதல

வைகாசி 11, 2050  சனி   25.05.2019  மாலை  06.00 மணி

 சீனிவாச காந்தி நிலையம் அம்புசம்மாள் தெரு, ஆழ்வார்பேட்டை, சென்னை 600018

இலக்கியச்     சிந்தனை 586

சொல்லின் செல்வர் இரா.பி.சேது(ப்பிள்ளை) – புதுவை இராமசாமி

குவிகம் இலக்கிய வாசல் 50 ஆவது நிகழ்விற்கான முன்னோட்டம்

‘கருத்தில் வாழும் கவிஞர்கள்’ தொடர் நிகழ்வு – முடியரசன்

அகரமுதல


வைகாசி 10, 2050 வெள்ளிக்கிழமை 24.05.2019   

மாலை  06.30 மணி

பாரதிய வித்தியா பவன் சிற்றரங்கம்,

கிழக்கு மாட வீதி, மயிலாப்பூர்

‘கருத்தில் வாழும் கவிஞர்கள்’ தொடர்   நிகழ்வு

முன்னிலை ; இலக்கியவீதி இனியவன்  அவர்கள்

தலைமை : தமிழாகரர் தெ. முருகசாமி

அன்னம்  விருது பெறுபவர்:  கவிஞர்  சென்னிமலை தண்டபாணி

சிறப்புரை  : 
‘கவிஞர் முடியரசன்’ –  வழக்கறிஞர் அருள்மொழி
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :  கவிஞர் மலர்மகன்
தகுதியுரை: செல்வி ப. யாழினி 
இலக்கியவீதி, பாரதிய வித்தியா பவன்,
கிருட்டிணா இனிப்பகம்

புதன், 22 மே, 2019

தமிழ் இலக்கிய மன்றம், புழுதிவாக்கம்

அகரமுதல


வைகாசி 19, 2050 ஞாயிறு 02.06.2019

மாலை 4.00

இடம் : திருக்குறள் பேரவை

22அ, ஆறாம் முதன்மைச்சாலை, நங்கை நல்லூர், சென்னை 61

கவியரங்கத் தலைமை : திரு சொ.பத்மநாபன்
கருத்தரங்கத் தலைமை : திருக்குறள் பா.தாமோதரன்
அன்புடன்
த.மகாராசன்
அமைப்பாளர், 24, கலைமகள் தெரு
புழுதிவாக்கம்,சென்னை 600 091
பேசி 044 – 2242 1983 ;  98412 91492

கவிஞர் மு.முருகேசின் சிறுவர் கதை நூலுக்கு ‘கவிதை உறவு’ வழங்கும் சிறந்த நூலுக்கான முதல் பரிசு

 கவிஞர் மு.முருகேசு எழுதிய ’தவிட்டுக் குருவியும் தங்கராசு மாமாவும்’ எனும் சிறுவர் கதை நூலுக்கு, ’கவிதை உறவு’ இதழின் சார்பில் சிறந்த சிறுவர் கதை நூலுக்கான முதல் பரிசு வழங்கப்பட்டது.
சென்னையிலிருந்து கடந்த 47 ஆண்டுகளாக வெளிவரும் ’கவிதை உறவு’ இதழின் சார்பில் சிறந்த நூல்களுக்குப் பல்வேறு தலைப்புகளின் கீழ் ஆண்டுதோறும் பரிசுகளை வழங்கி வருகின்றனர்.
  2018- ஆம் ஆண்டு வெளியான சிறந்த நூல்களுக்கான விருது வழங்கும் விழா சென்னை அண்ணா சாலையிலுள்ள தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் கடந்த சனிக்கிழமை மாலை (மே.18) அன்று நடைபெற்றது.
  இவ்விழாவிற்கு,  மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன் தலைமையேற்றார்.
கவிஞர் தமிழியலன் அனைவரையும் வரவேற்றார்.
 2018-ஆம் ஆண்டு வெளியான நூல்களில் சிறுவர் இலக்கியப் பிரிவில் சிறந்த நூலாக கவிஞர் மு.முருகேசு எழுதிய ‘தவிட்டுக்குருவியும் தங்கராசு மாமாவும்’  எனும் நூல் தேர்வு செய்யப்பட்டு, முதல் பரிசாக உரூ.5000/- பரிசுத்தொகையைத் தமிழ் வளர்ச்சி பண்பாட்டுத்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராசன்வழங்கினார்.
  சிறுவர் கதை நூலுக்கான முதல் பரிசினைப் பெற்றுள்ள கவிஞர் மு.முருகேசு, வந்தவாசி நூலக வாசகர் வட்டத்தின் தலைவராகவும், வந்தை வட்டக்  கோட்டைத்  தமிழ்ச்  சங்கத்தின் அறிவுரைஞராகவும் இருந்து சமூகம், கல்வி, கலை இலக்கியப் பணிகளைத்  தொடர்ந்து செய்து வருகிறார். இதுவரை 43-க்கும் மேற்பட்ட கதை, கவிதை , கட்டுரை, சிறுவர்  இலக்கியம், திறனாய்வு நூல்களைப் படைத்துள்ள இவர், தனது நூல்களுக்காக 25-க்கும் மேற்பட்ட பல்வேறு அமைப்புகள் வழங்கிய பரிசுகளையும் விருதுகளையும் பெற்றுள்ளார்.

‘கவிதை உறவு’ இதழின் 47ஆம் ஆண்டு விழா

அகரமுதல


கவிதை உறவின் 47ஆம் ஆண்டு விழா சென்னை தேவ நேயப் பாவாணர் நூலக அரங்கில் மிகச்சிறப்பாக நடந்தது.
தேசிய மணி இல கணேசன் தலைமையில் ஏர்வாடி இராதாகிருட்டிணனின் இரு நூல்களை சென்னை காவல் துறை இணை ஆணையர் கவிஞர் முனைவர் வடுகம் சிவகுமார், கரூர் வைசிய வங்கி மண்டலத் தலைவர் திரு அன்புராசு ஆகியோர் வெளியிட்டனர்.
விழா மலரை நீதியரசர் முனைவர் பி சோதிமணி வெளியிட ஆலிம் முகமது சாலிகு அறக்கட்டளைச் செயலர் திரு செகு சமாலுதீன்பெற்றுக்கொண்டார்.பேராசிரியர் முனைவர் இரா மோகன், அமுதசுரபி ஆசிரியர் முனைவர் திருப்பூர் கிருட்ணன் முதலான சாதனையாளர்களுக்கான விருதுகளையும் சிறந்த நூல்களுக்கான பரிசுகளையும் மாண்புமிகு தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் திரு மாஃபா பாண்டியராசன் வழங்கி வாழ்த்திப்பேசினார்.
நிரம்பி வழிந்த நூலக அரங்கமும், நிகழ்ச்சிகளும் நிறைவாக அமைந்திருந்தன.

செவ்வாய், 21 மே, 2019

பிள்ளைச் செல்வங்கள் நன்னெறியில் நடை பெற வாய்ப்பு! திருக்குறளைக் கற்பித்துப் பணப் பரிசும் தருகிறார்கள்!

அகரமுதல

இயங்கு தமிழ் வழங்கும்
திருக்குறள் கற்றால் ….
மொத்தம் நூறாயிரம் உரூபாய் பரிசு
திருக்குறள் வகுப்பில் சேர்ந்து திருக்குறள் பயின்று தேர்ச்சி பெற்றால்

முதல் பரிசு உரூ.25,000

பயிற்சிக்காலம்

சூன் 08 முதல் திசம்பர் 2019 முடிய

வகுப்பு மையங்கள்
மயிலாப்பூர், க.க.நகர், புது வண்ணை, மேடவாக்கம்
(பள்ளியின் பெயர்கள் தொடர்பு கொள்வோருக்குத் தெரிவிக்கப்படும்)
தொடர்பிற்கு:

98405 79871, 98400 03360, 99404 92064

இலக்கு பத்தாம் ஆண்டு நிறைவு

அகரமுதல

வணக்கம்.
வைகாசி 08, 2050 புதன்கிழமை  22.05.2019 – மாலை 06.30 மணி
பாரதிய வித்தியா பவனில்
“சிலம்பைத் தொடுவோம் – சிலம்பொலியைத் தொடர்வோம்”
என்கிற நிகழ்வை
இலக்கு அமைப்பும்,  கிருட்டிணா இனிப்புகள் நிறுவனமும்
 இணைந்து நடத்த இருக்கின்றன.
மதிப்புமிகு சிலம்பொலி ஐயாவின் நினைவைப்
போற்றவும்,
இளைய சிலம்பொலிகளை வாழ்த்தி வழி நடத்தவும்,
தங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்

வரவேற்பு  : இளைய சிலம்பொலி  ப. யாழினி
தொடக்கம்  : திரு ம.  முரளி
முன்னிலை : முனைவர் மணிமேகலை புட்பராசு
நாயக நயம்புரை : இலக்கியச் சுடர்  த. இராமலிங்கம்

இளைய பரல்கள் இயம்புரை  :
இளைய சிலம்பொலி த. திருமாறன்
இளைய சிலம்பொலி கே. சிம்மாஞ்சனா
இளைய சிலம்பொலி மா. மதன்குமார்
இளைய சிலம்பொலி ப. கங்காதேவி
இளைய சிலம்பொலி கோ. சரவணன்
நன்றி : செல்வன் ப. சிபி நாராயண்
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு  : திரு இலக்கியவீதி இனியவன்