சனி, 23 மார்ச், 2019

சிலப்பதிகாரம் – தொடர் சொற்பொழிவு கி.இ.க. – ஒய்எம்சிஏ பட்டிமன்றம்

அகரமுதல


பங்குனி 12, 2050 செவ்வாய் 26.03.2019

மாலை 6.00

சிலப்பதிகாரம் – தொடர் சொற்பொழிவு

தலைமை: கவிஞர் கா.வேழவேந்தன்

சிறப்புரை:  பேரா.மா.வயித்தியலிங்கன்

அளவளாவல் – வி.இரவிசங்கர்

அகரமுதல


பங்குனி 10, 2050/ சனி / 24.03.2019

மாலை 4.00


குவிகம் இல்லம்,
 6, மூன்றாம் தளம்வெண்பூங்கா அடுக்ககம்,
24, 
தணிகாசலம் சாலைதியாகராயர்நகர்,
சென்னை 600 017

அளவளாவல் –

வி.இரவிசங்கர், இதழாளர்

வெள்ளி, 22 மார்ச், 2019

தமிழ்நாட்டுக் கல்வி உரிமை – ஆர்ப்பாட்டம்

அகரமுதல



பங்குனி 09, 2050/ சனி / 23.03.2019
முற்பகல் 09.00 முதல் நண்பகல் 12.00 வரை

வள்ளுவர் கோட்டம், சென்னை

தமிழ்வழிக் கல்வி இயக்கம் – 8015562644

தனிச் சின்னத்தில் போட்டி – வைகோவிற்குப் பாராட்டு

அகரமுதல


தனிச் சின்னத்தில் போட்டி – வைகோவிற்குப் பாராட்டு!

“ஈரோட்டு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் ம.தி.மு.க. வேட்பாளர் கணேசமூர்த்தி, தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவில்லை! தொகுதித் தேர்தல் அலுவலர் ஒதுக்கும் சின்னத்தில் போட்டியிடுவார்” என அக்கட்சியின் பொதுச் செயலாளர் தலைவர் வைகோ தெரிவித்துள்ளார்.
தி.மு.க. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வலியுறுத்துவதாகவும் ம.தி.மு.க.விற்குரிய பம்பரம் சின்னம் கிடைக்கவில்லை எனில் உதய சூரியனில் போட்டியிடுவதாக வைகோ தெரிவித்தார் என்றும் ஊடகங்களில் செய்திகள் வந்தன.
19.03.2019 வெளிவந்த ‘அகரமுதல’ இதழின் இதழுரையில் ‘பாவம் வைகோ’ எனக் கட்டுரை வெளியிட்டு இருந்தோம். அதில், “ம.தி.மு.க.வின் சின்னமான பம்பரம் கிடைக்காவிட்டால் வேறு சின்னத்தில் போட்டியிட வேண்டுமே தவிர, உதயசூரியனில் போட்டியிடக் கூடாது” எனத் தொண்டர்களின் கருத்தை எதிரொலித்திருந்தோம்.
 இதற்கிணங்க மேற்குறித்தவாறு தனிச்சின்னத்தில் போட்டியிடுவதாகத் தெரிவித்துள்ள வைகோவிற்குப் பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவிக்கிறோம்.
ஆசிரியர், அகரமுதல

‘கருத்தில் வாழும் கவிஞர்கள்’ தொடர் நிகழ்வு-கம்பதாசன்

அகரமுதல


இலக்கியவீதி, பாரதிய வித்தியா பவன், கிருட்டிணா இனிப்பகம்
‘கருத்தில் வாழும் கவிஞர்கள்’ தொடர்   நிகழ்வு
கவிஞர் கம்பதாசன்
 பங்குனி 08, 2050  வெள்ளிக்கிழமை22.03.2019
    மாலை  06.30 மணி
பாரதிய வித்தியா பவன் சிற்றரங்கம், கிழக்கு மாட வீதி, மயிலாப்பூர்
முன்னிலை : இலக்கியவீதி இனியவன்
தலைமை : முனைவர் இராம. குருநாதன்
அன்னம்  விருது பெறுபவர்:  கவிஞர்  சீவபாரதி 
கவிஞர் கம்பதாசன்பற்றிய  சிறப்புரை  :  முனைவர் சொ. அருணன் 
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :  கவிஞர் மலர்மகன்
தகுதியுரை: திரு துரை இலட்சுமிபதி

வியாழன், 21 மார்ச், 2019

சமால் முகம்மது கல்லூரி மு.மா.ச. குடும்ப நாள், சிங்கப்பூர்

அகரமுதல


சமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் குடும்ப நாள், சிங்கப்பூர்

 திருச்சி சமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை), சென்ற ஞாயிற்றுக்கிழமை பங்குனி 03, 2050 / 17-03-2019 அன்று, சிங்கப்பூர் கிழக்குக் கடற்கரைப் பூங்காவில், சிங்கப்பூரின் சமூக ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் மேம்படுத்தும் வகையில், பல இன மக்களும் கலந்துகொண்ட குடும்ப நாள் விழாவைச்  சிறப்பாகக் கொண்டாடியது.
கவிமாலை சிங்கப்பூர் அமைப்பின் தலைவர் கவிஞர் திரு இறை மதியழகன்சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். சிங்கப்பூர் இந்திய முசுலிம் பேரவையின் தலைவர் திரு முகம்மது கௌசு வாழ்த்துரை வழங்கினார்.
“இது போன்ற நிகழ்வுகள், சிங்கப்பூரின் ஒற்றுமை, நல்லிணக்கம், பண்பாட்டுப் பண்புகளைக் கட்டிக் காப்பதற்கும், அதன் அவசியத்தை இளையர்களுக்கு எடுத்துக்காட்டவும் வழி வகுக்கின்றன” என்று குறிப்பிட்டார் சங்கத்தின் தலைவர் கணக்காய்வாளர் முனைவர் மு. அ. காதர்.
மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள், புதிர் போட்டிகள், வண்ணம் தீட்டுதல் போட்டி, இல்லத்தரசிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள், பெரியவர்களுக்கானப் போட்டிகள், பரிசுக் குலுக்கு போன்றவை விழாவில் இடம் பெற்றன. பெரியவர்கள், இல்லத்தரசிகள், குழந்தைகள் அனைவரும் இவ்விழாவில் கலந்து முதியோர்களைப் போற்றிச் சிறப்பித்தனர். சங்கத்தின் செயலாளர் கணிதப் பேராசிரியர் திரு அமானுல்லா நன்றி கூறினார்.
 முதுவை இதயாத்து

புதன், 20 மார்ச், 2019

தேர்தல் ஆணையம் கோரும் உறுதிமொழி சட்டத்திற்குப் புறம்பானது! – கி.வேங்கடராமன்

அகரமுதல

மாணவர் வழியாகத் தேர்தல் ஆணையம் கோரும் உறுதிமொழி சட்டத்திற்குப் புறம்பானது!

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வேங்கடராமன் கண்டனம்!

  “தேர்தலில் வாக்களித்து, சனநாயகத்தில் பங்கு கொள்வீர்” என்ற உறுதிமொழிப் பத்திரம் (Sankalp Patra) தேர்தல் ஆணைய அதிகாரிகளால், அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டு, பெற்றோர்களிடம் கையெழுத்து பெற்று வருமாறு மாணவர்கள் வலியுறுத்தப்படுகிறார்கள்.
 இந்த உறுதிமொழிப் பத்திரத்தில் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்றும், இதுவரை பதிவு செய்யப்படாதவர்களைப் பதிவு செய்து விடுவோம் என்றும், 2019 ஏப்பிரல் 18 அன்று தமிழ்நாட்டில் நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்போம் என்றும் பெற்றோர்கள் உறுதிமொழி அளித்துக் கையொப்பம் இட வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளது.
மாணவ, மாணவிகளின் தாய், தந்தை பெயர், வாக்காளர் அடையாள அட்டை எண், கைப்பேசி எண் ஆகியவற்றைக் குறிப்பிட்டு, இந்த உறுதிமொழிப் பத்திரத்தில் கையெழுத்திட்டு அளிக்க வேண்டும் என்றும், அவற்றைத் தமது பெற்றோர்களிடம் இருந்து மாணவ, மாணவிகள் பெற்று வந்து பள்ளியில் சேர்க்க வேண்டும் என்றும் பள்ளி நிருவாகங்களுக்குத் தேர்தல் ஆணையம் கட்டளை இட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின்  இந்த நடவடிக்கை முற்றிலும் சட்டப் புறம்பானது ஆகும்.
அரசமைப்புச் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகளின்படி, தேர்தலில் வாக்களிப்பதும், வாக்களிக்காமல் இருப்பதும் இந்தியக் குடிமக்களின் விருப்பம் சார்ந்தது. யாரையும் வாக்களிக்கும்படி கட்டாயப்படுத்த முடியாது. உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளும் இதனை உறுதி செய்திருக்கின்றன.
இந்த நிலையில், வாக்களிப்போம் என்று வாக்காளர்களை உறுதிப் பத்திரம் அளிக்குமாறு வலியுறுத்துவது தேர்தல் ஆணையமே செய்யும் சட்டமீறலாகும்!
வாக்களிக்கும் அகவை 18 என்று சட்டம் கூறும் நிலையில், வாக்களிக்க வலியுறுத்தும் ஆவணத்தில் பெற்றோர் கையொப்பம் பெற்று வருமாறு, 18 அகவைக்குக் கீழுள்ள பிள்ளைகளை ஈடுபடுத்துவது அப்பட்டமான சட்டமீறலாகும்.
இன்றைக்கு இந்தச் சட்டமீறல் அனுமதிக்கப்படுமானால், நாளைக்கு ஆளுங்கட்சிக்கு வாக்களிக்குமாறு, மறைமுகமாக வலியுறுத்துவதற்கு வழி ஏற்படும். இதனை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
எனவே தேர்தல் ஆணையம் சட்டத்திற்குப் புறம்பான இந்த உறுதிமொழி பத்திரச் சுற்றறிக்கையைத் திரும்ப பெற வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு தலையிட்டுப் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள உறுதிமொழிப் பத்திரத்தைத் திரும்பப் பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com  
இணையம் : www.tamizhdesiyam.com  
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam   

செவ்வாய், 19 மார்ச், 2019

‘வள்ளுவரின் ஆரியச் சிந்தனை ஓட்டம்’ என்னும் திரிபு வாதத்திற்கு எதிர்ப்பு

அகரமுதல

பங்குனி 08, 2050 வெள்ளி மார்ச்சு 22, 2019 மாலை 6.00

அன்னை மணியம்மையார் மன்றம்,     பெரியார் திடல், சென்னை 600 007

‘வள்ளுவரின் ஆரியச் சிந்தனை ஓட்டம்’ என்னும் திரிபு வாதத்திற்கு எதிர்ப்பு

தலைவர்: முனைவர் பொற்கோ
பெரியார் நூலக  வாசகர் வட்டம்
(குறிப்பு : நிகழ்ச்சித் தலைப்பு வள்ளுவரின் வடமொழிச் சிந்தனை யோட்ட எதிர்ப்பு என உள்ளது. அப்படியானால் வள்ளுவருக்கு ஆரியச்சிந்தனை ஓட்டம் இருப்பதாதகவும் அதை எதிர்ப்பதாகவும் இதன் மூலம் திருவள்ளுவரை எதிர்ப்பதாகவும்  பொருள் ஆகிறது. இது நிகழ்ச்சி உணர்விற்கு எதிரானது என்பதால் தலைப்பை மாற்றிக் குறித்துள்ளேன்.)