வெள்ளி, 24 நவம்பர், 2017

தொலைத்தகவல் (Telematics) பயன்பாடு-சிறப்புப் பார்வை 3/3 : சிறுமி பேரரசி முத்துக்குமார்


தொலைத்தகவல் (Telematics) பயன்பாடுசிறப்புப் பார்வை 3/3

நல்வாழ்வுத் தொலைத்தகவல்  (Health Telematics)
     இது மனிதனின் உடல் நலத்தைப் பேண உதவுகிறது. பொதுவாகத் தொலைமருத்துவம் அல்லது தொலை நல்வாழ்வு (tele-medicine or tele-health) எனவும் அழைக்கப்படுகிறது. நல்வாழ்வுத் தொலைத்தகவல், நல்வாழ்வு நடவடிக்கைகளைக் கண்காணிக்க உதவுகிறது. நல்வாழ்வுத் தொலைத்தகவல் நுட்பத்தின் மூலம் உடல் எடை, மனித  நல்வாழ்வு, குழந்தைப் பேறு போன்றவற்றை முறையாகக் கையாளலாம். மேலும் தொலைவிலுள்ள நல்வாழ்வுத் தகவல்கள், மருத்துவ வளர்ச்சி ஆகியனவற்றை அறிந்து பயன் பெறலாம். ஆகவே நல்வாழ்வுத் தொலைத்தகவல்  நலமான மன்பதை மாற்றத்திற்கு இருபத்தோராம் நூற்றாண்டின்  ஆற்றல் வாய்ந்த கருவியாகத் திகழ்கிறது.
மனிதநேயத் தொலைத்தகவல்(Human Tele-matic)
     இப்பிரிவில் திறன் இல்லம், மி-நலம்   போன்றன  முதன்மை வாய்ந்தனவாக அமைகின்றன. மனித குலத்தைக் காக்கும் கடவுளாக மனிதநேயத் தொலைத்தகவல் வலம் வருகின்றது. ஆகவே மனித நேயத்தின் இன்றியமையாமையைத் தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் காக்கிறது தொலைத்தகவலியல்.. இதற்காக விருதுகளும் வழங்கி பாராட்டப்படுகின்றன. இதில் பெர்லின், 2017 விருதைக் கூறலாம். இவ்விருது 2017 செப்டம்பர் 1 முதல் 6 வரை செருமனியின் பெர்லினில் வழங்கப்படுகிறது (IFA, Human Telematic Award, Berlin, 2017).
குமுகாயத் தொலைத்தகவல் (Social Tele-matic)
     குமுகாயத் தொடரில் மனிதர்களுக்கு  முதன்மைப் பங்குள்ளது. மனிதனை மனிதனாக மதிக்கத் தெரிந்திருக்க வேண்டும். இம்மதிப்பினை தகவல் தொழில்நுட்ப வகையில் பறைசாற்றுவதே குமுகாயத் தொலைத்தகவல் பயன்பாடாகும். வேலையிடங்களில் குறிப்பாக ஓட்டுநராக இருந்தால் அவரின் சேவையை மதித்து பாராட்டுகள் வழங்க வேண்டும். வாகன ஓட்டுநர் சிறந்த முறையில் வாகனம் ஓட்டுவது, நன்னடத்தையைக் கொண்டிருப்பது ஆகியன சிறந்த சேவையில் அடங்கும். பணியாளர்களுக்கு முதலாளிமார்கள் போட்டிகள், தக்க பரிசூதியம் ஆகியனவற்றையும் ஏற்படுத்தலாம். இந்நடவடிக்கையினால் வேலையாட்களுக்கும் முதலாளிமார்களுக்கும் நல்ல புரிந்துணர்வு ஏற்படும். வேலையாட்களின் கவனிப்பு அவர்களைச் சீரிய முறையில் பணியை மேற்கொள்ள வழி வகுக்கும். எ.கா: வாகன ஓட்டுநர் வாகன எரிவாயுவைச் சிக்கனப்படுத்திச் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதாகும். எனவே மனிதர்களுக்குச் மன்பதையுணர்வு மேலோங்கும் என்பதில் ஐயமில்லை.
உலகளாவிய தொலைத்தகவல் நிறுவனங்கள்
உலகளாவிய வணிகத்  தொலைத்தகவல் 2016-2020) (Global Commercial Telematics Report (2016 – 2020) அறிக்கையின்படி உலக அரங்கில் தொலைத்தகவல் தொழில்நுட்பம் பல நிறுவனங்களில் தோற்றுவிக்க முயற்சிகள் ஆங்காங்கே கலங்கரை விளக்குபோல வெளிச்சமாகத் தெரிந்தாலும் புகழின் உச்சியில் வீற்றிருப்பது என்னவோ 10 நிறுவனங்கள் மட்டுமே. அவற்றுள் முதல்  சிறந்த நிறுவனமாக  ஏர்ஐகியூ(AirIQ) திகழ்கிறது. இந்த நிறுவனம் அமெரிக்கா, கனடா நாடுகளில் ஆதிக்கம் செலுத்துகிறது. [இதனைத் தொடர்ந்து Fleetmatics, mix I TELEMATICS (1996), TomTom (1991), Trimble (35 வருடங்கள்), Actsoft (1999), ctrack, FLEET BOARD (2010), KORE, masternaut. ]இந்தியாவிலோ முதல் 10 தொலைத்தகவல் தொழில்நுட்ப  நிறுவனங்களாக (GPS) Traccar, Starcom, sahaj GPS Tracker, ATTIGPS, Road Point, Azuga, IndTrack, Apex Telesoft, Autocop, Asset GPS Tracking System உள்ளன (WLivenews, 2017). மலேசியாவில் CAPTOR 2017 நிறுவனம் “ தொலைத்தகவல்” சேவையை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாகும். உலகில் வாகனங்கள் திருடு போகும் நாடுகளில் மலேசியா 10 ஆவது இடத்தில் உள்ளது (தி ஃச்டார், 2015).
 எதிர்காத் தொலைத்தகவல் சேவைகள்
   உலக நாடுகளில் எதிர்கால  தொலைத்தகவல் தொழில்நுட்பம் பல வடிவங்களில் வேரூன்றியிருக்கும். அவை முறையே  வலைமம் (network), ஒளிசார் வலைமம் (optical network), மெய்நிகராக்க வலைமம் (virtual network), ஒருங்கிணைந்த வலைமக் கட்டமைப்புகள் (Integrated network configurations), இணைய நெறிமுறை சேவை (IP service), வலைமக் குறியீடு (network coding), மேலடுக்கு வலைமம் (Overlay network), ச-ச பிணையம் (P2P networking),  திரள் கணிமம் (cloud computing). இந்த எதிர்கால தொலைத்தகவல் சேவைகளே உலக நாடுகளின் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை வரையறுக்கும் சிம்ம சொப்பனமாகத் திகழும். இக்கூற்று என் மலையகமான மலேசியத் திருநாட்டையும் உள்ளடக்கும்.
தொலைத்தகவலில் என் பட்டறிவு
      என் பள்ளிப் பட்டறிவில் தொலைத்தகவல் பயன்பாடு சில வகைகளிலே அறியப்பெற்றேன். அவை முறையே மி.-புத்தகம், மி.-கற்றல், மி.-நூலகம். மி.புத்தகப் பயன்பாட்டைப் பள்ளி ஆசிரியரின் மூலம் பாடக் கற்றலில் அறிந்தேன். இதன் மூலம் எனக்குத் தேவையான புத்தகங்களை பதிவிறக்கம் செய்து படிப்பேன். இதன் விளைவாக நிறைய புத்தகங்களைப் படித்துத் தகவல்களை அறிந்து கொண்ட மாணவி என்று பள்ளி அளவில் பரிசு வழங்கப்பட்டது.
     மி.-கற்றல் வழி எனக்கு நிறைய தகவல்கள் கிடைத்தன. அஃதாவது மெய்நிகர் கற்றல் வழி பாடத்தையறிந்து ஆசிரியரோடும் மற்ற மாணவர்களோடும் கலந்துரையாடி கற்றலில் ஈடுபட்டேன். சில வேளைகளில் மி.- கற்றல் வழி பெறப்பட்டுச் சேமித்து வைத்துள்ள தகவல்களை இணைய வசதி இல்லாத நேரத்திலும் பயன்படுத்தினேன். மி.-நூலகப் பயன்பாட்டிலும் எங்கள் பள்ளி ஆசிரியர்கள் படிக்கும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்தனர். அதன் மூலம் நிறைய புத்தகங்களை நேரடியாகவும் பதிவிறக்கம் செய்தும் வாசித்து மகிழ்வேன்.
     என் கற்றலில் தொலைத்தகவல் நன்மைகள் பல. அதில் குறிப்பிடத்தக்கது என் எதிர்கால இலட்சியமான  அறியலாளர் என்ற நோக்கத்தை அடைய இஃது உறுதுணையாக இருக்கிறது. மேலும் நிறைய தகவல்களை உலக வளர்ச்சிக்கேற்ப அறிய தொலைத்தகவல் பயன்பாடு எனக்கு அரிய அருட்கொடையாக அமைந்துள்ளது.
முடிவுரை
  தொலைத்தகவல் எனும் அறிவியல் மின்கம்பி இணைப்புத் தகவல் தொழில் நுட்பம் வருங்கால தலைமுறையினருக்குத் தகவல் இணைப்புப் பாலமாக அமையும் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை. மலேசியாவில் இம்மாநாடு மலேசியத் தொழில் நுட்பப் பல்கலைக்கழகத்தில்  சூலை 2018 இல் நடைபெறும் (IEEE,2018). இந்த மாநாட்டின் பகிர்வுகள் மலேசிய நாட்டின் “தொலைத்தகவல்”  வளர்ச்சிக்கு குறிக்கல்லாக (milestone)விளங்கும். பொருட்பாலில் 684 ஆவது குறளான
  அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன்
செறிவுடையான் செல்க வினைக்கு.
  புதுமை உலகத் தூதுவனாகத் தொலைத்தகவல்  தொழில் நுட்பத்தை வள்ளுவர் இப்படிப் பகர்கின்றார். அஃதாவது இயற்கையான அறிவியல் தொழில் நுட்ப அறிவைக் கொண்டு கவர்ந்திழுக்கும் கருவி அமைப்பைப் பெற்று ஆராய்ச்சியால் தொழில் நுட்பக் கல்வியறிவை மனிதர்களுக்குத் தூது விடும் என்கிறார். இறுதியாக
முடியும்!
உன்னாலும் முடியும்!
முடிவெடு!
திட்டமிடு!
செயல்படு!
இடைவிடாது செயல்படு!
தொடர்ந்து செயல்படு!
முடியும்!
உறுதியாக
உன்னாலும் முடியும்!
.
பேரரசி முத்துக்குமார் (ஐந்தாம் ஆண்டு)
(Pehrarsi Muthukumar)
 மகா கணேசா வித்தியாசாலை தமிழ்ப்பள்ளி 32000 சித்தியாவான், பேராக்கு.


மேற்கோள்கள்
 1. உலகத் தமிழ் இணைய மாநாடு (2017). மலேசியா.
 2. கங்காதரன்.சி. (2017). தமிழில் புதுத்தடங்கள். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.சென்னை.
 3. திருக்குறள்.
 4. தி சன், 28-1-2016.
 5. தி ஃச்டார், 2015.
 6. CAPTOR (2017). Telematics.com Retail Sdn Bhd.
 7. CHAINWAY TSP Telematics Service Provider (2017). Guangdong, China.
 8. Global Commercial Telematics Report (2016 – 2020). Top 10 Global Commercial Telematics Companies, Technavio, UK.
 9. IEEE (2018). TAFGEN. 2ND International Conference In Telematics and Future Generation Works Net.
 10. Niki Davis & Dominic Prosser (1999). Telematics for Teacher Training Project. Final Report. ERIC.
 11. telematics technology – Dogpile Web Search.html
 12. WLivenews (2017). Top 10 Best GPS Tracking Systems Offering Companies in India.

அறிஞர் மா.நன்னன் படத்திறப்பு, சென்னை 600 007


 கார்த்திகை 10, 2048 – ஞாயிறு – நவம்பர் 26, 2017 காலை 11.00

நடிகவேள் மன்றம், பெரியார் திடல், 

சென்னை 600 007

அறிஞர் மா.நன்னன் படத்திறப்பு

நினைவேந்தல்


தமிழர் தலைவர் கி.வீரமணி
 இனமானப் பேராசிரியர் க.அன்பழகன்
தளபதி மு.க.தாலின்
முனைவர் மறைமலை இலக்குவனார்
கவிஞர் கலி.பூங்குன்றன்
செம்மல் இரா. கோவிந்தன்

-நன்னன் குடி

பெயரிடாத நட்சத்திரங்கள், நூல் வெளியீட்டு விழா, மும்பை


கார்த்திகை 09, 2048 – சனி – நவம்பர் 25, 2017  மாலை 6.00
மாதுங்கா, மும்பை
ஈழப்பெண்போராளியின் கவிதைகள்

பெயரிடாத நட்சத்திரங்கள்,

நூல் வெளியீட்டு விழா

அன்புடையீர்,
வணக்கம்.
நிகழ்வுக்கு உங்கள் வாழ்த்துகளும் பங்களிப்பும் பெருமை சேர்க்கும்
புதியமாதவி
மும்பை
பேச: 091 9969647854
இலெமூரியா அறக்கட்டளை

Braving Colombo’s harassment, people in occupied Tamil Eelam prepare for Heroes Day

Braving Colombo’s harassment, people in occupied Tamil Eelam prepare for Heroes Day

Harassments by the occupying Sinhala military intelligence and the SL Police are being reported across the 8 districts in the North and East as Eezham Tamils have been mobilising themselves this week to prepare the remaining of the destroyed structures at various Tamil Eelam Great Heroes Cemeteries that have been razed to the ground by the occupying military of genocidal Colombo. The SL Police in Jaffna has deployed additional ‘Special Task Force’ commandos and the Senior Deputy Inspector General in Jaffna has vowed to deploy Sinhala Army soldiers at any time under the pretext of controlling gang violence and narcotic trafficking. Both the crimes have been systematically spread by the military intelligence in the occupied Tamil Eelam as part of a systematic psychological warfare against Eezham Tamils. 

There has been a steady increase of gang violence in recent days, particularly in the Jaffna peninsula. Even the SL Governor to North, Reginald Cooray, has admitted possible SL police involvement with the gangs in the North, civil sources in Jaffna said. 


Ki'linochchi
The remains of a Heroes Cemetery being cleared by self-mobilised people in Ki'linochchi
Mullaiththeevu -04

Last year, the people of Ki’linochchi demonstrated their will to mark Tamil Eelam Heroes Day. 

This year, most of the parents across all the 8 districts have mobilised themselves with a resolve to mark Tamil Eelam Heroes Day without political hijack by certain ITAK politicians, who operate against the aspirations of Eezham Tamils. 

As a result of their resolve, the common flame of sacrifice would be only lit by the parents of Tamil Eelam Heroes in all the districts. 

The self-mobilisation of the people has mostly irked the occupying Sinhala military intelligence, which seems to respond with gang violence and other crimes as a tactic for justifying military deployment. 

On Tuesday, the people marked the beginning of Tamil Eelam Heroes Week at several places with the lighting of common flames and special events for the families of fallen heroes. 


Mullaiththeevu -01
A special event held for the families of Tamil Eelam Heroes in Mullaiththeevu
Mullaiththeevu -02
Mullaiththeevu -03
A section of the participants at Mullaiththeevu event
Trinco - 1
Invitation to Heroes Day Remembrance at Aalangku'lam, Champoor, Trincomalee
Trinco - 2
Heroes Cemetery being cleared by the people in Trincomalee
Jaffna UJ 1
Common Flame of Sacrifice lit at Jaffna University
Jaffna UJ 2
Heroes Day poster at a temple site within the premiss of Jaffna University
Jaffna VVT 1
Valveddith-thu'rai, Jaffna
Jaffna VVT 02
Valveddith-thu'rai, JaffnaChronology:

SL Port Authority vandalises coconut farm of Tamil woman in Trincomalee

SL Port Authority vandalises coconut farm of Tamil woman in Trincomalee


The Colombo government is intentionally avoiding giving back the lands of rightful Tamil owners in the district, commented ITAK (TNA) National List Parliamentarian for Trincomalee district Mr K Thurairetnasingam, who witnessed the plight of a Tamil woman, R. Mangaleswary, who had planted 40 coconut plants in her Chena-cultivation lands. SL Port Authority (SLPA) officials entered her farm lands on 11 November and destroyed the coconut plants and associated crops claiming that the lands belong to SLPA. However, former SL Minister of Ports and Shipping Mr Arjuna Ranatunga had promised one-year ago to issue proper land deeds to Tamil farmers who have been using the farms for decades, the TNA parliamentarian said. The SL Police at China Bay was also refusing to register a complaint from the affected victim, Mr Thureratnasingam said. 

Long before the episode, SL Agriculture Department officials had inspected the lands and were appreciative of the way Ms Mangaleswary had utilised the farmlands in an eco-friendly manner. She had planted suitable crops such as Tapioca in between the coconut palms. 

The violent assault by SLPA officials has come as a shock to the victim's family, the TNA parliamentarian said. 

Mangaleswary's family was using the Chena (slash-and-burn) farm lands at the locality for decades. 


7 ports coming under SLPA
7 ports coming under SLPA (Image courtesy: slpa.lk)

In the meantime, the SL Port Authority seems to have schemed a new plan for seizing the lands, discarding the promises made by former Port Minister. 

The unitary State of genocidal Sri Lanka has been systematically targeting the Trincomalee Harbour, which is the fifth largest natural harbour in the world, for Sinhalicisation through decades of militarization, foreign meddling and so-called development in the Eastern Province paving way for the entire Trincomalee district to be subjected to large-scale Sinhala colonisation. 

Four of the seven ports in the entire island, brought under the SLPA’s mandate are situated in the North-East. 

Sinhalicisation of Tamil homeland is being accelerated hand in hand with the militarisation being carried out by the occupying SL Navy, which is being groomed by the US Pacific Command and through the so-called development of SL Ports in the North-East with the assistance of Asian Development Bank (ADB). 


CNBs in Eastern Naval Area
There are 13 so-called ‘Commissioned Navy Bases’ in the Eastern Naval Area of the SL Navy [Image courtesy: navy.lk]Related Articles:


Chronology:

புதன், 22 நவம்பர், 2017

இலக்கு, கிருட்டிணா இனிப்பக கார்த்திகை நிகழ்வு

     19 நவம்பர் 2017      கருத்திற்காக..


கார்த்திகை 08, 2048 – 24.11.2017 

வெள்ளிக்கிழமை –  மாலை  06.30 மணி 

பாரதிய வித்யாபவன் சிற்றரங்கம்,  

               மயிலாப்பூர், சென்னை 600004.

தோள்கள் நமது தொழிற்சாலை


வரவேற்பு : செல்வி ப. யாழினி, செயலர், இலக்கு 
தலைமை : மருத்துவர் மா.மகேசுவரி  
        [நிறுவனர் : நல்வாழ்வுப் புத்தாக்கங்கள் (HEALTH INNOVATIONS)]
அறிவுநிதி விருது பெறுபவர் : திரு த. செல்வராசு 
              (துறை : சுருள்பாசி வளர்ப்பு )
சிறப்புரை : திரு க. இரத்னராசிங்கம் 
  (திட்ட ஒருங்கிணைப்பாளர் : வாழ்வாதார நிகழ்வுகள் )
பொருள் : நலம் தரும் உணவுகளும் – வளம் தரும் தொழில் வாய்ப்புகளும்
நன்றியுரை : செல்வன் ப. சிபி நாராயண், தலைவர், இலக்கு 
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : திருமதி வாசுகி பத்ரிநாராயணன் 
அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். 
இலக்கு அமைப்பு
சிரீ கிருட்டிணா  இனிப்பகம்
பாரதிய வித்யாபவன்

தமிழ் இளையோர் அமைப்பு – கற்க கசடற


2018

தமிழ் இளையோர் அமைப்பு

கற்க கசடற

 தொல்காப்பியம்

 திருக்குறள்

ஆத்திசூடி

அறிவதற்கு 07427261785  அல்லது  07915379101 எண்ணுக்கு அழையுங்கள்.


சுசிதா / Sujitha

இலக்கியச் சிந்தனையின் 571 ஆவது நிகழ்வு & குவிகம் இலக்கிய வாசலின் 32 ஆவது நிகழ்வு


கார்த்திகை 09, 2048   25-11-2017  

சனிக்கிழமை  மாலை 6.00 மணி  

சீனிவாச காந்தி நிலையம், 
(Gandhi Peace Foundation)                           
அம்புசம்மாள் தெரு                                               
ஆழ்வார்பேட்டை சென்னை 600018  
இலக்கியச் சிந்தனையின்
571  ஆவது நிகழ்வு
 ‘ சருதார் வல்லபாய் படேல்’

– உரையாற்றுபவர்  திரு. புதுவை  இராமசாமி 

…… தொடர்ந்து
குவிகம் இலக்கிய வாசலின்
32 ஆவது நிகழ்வு
நூல் வெளியீடும் அறிமுகமும்
 ‘வைகறைக் காற்று’
(மரபுக் கவிதைகள்)
ஆசிரியர்:  தில்லை வேந்தன் 
அறிமுக உரை : திரு  பாலகிருட்டிணன்   (சுபா)

அனைவரும் வருக

செவ்வாய், 21 நவம்பர், 2017

இலக்குவ நெறியே தமிழர் உரிமைக்கு வழி 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்

     19 நவம்பர் 2017      கருத்திற்காக..


இலக்குவ நெறியே தமிழர் உரிமைக்கு வழி 2/3

எழுத்து நெறி :
  மொழியின் வாழ்வு எழுத்தில்தான் உள்ளது. எழுத்தைச் சிதைக்கும் பொழுது அம்மொழியும் அம்மொழி இலக்கியங்களும் சிதைந்து அம்மொழி பேசும் இனமும் அழிகின்றது என்பதை ஓயாமல் உணர்த்தியவர் பேராசிரியர் இலக்குவனார். “ஒவ்வொரு மொழிக்கும் அதனதன் எழுத்தே உடலாகும். உடலாம் எழுத்தை அழித்த பின் உயிராம் மொழி வாழ்வது எங்ஙனம்? எனவே இந்தியமொழிகள் அனைத்தும் இந்திமொழியாம் தேவநாகரியில் எழுதப்படவேண்டும் என விதிக்கும் நடுவணரசின் முயற்சியை எப்பாடுபட்டேனும் தடுக்கவேண்டும்” என எழுதியும் பேசியும் வந்தார். இன்றைக்கு  அயல்மொழி எழுத்துக் கலப்பும்  அதை விரைவு படுத்தும் கிரந்தத்திணிப்பும  மிகுதியாக நடைபெறுகின்றன. எனவே, நாம் நம் எழுத்தைக் காத்து, மொழியைக்காத்து, இனத்தைக் காப்பதைக் கடமையாகக் கொள்ள வேண்டும்.
பயன்பாட்டு நெறி :
 கல்வி மொழியாகவும் கலை மொழியாகவும் அலுவல் மொழியாகவும் ஆட்சிமொழியாகவும் இறை மொழியாகவும் அனைத்துநிலை மொழியாகவும் தமிழ்  பயன்படுமொழியாக அமைந்தால்தான் இவ்விலக்கை நாம் அடைய முடியும் என்பதையும் பேராசிரியர் இலக்குவனார் வலியுறுத்தத் தவறவில்லை. இவற்றை நிறைவேற்றவே தமிழ்  உரிமைப் பெருநடைப் பயணத்தை அமைத்து அதனால் பாதுகாப்புச் சட்டப்படிச் சிறை சென்றது மூலம் தம் சொல்லும் செயலம் தமிழ்நலம் சார்ந்தனவே  என்பதை மெய்ப்பித்தவர் பேராசிரியர் இலக்குவனார். ஊடக மொழியாகவும் பிற பயன்பாட்டு மொழியாகவும் தமிழே இருக்க  வேண்டும் என்பதே பேராசிரியர் இலக்குவனார் காட்டும் பயன்பாட்டு நெறியாகும்.
உரிமை நெறி :
  தமிழ்நாட்டில் தமிழுக்கும் தமிழர்க்கும் தலைமையும் முதன்மையும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியதுடன் மத்திய ஆட்சியிலும் சமநிலை உரிமை பெற்ற மொழியாகத் தமிழ் திகழ வேண்டும் என்பதே பேராசிரியர் இலக்குவனாரின் பெருவிழைவு. ஆட்சிமொழி, பணித்தேர்வு மொழி, நாடாளுமன்ற மொழி, உச்ச நீதிமன்ற மொழி, அறிவியல் துறைகளின் மொழி என இந்தியும் ஆங்கிலமும் எங்கெல்லாம் இடம் பெற்றுள்ளனவோ அங்கெல்லாம் தமிழும் முழு உரிமையுடன் வீற்றிருக்க வேண்டும் என்பதே பேராசிரியர் இலக்குவனாரது முழக்கம்.
நூல் நெறி :
 வாழ்வியல் நூலாம் தொல்காப்பியத்தையும், வாழ்க்கைநெறி நூலாம் திருக்குறளையும் கண்களாகக் கொண்டு போற்றி முழுமையாய்ப் படித்துப் பின்பற்றி வாழவேண்டும்; சங்கஇலக்கியக் காலம் நம்பொற்காலம். சங்கஇலக்கியங்களை மக்களிடையே பரப்பவேண்டும் என்பனவும் பேராசிரியரின் பேரவா. தமிழக வரலாறு எழுதுவோர் தமிழர் கருவூலமாக அமைந்துள்ள தொல்காப்பியத்தைக் கற்று அறிதல் வேண்டும். அப்பொழுதுதான் தமிழர்களைப் பற்றிய உண்மையான வரலாற்றினை எழுதுதல் கூடும் என்பதைப் பேராசிரியர் இலக்குவனார் நமக்கு இட்ட கட்டளையாகக் கொண்டு வரலாற்றுப் பாடத்திட்டங்களில் தொல்காப்பியத்தையும் பிற சங்கஇலக்கிய வரலாற்றுச் செய்திகளையும்   சேர்க்க வேண்டும்.
 புதுக்கவிதை என்ற பெயரிலும் குறும்பாக்கள் (ஐக்கூ) என்ற முறையிலும் உண்மைச் சிறப்பை உணர்த்தாத, தவறான தகவல்கள் நிறைந்த  மரபு மீறிய தமிழ் நலத்திற்குக் கேடு விளைவிக்கும் பாடல்கள் பெருகுகின்றன. பாடல்கள் இயற்றுவோர் யாப்பிலக்கணம் மட்டும் அறிந்தால் போதாது.  நிலநூல், வான்நூல், உயிர்நூல், அற நூல், மெய்யறிவு நூல், உழவு நூல், கடவுள் நூல், மக்களின் நூல் முதலியன யாவும் கற்றறிந்து இருத்தல் வேண்டும் என்னும் பேராசிரியர் இலக்குவனார் கூறும் நூல் நெறியைப் பின்பற்றினால் பண்பாட்டைச் சிதைக்காக அறிவு வளம் நிறைந்த இலக்கியங்கள் பெருகும்.
போராட்ட நெறி :
  இன்றைக்கு அரச வன்முறை என்பதே எல்லா  நாடுகளிலும் பெருகி வருகின்றது. வன்முறையை  ஒடுக்குவதாகக் கூறி, மக்களின் உரிமைகளுக்குக்  குரல் கொடுப்போரை  அழிப்பதற்கு அரசுகளே கொடுங்கோல் முறையில் ஈடுபடுகின்றன. மக்களாட்சியில் கிளர்ச்சி என்பது நோய்க்கு மருந்து போன்றதாகும். ஆட்சியாளரின் பொறுப்பை உணர்வதற்குக் கிளர்ச்சிகள்தாம் கை கண்ட மருந்தாய் உலகம் முழுவதும் காணப்பெறுகின்றன. எனவே, கிளர்ச்சிகளுக்கு எதிராக அரசு அடக்குமுறையைப் பயன்படுத்தக்கூடாது. கிளர்ச்சிகளுக்குக் காரணமானவற்றை நீக்கவேண்டும். அவ்வாறு நீக்க முன்வந்தால் கிளர்ச்சியாளர்கள் அரசின் உறுதிமொழிகளை  ஏற்றுப் போராட்டங்களைக் கைவிடவேண்டும் என்ற பேராசிரியரின் அறிவுரையை அரசுகள் பின்பற்றினால், ஆட்சியில் குறைகள் ஏற்பட்டாலும் அவற்றை அடக்குமுறையின்றி நீக்கும் நல்லரசுகள் அல்லவா எங்கும் கோலோச்சும்.
கல்வி நெறி:
  தமிழ்நாட்டில் தமிழ்மட்டுமே எல்லா நிலைகளிலும் கல்வி மொழியாக இருக்க வேண்டும் என வலியுறுத்திப் போராடியவர் பேராசிரியர் இலக்குவனார்.  பாடவழிக்குத் தெரிவே இல்லாமல் தமிழ் மட்டுமே பாடமொழியாக இருக்க வேண்டும் என வழி கூறியவர் பேராசிரியர் இலக்குவனார். ”தமிழர் தமிழால் எல்லாவற்றையும் கற்கும் போதுதான் உண்மையான கல்வியைப் பெற்றவராவார். அவ்வாறு கற்காத காரணத்தினால்தான் இந்நாட்டில் அறிவியற் பேரறிஞரும் கலையியற் பேரறிஞரும், – இருநூறு ஆண்டுகளாக ஆங்கிலத்தைக் கற்றும் -தோன்றும் நிலை ஏற்படவில்லை.  தாய்மொழி வாயிலாக உயர் கல்வியைக் கற்ற நாட்டில் ஆங்கிலத்தின் உதவியின்றியே உலகம் போற்றும் உயர் அறிஞர்கள் தோன்றியுள்ளனர்.  ஆதலின் ஆங்கிலம் அகன்றால்  அறிவியல் வளராது என்ற தவறான எண்ணம் நம்மை விட்டு அகலுதல் வேண்டும்.  பிற நாடுகளைப் போன்றே நம் நாடும் எல்லா நிலைகளிலும் நம் மொழியைப் பயன்படுத்துதல் வேண்டும்.  அப்பொழுதுதான் நம் தமிழ் என்று முள – எதற்கும் பயன்படுமொழியாக இலங்கும் என்பதை நாம் உணர்ந்து தமிழையே என்றும் எங்கும் பயன்படுத்தினால்தான் நாம் உலக அளவில் முன்னணியில் இருப்போம்” என்னும் பேராசிரியர் இலக்குவனாரின் கல்வி நெறியைப் பின்பற்றினால் நாம் உலகின் முன்னரங்கில் இருப்போம் அல்லவா?
காப்பு நெறி :
  பிற மொழித்திணிப்புகளில் இருந்து தமிழைக்காக்கத்  தம் வாழ்வையே போர்க்களமாக ஆக்கியவர்  பேராசிரியர் இலக்குவனார். இந்தியைத் திணிக்கவில்லை எனக்  கூறிக்கொண்டே இந்தியையும் அதன் வழி சமசுகிருதத்தையும் மத்திய அரசு திணித்துக் கொண்டுள்ளது.  இந்தித் திணிப்பிற்கு எதிரான போர்த்தளபதியாக விளங்கிய  பேராசிரியர் இலக்குவனார், ”எதனை இழப்பினும் மீண்டும் பெறலாம்; மொழியை இழப்பின் மீண்டும் பெறல் என்றும் இயலாது என்பதனைத் தெளிதல் வேண்டும். தெளிந்து செந்தமிழை அழிக்க வரும் இந்தி மொழிச் செல்வாக்கைத் தடுத்து நிறுத்தல் வேண்டும். உண்ணும் உணவினும் உரைக்கும் மொழியைப் பெறலே மானமுள்ள மக்களுக்குரிய மாண்புறு கடமையாகும்”  என நம் கடமையை உணர்த்திச் சென்றுள்ளார். இந்தித் திணிப்பு மட்டுமல்ல! தனித்து வாழக்கூடிய நாம் பல வகைகளில பிற மொழிகளின் அடிமையாக விளங்குகிறோம். அவற்றிற்கு எதிராகவும் பேராசிரியர் இலக்குவனார் தொடர்ந்து போராடி உள்ளார். ”தேசியமொழி இந்தியாம், ஆட்சிமொழி ஆங்கிலமாம், சமயமொழி ஆரியமாம், பாட்டுமொழி தெலுங்காம், வட்டாரமொழி தமிழாம். என்னே விந்தை! தமிழர்க்கு எல்லாம் தமிழாக இருக்கும் நாள்தான் தமிழர் முன்னேறும் நாளாகும்; முழு உரிமை பெற்ற நாளாகும். தமிழர்க்குத் தேசிய மொழியும், கல்வி மொழியும், தொடர்பு மொழியும், பாட்டு மொழியும் தமிழாகவே இருத்தல் வேண்டும்” எனப் பிறமொழிகளில் இருந்து தமிழ் மொழியையும் தமிழ் இனத்தையும்  காக்கப் பேராசிரியர் இலக்குவனார் நமக்குக் காட்டிய காப்பு நெறியைப்  பின்பற்றினால் தமிழ் அழிவிலிருந்து காப்பாற்றப்படும்.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனாரின்  முப்பத்தொன்பதாம் நினைவு நாளில்  வெளியானது. நட்பு :  03/09/2012 )

தமிழக வரலாறு 3/5 – மா.இராசமாணிக்கனார்


தமிழக வரலாறு  3/5 – மா.இராசமாணிக்கனார்

 

  வாணிகம்
  கிறித்துவிற்கு முன்பு பல நூற்றாண்டுகளாகத் தமிழர், மேல் நாடுகளுடனும் கீழ்நாடுகளுடனும் கடல் வாணிகம் செய்து வந்தனர். மிக மெல்லிய ஆடைகள், மிளகு, யானைத்தந்தம், மணப்பொருள்கள் முதலியன வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. பலவகைப் பொறிகள், கண்ணாடிப் பொருள்கள் முதலியன இறக்குமதியாயின. தமிழர் கடல் கடந்து சென்று வெளிநாடுகளில் தங்கி, வாணிகம் செய்தனர்; பல நாடுகளுடன் பழகினர்; அவர்தம் மொழிகளைக் கற்றனர். இங்ஙனம் அயலாரோடு நெருங்கிய உறவு கொண்ட காரணத்தால், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’, என்று கூறலாயினர். சங்கக் காலத்தில் முசிறி, கொற்கை, காவிரிப்பூம் பட்டினம் முதலியன தமிழ் நாட்டுத் துறைமுக நகரங்களாய் விளங்கின. பிற்காலத்தில் நாகப்பட்டினம், காயல்பட்டினம்,  காந்தளூர்ச்சாலை, மாமல்லபுரம், மயிலை முதலியன துறைமுக நகரங்களாய் இருந்தன சீனப் பேரரசர் தமிழகத்துடன் வாணிக உறவு கொண்டிருந்தனர். உள்நாட்டு வாணிகமும் சிறப்புற நடந்தது. கடல் வாணிகத்தால் தமிழகத்துப் பொருளாதார நிலை உயர்ந்து காணப்பட்டது.
தொழில்கள்
பயிர்த் தொழிலுக்கு அடுத்தபடி நெசவுத்தொழில் சிறப்பாகக் கருதப்பட்டது. பருத்திநூல், பட்டு நூல், எலிமயிர் இவைகளால் ஆடைகள் நெய்யப் பட்டன. முப்பதுக்கு மேற்பட்ட ஆடைவகைகள் சிலப்பதிகார காலத்தில் இருந்தன என்பது அடியார்க்கு நல்லார் உரையால் அறியப்படும். பொது மக்களுக்குத் தேவையான பலதிறப்பட்ட பொருள்கள் கைத்தொழில்களால் வளம் பெற்றன. பொற். கொல்லத் தொழில் மிகவுயரிய முறையில் அமைந்திருந்தது.
  பயிர்த்தொழில் நாட்டின் உயிர்நாடி. ஆதலால், தமிழரசர் அதனைக் கண்ணுங்கருத்துமாகக் காத்து வந்தனர். ஆற்றுவசதி இல்லாத இடங்களில் பெரிய ஏரிகளும், குளங்களும், கிணறுகளும் எடுப்பிக் கப்பட்டன. மகேந்திர தடாகம் முதலிய பெயர்கள் பல்லவ வேந்தரை நினைவூட்டின. சோழப் பேரரசர், வீரசோழன் ஆறு, முடிகொண்டான் ஆறு என்னும் ஆறுகளையும், இராசராசன் வாய்க்கால் முதலிய வாய்க்கால்களையும் வெட்டுவித்தனர். திருமலைராயன் ஆறு என்பது பின்நூற்றாண்டுகளில் வெட்டப்பட்டது. இவ்வாறு நாடாண்ட மன்னர்கள் ஆறுகளைத் தோற்றுவித்தும், வாய்க்கால்களைப் படைத்தும், ஏரி குளங்களை ஏற்படுத்தியும், ஆற்றின் கரைகளை உயர்த்தியும் பயிர்த் தொழிலைப் பாதுகாத்து வளர்த்தனர்.
அளவைகள்
 நிறுத்தலளவை, நீட்டலளவை, முகத்தலளவை, எண்ணலளவை என்பன வழக்கில் இருந்தன. இராசகேசரி மரக்கால், ஆடவல்லான் மரக்கால், அருண்மொழி நங்கை மரக்கால் என முகத்தலளவைக் கருவிகள், கடவுள், அரசன், அரசியின் பெயர்கள் பெற்று விளங்கின. பொன், வெள்ளி, செம்பு நாணயங்களும் வழக்கிலிருந்தன.
சமுதாய வரலாறு
சங்க காலத்தில் தொழில் பற்றிய பிரிவுகளே சமுதாயத்தில் இருந்தன. பின்பு, கொல்லன் மகன் கொல்லனாகவும், பறையன் மகன் பறையனாகவும் கருதத்தகும் முறையில் சாதிகள் ஏற்பட்டுவிட்டன. வடநாட்டு வருண பேதங்கள் இந்நாட்டிலும் நுழைக்கப்பட்டன. இவ்வேறுபாடுகளால் சமுதாயத்தில் இருந்த ஒற்றுமை சிதறடிக்கப்பட்டது. ஒருவன ஒருவன் உயர்ந்தவனாகவும் தாழ்ந்தவனாகவும் கருதினமையால், உயர்வு மனப்பான்மையும் இழிவு மனப்பான்மையும் மக்களிடையே வேரூன்றின. சமுதாயத்தில் ஏறத்தாழ மூவாயிரம் பெருஞ்சாதியிலும் 3 முதல் 12 வரை உட்பிரிவுகளும் ஏற்பட்டுவிட்டன. மநுதர்ம சாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு சமுதாயம் வகுக்கப்பட்டது. அம்முறைப்படி நாடாண்டதாக மன்னர்களும் வெட்கமின்றிப் பன்ற சாற்றிஞர்கள். இவ்விழி நிலையால், சங்க காலத்தில் ஒன்றுபட்டிருந்த தமிழ்ச் சமுதாயம், பின் நூற்றாண்டுகளில் சின்னாபின்னப்பட்டது. சோழப் பேரரசில் இச்சாதிக் கொடுமைகள் தலைவிரித்தாடின. இன்ன வகுப் பார் தெருக்களில் செருப்பணிந்து போகலாகாது, இன்ன வகுப்பார் மாடிவீடு கட்டலாகாது, இன்ன வகுப்பார் மாடிவீடு கட்டினாலும் இத்துணைச் சன்னல்களுக்குமேல் வைக்கக்கூடாது என்று மன்னனது ஆணை இருந்தது. இத்தகைய கொடுமைகள் சமுதாய ஒற்றுமையைக் குலைத்துவிட்டன , சித்தர்களும், இராமலிங்கர் போன்ற பெரியாரும் சாதிகளையும் அவற்றை வற்புறுத்தும் பாழான சாத்திரங்களையும் வன்மையாகக் கண்டித்தனர். காந்தியடிகளாலும் பெரியாரது பெருந்தொண்டினுலும் அரசாங்கத்தின் சட்டத்தினாலும் இன்று இவ்வேறுபாடுகள் மறைந்து வருகின்றன. சங்ககாலச் சமுதாய வாழ்க் கையை நோக்கி இன்றைய தமிழ்ச் சமுதாயம் போய்க் கொண்டிருக்கிறது என்று கூறலாம். ஆயினும், இப்போக்கில் விரைவு வேண்டும்; யாவரும் தமிழர் என்ற எண்ணம் வேண்டும்; கலப்பு மணங்கள் மிகுதல் வேண்டும்; சாதிகள் அறவே ஒழிதல் வேண்டும்; தமிழ்ச் சமுதாயத்திற்கு ஏற்ற முறையில் புதிய சட்டம் வகுக்கவேண்டும். ஒரு குலத்திற்கு ஒரு நீதி கூறும் சட்டம் மாய்ந்தொழிதல் வேண்டும்.
(தொடரும்)
முனைவர்மா.இராசமாணிக்கனார்
இலக்கிய அமுதம்

Jaffna University students add a breath of fresh air to principled politics: Gajendrakumar

Jaffna University students add a breath of fresh air to principled politics: Gajendrakumar


The leader of Tamil National Peoples' Front (TNPF) Mr Gajendrakumar Ponnambalam has welcomed the student community of Jaffna University for taking a well-researched principled position in advancing the struggle of Tamil political prisoners in the island. Mr Ponnamabalam, an experienced human rights lawyer who is also well-versed on the political foundations of the Tamil struggle, was particularly appreciating the appeal document prepared by the Student Union of the Jaffna University on Tuesday. The fact that the University community has come forward to struggle for the right of the political prisoners, legally arguing why Tamil prisoners were entitled to international rights as Prisoners of War under the Geneva Conventions and demanding the most responsible actors to at least recognize them as political prisoners is a “game changer”, Mr Ponnambalam said. 

The students have addressed the document to the most appropriate international actors who are morally responsible for the current plight of the Tamil political prisoners in the island, the former Tamil parliamentarian said. 


The 5-page appeal, formulated on the basis of the International Humanitarian Law (IHL) and which was also basing its arguments on the democratic foundations of the Tamil cause, was addressed to UN Human Rights Chief, President of the current cycle of the UN Human Rights Council and particularly to Genva-based US permanent representative, who has been pre-occupied with trading the plight of Tamils in the island to make the SL State an agent State for the geopolitics of the USA. 

It is very strong on its fundamentals and very clearly identifies the conflict between the Tamil nation and the Sri Lankan State as an international conflict of colonial rule, he said. 

It is also articulated in such a way that it educates the Tamil people themselves who are ignorant of the principles that actually applies to these matters, Mr Ponnambalam said. 

“For the first time, particularly since the end of war, we are seeing the Jaffna University student community taking a lead role in what I would call principled politics,” he said citing the significant role of Jaffna University community in the 1970s and in the 2000s. 

“One of the main target audience of this petition is the USA. I think it is correct,” he further said. 

More than 1,500 Tamil students marched towards American Corner in Jaffna, UN Residential Office and to the Governor‘s Office in Jaffna demanding the UN and US agenda-setters in Geneva to recognise PTA detainees as Political Prisoners.
Chronology: