சனி, 5 மே, 2018

குவிகம் ஆண்டுவிழா

குவிகம் ஆண்டுவிழா

கவிஞர் வைத்தீசுவரனின்

‘சில கட்டுரைகள் – ஒரு  நேர்காணல்’ புத்தக வெளியீடு

மின்னூலகம் தொடக்கம்

கவிதை வாசித்தல்

கதை சொல்லல்

சித்திரை 23, 2049 ஞாயிறு மே 6, 2018

மாலை 4.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை

புதன், 2 மே, 2018

கவிதை அரங்கேற்றஅழைப்பிதழ்அன்புடையீர்,
வணக்கம்.

முடிவுநாள்: சித்திரை 22, 2049 –  05.05.2018

 உலகத் தமிழ்ச் சங்கத்தின் 

கவிதை அரங்கேற்றஅழைப்பிதழ் 


வெளிநாட்டுப் பங்கேற்பாளர்களுக்கு வசதியாக இதோ ஒரு மின்வரி:
நன்றி.
அன்புடன்,
தில்லை சிதம்பர(ப்பிள்ளை)
ஆசிரியர் மின்மினி
பேசி : WWWPhone: +41 43 526 70 24 (மீள் 

ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

குவிகம் இலக்கிய இல்லம் – அளவளாவல்


அகரமுதல


சித்திரை 16, 2049 – ஞாயிறு – ஏப்பிரல் 19, 2018

வெண்பூங்கா அடுக்ககம், தியாகராயர்நகர், சென்னை

இதழாளர் மொழி பெயர்ப்பாளர்

திரு இராசேசு சுப்பிரமணியன் அவர்களுடன்

அளவளாவல்

9ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவு கூரல்!, பிரித்தன்9ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் 

இன அழிப்பு நினைவு கூல்!

இன அழிப்புக்கு பொறுப்புக் கோரல்!

இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கில் பல்லாயிரம் வருடங்கள் வாழ்ந்து வரும் தமிழ்   இனத்தின் தொன்மையும் செழுமையும் நிறைந்த வரலாறு, பண்பாடு, வாழ்வியல் பதிவுகளைச் சிதைத்து அழித்து எம் மக்களின் நிகழ்கால எதிர்கால அரசியல். சமூக, பொருளாதார, பண்பாட்டுக் கூட்டு விருப்பத் தெரிவுகளை அழித்தொழித்துத் தமிழ் மக்கள் ஒரு தேசமாக ஒன்றாக வாழ்வதை மறுதலித்துக் கடந்த கால அழிவுகளிலிருந்து என்றுமே மீண்டெழ முடியாத பலவீனமான சமூகமாக கையறு நிலையில் தொடர்ந்து வைத்திருக்க முனையும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு தொடர்கின்றது.
மே 2009இற்குப் பின்னர் அகத்திலும் புறத்திலும் தமிழ் மக்களைப் பலவீனப்படுத்தும் நுண் திட்டங்கள் சிங்களத் தேசத்தினால் உருவாக்கப்பட்டுத் தமிழ் மக்களை பிளவுபடுத்தி உள் முரண்பாடுகளுக்குள் சிக்க வைத்துப் பொது எதிரியை நோக்கி பலமான கட்டமைப்பாக இணைந்து விடாது, தாயக, புலம்பெயர் மக்கள் தம் ஆற்றலை ஒன்று திரட்ட விடாது பார்த்துக் கொள்கின்றது. ஒருங்கிணைந்த போராட்ட நிகழ்ச்சி நிரலில் உயிர்த்தெழு (Phoenix) பறவையாக த் தமிழ் மக்கள் மீண்டெழ முடியாது வைத்திருக்கும் சூட்சுமமான நிகழ்ச்சி நிரலைத் தயாரித்துக் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை நிலையாக்கும் முயற்சிகள் தொடர்கின்றன.

தமிழர் தேசமே! இந்த நச்சு வளையத்தை அடையாளம் கண்டு உயிர்த் துடிப்புள்ள போராட்டத்தை உலக அரங்கிலே ஒற்றுமையாகக் கட்டியெழுப்ப மாட்டாயா என்ற எதிர்பார்ப்போடு ஈகிகளின் ஆதனும்*ஆன்மாவும்) தாயக மக்களும், விடுதலையை நேசிப்போருமாக ஏங்கிக் கிடக்கின்றனர். வெவ்வேறு வடிவங்களில் பன்முகத் தன்மையுடன் செயல்பட்டாலும் நாம் அனைவரும் ஓர் இலக்கினை நோக்கிப் பயணிக்கின்றோம் என்ற புரிந்துணர்வினை ஏற்படுத்திக் கொள்வோம்.

70 வருட இன அழிப்பின் உச்சம் தொட்ட முள்ளிவாய்க்கால் கொடுமைகள் உலகின் கண்களிலிருந்து மறைந்து போக விடலாமா? தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்டது, திட்டமிடப்பட்ட இன அழிப்பு என்பதை என்றோ ஒரு நாள் உலகம் ஏற்றுக் கொள்ளச்    செய்வோம்! அழிந்து கொண்டிருக்கும் இனத்தை பாதுகாக்க கழுவாய் (பரிகார) நீதி வழங்க வேண்டும் என்று மானுடத்தை நேசிக்கும் உலகளாவிய மக்களை எமக்காகக் குரல் கொடுக்க வைப்போம்!  அவர்களின் ஓங்கிஒலிக்கும்  குரல் உலக நாடுகளின் மீது பலமான தாக்கத்தை ஏற்படுத்த வைப்போம்!
பெரும்இனஅழிப்பு  (HOLOCAUST) என்றதுமே யூத மக்களின் மீதான இன அழிப்பு, இசுரெபிரெனிகா(SREBRENICA) என்றதும் அப்பாவி மக்களின் இன அழிப்பு என்று உலகின் மனப் பதிவில் நினைவுகள் வலம் வருவதைப் போல முள்ளிவாய்க்கால் என்ற சொல் தமிழ் மக்கள் மீது நடாத்தப்பட்ட கொடூரமான இன அழிப்பு வெறியாட்டம் என உலகெங்கிலுமுள்ள மக்கள் நினைவுக்கு வர வேண்டுமென்பதற்காகவே 2010 ஆம் ஆண்டில் பிரித்தானியத் தமிழர் பேரவை முள்ளிவாய்க்கால் இன அழிப்பினை வருடா வருடம் நினைவு கூறத் தொடங்கியது.
எம் மக்கள் பட்ட அவலங்களை உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்கள் தாம் வாழும் நாடுகளில் உள்ளவர்களுக்கு எடுத்துச் சென்று குழந்தைகள், பெண்கள், முதியோர் என்று பாராது ஈவிரக்கமின்றி நடத்தப்பட்ட கொடூரச் செயல்களிற்கு நீதி கேட்க வைக்க வேண்டும், உலகின் மன ச்சான்றினை எம் பக்கம் திருப்ப வேண்டும், தாம் வாழும் நாடுகளெங்கும் அதிகார மையங்களை இன அழிப்பினை தடுத்து நிறுத்தக் குரல் கொடுக்க வைக்க வேண்டும், தமிழர் தேசத்தின் பொது எதிரிக்கெதிராக ஒற்றுமையாக அணி திரள வேண்டும், புதிய வரலாற்றினை வரைய வேண்டும். இ ஃ து இன அழிப்புக்குள்ளாக்கப்படும் அனைத்து மக்களுக்கும் வழி காட்ட வேண்டும்.

9ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவேந்தல்
வைகாசி 03, 2049  / மே 18 , 2018
பிரித்தானியத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பில்
வழமை போன்று மத்திய இலண்டனில்
பளிங்கு வளைவு / Marble Arch  நிலக்கீழ் தொடருந்து நிலையத்திற்கு அண்மையில் உள்ள
சீர்திருத்தர் மரஓவியம்  [The Reformer’s Tree (W2 2EU)] என்னும் இடத்தில்  மாலை 4.30 மணி தொடக்கம் 7.00 மணி வரை
பொதுக்கூட்டத்துடன் நினைவு கூரப்பட உள்ளது.

எம் இனிய உறவுகளே!
இன அழிப்பிற்கான பொறுப்புக் கோரல்பன்னாட்டு நீதி விசாரணை
மீள நிகழாமைக்கான கட்டமைப்பு மாற்றங்கள்
கழுவாய்(பரிகார) நீதி என்பனவற்றை வலியுறுத்தி 
நாம் அனைவரும் ஒன்று கூடுவோம்!
சங்கீதன்
பிதபே தகவல் ஒருங்கிணைப்பாளர்
[Sangeeth, BTF Media Coordinator, +44 (0) 7412 435697 ]

உலகக் கவிதைப் போட்டி – காலநீட்டிப்பு அறிவிப்பு


அகரமுதல

உலகக் கவிதைப் போட்டி – காலநீட்டிப்பு அறிவிப்பு

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் சார்பாக நடைபெறும் உலகக் கவிதைப் போட்டிக்கு படைப்பாளர்களின் அன்பு வேண்டுதலுக்கு இணங்க வைகாசி 13, 2049  27 மே 2018  வரை படைப்பாளர்கள் கவிதை அனுப்பக் கால நீட்டிப்பு செய்யப்பெறுகிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியற்புலத் தமிழியல்துறையும், திருமூர்த்திமலை தென்கயிலைத் தமிழ்ச் சங்கமும்இணைந்து உலகத் தமிழ்க் கவிதைப் போட்டியை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஆனி/ஆடிததிங்களில் – யூலை- 2018 இல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
பள்ளி, கல்லூரியில் பயிலும் மாணவர் கள் தங்களின் படைப்பாற்றல் திறனை வளர்த்துக்கொள்ளும் நோக்கிலும், ஊக்கப்படுத்தும் எண்ணத்திலும் மேலும் இளம் படைப்பாளர்களின் படைப்புத் திறனை வெளிக்கொணரும் நோக்கத்திலும் சிறந்த படைப்பாளராக இருந்தும் உலகிற்கு அறிமுகம் இல்லாத படைப்பாளர்களை உலகிற்கும், இளைய சமுதாயத்திற்கும் அறிமுகப்படுத்தும் நோக்கத்திலும் உலகக் கவிதைப்போட்டி நடத்த எம் பல்கலைக்கழகத்தின் மாண்பமைத் துணைவேந்தர் வழங்கிய ஊக்கத்தின் அடிப்படையில் இப் போட்டி நடத்தப்படுகிறது.
இக் கவிதைப் போட்டியில் கலந்துகொண்டு கவிதை எழுத விருப்பமுள்ளவர்கள், தமிழ் மொழி, தமிழ்க் கல்வி, தமிழ்ப் பண்பாடு, தமிழரின் வாழ்வியல் முறைகள், பண்பாடு அடையாளங்கள், சாதனைகள், விளையாட்டுகள், மருத்துவ முறைகள், உணவு முறைகள், நம்பிக்கைகள், திருவிழாக்கள், வழிபாட்டு முறைகள் என வரிசைப்படுத்தப்பட்ட பொருண்மைகளிலும் (தமிழர்களின் மரபுகளை வெளிப்படுத்தும் தன்மையில்) இன்னபிற பொருண்மைகளிலும் கவிதையின் கருவாக அல்லது உட்பொருளாகத் தெரிவு செய்து கவிதை எழுதலாம்.
கவிதை எழுத விருப்பமுள்ள படைப்பாளர்கள், கவிஞர்கள், மாணவர்கள், ஆர்வலர்கள் தாங்கள் எடுத்துக்கொண்ட தலைப்பிற்கிணங்கப் போட்டியில் பங்கேற்கலாம். படைப்பாளர்கள் மரபுக் கவிதை அல்லது புதுக்கவிதை ஆகிய வழிகளில் கவிதையை எழுதி தாளில், 12 அளவுள்ள சீருரு(யுனிக்கோடு) அல்லதுபாமினி எழுத்துருவில் அல்லது பிற எழுத்துருவில் 1.5 இடைவெளியில் தட்டச்சுசெய்து, 24 வரிகளுக்கு மிகாமலும் 150 சொற்களுக்கு மிகாமலும் ஆக்கம்செய்து கவிதையைத் தருதல் வேண்டும்தட்டச்சு செய்யப்பட்ட கவிதையைசொற்கோப்பில் (WORD FILE) அனுப்ப வேண்டும்பொதிவு(பி டி எப்) கோப்பாகஅனுப்பக் கூடாது. தங்களது கவிதை பிற எழுத்துருவில் தட்டச்சு செய்திருப்பின் அதன் எழுத்துருவையும் மின்னஞ்சல் வழி உடன் அனுப்பி வைக்கவும். மேலும் கவிதையின் படி ஒன்றையும், கடவுச்சீட்டு அளவுள்ள புகைப்படம் ஒன்றையும் அஞ்சல்வழி அனுப்பிவைக்க வேண்டுகிறேன்.
போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கு வயது வரம்போ, எந்தவிதப் பதிவுக் கட்டணமோ இல்லை. எனினும் ஒருவர் ஏதாவது ஒரு தலைப்பில் ஒரு கவிதை மட்டும் எழுத அனுமதிக்கப்படும்.
மிகச் சிறந்த கவிதையாகத் தெரிவு செய்யப்படும் கவிதைகளுக்கு முதல் பரிசு உரூ. பத்தாயிரம்; (10.000) , இரண்டாம் பரிசு உரூ. ஏழாயிரம் (7000), மூன்றாம் பரிசு உரூ ஐந்தாயிரம். (5000 ) ஊக்கப் பரிசுக்குத் தெரிவுசெய்யப்படும் பத்துக் கவிதைகளுக்கு மட்டும் தலா உரூ .ஆயிரம் (1000 ) வழங்கப்படும் .
போட்டிக்குத் கவிதையைத் தெரிவு செய்வதும், நூலாக்கம் செய்வதும். நிருவாகத்தைச் சேர்ந்தது. எந்தப் படைப்பாளரும் அனுப்பிவைத்த கவிதையைத் திருப்பி அனுப்பக் கோருவதும், புத்தகமாக்கும் போது மறுப்புத் தெரிவிப்பதும், உரிமை கோரவும் இயலாது என்பதைத் தங்களின் மேலான கவனத்திற்குத் தெரிவித்துக்கொள்கிறோம்.
போட்டிக்கு அனுப்பிவைக்கப்படும் கவிதைகள் எந்த ஒரு நூல்களிலும் அல்லது இதழ்களிலும் வெளியிடப்படாமல்  இருக்க வேண்டும். மேலும் எந்தப் போட்டிகளுக்கும் அனுப்பிவைக்கப்படாத கவிதையாகவும் இருக்கவேண்டும்.
தகுதியான படைப்பாளரைக்கொண்டு தங்களின் கவிதைகள் முறையாக மதிப்பீடு செய்யப்பட்டு தெரிவுசெய்யப்படும்.
மிகச் சிறந்த கவிதையாகத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்குத் தங்களின் மின்னஞ்சல் முகவரிக்கோ பகிரியின்(புலனத்தின்) வாயிலாகவோ தொலைபேசி வாயிலாகவோ முறையான தகவல் தெரிவிக்கப்படும்.
குறிப்பாகக் கவிதையின் முகப்புப் பகுதியில் தங்களின் முழு முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரியைத் மிகத் தெளிவாகக் குறிப்பிடவும்.
முழுமைபெற்ற கவிதையை வைகாசி 13, 2039  / 27 மே 2018 ஆம்நாளுக்குள் இந்தியா மற்றும் பிற நாட்டுப்படைப்பாளர்கள் mkuannalcon@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்குஅனுப்ப வேண்டுகிறோம்.
தாங்கள் அனுப்பிவைக்கும் சிறந்த கவிதைகள் அனைத்தும் நூல் வடிவம் பெறுவதற்கும், வெளியிடுவதற்கும் இசைவு மடல்அனுப்பிவைக்க வேண்டுகிறோம். இசைவு மடல் அனுப்பிவைக்காத படைப்பாளர்கள், இசைவு மடல்அனுப்பிவைத்ததாகக் கருதப்படும். எந்தக் கவிதைகளுக்கும் தன் விருப்பில் நிதி வழங்க இயலாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
கவிதைப் போட்டிகள் தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ள உலகக்  கவிதைப் போட்டியின் ஒருங்கிணைப்பாளரும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியற்புலத் தமிழியல்துறைத் தலைவருமான முனைவர் போ.சத்தியமூர்த்தி அவர்களைத் தொடர்பு கொள்ளவும். (தொடர்பு எண்: 109488616100 )
தொடர்பு முகவரி
முனைவர் போ.சத்தியமூர்த்தி
(உலகக்  கவிதைப் போட்டி ஒருங்கிணைப்பாளர்)
உதவிப்பேராசிரியர் & தலைவர்
தமிழியல்துறை தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை -625 021, தமிழ்நாடு, இந்தியா
பேசி : 9488616100