வெள்ளி, 9 ஏப்ரல், 2021

கவிக்கோ நினைவுக் குறும்பா(ஐக்கூ) விருது 2021

 அகரமுதலகவிக்கோ நினைவுக்

குறும்பா(ஐக்கூ) விருது

2021

     சிறந்த குறும்பா(ஐக்கூ) நூல்களுக்கு உரூ.22 ஆயிரம் பரிசுத் தொகையுடன் விருது

   தமிழில் முதன்முதலாகக் குறும்பா(ஐக்கூ) கவிதை எழுதியதோடு, அதைப் பரவலாகவும் அறியச் செய்தவர் கவிக்கோ அபுதுல்ரகுமான். வரும் சூன் 2-ஆம் நாள் கவிக்கோவின் 4-ஆம் ஆண்டு நினைவு நாள். இதனையொட்டி, குறும்பா(ஐக்கூ) கவிஞரும் இளம் தொழில் முனைவருமான சேத்துப்பட்டைச் சேர்ந்த கவி.விசய், உலகு தழுவிய தமிழ்க் குறும்பா நூல்களுக்கான போட்டி ஒன்றினை அறிவித்துள்ளார்.

     2018, 2019, 2020 – ஆகிய மூன்று ஆண்டுகளில் வெளியான நூல்களின் 3 படிகளை வரும் மே-20-க்குள் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும்.

    தேவைக்கேற்ப அச்சு(POD) எனப்படும் ஒளிப்படி நூல்களும், மொழிபெயர்ப்பு நூல்களும் போட்டியில் ஏற்கப்பட மாட்டா.

    ஒரு கவிஞரே எத்தனை நூல்களை வேண்டுமானாலும் அனுப்பலாம்.

     முதல் பரிசு உரூ. 10 ஆயிரம் – இரண்டாம் பரிசு உரூ. 5 ஆயிரம் – மூன்றாம் பரிசு உரூ. 3 ஆயிரம் – நான்கு    நூல்களுக்கு ஆறுதல் பரிசு உ ரூ.1000 வீதம்.

     ஆரணியில் வரும் சூன் மாதத்தில் நடைபெறவுள்ள கவி.விசய்-யின் குறும்பா நூல்கள் வெளியீட்டு விழாவில் விருதுகள் வழங்கப்படும்.

    நூல்களை அனுப்ப வேண்டிய முகவரி : அகநி வெளியீடு, எண்: 3, பாடசாலை வீதி,  அம்மையப்பட்டு, வந்தவாசி – 604 408, திருவண்ணாமலை மாவட்டம்.

    தமிழகத்தின் மூத்த குறும்பா கவிஞர்கள் நடுவர்களாக இருந்து, விருதுக்கான நூல்களைத்   தேர்வு செய்வர்.

    கூடுதல் விவரங்களைப் பெற அழையுங்கள் : 96004 56606


குவிகம் அளவளாவல்: குயில் பாட்டு: 11/04/2021

 அகரமுதல


பங்குனி 29, 2052 / ஞாயிறு / 11.04.2021

மாலை 6.30

குவிகம் இணையவழி அளவளாவல்:  மகாகவி பாரதியின் குயில் பாட்டு

முனைவர் வ.வே.சு.

 நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும்.  நிகழ்வில் இணைய
கூட்ட எண் / Zoom  Meeting ID: 619 157 9931
புகு சொல் / Passcode: kuvikam123   
பயன்படுத்தலாம் அல்லது
https://us02web.zoom.us/j/6191579931?pwd=OFpIdWZxczdqUHRGY2JQb09ET0sydz09

இணைப்பைப் பயன்படுத்தலாம்.

வியாழன், 8 ஏப்ரல், 2021

போற்றுவதற்குரிய நூலல்ல கீதை, 11.04.2021

 

அகரமுதல


 

பங்குனி 29, 2052 / ஞாயிறு / 11.04.2021/காலை 10.00

கூட்ட எண்: 864 136 8094

புகு எண்: 12345

தமிழ்க்காப்புக்கழகம்

சமற்கிருதம் செம்மொழி யல்ல! இணைய அரங்கம் 4

அணுக்கிக்கூட்ட இணைப்பு :: https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)உட் பொருள் : போற்றுதற்குரிய நூலல்ல பகவத்து கீதை!

வரவேற்புரை: கவிஞர் வேல் சுப்பராசு

தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன்

உரையாளர்கள்:

 எழுத்தாளர் அறிவுக்கரசு

 வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி

ஒருங்கிணைப்பு, நிறைவுரை:  தோழர் தியாகு

நன்றியுரை:  கவிஞர் ஆற்காடு க.குமரன்

அன்புடன்

தமிழ்க்காப்புக்கழகம்திங்கள், 5 ஏப்ரல், 2021

யாவரும் வாக்களிப்பீர்! – இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதலயாவரும் வாக்களிப்பீர்! 

தேர்தல் நாள்: பங்குனி 24, 2052  /  ஏப்பிரல் 06, 2021

மக்களாட்சியில் நமக்கு வழங்கப்பட்ட சிறந்த ஆயுதம் வாக்குரிமை. இனி, ஐந்தாண்டுகளுக்கு நம்மை ஆள்வதற்குரிய சட்ட மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு நம் வாக்குரிமையை ஆராய்ந்து பயன்படுத்த வேண்டும். ஒருமுறை தவறு செய்தால் இந்த ஐந்தாண்டு மட்டுமல்ல, அதன் பாதிப்பு தொடர் ஆண்டுகளிலும் நமக்கு ஊறு செய்யும்.

எனவே, நாம் நாளை தவறாமல் வாக்குப்பதிவகங்களுக்குச் சென்று நமக்குரிய வாக்குரிமையைப் பயன்படுத்த வேண்டும்.

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்

மிகைநாடி மிக்க கொளல்.   (திருவள்ளுவர், திருக்குறள், ௫௱௪ – 504)

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்.(திருவள்ளுவர், திருக்குறள் ௫கஎ – 517)

என்னும் திருக்குறள்களுக்கிணங்க நாம், நம் தொகுதிக்குரிய சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

என்ற போதிலும், எவ்வாறு தேர்ந்தெடுக்க வேண்டும், யார் யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் எனக் கூறிப் பயனில்லை. ஏனெனில், வாக்காளர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் தாங்கள் விரும்பும் கட்சி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க எப்பொழுதுமே முன் நிற்பார்கள். பிறர், அவர்களிலும் புதிய வாக்காளர்களில் பெரும்பான்மையர் புதியவர்களைத் தேர்ந்தெடுப்பதில் ஆர்வம் காட்டுவார்கள்.

நாம் அறிவுரை கூறுவதற்கு இது நேரமுமில்லை. தேர்தல் விதிகளுக்கு மாறானதுமாகும். எனவே, தகுதியானவர்கள் எனக் கருதுபவர்களை மட்டும் தேர்ந்தெடுங்கள். ஒருவேளை தெரிவு தவறாக இருந்தாலும் பரவாயில்லை. வாக்குரிமையைத் தவறாமல் பயன்படுத்துங்கள்.

 நாளை தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், புதுச்சேரி, கேரளாவிலும் பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. மேற்கு வங்காளத்திலும் அசாமிலும் சில கட்டவாக்குப்பதிவுகள் முடிந்த பின்னர் அடுத்தக் கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெறுகின்றன. பொதுத்தேர்தல் நடைபெறும் அனைத்துப் பகுதி வாக்காளர்களுக்கும் குமரி நாடாளுமன்ற இடைத்தேர்தல்போல் இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதியில் உள்ள வாக்காளர்களுக்கும் நாம் விடுக்கும் வேண்டுகோள்

பயன்படுத்துவோம்! பயன்படுத்துவோம்!

    வாக்குரிமையைப் பயன்படுத்துவோம்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை – அகரமுதல

 ஞாயிறு, 4 ஏப்ரல், 2021

தொல்காப்பியர் நாள் அறிமுக விழா, வ.அ.த.ச.பேரவை

 அகரமுதல

பங்குனி 28, 2052 / 10.04.2021
சனி இரவு 6.00
தொல்காப்பியர் நாள் அறிமுக விழா
ஊசுடன் & தாெரண்டோ
தமிழ் இருக்கை நிதி திரட்டல் விழா

இயேம்சு வசந்தனின்
சங்க இலக்கியச் சேர்ந்திசை நிகழ்ச்சி