அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
திருவனந்தபுரம் : "மாநிலத்தில் ஐ.ஏ.எஸ்., அரசு அதிகாரிகள், துறை தலைவர்கள், பொதுத்துறை நிர்வாகிகள் உட்பட அரசு அதிகாரிகளை சந்திக்க, எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் வரும்போது, எழுந்து நிற்க வேண்டும்' என, கேரள மாநில அரசு, சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
தலைமைச் செயலகம், ஐகோர்ட் பதிவாளர் அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள், பிற துறை அரசு அலுவலகங்கள், வாரிய அலுவலகங்கள், மாநகராட்சி, நகராட்சி, உள்ளாட்சி அலுவலகங்கள் என, அரசு சம்பந்தப்பட்ட அனைத்து துறை அலுவலகங்களுக்கும், எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் பல் வேறு பணிகளுக்காக செல்வது வழக்கம்.அவ்வாறு அவர்கள் அங்கு வரும்போதும், பணிகளை முடித்து திரும்பும் போதும், அதிகாரிகள், அலுவலர்கள் எழுந்து நிற்க வேண்டும் என, கேரள மாநில தலைமைச் செயலர் நீலகங்காதரன், அனைத்து துறை அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகளை சந்திக்கச் செல்லும்போது, அதிகாரிகள் அவர்களை சட்டை செய்வதில்லை என, புகார்கள் வந்தன. புகாரின் அடிப்படையில், அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கும் அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக, தற்போது மாநில தலைமைச் செயலர், சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
சுற்றறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் அளிக்கும் மனுக்கள் மற்றும் புகார் கடிதங்களில் தெரிவிக்கப்படும் அனைத்து விஷயங்களுக்கும், விரைவாக சரியான பதில் அளிக்க வேண்டும்; அவர்களுக்கு ஆதரவாக, அதிகாரிகள் நடந்து கொள்ள வேண்டும்.அலுவலக நேரத்திலோ அல்லது பார்வையாளர் நேரத்தி லோ, மக்கள் பிரதிநிதிகள் அங்கு செல்லும்போது, அவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். பொது நிகழ்ச்சிகளிலும், அவர்களுக்கென ஒதுக்கப்படும் இருக்கைகள் விஷயத்திலும், இந்த உத்தரவு பின்பற்ற வேண் டும்.இவ்வாறு சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
++++++++++++++++++++++++
மக்கள் சார்பாளர்களை எழுந்து நின்று வணக்கம் தெரிவிக்கும் பண்பாட்டில என்ன தவறு உள்ளது? தமிழ் நாட்டிலும் இது போன்ற ஆணை உள்ளது. எதையும் கட்சி அரசியல் கண்ணோட்டத்தி்ல் பார்க்க வேண்டா. இரு தரப்பாரும் ஒருவருக்கொருவர மரியாதை செலுத்துவதே பண்பாடாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக