சனி, 27 ஜூன், 2015

Occupying Buddhist monk, SL military erect ‘memorial stones’ at seized lands

Occupying Buddhist monk, SL military erect ‘memorial stones’ at seized lands

[TamilNet, Thursday, 25 June 2015, 23:49 GMT]
The extremist Sinhala Buddhist monk and the occupying Sri Lankan military, who have seized the lands from Eezham Tamils at a strategic point linking North and East at Kokku'laay in Mullaiththeevu district, have hurriedly put up 7 ‘memorial stones’ for fallen Sinhala soldiers inside the premises where they intend to establish a Buddhist temple-centric economic establishment. The advice to erect memorial stones has come from the SL Defence Ministry in Colombo, informed sources in Mullaiththeevu told TamilNet on Thursday. One of the Eezham Tamil land owners, Manikkathas Thirugnanasampanthar, when interviewed by TamilNet, complained that the Buddhist monk and the SL military were seeking all avenues to complicate the situation to their advantage in permanently seizing the property. The Tamil land-owners lack resources to legally confront the genocidal land grab, he said urging assistance.
Memorial stones within the Buddha vihara land
The occuying SL military and the extremist Sinhala Buddhist monk have put up memorial stones for fallen Sinhala soldiers within the premises in recent days as advised by a ministry in Colombo. Note the fresh soil surrounding the memorial stones.


The uprooted Tamil farmer is now dependent on daily-wage-work for the survival of his family. He is one of the grandsons of Mr Somasundaram, who was originally in possession of a land permit at the said locality during the times of the so-called independence of Ceylon in 1948.

Mr Somasundaram was a post master. He was also behind the establishment of a Saiva Pi'l'laiyaar temple at the locality, which was known as Villuk-ku'lam (meaning natural pond or marsh turned into a pond).

In 1953, Mr Somsundaram finalised the transfer of one acre of the permit land to his son, Mr Thirugnanasampanthar (documentation attached). This is the land where the occupying monk and the SL military have been hurriedly constructing a stupa, Mr Manikkathas says.



Manikkathas and his siblings, together with all their family members, were uprooted from Villuk-ku'lam following the anti-Tamil pogroms in early 80s. Their families were displaced to Vavuniyaa.

They went back to resettle in their lands after the area became accessible to the public after 2011.
Land map
A map drawn by the owners of the lands struggling to release their lands


“When my brother and myself started to clear the lands, Sri Lankan soldiers intervened and claimed that the land belonged to a monk. They removed our belongings and took us to a nearby military camp and interrogated us. They were harassing us repeatedly to transfer the lands. But, we were firm in claiming our rights,” he said, identifying the location of his land as the place where the monk is constructing a stupa.
Land permit
Page 1 of the land permit belonging to Thirugnanasampanthar family
Land permit
Page 2 of the land permit belonging to Thirugnanasampanthar family

Kokku'laay Vihara
The location of Buddhist temple establishment [Image courtesy: Google Earth]

Kokku'laay Vihara
Temple to the East and ‘other activities’ to the West


When there was natural vegetation cover, the traces of an old fortification at this spot was clearly visible (See Google Earth map from 2005).
Google Earth map from 2005
Google Earth map from 2005
Google Earth map from 2014
Google Earth map from 2014


As a strategic locality, in the old eastern coast communication route of Eezham Tamils, it is not surprising, there was a settlement at this spot.

The spot is also a high ground in the water and marsh surrounded area, so that this is the only potential land there.

The active backing of the Colombo regime and the Sinhala military for the Buddhist monk to build a Buddhist temple-centric economic establishment at this place, is clearly a premeditated, much-studied and well-planned process. This is one of the classic examples of the planned structural genocide committed by the Sinhala State and its military against the nation of Eezham Tamils in the island, commented civil activists from Kokku'laay.
Kokku'laay Villukku'lam
A One Inch Sheet of the Survey Department, originally prepared in the British times and last revised in 1978, shows the traditional Tamil village having a Hindu temple and a church.

Building inside the Vihara establishement
A building already constructed inside the controversial premises
Hospital Kokku'laay
The hospital building photographed in June 2015

Buddh statue, Bo tree at Kokkulaay
Buddha statue at the site of the main Bo tree
The state of construction
The state of construction has been photographed and documented by local journalists

Kokku'laay
The location of Kokku'laay village and lagoon. [Satellite map courtesy: Google Earth]


Chronology:

வெள்ளி, 26 ஜூன், 2015

Colombo reimposes military harassments against peaceful assembly in Batticaloa

Colombo reimposes military harassments against peaceful assembly in Batticaloa

[TamilNet, Wednesday, 24 June 2015, 23:20 GMT]
Military intelligence operatives of the occupying Sri Lankan military in Batticaloa district has recently stepped up surveillance and intimidation of those who take part in civil, economic, cultural and religious meetings in all the 14 divisions of the district, according to the instructions coming from Colombo, informed sources in Batticaloa told TamilNet on Wednesday. The new regime in Colombo, claiming ‘good governance’, continues the ‘military governance’ through its genocidal Sinhala military in an attempt to control the civil affairs in the district, said civil activists who have been subjected to intimidating calls from the SL military operatives in recent days.

“The freedom of assembly is seriously threatened. Even the common public attending various meetings are being questioned,” a board member of a temple management said.

The meetings held by Rural Development Societies (RDS), Women Rural Development Societies (WRDS), sports clubs, temple management committees are being systematically monitored in the recent days, the sources said. Social gatherings of youth, cultural and literary meetings are also being targeted.

The meetings of Tamil politicians, journalists and Non Governmental Organizations have been subjected to military surveillance for a long time.

Ex-LTTE members who are forced to collaborate with the occupying SL military are being sent to the meetings with the instruction of collecting details of the ‘active’ participants in the social, cultural and religious meetings. Later, the SL military intelligence officers make phone calls, during night times, harassing the activists with questions about the meeting and those attending the meetings.

The military intelligence callers are telling the activists to inform and invite the SL military to their meetings. They are also told to submit details of their activities in advance if the activists want to avoid interrogative questions through phone calls.


வியாழன், 25 ஜூன், 2015

பன்னாட்டு ஏதிலியர் நாள் (World Refugee Day 20-06-2015) – ஈழம் இரஞ்சன்

refugees01

பன்னாட்டு ஏதிலியர் நாள் 

  வீடு இல்லை… நாடு இல்லை…விதிவிட்ட வழியா? இன்றைய நாட்களில் உலகில் 7.6 பேராயிரம்(மில்லியன்) மக்கள் ஏதிலிகளாகப் பதிவாகியிருப்பதாக ஐ.நா. குறிப்பிட்டிருப்பதுதான் இந்த உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கும் செய்தியாகும். இருப்பிடமற்று உலகமெங்கும் ஏதிலிகளாக ஈழத்துமக்களும் அலைந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் அண்மையில் ஐ.நா வெளியிட்ட சில தகவல்கள் உலகின் கையறு அரசியல் நிலையைக் காட்டுகின்றது.
  7.6 பேராயிரம் மக்கள் ஏதிலிகளாகப் பதிவாகி இருப்பதாகக் குறிப்பிடுவதுடன், 1994ஆம் ஆண்டுக்குப் பின்னர் மிகுதியானஅளவு   ஏதிலிகள் எண்ணிக்கை உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது. ஐ.நாவின் ஏதிலியருக்கான உயர்செயல் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையே இந்தவிவரத்தைக் கூறுகின்றது. உலகின் ஏதிலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்குச் சிரியா சிக்கல் முக்கியகாரணி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. உலகின் மொத்த ஏதிலிகள் எண்ணிக்கையில் 55%இனர் வெறும் 5 நாடுகளையே சார்புப்படுத்துகின்றனர். அது ஆப்கானித்தான், சோமாலியா, ஈராக்கு, சூடான், சிரியா ஆகியனவாகும். அடுத்தநிலையில் ஈழத்தைசேர்ந்த ஏதிலியர் இடம்பெறுகின்றனர்.
  அதேபோல் உலகின் 81%ஏதிலிகள் வளர்ச்சி அடைந்துவரும் நாடுகளிலேயே அடைக்கலம் பெற்றுள்ளனர். இது முந்தைய பத்தாண்டினை விடவும் 11% அதிகரிப்பாகும். ‘இது உண்மையில் பெருங்கண்டமான(அபாயகரமான) இலக்கத்தை எட்டியுள்ளது. இது ஒவ்வொரு தனிமனிதனும் முகம்கொடுக்கும் சிக்கலின் முதன்மை அளவுகோலைக் காட்டுகிறது. பன்னாட்டுச் சமூகம் மோதலைத் தவிர்த்து அவர்களுக்கு தீர்வை வழங்காததை வெளிக்காட்டுகிறது’ என ஐ.நா குறிப்பிடுகின்றது.   இதை ஏதிலியர் நிலையத்தின் தலைவர் அன்டோனியோகுட்டரசு குறிப்பிட்டுள்ளார். ஊலக ஏதிலிகள் எண்ணிக்கை 7.6 பேராயிரமாக உயர்ந்திருப்பதன் மூலம் ஒவ்வொரு 4.1 வினாடிக்கு ஒருவர் வீதம் ஏதிலியராக இடம்பெயர்கின்றனர். பன்னாட்டு அரசுகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் தரும் தரவுகளை அடிப்படையாகக் கொண்டே இந்தவிவரம் வெளியிடப்பட்டதாக ஐ.நா ஏதிலியர் நிலையம் கூறியது. கடந்த 32 ஆண்டுகளாக ஆப்கான் நாட்டவர்களே அதிகமாக ஏதிலிகளாக உள்ளனர். இவர்களில் 95%இனர் ஈரான் அல்லது பாகித்தானில் ஏதிலிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். இதற்குஅடுத்து 2012 இல் சோமாலிய நாட்டவரே அதிகம் ஏதிலிகளாக உள்ளனர். தொடர்ந்து ஈராக்கு, சிரியா நாட்டவர்கள் உள்ளனர். எனினும் சிரியாவிலிருந்து கடந்த ஆறு மாதங்களில் அகதிகளாக இடம்பெயர்ந்த பேராயிரம் மக்கள் உள்ளடக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
  ஈழத்தைப் போலவே உலகின் பல நாடுகளில் போர்களின் காரணமாக மக்கள் ஏதிலிகளாக ஆக்கப்பட்டுள்ளனர். 1994- ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிக எண்ணிக்கையிலான மக்கள் ஏதிலியரானது இப்போதுதான் என்று அந்த அறிக்கை கூறுகிறது. ஆப்கானித்தான் ஏதிலிகள் அண்டை நாடுகளான பாகித்தான் மற்றும் ஈரானில் தஞ்சமடைந்துள்ளனர். இரண்டாவது இடத்தில் சோமாலியாவும், மூன்றாவதாக ஈராக்கும் உள்ளதாக ஐ.நா. அறிக்கை தெரிவித்துள்ளது. தமது இருப்பிடங்களைவிட்டுப் பலவந்தமாகத் தப்பிஓடச் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளதாக ஐக்கியநாடுகள் ஏதிலியருக்கான அமைப்பு கூறியுள்ளது. (உ)ருவண்டா மற்றும் முன்னாள் யூகோசுலாவிய நெருக்கடி காலகட்டத்துக்குப் பிறகு இதுதான் இடம் பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துக் காணப்படும் காலமாகும்.
 கடந்தஆண்டில் 80 நூறாயிரம் பேர் இடம் பெயர்ந்திருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் போர் காரணமாகவே இடம்பெயர்ந்தனர். அனைத்து 4.5 கோடி ஏதிலிகளில் அரைவாசிப் பேர், ஆப்கானித்தான், சோமாலியா, இராக், சிரியாமற்றும் சுடான் ஆகியநாடுகளைச் சேர்ந்தவர்களாவர். நீண்டகால மோதல்களைத் தீர்க்க முடியாத அல்லது புதிய மோதல்கள் உருவாவதைத் தடுக்க முடியாத பன்னாட்டுச் சமூகத்தின் இயலாமையையே இந்த அதிகரிப்புக்கள் காண்பிப்பதாகவும் ஐநா கூறுகிறது. உலகில் பதிநூறாயிரத்திற்கும் மேற்ப்பட்டவர்கள் ஈழத்தைச் சேர்ந்த ஏதிலிகள். கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் 10 ஆயிரத்து 311 பேரும், கனடாவில் 12 ஆயிரத்து 959 பேரும், ஆத்திரேலியாவில் 597 பேரும் ஏதிலிகளாகத் தஞ்சம் அடைந்திருக்கிறார்கள். கனடாவில் மாத்திரம் 4 நூறாயிரம் பேர் தங்கியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்த ஆண்டுடன் ஆத்திரேலியாவில் தஞ்சமடைந்த ஏதிலிகளின் எண்ணிக்கை நூறாயிரத்தைத் தாண்டுமென எதிர்பார்க்கப்படுகுpறது. இந்தியாவில் ஏதிலிகள் முகாமில் அடைக்கப்பட்டிருக்கும் 1இலட்சத்திற்கும் அதிகமான ஈழத்தமிழர்களைப்போல புலம் பெயர்ந்து
  வந்திருக்கும் பலரும் சொல்லொண்ணா வேதனையில் சிக்கித் தவிக்கிறார்கள். இலங்கைக்கு உள்ளேயே இடம் பெயர்ந்தவர்கள் 1,56,000 எனப் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. யாழ்ப்பாணத்தில் மட்டும் 50 ஆயிரம் மக்கள் ஏதிலிகள் முகாமிலே முடக்கி வைக்கப்பட்டு இருக்கிறார்கள். சம்பூர் முகாமில் 6000 தமிழ் குடும்பங்கள் இருப்பதாக அரசாங்கமே சொல்கிறது. வடக்கு மற்றும் கிழக்கில் 2 இலட்சம் காணி நிலத்தை இராணுவம் பறித்து இருக்கிறது. வன்னிப் பகுதியில் மட்டும் 6,381 காணி நிலைத்தை இராணுவம் பறித்துவைத்து இருக்கிறது. ஈழத் தமிழர்களின் வாழ்க்கை நடுக்கடலில் தத்தளிக்கும் தோணியாகி விட்டது. உலகமெங்கும் வாழ நிலம் மறுக்கப்படும் மக்கள் இப்படித்தான் கள்ளத் தோணிகளில் தஞ்சம் தேடிச் செல்லுகின்றனர். வாழ்ந்த மண்ணை விட்டு மிகவும் கண்டம்(ஆபத்து) நிறைந்த கடலில் படகுகளை நம்பி மக்கள் புறப்பட்டு தஞ்சம் தேடுவது மனித வாழ்க்கையில் மிகவும் கொடியதொரு தருணம்.
  1983 இல் இலங்கையில் யுத்தம் வெடித்த பொழுது இலங்காராணி என்ற கப்பல் மூலம் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்பட்டார்கள் கொழும்பில் வசித்த தமிழர்கள். ஈழப்போர் ஆரம்பித்த அன்று முதல் ஈழத்துமக்கள் கள்ளத் தோணிகளில் உலகக் கடல் எங்கும் அலைகின்றனர். ஈழத்து மண்ணிலிருந்து புலம் பெயர்ந்து சென்று உலகமெங்கும் வசிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் உலகக்கடல் வழியே கள்ளத் தோணிகளில் சென்றிருக்கிறார்கள். தாங்கள் பிறந்து வளர்ந்த பூர்வீக மண்ணை விட்டு உயிரைப் பாதுகாக்கும் ஏக்கத்துடன் தொகை தொகையாக ஈழ மக்கள் ஏதிலிகளாகச் சென்றுள்ளனர். ஈழத்து ஏதிலிகளின் படகுகள் ஒதுங்காத நாடுகளில்லை. உலகக் கடலில் பலமுறை கவிழ்ந்து விட்டன ஈழத்து ஏதிலிகளின் கள்ளத் தோணிகள். போர்க்களத்திலிருந்து உயிரைப் பாதுகாக்க கடலில் ஓடிய குழந்தைகளும் சிறுவர்களும் பெண்களும் என்று பலர் கடலில் மாண்டு போயிருக்கிறார்கள்.
  ஈழப்போர் தொடங்கிய நாட்களிலிருந்து ஈழத்து மக்கள் ஏதிலிகளாக உலகக்கடல் எங்கும் இந்தத் துயரப் பயணத்தை மேற்கொள்ளுகிறார்கள்.
ஏதிலியர் தத்தம் தாய்நாட்டுக்  குடிமக்களாக உரிமையுடன் வாழும் நாள் விரைவில் வருவதாக!

[படங்களைச் சொடுக்கிப் பெரிதாகப்பார்க்கவும்.]

காமராசர் பிறந்தநாள் கவிதைப்போட்டி


 maamduraikavignar_peravai01
 மாமதுரைக் கவிஞர் பேரவை சார்பில் நடைபெறவுள்ள காமராசர் பிறந்த நாள் விழா கவிதைப் போட்டிக்கு, போட்டியாளர்கள் தங்களது கவிதைப் படைப்புகளை சூன் 30 ஆம் நாளுக்குள் அனுப்ப அறிவிக்கப்பட்டுள்ளது.
  இது குறித்து, மாமதுரைக் கவிஞர் பேரவைத் தலைவர் சி. வீரபாண்டியத் தென்னவன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கருமவீரர் காமராசர் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், பேரவை சார்பில் கவிதைப் போட்டி நடத்தப்படுகிறது. இதில், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கலாம். “எழுத்தெல்லாம் தூய தமிழ் எழுத்தாகுமா?” என்ற தலைப்பில், மரபு மற்றும் புதுக்கவிதைகள் 20 வரிகளுக்கு மிகாமல் இருக்கவேண்டும். போட்டியில் தேர்வானவர்கள் நேரில் வந்து கவிதையை அரங்கேற்ற வேண்டும்.
ஒரு பள்ளியில் இருந்து 30 மாணவர்கள் தேர்வானால், பள்ளிக்குக் கேடயமும், வெற்றி பெற்றவருக்கு நினைவுப் பரிசும் வழங்கப்படும். போட்டியாளர்கள்,

சி. வீரபாண்டியத் தென்னவன், 10 ஆம் குறுக்குத் தெரு, திருவள்ளுவர் நகர், பழங்காநத்தம் என்ற முகவரியில், சூன் 30 ஆம் நாளுக்குள் கவிதையை அனுப்பி வைக்கவேண்டும்.

மேலும் விவரங்களுக்கு, 98421-81462 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
தகவல் முதுவை இதாயத்து
அகரமுதல 84, ஆனி 06,2046/ சூன் 21, 2015

சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் தொழிற்சாலைகளின் உரிமங்களை நீக்குக!


 envi_pollution_water02

திட்டச்சேரி பேரூராட்சிப் பகுதியில்

சுற்றுப்புறச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும்

தொழிற்சாலைகளின் உரிமங்களை நீக்கச்

சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்!

  நாகப்பட்டினம் மாவட்டம், திட்டச்சேரி பேரூராட்சிப்பகுதி, பனங்குடி ஊராட்சி, வாழ்மங்கலம் முதலான பகுதிகளில் சுற்றுப்புறச்சூழலுக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளின் உரிமங்களை நீக்கவேண்டுமெனச் சமூக ஆர்வலர்கள் வேண்டுகின்றனர்.
 பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாவண்ணம் தொழிற்சாலைகள் அமைக்கப்படவேண்டும் என்று தமிழ்நாடு சுற்றுப்புறச்சூழ்நிலை பாதுகாப்பு -மற்றும் வனத்துறை சார்பில் பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. நீரில் வாழும் உயிரினங்களைப் பாதுகாக்க மத்திய அரசின் சார்பில் பல்வேறு சட்டதிட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.
  சுற்றுப்புறச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் தொழிற்சாலைகளுக்குப் பல்வேறு நிபந்தனைகள் உள்ளன. நீர், காற்று, நிலத்தடி நீர் ஆகியவற்றுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளை முறைப்படுத்த பல்வேறு சட்டதிட்டங்கள் வரையறுக்கப்பட்டன.
   வேதியியல் துயர்நேர்ச்சி(விபத்து)கள், நெகிழிப்பொருள் உற்பத்தி – விற்பனை தொடர்பாகவும் சட்டங்கள் உள்ளன. இவற்றுள், இந்திய வனச்சட்டம்(1927), நீர்(மாசுத் தடுப்பு-கட்டுப்பாடு)ச் சட்டம் (1974), நீர்பாதுகாப்புச்சட்டம்(1978), காற்று (மாசுத் தடுப்பு -கட்டுப்பாடு)ச் சட்டம் (1981),   சுற்றுப்புறச்சூழல்(பாதுகாப்புச்)சட்டம்(1986), வனப்பாதுகாப்புச் சட்டம் (1986), பெருங்கேட்டுக்கழிவுகள் கையாளுதல்-மேலாண்மைச்சட்டம்(1989)( Hazardous waste Handling and management act of 1989), உயிரியல் பன்முகத்தன்மைச் சட்டம்(2002), வன உயிரிகள் (பாதுகாப்புத்)திருத்தச்சட்டம்(2002), தேசியப்பசுமைத் தீர்ப்பாயச் சட்டம்(2010),   ஒலி மாசுச்சட்டம், மின்னணு கழிவு பற்றிய சட்டம் முதலானவை குறிப்பிடத்தக்கனவாகும்.
  இச்சட்டங்கள், தமிழகத்தில் குறிப்பாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் பின்பற்றப்படுவதில்லை. இதனால் நிலம், நீர், காற்று ஆகியவை மாசுபட்டு பொதுமக்களுக்கும், உயிரினங்களும் நாளுக்கு நாள் பாதிப்பு ஏற்படுகிறது.
 இவற்றைத்தவிர தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் உயிர்களுக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு ஏற்படுத்தவேண்டும் என்றும், தொழிற்சாலைகளின் இருந்து கழிவுகளை வெளியேற்ற போதிய வடிகால்கள் அமைக்கப்படவேண்டும் எனவும் பொதுமக்களைக் காப்பாற்றும் வண்ணம் காப்பீட்டுத்திட்டம் எனவும் பல விதிகள் உள்ளன. மேலும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் மாசடைந்த காற்று, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நுண்துகள்களால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களின் கண்களில் பட்டு அவர்கள் கண்கள் பாதிப்படைவதோடு மட்டும் இல்லாமல் எதிரே வரும் வாகனத்தின் மீது மோதி உயிரிழக்கின்றனர்.
   இவ்விதிகளைப் பயன்படுத்தாமல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரைப் பொதுமக்கள் பயன்படுத்தும் ஆறுகளில் இரவோடு இரவாக விட்டுவிடுகின்றனர். இதனால் வேதியியல் பொருட்கள், நெகிழிக் கழிவுகள் போன்ற இன்னும் பல கழிவுகளால் நீரில் வாழ்கின்ற உயிரினங்கள் பாதிப்படைகின்றன.
  எனவே சுற்றுப்புறச்சூழலுக்குக் குந்தகம் விளைவிக்கும் தொழிற்சாலைகளின் உரிமங்களை விலக்கிக்கொள்ள வேண்டும் எனவும் அதற்கு உடந்தையாக செயல்படும் அதிகாரிகள் மீது துறை வழியிலான நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் எனவும் எதிர்பார்க்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
 vaigaianeesu84
அகரமுதல 84, ஆனி 06,2046/ சூன் 21, 2015

புதன், 24 ஜூன், 2015

உதவிக்காக ஏங்கும் திருவள்ளுவர்! – தமிழ் இராசேந்திரன்

thiruvalluvarpalli07
thiruvalluvarpalli06

  தமிழ்நாடு திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அருகே வீரணம் என்ற ஊரில் 2003 ஆம் ஆண்டு 6 காணி(ஏக்கர்) இடத்தில் ஏழு அறைகளுடன் தொடங்கப்பட்டு (தமிழ்த்தேசிய மாபெரும் அறிஞர் பெருமக்களான தேவநேயப்பாவாணர், பெருஞ்சித்திரனார் ஆகியோரின் நண்பரான ) தமிழ்ப்பற்றாளர் ஆறுமுகம் ஐயா அவர்களால் நடத்தப்படும் திருவள்ளுவர் தாய்த்தமிழ் உயர்நிலைப்பள்ளி 6 முதல் 10 ஆம் வகுப்புகளுடன் 482/500 என்ற அளவு மதிப்பெண் பெறும் மாணவர்களை உருவாக்கி வந்தது.
  இந்நிலையில் அருகில் புதிதாகத் தோன்றிய ஆங்கில வழிப் பள்ளி நிருவாகத்தின் மாணவர்களையும் ஆசிரியர்களையும் நயவஞ்சகமாக இழுக்கும் திட்டத்தினால் 100 மாணவர்கள் இருந்த இப்பள்ளியில் 15 மாணவர்களே மிஞ்சி உள்ளனர். ஆசிரியர்கள் அனைவரும் ஓடிவிட்டனர்.
   இந்நிலையில் இப்பள்ளியை இத்திங்களில் மூடிவிட்டு இருக்கிற 15 மாணவர்களையும் மற்ற பள்ளிகளுக்கு அனுப்பிவிடவேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
 தென்மொழி இறைக்குருவன், தமிழ்ச்சான்றோர் பேரவை அருணாசலம் ஆகியோரால் தொடங்கிவைக்கப்பட்ட திருவள்ளுவர் பெயரால் இயங்கும் தமிழ்வழிப்பள்ளி மூடப்படாமல் காக்கப்பட வேண்டும் என்ற ஆவலால் நான் இப்பள்ளியை தொடர்ந்து நடத்த தமிழர்கள் யாராவது முன்வருவீர்களா எனக் கேட்டு இவ்வேண்டுகோள் விடுக்கின்றேன்.
இட வாடகையை மட்டும் கொடுத்துவிட்டு
இப்பள்ளி நிருவாகத்தை ஏற்று நடத்த 
தமிழுள்ளம் கொண்ட யாராவது முன்வருவீர்களா?
அல்லது திங்கள்தோறும் உரூபாய் 1000/500/100
என்ற அளவில் பணம் அனுப்ப முன்வருவீர்களா?
ஆறுமுகம் அலைபேசி எண் 9443815216
எனது அலைபேசி எண் 9789433344
– தமிழ் இராசேந்திரன்

 [பெரிதாகப்பாரக்கப் படங்களின்மேல் சொடுக்கவும்.]

சங்க நூல்கள் வரலாற்று நூல்களே!


sanganuulgal02

  சங்க நூற்களில் பெரும்பாலும் இயற்கைத் தன்மைகளை உள்ளவாறுணரலாம். நிலவியல்பால் பல நலங்குகளைக் காணலாம். சிற்றுயிர் வாழ்க்கைகளை உற்று நோக்குவதால் மாந்தர் கற்றுக் குற்ற நீங்கிக் குணங்கொண்டு வாழ்வாங்கு வாழ வேண்டிய பல வாய்மைகளை உணரலாம். குறிப்பிற் புலப்படுத்தும் அறமுறைகள் அளவில்லன அறியலாம். இவற்றிற்கு உள்ளுறையுவமம் எனப் பெயர்ந்து உள்ளுதோறுள்ள முவக்குமாறு உள்ளியுணர வைத்தனர் ஆன்றோர். இவ்வுள்ளுறையினைக் கொண்டு கள்ளங் கபடொழிந்து வெள்ளையுள்ளத்தராய் வள்ளன்மையோடு வாழலாம். மேலும் பண்டைமாந்தர், புலவர், புரவலர், குறுநிலமன்னர், முடியுடை வேந்தர், ஆண்மை, அடக்கம், ஆள்வினையுடைமை, உழவு, வணிகம், அறமுறை நிறுத்த ஆற்றும் போர், கல்வி, கற்பு, செல்வம், செம்மை, செம்பொருட்டுணிவு, வழிபாடு வாழ்க்கை நலம் முதலிய பலவும் கண்டு கைக்கொண்டொழுவதற்குத் தூண்டும் வரலாற்று நூலுமாகும். அதனால் நாட்டுவரலாற்று நூற்களுள் முதல் வரிசையில் நிற்கத் தக்க நூல்கள் சங்க நூல்களேயாகும்.
– சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகப் பதிப்புரை: ஐங்குறுநூறு



வடநூல் இலக்கியங்களை விட சங்க இலக்கியங்கள் சிறந்தன.

Po.ve.somasundranaar01

பொருந்தாப் புனைவுகள் உடைய வடநூல் இலக்கியங்களை விட

இயற்கையை இயம்பும் சங்க இலக்கியங்கள் சிறந்தன!

  வடமொழி முதலிய பிறமொழிவாணர்கள் தங்கள் இலக்கியங்களை ஆக்குதற்குப் பெரும்பாலும் அறிவொடு பொருந்தாத கற்பனைகளையே பயில வழங்குவராயினர். பாற்கடலும், கருப்பஞ் சாற்றுக் கடலும், மேலுலகங்களும், கீழுலகங்களும், அரக்கர்களும், தேவர்களும், பிசாசர்களும், இன்னோரன்ன பொருந்தாப் புனைவுகளை அவர்கள் இலக்கியங்களில் யாண்டுங் காணலாம். பல்லாயிரம் ஆண்டு உயிர் வாழ்ந்திருப்போரையும், பதினாயிரம் மகளிரை மணந்தோர்களையும் அவர்கள் இலக்கியங்களிலே காண்கின்றோம். இப்புனைவுகள் ஆராய்ச்சி அறிவிற்குச் சிறிதும் பொருந்தாத பொய்ப் புனைவுகளேயாகும் அன்றோ? நந்தமிழ் நாட்டுப்பற்றைநாட் புலவர்களும் “இனத்தாகும் அறிவு” என்றபடி அவ்வடவர் கூட்டுறவானே நல்லறிவிழந்து அவர் நெறியே பற்றிப் பிற்றை நாள் வீண்படும் இலக்கியங்கள் பலவற்றை யாத்து அவம் போயினர்.
  நம் சங்கக்காலத்து இலக்கியங்களிலே, இத்தகைய பொருந்தாப் புனைவுகளை யாண்டும் காண்டல் அரிது. ஒரோவழி யாண்டேனும் காணப்படுவனவும் அக்காலத்தே வடவர் கேண்மையானே வந்த சிறிய இழுக்குகளாகவே காணப்படுகின்றன. நம் பழம்புலவர்கள் உலகியற் பொருள்களின் இயல்பினை யாண்டும் தன்மைநவிற்சியானே விளக்குவதைக் காணலாம்.
– பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார்: குறுந்தொகை: அணிந்துரை: பக்கம்.11