சனி, 29 செப்டம்பர், 2018

தாவீது நோர்த்து உரைகள் – பேராதனை & கொழும்பு

அகரமுதல

புரட்டாசி 17, 2049 புதன் அட்டோபர் 03, 2018 மாலை 4.30

பேராதனை பல்கலைக்கழகக் கலையகம்

புரட்டாசி 21, 2049 புதன் அட்டோபர் 07, 2018 மாலை 4.30

கொழும்பு புதிய நகர மண்டபம்


தாவீது நோர்த்து உரைகள்


சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) ஐந்தாவது தேசியப் பேராயத்திற்கு  வழங்கிய தொடக்க அறிக்கை

சோசலிச சமத்துவக் கட்சி (அமெரிக்கா) ஐந்தாவது தேசியப் பேராயத் தீர்மானம்

நான்காம் குழுவின் அனைத்துலக வலைத்தளம்

இலக்கியச் சிந்தனை நிகழ்வு 579 & குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 41

புரட்டாசி 13, 2049 சனி 29.09.2018

மாலை 6.00

சீனிவாச காந்தி நிலையம்

அம்புசம்மாள் தெரு

ஆழ்வார்பேட்டை சென்னை 600018


இலக்கியச் சிந்தனை நிகழ்வு 579
‘பெரியாரும் தேசியமும்’
சிறப்புரை: – திரு பால சீனிவாசன் 
 …….தொடர்ந்து
குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 41
 சிற்றிதழின்(ல்)  தளம்
சிறப்புரை திரு பா.இரவி

வியாழன், 27 செப்டம்பர், 2018

கி.த.பச்சையப்பனார் நினைவேந்தல், வண்ணாரப்பேட்டை,சென்னை
புரட்டாசி 14, 2049/ஞாயிறு/ 30.09.2018 மாலை 6.00

வெற்றி திருமண மாளிகை, குறுக்குச் சாலை

புது வண்ணை,சென்னை 81

முதுபெரும் தமிழறிஞர்

கி.த.பச்சையப்பனார் நினைவேந்தல்

படத்திறப்பு: பழ.நெடுமாறன்


கி.த.ப.குடும்பத்தினர்
7502489272, 6382280116,9941112212,866766123

புதன், 26 செப்டம்பர், 2018

திலீபன் மண்ணுக்காக இறந்தான் – மேதகு பிரபாகரன்

அகரமுதல

திலீபன் மண்ணுக்காக இறந்தான்

 – உயிர்க்கொடையின்பொழுது மேதகு பிரபாகரன் விடுத்த செய்தி


“எமது விடுதலை இயக்கம் எத்தனையோ அற்புதமான  ஈகங்களைச் செய்திருக்கிறது. வீரகாவியங்களைப் படைத்திருக்கிறது. இவையெல்லாம் எமது ஆயுதப் போராட்ட வரலாற்றில் நாம் ஈட்டிய வீர சாதனைகள்.
ஆனால், எனது அன்பான தோழன் திலீபனின் ஈகமோ-தியாகமோ வித்தியாசமானது, வியக்கத்தக்கது. எமது போராட்ட வரலாற்றில் புதுமையானது.
அமைதிப் போராட்டக் களத்தில் தன்னைப் பலிகொடுத்து ஈடு இணையற்ற ஈகத்தைத் திலீபன் புரிந்தான். அவனது மரணம் ஒரு வரலாற்று நிகழ்ச்சி.
தமிழீழத் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிய நிகழ்ச்சி. பாரத நாட்டைத் தலைகுனிய வைத்த நிகழ்ச்சி.
உலகத்தின் மனச் சான்றைத் தீண்டிவிட்ட நிகழ்ச்சி. திலீபன் உங்களுக்காக இறந்தான். உங்கள் உரிமைக்காக இறந்தான். உங்கள் மண்ணுக்காக இறந்தான். உங்கள் பாதுகாப்புக்காக இறந்தான். உங்கள் விடுதலைக்காக, மதிப்பிற்காக இற்நதான்.
ஓர் உயிர் உன்னதமானது என்பதை நான் அறிவேன். ஆனால் உயிரிலும் உன்னதமானது உரிமை. எமது விடுதலை. எமது மதிப்பு-கௌரவம்!
நான் திலீபனை ஆழமாக நேசித்தேன். உறுதிவாய்நத இலட்சியப் போராளி என்ற வகையில் அவன் மீது அளவு கடந்த பாசம் எனக்குண்டு.
இந்தியா கவலை
திலீபனின் மரணம் குறித்து இந்தியா ஆழ்ந்த கவலை தெரிவித்திருக்கிறது. இது  பொருளற்ற சாவு என்று இந்தியத் தூதர் கூறியிருக்கிறார்.
தமது உறுதிமொழிகளை நம்பியிருந்தால் திலீபன் உயிர் தப்பியிருப்பான் என்று சொல்லியிருக்கிறார். ஆனால் உண்மையில் நடந்தது என்ன? நடந்து கொண்டிருப்பது என்ன? என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
எமது உரிமைகள் வழங்கப்படும். எமது மக்களுக்கு, எமது மண்ணுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படும். தமிழ்மக்கள் தமது பரம்பரைப்  பூமியில் தம்மைத் தாமே ஆளும் வாய்ப்பு அளிக்கப்படும்-இப்படியெல்லாம் பாரத அரசு எமக்கு அளித்த வாக்குறுதிகளை நம்பி, நாம் எமது ஆயுதங்களைக் கையளித்தோம்.
எமது மக்களினதும், மண்ணினதும் பாதுகாப்பை இந்தியாவுக்குப் பொறுப்பளித்தோம்.  இதனையடுத்து என்ன நடைபெற்றது என்பதெல்லாம் எனது மக்களாகிய உங்களுக்குத் தெரியும்.
தமிழ் அகதிகள் தமது சொந்தக் கிராமங்களுக்குச் செல்ல முடியாமல் முகாம்களுக்குள் முடங்கிக் கிடக்க, சிங்களக் குடியேற்றம் துரித கதியில் தமிழ் மண்ணை விழுங்கியது.
சிங்கள் அரசின்  காவல்துறை தமிழ்ப் பகுதிகளில் விரிவாக்கப்பட்டது.
அவசர, அவசரமாகச் சிங்கள இனவாத அரசயந்திரம் தமிழ்ப்பகுதிகளில் ஊடுருவியது. அமைதி ஒப்பந்தம் என்ற போர்வையில் அமைதிப் படையின்  ஒத்துழைப்புடன் சிங்கள் அரச ஆதிக்கம் தமிழீழத்தில் நிலை கொள்ள முயன்றது.
இந்தப் பேராபத்தை உணர்ந்துகொண்ட திலீபன் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி காணத் திடசங்கற்பம் கொண்டான்.
தருமயுத்தம்
சிங்கள அரசுடன் உரிமை கோரிப் போராடுவதில் பொருளில்லை. பாரதம்தான் எமது சிக்கலில் தலையிட்டது. பாரதம்தான் எம்மிடம் ஆயுதங்களை வாங்கியது. பாரதம்தான் எமது ஆயுதப் போராட்டத்தை நிறுத்திவைத்தது.
ஆகவே பாரத அரசிடம்தான் நாம் உரிமைக் கோரிப் போராட வேண்டும். எனவேதான் பாரதத்துடன் அறப்போர் – தருமயுத்தம் ஒன்றை ஆரம்பித்தான் திலீபன். அத்தோடு பாரதத்தின் ஆன்மீக மரபில் பெறப்பட்ட இன்னா செய்யாமை – அகிம்சை வடிவத்தை ஆயுதமாக எடுத்துக் கொண்டான்.
நீராகாரம் கூட அருந்தாது மரண நோன்பைத் திலீபன் தழுவிக் கொள்வதற்கு 24 மணிநேரத்திற்கு முன்னரே, இந்தியத் தூதர் தீட்சித்துக்கு நாம் முன்னறிவித்தல் கொடுத்தோம்.
உண்ணாநோன்பு தொடங்கி எட்டு நாட்கள் வரை எதுவுமே நடைபெறவில்லை. மாற்றாக இந்திய அரசின் கீழுள்ள தொடர்புச் சாதனங்கள் எம்மீது  நச்சுத்தனமான பொய்ப்பரப்புரையைக் கட்டவிழ்த்துவிட்டன. திலீபனின் உண்ணாநோன்பைக் கொச்சைப்படுத்தின.
ஒன்பதாவது நாள் இந்தியத் தூதர் வந்தார். உருப்படியில்லாத உறுதிமொழிகளைத் தந்தார்.
வெறும் உநுதிமொழிகளை நம்பி எமது இனம் காலம் காலமாக ஏமாற்றப்பட்டு வருகிறது.
“உருப்படியான திட்டங்களை முன்வையுங்கள். எமது கோரிக்கைகளை நிறைவேற்றி வையுங்கள். அதுவரை உண்ணாவிரதம் கைவிடப்படமாட்டாது”  என்றேன்.
“உங்களுக்குத் திலீபனின் உயிர்மீது அக்கறை இருந்தால், நீங்கள் அவனை வந்து பாருங்கள். எமது மக்களுக்கு முன்பாக அவனிடம் உறுதிமொழிகளைக் கூறுங்கள். நாம் உண்ணாவிரத்தைத் திரும்பப் பெறுகிறோம்” “என்றேன். அதற்கு இந்தியத் தூதர் மறுத்துவிட்டார்”
தமிழ்ஞாலத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன்
திலீபன் உயிர்க்கொடையில் தன்னை ஈந்த பொழுது விடுத்த செய்தி.

காந்திநகர் அரசு நூலக வாசகர் வட்டம் : நூல் அறிமுகம்

அகரமுதல

புரட்டாசி 14, , 2049 / ஞாயிறு / 30.09.2018 மாலை 4.00

அடையாறு காந்திநகர் மன்றம் அருகில்

காந்திநகர் அரசு  நூலக வாசகர் வட்டம்
நூல் அறிமுகம்:

மரு.வி.கிருட்டிணமூர்த்தியின்

(மேனாள் வேந்தர், தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம்&
இந்தியக் கடல்சார் பல்கலைக்கழகம்)

‘சிகரம் பேசுகிறது’

பங்கேற்போர்:
இராய.செல்லப்பா(கார்ப்பரேசன் வங்கி)
சி.கெளரிசங்கர்(இந்தியன் ஓவர்சீசு வங்கி)
முனைவர் வி.அரிகுமார்(ஆய்வியலாளர்)
நன்றியுரை: முனைவர் வி.ஆனர்ந்தமூர்த்தி
அன்புடன்
வையவன்

கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வு – உவமைக்கவிஞர் சுரதா

அகரமுதல

புரட்டாசி 12, 2049 / வெள்ளிக்கிழமை / 28.09.2018

மாலை 06.30 மணி

பாரதிய வித்தியா பவன் , மயிலாப்பூர்

இலக்கியவீதியும்,  திரு. கிருட்டிணா இனிப்பகமும்

பாரதிய வித்தியா பவனும்  

இணைந்து நடத்தும்

கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வு –

உவமைக்கவிஞர் சுரதா

 சிறப்புரை  : 

மேனாள் அரசவைக் கவிஞர் முத்துலிங்கம்  

தலைமை :

ஓவியக் கவிஞர் அமுதபாரதி

அன்னம் விருது‘ பெறுபவர் :

கவிஞர் காவனூர் வேலன்

தகுதியுரை : திரு துரை இலட்சுமிபதி
நிரலுரை :  முனைவர் சரவணன்
உறவும் நட்புமாக வருகை  தர வேண்டுகிறேன்.
என்றென்றும் அன்புடன்– 
இலக்கியவீதி இனியவன்

விருட்சம் இலக்கியச்சந்திப்பு : மரு.செ.பாசுகரன்

அகரமுதல

புரட்டாசி 11, 2049 / வியாழன்/ 27.09.2018 மாலை 5.45

கிளை நூலகம்,

7,  இராகவன் குடியிருப்பு 3ஆவது தெரு,   

சாபர்கான் பேட்டை, சென்னை  

விருட்சமும் நண்பர்கள் வட்டமும் சேர்ந்து நடத்தும் கூட்டம்


தலைப்பு:  வைத்தீசுவரன் கதைகள்

 சிறப்புரை: மரு.செ.பாசுகரன், சிறுகதையாசிரியர், கட்டுரையாளர்

 தொடர்புக்கு :

அழகியசிங்கர் – தொலைபேசி எண் : 9444113205