சனி, 30 ஏப்ரல், 2011

Pandemonium in P.A.C. : தலையங்கம்: பொதுக்கணக்கில் புதுக்கணக்கு!

பொதுக்கணக்குக் குழுவின் விசாரணை தேவையில்லை என்பவர்களை இக்குழுவில் இருந்து நீக்கிவிட்டு விசாரிக்க வேண்டும். இனி இது போன்ற குழுக்களை அமைக்கும் பொழுது எழுத்து மூலமாக இக் குழுவின் நடவடிக்கையில் நம்பிக்கை உள்ளதாக எழுதித்தருபவர்களை மட்டுமே உறுப்பினர்களாக்க வேண்டும். இருப்பினும் தி.மு.க.துணைக்குற்றவாளிதான். காங்.தான் தலைமைக் குற்றவாளி என்பதை இந்தச் செயற்கை அமளி  மெய்ப்பித்து விட்டது. பழிஓரிடம் பாவம் ஓரிடம்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

தலையங்கம்: பொதுக்கணக்கில் புதுக்கணக்கு!

First Published : 30 Apr 2011 03:37:08 AM IST

Last Updated : 30 Apr 2011 04:11:52 AM IST

நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கும்போது, பொதுக்கணக்குக் குழு (பிஏசி)எதற்காக எல்லோரையும் அழைத்து விசாரிக்க வேண்டும் என்று குழு உறுப்பினர்களில் ஒருவரான மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா எதிர்ப்புக் குரல் எழுப்பியபோது, இந்த விசாரணையை ஊத்திக் கவிழ்க்கும் முயற்சியின் முதல்கட்டம் தொடங்கிவிட்டது என அப்போதே தெளிவாகிவிட்டது.  பி.ஏ.சி.-யின் தனி விசாரணை தேவையில்லை என்ற எதிர்ப்பு ஏற்பட்ட நாளன்று சட்டத்துறைச் செயலரும், அட்டர்னி ஜெனரல் வாஹன்வதியும் நேரில் விளக்கம் அளிக்க வந்திருந்தனர் என்பதையும், இப்போது கசிந்துள்ள அறிக்கையில், ""அன்றைய தினம் சொலிசிட்டர் ஜெனரலாக இருந்த வாஹன்வதி, அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முதலில் வந்தவருக்கே முன்னுரிமை என்கிற நடைமுறை சரியானதுதான் என்கிற கருத்தை, சட்டத்துறையைப் புறந்தள்ளிவிட்டு நேரடியாகத் தொலைத்தொடர்புத் துறைக்கு அறிவித்தார் என்று கடுமையாகக் குற்றம் சாட்டப்பட்டிருப்பதையும் இப்போது இணைத்துப் பார்க்கும்போது, இவர்களுக்குக் கோபம் எங்கே கிளைக்கிறது என்று புரிந்துகொள்ள முடியும்.  நீதிமன்றத்தில் விசாரணை நடந்து கொண்டிருந்தாலும்கூட, நாடாளுமன்றத்தால் சட்டப்படி உருவாக்கப்பட்ட பொதுக்கணக்குக் குழு, அரசுக்கு ஏற்பட்ட நிதியிழப்பு குறித்து விசாரிக்க முழு உரிமை பெற்றுள்ளது. அதன்படிதான், பொதுக் கணக்குக் குழுத் தலைவர் முரளி மனோகர் ஜோஷி, தொலைபேசித் துறைச் செயலர் முதல் இதில் தொடர்புடைய ஒவ்வொருவரையும் அழைத்து விசாரித்து வந்தார். அவர்களிடம் என்ன கேள்விகள் கேட்கப்பட்டன, என்ன பதில் அளிக்கப்பட்டது என்பது வெளியிடப்படாமல் ரகசியம் காக்கப்பட்டது.  பொதுக் கணக்குக் குழு நடத்திய விசாரணையில், நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படாத சில விஷயங்களும்கூட வெளிப்பட்டுள்ளதும், இவை பொதுக்கணக்குக் குழு அறிக்கையில் பதிவு செய்யப்படுமேயானால், இதில் சுட்டிக்காட்டப்பட்ட விஷயங்களை நாளை நீதிமன்றமும் கையில் எடுக்கக் கூடும் என்கிற அச்சமும்தான் திமுக, காங்கிரஸ் உறுப்பினர்களைக் கதிகலங்க வைத்திருக்கிறது.  பி.ஏ.சி. விசாரணைக்குத் தடை விதித்த பிறகு, அடுத்ததாக இந்த அறிக்கையைத் தடுத்து நிறுத்தும் முகமாக, சமாஜ்வாதி கட்சியின் அங்கத்தினர் ஒருவர், பகுஜன் சமாஜ் கட்சியின் அங்கத்தினர் ஒருவர் என இரண்டு பேரை மட்டும் தங்கள் பக்கம் "இழுத்து'க்கொண்டு எண்ணிக்கை பலத்தை 11 ஆகக் காட்டி, இந்த அறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாகக் கூறி, ஜோஷி மீது கடுமையாக வசை பாடினார்கள்.  இதையெல்லாம்விட பெரிய கேலிக்கூத்து, இவர்களின் "ரகளை' பொறுக்கமாட்டாமல் ஜோஷி வெளியேறியபோது, ஓடுகிறார் என்று கேலி பேசியதுடன், அந்த 11 பேரும் உட்கார்ந்து பிஏசி தலைவராகப் பேராசிரியர் சைபுதின் சோûஸத் தேர்வு செய்தார்கள். பிஏசி தலைவராக இருப்பவர் மக்களவை உறுப்பினராக இருக்க வேண்டும் என்கிற அடிப்படைகூடத் தெரியாமல், மாநிலங்களவை உறுப்பினரான சோஸ் தேர்வு செய்யப்படுகிறார் என்றால், இதுகுறித்து இன்றுவரையிலும் மக்களவைத் தலைவரும் பிரதமரும் ஏதும் பேசாமல் வாய்மூடி மௌனியாக இருப்பார்கள் என்றால், இதை என்னவென்பது?  இந்த அறிக்கை உள்நோக்குடன் கசிந்தது என்றும், மத்திய அரசைக் களங்கப்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்தில் தயாரிக்கப்பட்டது என்றும் காங்கிரஸ் கட்சி கருதினால் அதை பிஏசி கூட்டத்தில் விவாதிப்பதும், கேள்வி கேட்பதும் நியாயமானதே. ஆனால், அதற்காக அந்த அறிக்கையை முற்றிலுமாக நிராகரிப்பது என்பது இத்தனை நாள்களாக பிஏசி நடத்திய விசாரணையையே அழிப்பதாக ஆகாதா?  பி.ஏ.சி.-யில் ஒவ்வொருவரும் தெரிவித்த தகவல்களை வைத்துத்தான் அந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்பது உறுப்பினர்களுக்கே நன்றாகத் தெரியும். அத்தனையும் பதிவு செய்யப்பட்ட வாக்குமூலங்கள். இதில் தனியாக ஜோஷியோ அல்லது பாஜகவோ இட்டுக்கட்டி எழுதுவதற்கு ஏதுமில்லை. அவ்வாறு இருந்தால், விசாரணையில் பதிவு செய்யப்படாமல் தன்னிச்சையாக எழுதப்பட்ட பகுதிகள் எவையெவை என்பதைக் குறிப்பாகச் சுட்டிக்காட்டி அதை நீக்க வேண்டும் என்று கோரினால் அது நியாயமான அணுகுமுறையாக இருந்திருக்கும்.  இவர்களது அடிப்படை அச்சம் , இணையான விசாரணை நடந்தால், அறிக்கை வெளியானால், தங்கள் குற்றம் மேலும் உறுதி செய்யப்படும் என்பதுதான். ஆகவேதான் காங்கிரஸýம் திமுகவும் இதில் இந்த அளவுக்கு எதிர்ப்பு காட்டியுள்ளன.  நாடாளுமன்றப் பொதுக்கணக்குக் குழுவின் அறிக்கையை அதன் தலைவர் முரளி மனோகர் ஜோஷி தன்னிச்சையாகத் தயாரித்துவிட்டார் என்று கூக்குரலிடுகிறார்கள் திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள். இதுபோன்ற குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை நடக்கும்போது, குழுவின் சார்பில் விசாரணையின்போது அனைவரும் கலந்துகொள்வதும் அதன் தலைவர் அறிக்கையைத் தயாரிப்பதும்தானே வழக்கம். அந்த அறிக்கை குழுவின்முன் விவாதத்துக்கு வைக்கப்படும்போது, தங்கள் ஆதரவையோ, ஆட்சேபணைகளையோ உறுப்பினர்கள் பதிவு செய்வதுதானே முறை?  பொதுக்கணக்குக் குழு அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டால், அதில் பிரதமரின் செயல்பாடுகள் குறித்த பல கேள்விகள் எழுப்பப்பட்டிருக்கிறது என்பதுதான், காங்கிரஸ் - திமுக உறுப்பினர்களின் ஆவேசத்துக்கும், அவசரத்துக்கும் காரணம். 2003-ல் கார்கில் போரின்போது ராணுவக் கொள்முதல்கள் பற்றி விசாரிக்க ஏற்படுத்தப்பட்ட பூட்டா சிங் தலைமையிலான பொதுக்கணக்கு விசாரணைக் குழு அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவிடாமல் அன்று ஆட்சியிலிருந்த பாஜக தடுத்தது. இப்போது, முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான குழுவின் அறிக்கையைத் தாக்கல் செய்யவிடாமல் இன்றைய ஆளும் கட்சிகள் தடுக்கின்றன.  தவறுகளையும், முறைகேடுகளையும் யார் செய்திருந்தாலும் வெளிக்கொணர வேண்டிய நமது மாண்புமிகு உறுப்பினர்கள், தவறுகளை மூடி மறைப்பதில் காட்டும் அக்கறை பிரமிக்க வைக்கிறது. இந்தியா ஒளிர்கிறது, நிஜம்!

sharing power or which is the real solution of the crisis in ilangai?அதிகாரப் பரவல்: தமிழ் தேசியக் கட்சியுடன் இலங்கை அரசு பேச்சு

இந்த நாடகம் சிங்கள மேடையில் எத்தனை நாளம்மா? அம்மா! எத்தனை நாளம்மா? ௧௯௦௦ ஆ் ஆண்டில் இரு்நத தமிழ்நிலப்பரப்பு தமிழ்  ஈழமாக ஏற்கப்பட வேண்டும். இதுவே சரியான தீர்வு.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

அதிகாரப் பரவல்: தமிழ் தேசியக் கட்சியுடன் இலங்கை அரசு பேச்சு

First Published : 30 Apr 2011 02:14:31 AM IST


கொழும்பு, ஏப்.29: அதிகாரப்பரவல் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டணி கட்சியுடன் இலங்கை அரசு பேச்சுவார்த்தையைத் துவக்கியுள்ளது.  இதுகுறித்து தமிழ் தேசிய கூட்டணி கட்சியின் சட்டப்பிரிவு ஆலோசகர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியது: தமிழர் பிரச்னைக்கு அரசியல் ரீதியில் நிரந்தர தீர்வு காண இலங்கை அரசு பிரதிநிதிகள் குழுவுடன் தமிழர் கட்சி பிரதிநிதிகள் பல்வேறு சுற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இப்போதுதான் முதன் முதலாக இலங்கையில் அதிகாரப் பரவல் குறித்த பேச்சுவார்த்தை துவங்கப்பட்டுள்ளது. 4,600 தமிழர்களை ராணுவம் பிடித்தது வைத்திருப்பது குறித்தும், 850 தமிழர்கள் நீண்ட காலமாக சிறை வைக்கப்பட்டிருப்பது குறித்தும் இலங்கை அரசின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளோம்.  அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை மே 12-ம் தேதி நடைபெறவுள்ளது என்றார்.  போராட்டத்தை ஏற்க முடியாது: இதற்கிடையே இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல் குறித்து ஐக்கிய நாடுகள் சபை அளித்த அறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மே 1-ம் தேதி இலங்கையில் உள்ள ஐ.நா. சபை அலுவலகம் முன் போராட்டம் நடத்தப்படும் என சில அமைப்புகள் அறிவித்துள்ளன. இதற்கு ஐ.நா. சபை பேச்சாளர் ஃபார்ஹன் ஹக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் வியாழக்கிழமை நிருபர்களிடம் பேசிய அவர், இலங்கையிலுள்ள ஐ.நா. அலுவலகத்திற்கோ, அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கோ எந்தவித பாதிப்பு ஏற்பட்டாலும் அதற்கு இலங்கை அரசே பொறுப்பாகும். இந்த போராட்டத்தை ஏற்க முடியாது என்றார். 

Anticipations from the new govt. - education : என்ன வேண்டும் எங்களுக்கு? பள்ளிக் கல்வித் துறை

இது போன்ற கட்டுரை வர வேண்டும் என எண்ணியதற்கேற்ப வெளிவந்துள்ளது. (அவ்வாறு எழுதி அனுப்பினால் தினமணி வெளியிடுமா என்ற எண்ணம் எனக்கு இருந்தது.)தினமணிக்குப் பாராட்டுகள். ஆனால், அனைவருக்கும் பாகுபாடற்ற கட்டணமில்லாக் கல்வியையும் தமிழ்வழிக் கல்வியையும் வலியுறுத்தவில்லையே! இவைதான் அடிப்படைத் தேவை. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

என்ன வேண்டும் எங்களுக்கு? பள்ளிக் கல்வித் துறை

First Published : 30 Apr 2011 12:00:00 AM IST


வாக்குப் பதிவு முடிந்துவிட்டது. வாக்கு எண்ணிக்கை நடைபெற இன்னும் 14 நாள்கள் இருக்கின்றன. இந்த இடைப்பட்ட காலத்தில், முக்கியமான துறைகளில் முக்கியமான பிரச்னைகள் என்னென்ன, அதற்குத் தீர்வு என்ன, அடுத்து பதவி ஏற்க இருக்கும் அரசிடம் அந்தந்தத் துறைகளிடமிருந்து மக்கள் என்னதான் எதிர்பார்க்கிறார்கள் என்கிற விவரங்களைத் தொகுத்தளித்து, அடுத்த அரசுக்கு சில ஆக்கபூர்வமான யோசனைகளை முன்வைத்தால் என்ன என்று தோன்றியது. அதன் விளைவுதான் இந்தக் கட்டுரைத் தொடர்.  - ஆசிரியர்.  கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 14 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் இருந்து வெளியேறி உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.  ஏழை, நடுத்தர வகுப்பினர் கூடத் தங்கள் பிள்ளைகள் நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் தனியார் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்றே விரும்புகின்றனர். கந்து வட்டிக்கு கடன் வாங்கிக் கூட தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்று பெற்றோர் விரும்பக் காரணம் என்ன?  தமிழக அரசிடம் உங்களின் எதிர்பார்ப்பு என்ன என்ற கேள்வியைக் கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மத்தியில் வைத்ததுமே அவர்கள் அனைவரும் ஒருமித்தக் குரலில் வைத்த கோரிக்கை அரசுப் பள்ளிகளைத் தரம் உயர்த்த வேண்டும் என்பதுதான்.  கடந்த 20 ஆண்டுகளில் புற்றீசல் போல முளைத்துவிட்ட தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் அதிகக் கட்டணத்தை வசூல் செய்துகொண்டிருக்கின்றன. அவர்களுக்கு முக்கிய பிரசார ஆயுதமாகப் பயன்பட்டது அரசுப் பள்ளிகளில் கல்வித் தரம் சிறப்பாக இல்லை என்பதுதான். தரம், தரம் என்ற பெயரில் சேவைத்துறை என்பதிலிருந்து வருமானம் ஈட்டும் துறையாக கல்வித் துறையை கீழே இழுத்துக் கொண்டுவந்துவிட்டனர் தனியார் பள்ளி நிர்வாகத்தின்ர்.  நிதிநிலை அறிக்கையில், பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.10,148 கோடி ஒதுக்கப்பட்டாலும், அரசுப் பள்ளிகளின் நிலை மட்டும் மாறாமல் இருப்பது ஏன் என்ற கேள்விக்கு விடை தெரியவில்லை.  புதிதாக அரசுப் பள்ளிகளைத் தொடங்காமலும், இருக்கும் பள்ளிகளைத் தரம் உயர்த்தாமலும் 5 ஆண்டுகளைக் கடத்திவிட்டது இப்போதைய அரசு.  பள்ளிக் கட்டணம் முறைப்படுத்தும் சட்டம், சமச்சீர் கல்வி முறை ஆகியவற்றை அமல்படுத்தியிருந்தாலும், கல்வித் துறையில் சீர்திருத்தம் செய்ய அவை போதுமான நடவடிக்கைகளாக இல்லை.  பள்ளிக் கல்வித் துறை புத்துயிர்ப்பைப் பெற என்னென்ன நடவடிக்கையை புதிய அரசு மேற்கொள்ளலாம்?  பள்ளிக் கட்டணம் முறைப்படுத்தும் சட்டம்: சென்ற கல்வியாண்டில், நீதிபதி குழு நிர்ணயித்தக் கட்டணத்தை மட்டுமே செலுத்துவோம் எனக் கூறிய பெற்றோர்களின் குழந்தைகளுக்கு பல்வேறு விதமான தொல்லைகள் தரப்பட்டன. பள்ளியை விட்டே வெளியேற்றுவது, வகுப்புகளில் தனியாக அமரச் செய்வது, வகுப்புகளுக்குள்ளே அனுமதிக்க மறுப்பது என ஏராளமான செயல்களைப் பல பள்ளிகள் செய்தன.  ஆனால், இதுவரை ஒரேயொரு பள்ளி மீதுகூட உறுதியான நடவடிக்கை எதையும் அரசோ, அதிகாரிகளோ எடுக்காதது பெற்றோருக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. சட்டத்தை மீறுபவர்களைத் தண்டித்தால்தானே அந்தச் சட்டத்துக்கு மதிப்பிருக்கும்.  எனவே, நீதிபதி குழு நிர்ணயிக்கும் கட்டணத்தை விட அதிகமாக வசூலிக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.  விதிகளை மீறும் பள்ளிகள் மீது யார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து சட்டத்தில் தெளிவு இல்லை. நீதிபதி குழு பரிந்துரை செய்தால்தான் நடவடிக்கை என்று கூறப்பட்டுள்ளது. அந்தக் குழுவிடம் இதுபோன்று வரும் புகார்களைப் பதிவு செய்யவும், விசாரணையும் செய்யவும் தேவையான வசதிகளை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக மாவட்ட அளவில் குழுக்களை ஏற்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்படுகிறது.  நீதிபதி குழு நிர்ணயிக்கும் கட்டணத்தை மட்டுமே பள்ளிகள் வசூலிக்கிறதா என்பதையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.  அரசே அங்கீகரிக்கும் தனியார் பள்ளிகள்: நகர்ப்புற மாணவர்களுக்கு இணையாக கிராமப்புற ஏழை மாணவர்களுக்கும் தரமான மேல்நிலைக் கல்வி வழங்க தமிழக அரசு 2007-ல் ஓர் அரசாணையைப் பிறப்பித்தது. அதில் மாவட்ட அளவில் பத்தாம் வகுப்புத் தேர்வில் முதல் 10 இடங்களைப் பிடிக்கும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு தரமான தனியார், மத்திய, மாநில அரசு பள்ளிகளில் படிப்பதற்கான செலவை அரசே ஏற்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டது.  இதற்காக ஒவ்வொரு மாணவருக்கும் ஆண்டுக்கு ரூ.28 ஆயிரம் ஒதுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.  ஒரு மாணவன் மாவட்ட அளவில் சிறப்பான இடம் பெற்றாலே அந்தப் பள்ளி தரமானதாக இருக்கும் என்றுதானே அர்த்தம். அந்த மாணவனை வேறு அரசுப் பள்ளியிலோ, தனியார் பள்ளியிலோ எதற்குக் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும்? இது அரசே தனியார் பள்ளிகளை அங்கீகரிப்பது போல் இருக்கிறதே என்று கல்வியாளர்கள் வாதிடுகின்றனர். சிறந்த மாணவர்களை ஊக்குவிக்கும் அதே நேரத்தில், அரசுப் பள்ளிகளை தரம் தாழ்த்தும் நடவடிக்கைகளில் அரசே இறங்கக் கூடாது.  கட்டாயக் கல்விச் சட்டம்: அனைவருக்கும் கட்டாயக் கல்விச் சட்டம் நாடு முழுவதும் கடந்த ஆண்டு அமலுக்கு வந்தது. ஆனால், தமிழக அரசு இதுவரை இந்தச் சட்டத்திற்கான விதிகளை உருவாக்கவில்லை.  இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த தலைசிறந்த கல்வியாளர் தலைமையில் கல்வி ஆணையமும் ஏற்படுத்தப்பட வேண்டும்.  பள்ளிகளுக்கு அருகில் வசிக்கும் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இடங்கள் தனியார் பள்ளிகளில் ஒதுக்கப்பட வேண்டும் என்ற விதியை எதிர்க்குமாறு சில தனியார் பள்ளிகள் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன.  பிளஸ் 2 தேர்வு முடிவு தேதி அறிவித்ததை தன்னிச்சையான நடவடிக்கை என்று கூறிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, இந்தப் பள்ளிகளின் சட்ட விரோத நடவடிக்கைகள் குறித்து இதுவரை கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. மத்திய அரசு இயற்றியுள்ள இந்தச் சட்டத்தில் பள்ளிகளில் இருக்க வேண்டிய வசதிகள் குறித்து வரையறுத்து கூறப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளை ஆய்வு செய்து இப்போது என்னென்ன வசதிகள் உள்ளன, முழுமையான வசதிகளை ஏற்படுத்த எவ்வளவு செலவாகும் என்பது குறித்து வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும் என கல்வியாளர்கள் கோருகின்றனர்.  சமச்சீர் கல்வி: இந்தக் கல்வியாண்டு முதல் பத்தாம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி அமலுக்கு வருகிறது. ஆனால், இதுவரை சமச்சீர் கல்வி புத்தகங்கள் வெளிவரவில்லை. அதன் காரணமாக, சமச்சீர் கல்வியை எதிர்த்து தவறான பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  பொதுப் பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு முன்பாக ஆசிரியர்கள், பெற்றோர், பொதுமக்கள் ஆகியோரிடம் விழிப்புணர்வு பிரசாரம் எதையும் அரசு மேற்கொள்ளவில்லை. இதுகுறித்து சரியான புரிதலை ஏற்படுத்த அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஆசிரியர்கள் கோருகின்றனர்.  பொதுப் பாடத்திட்டத்தை அமல்படுத்தும் திட்டத்தில் எந்தக் காரணம் கொண்டும் பின்வாங்காமல் நடைமுறைப்படுத்த வேண்டும். நடைமுறைப்படுத்திக்கொண்டே இதை இன்னமும் செழுமைப்படுத்த வேண்டும்.  பொருளாதாரத்தில் எந்த நிலையில் இருக்கும் குழந்தைகளுக்கும் ஒரே விதமான கல்வி என்பதை மையமாகக் கொண்டு புதிய அரசின் கொள்கைகள் இருக்க வேண்டும் என்று அனைத்துத் தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர். அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்துவது, சமச்சீர் கல்விமுறையை செழுமைப்படுத்துவது, மத்திய அரசு கொண்டுவந்துள்ள கட்டாயக் கல்விச் சட்டத்திற்கான விதிமுறைகளை விரைந்து இயற்றுவது, நீதிபதி குழுவின் கட்டண நிர்ணயத்தை தீவிரமாக அமல்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை புதிய அரசு மேற்கொள்ள வேண்டும். அனைவருக்கும் ஒரே சீரான கல்வி என்ற இலக்கை நோக்கி புதிய அரசு எடுத்து வைக்கும் அடுத்த அடியாக இந்த நடவடிக்கைகள் இருக்கும். 

A.C.Sanmugam about War crimes of singalam: இலங்கையுடனான தூதரக உறவை முறித்துக் கொள்ள வேண்டும்: ஏ.சி.சண்முகம்

பலரும்  கூறும் நலல கருத்து. ஆனால், இந்திய அரசு  தன் சார்பாக நடத்தப்பட்ட  இனப்பபடுகொலைகளுக்கு எவ்வாறு எதிரான நடவடிக்கை எடுக்கும்? எய்தவன் இருக்கஅம்பை நோவானேன்? காங்.அரசை அகற்ற நாடு தழுவிய போராட்டத்தை நடத்துங்கள். கொலைகார அரசு அகன்றால் அனைத்துக் குற்றவாளிகளும் தண்டிக்கப் பெறுவர். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
 
 
இலங்கையுடனான தூதரக உறவை முறித்துக் கொள்ள வேண்டும்: ஏ.சி.சண்முகம்

First Published : 30 Apr 2011 02:50:32 AM IST


சென்னை,ஏப்.29: தமிழின படுகொலையைக் கண்டிக்கும் வகையில் இலங்கையுடனான தூதரக உறவை முறித்துக்கொள்ள வேண்டும் என்று புதிய நீதிக்கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகம் கூறியுள்ளார்.  இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:  இலங்கைத் தமிழர்கள் பிரச்னையில் இதுவரை மெüனம் காத்துவந்த மத்திய அரசு இனியேனும் விழித்திட வேண்டும். உலக அரங்கில் குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்டுள்ள இலங்கையின் அதிபர் ராஜபட்சவின் மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர மத்திய அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும். இந்தத் தமிழின படுகொலையைக் கண்டிக்கும் விதமாக இலங்கை அரசுடனான தூதரக உறவை முறித்துக் கொள்ளவேண்டும். இதுவரை இலங்கைக்குச் செய்துவரும் பொருளாதார உதவிகளையும் நிறுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்

இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: பா.ஜ.க.வினர் கைது

வாழ்க உங்கள் முயற்சி! பரவுக உங்கள் உணர்வு! வெல்க உங்கள் நோக்கம்! குற்றவாளிகள் அனைவரும தண்டிக்கப்படட்டும்!  ஆனால், காங்.ஆட்சி மாறினால்தான் இது கைகூடும் என்பதை எண்ணி ச் செயல்படுக.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: பா.ஜ.க.வினர் கைது
First Published : 30 Apr 2011 02:51:27 AM IST

இலங்கை அதிபர் ராஜபட்சவைக் கண்டித்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகம் எதிரில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கட்சியின் மா
சென்னை, ஏப். 29: போர்க்குற்றம் புரிந்ததாக ஐ.நா. விசாரணைக் குழு குற்றம் சுமத்திய இலங்கை அதிபர் ராஜபட்சவைக் கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிட முயற்சித்த 60-க்கும் மேற்பட்ட பாஜகவினர் போலீஸôரால் கைது செய்யப்பட்டனர்.  இலங்கையில் நடைபெற்ற போரில் அங்கு இனப்படுகொலைகள் நடைபெற்றதாகவும், போர்க்குற்றங்கள் புரிந்ததாகவும் ஐ.நா. விசாரணைக் குழு தனது அறிக்கையில் கூறியுள்ளது. இதனால் இலங்கை அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.  போர்க்குற்றம் புரிந்த இலங்கை அதிபர் ராஜபட்சவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிடப் போவதாக பாஜக இளைஞர் அணி அறிவித்திருந்தது.  இதன்படி, பாஜக இளைஞர் அணி பொதுச்செயலாளர் பாலகணபதி, கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் தமிழிசை சொளந்தர்ராஜன் உள்பட அக்கட்சியினர் சுமார் 60-க்கும் மேற்பட்டோர் இலங்கை தூதரகம் அருகே வெள்ளிக்கிழமை கூடினர். இலங்கை அதிபர் ராஜபட்சவை கண்டித்து அவர்கள் கோஷங்களையும் எழுப்பினர். சிலர் ராஜபட்ச உருவபொம்மையை எரிக்க முயன்றனர். அவர்களை போலீஸôர் தடுத்துவிட்டனர்.  பிறகு இலங்கை துணைத் தூதரகத்தை நோக்கி பேரணியாக அவர்கள் சென்றனர். தூதரகத்தை சுற்றிலும் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த போலீஸôர் அவர்களை தடுத்தனர். இதனால் போலீஸôருக்கும், பாஜகவினருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீஸôரின் பாதுகாப்பையும் மீறி பாஜகவினர் சிலர் தூதரகத்தை நோக்கிச் சென்றனர். இதையடுத்து, போலீஸôர் தமிழிசை சௌந்தர்ராஜன் உள்பட 60-க்கும் மேற்பட்ட பாஜகவினரை கைது செய்தனர். பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.  

வெள்ளி, 29 ஏப்ரல், 2011

dinamani editorial about 49.O. : தலையங்கம்: "ஓ' போட முடியவில்லை!

உள்ளன உள்ளபடி எழுதப்பட்டுள்ள அருமையான தலையங்கம். தேர்தல் ஆணையம் கவனிக்குமா?
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
தலையங்கம்: "ஓ' போட முடியவில்லை!

First Published : 29 Apr 2011 12:26:00 AM IST


சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க விருப்பமில்லை என்பதைத் தெரிவித்து 49 (ஓ) பிரிவைப் பயன்படுத்தி வாக்குப் பதிவு செய்தவர்களின் விவரங்களைப் போலீஸார் சேகரிக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது.வெளிப்படையாக நடத்தப்படும் இந்த வாக்குப்பதிவைச் செய்தவர்களின் பெயர்ப் பட்டியலைச் சாதாரண பூத் ஏஜெண்டுகளே கையில் வைத்திருக்கும்போது, இந்த இடைக்காலத் தடையால் என்ன பயன் நேர்ந்துவிடும்?நியாயமாகப் பார்த்தால், தனிமனித ரகசியத்துக்கான உரிமையில் தலையிட்டதற்காகக் காவல்துறையினர் மீது துறைவாரி நடவடிக்கைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தாலும்கூடத் தவறில்லை. வெறுமனே இடைக்காலத் தடையால், மனுதாரர் குறிப்பிடும் தொந்தரவுகளிலிருந்து 49(ஓ) வாக்காளர்களைக் காப்பாற்றிவிட முடியாது.49(ஓ) விதியைப் பயன்படுத்தியவர்கள் எத்தனை பேர் என்கிற எண்ணிக்கை தொடர்பான தகவலை மட்டுமே தேர்தல் ஆணையம் அறிவிக்க முடியுமே தவிர, இந்த விதியைப் பயன்படுத்தி யாரெல்லாம் வாக்களித்தார்கள் என்று தெரிவிக்கத் தேர்தல் ஆணையம் உள்பட யாருக்கும் உரிமையில்லை என்று சட்டம் சொல்கிறது. ஆனால், இந்த 49(ஓ) விதியைப் பயன்படுத்த விரும்பும் ஒரு வாக்காளருக்கு நேரிடும் இன்னல்கள் என்ன? அவர், வாக்குச் சாவடியில் உள்ள தலைமை அலுவலரை அணுகி தனது எண்ணத்தைத் தெரிவிக்க வேண்டும். இதற்காக 17ஏ என்ற படிவம் தனியாக வைக்கப்பட்டிருக்கும். அதை அவர் எடுத்துப் பூர்த்தி செய்ய வேண்டும். வாக்காளரின் பெயர், அடையாள அட்டை எண் எல்லாவற்றையும் பதிவு செய்து, வாக்காளரின் கையொப்பத்தையும் பெற்றுக்கொள்வார் தலைமை அலுவலர். அதன் பிறகு வாக்குச் சாவடியைவிட்டு அந்த வாக்காளர் வெளியேறலாம்.இந்த நடைமுறைகளுக்குக் குறைந்தபட்சம் பத்து நிமிடங்கள் ஆகும். அங்குள்ள பூத் ஏஜெண்டுகளுக்கு இந்தக் கால அவகாசம் போதுமானது. இந்த வாக்காளர்களின் பெயர்களை தங்கள் கையில் இருக்கும் பட்டியலில் ஒரு சுழி போட்டுக் கொண்டு விடுகிறார்கள்.மறுநாள் அவரது வீட்டுக்குக் குடிநீர் வராவிட்டால், (வேண்டுமென்றே குடிநீர்க் குழாய் துண்டிக்கப்பட்டிருந்தாலும்) அவர் உள்ளாட்சி அலுவலகங்களுக்குச் சென்று முறையிட்டாக வேண்டும். பூத் ஏஜெண்டாக இருந்தவர் நகர் மன்றக் கவுன்சிலராக அல்லது ஒன்றியக் கவுன்சிலராக இருக்கிறார் என்றால், இவரது முறையீட்டை அவர்கள் கண்டுகொள்ளவே மாட்டார்கள். இழுத்தடிப்பார்கள். "கேட்டால், உனக்குத்தான் எவனுமே வேண்டாமே' என்று 49(ஓ) பயன்படுத்தியதை நினைவூட்டுவார்கள். அந்த வாக்காளர் உலகில் மிகப்பெரிய குற்றத்தைச் செய்தவர்போல இந்த ஊழல் அரசியல்வாதிகள் முன்பாகப் பதைப்புடன் நின்றாக வேண்டும்.1961-ம் ஆண்டு முதலாகவே இவ்வாறு யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லாத ஒருவர் 49(ஓ) விதியைப் பயன்படுத்தி படிவம் 17ஏ அளிக்கும் வசதி இருந்து வருகிறது. ஆனால், அதை யாரும் பயன்படுத்தவில்லை. அதற்கு முக்கிய காரணம் அப்போதெல்லாம் வாக்குச் சீட்டு நடைமுறையில் இருந்தது. ஒரு நபர் யாருக்கும் வாக்களிக்க விரும்பாத நிலையில், வாக்குச்சீட்டில் பல இடங்களில் முத்திரையைக் குத்தி அதைச் செல்லாத வோட்டாக மாற்ற முடிந்தது. ஆகையால், பூத் ஏஜெண்ட் உள்பட எல்லோரும் அறிந்துகொள்ளும்படியாக 49 (ஓ) பயன்படுத்தப்படவில்லை.வாக்களிக்க விருப்பமில்லை என்பதைப் பதிவு செய்ய வாக்குப்பதிவு இயந்திரத்திலேயே ஒரு பொத்தான் ஒதுக்கப்படும் என்றால் ஒரு வாக்காளரின் வாக்குப்பதிவு ரகசியமானதாகவே இருக்கும். அவர் யார் முன்பாகவும் அம்பலப்பட்டு, பதில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டிய நிலைமை இருக்காது. வாக்குப்பதிவு இயந்திரத்திலேயே இந்த வசதியை ஏற்படுத்திக் கொடுங்கள் என்று தேர்தல் ஆணையத்துக்கு இது தொடர்பாகப் பலரும் எடுத்துச் சொல்லியும்கூட, தேர்தல் ஆணையம் இந்தக் கோரிக்கையைப் புறக்கணித்துவிட்டது. ஒருவேளை, இவ்வாறு 49(ஓ) பிரிவைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிகமிகக் குறைவு என்ற கருத்தாக இருக்கலாம்.இப்போது நிலைமை மாறிவருகிறது. தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு செய்த 3,67,53,114 பேரில் 24,824 பேர் மட்டுமே 49 (ஓ) பயன்படுத்தி வாக்களித்தவர்கள். இதில் சென்னையில் 3,407 பேரும், கோவையில் 3,061 பேரும் அதிகபட்சமாகப் பதிவு செய்துள்ளனர்.தொகுதி என்ற நிலையில் கூடலூர் பேரவைத் தொகுதியில் அதிகபட்சமாக 787 வாக்குகளும், சிங்காநல்லூர் தொகுதியில் 646 வாக்குகளும் 49(ஓ) பயன்படுத்தி பதிவு செய்யப்பட்டுள்ளன.அரசியல் சூழ்நிலை மாறாத நிலையில் அடுத்துவரும் தேர்தல்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். அதைக் கருத்தில்கொண்டு புதிய விதிமுறைகளையும் தேர்தல் ஆணையம் ஏற்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது.முதலாவதாக, வாக்குப் பதிவு இயந்திரத்திலேயே 49(ஓ) பயன்படுத்த தனி பொத்தான் வசதி அளிக்கப்பட வேண்டும். இரண்டாவதாக, ஒரு தொகுதி அல்லது வார்டு தேர்தலில், பதிவான வாக்குகளில் 30 சதவீதம் 49(ஓ)வாக இருந்தால், அந்தத் தேர்தலை ரத்து செய்யச் சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும்.எதிர்க்கட்சிக்கு வாக்களித்தவர்கூட தனது வாக்கு ரகசியம் காப்பாற்றப்பட்டதற்காக மகிழ்ச்சி கொள்ளும்போது, யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை என்பதைப் பதிவு செய்தவருக்கு மட்டும் இத்தகைய இடையூறுகள் தேவையற்றவை. தேர்ந்தெடுக்க உரிமையுள்ள வாக்காளர்களுக்கு நிராகரிக்கவும் உரிமை உண்டு என்பது நிலைநாட்டப்படாத வரை 49(ஓ) ரகசியத்தை அம்பலப்படுத்தும் விதியாகவே நீடிக்கும்!

Messenger to Mercury: dnamani article: எட்டாத "புதனை' எட்டிப் பிடித்த "மெசஞ்சர்'

தமிழ் வாசகர்கள் புரிந்து கொள்ளும் வகையில் நன்றாக எழுதியுள்ளார். பாராட்டுகள். தூது கலம் பற்றியும் புதன் பற்றியும்  மேலும் அறிய
http://messenger.jhuapl.edu/  என்னும் வலைத்தளத்தினைக் காண்க.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!எட்டாத "புதனை' எட்டிப் பிடித்த "மெசஞ்சர்'

First Published : 29 Apr 2011 12:28:00 AM IST


தன் ஒரு தொல்லை பிடித்த கிரகம். அதை வெறும் கண்ணால் பார்க்க இயலும் என்றாலும், அது எளிதில் தென்படாது. சூரியனுக்கு மிக அருகில் இருப்பதால் புதன் கிரகம் சிலசமயம் கிழக்கு வானில் சூரிய உதயத்துக்கு முன்னர் சிறிது நேரம் தெரியும்; அல்லது மாலையில் சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு சிறிதுநேரம் தெரியும். புதன் கிரகம் ஒருவேளை உங்கள் கண்ணில் தென்பட்டாலும் அது வடிவில் சிறியது என்பதால் மங்கலான சிறிய ஒளிப்புள்ளியாகக் காட்சி அளிக்கும்.எந்த ஊராக இருந்தாலும் அடிவானம் பெரும்பாலும் மேகம் சூழ்ந்ததாக இருக்கும் என்பதால் எப்போதாவதுதான் அடிவானில் புதன் கிரகத்தைக் காண இயலும். ஆகவேதான், "பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது' என்ற பழமொழி தோன்றியது.பிரபல வானவியல் விஞ்ஞானியான கோப்பர்னிக்கஸ் மரணப்படுக்கையில் கிடந்தபோது கடைசிவரை என்னால் புதன் கிரகத்தைப் பார்க்க முடியாமல் போய்விட்டதே என்று வருத்தத்துடன் கூறினாராம்.ஒருவகையில் பார்த்தால் புதன் சீந்தப்படாத கிரகம். குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி வரும் போதெல்லாம் விலாவாரியாகப் பலன்களை வெளியிடும் பத்திரிகைகள் புதன் பெயர்ச்சி பற்றிச் சீந்துவதில்லை. ஜோசியர்களும் சரி, புதன் பெயர்ச்சிப் பலன்கள் பற்றிய புத்தகங்களை வெளியிடுவதில்லை. புதன் கிரகம் மாதாமாதம் ராசி மாறுவதே இதற்குக் காரணம். இது கிடக்கட்டும்.ஆளில்லா விண்கலங்களை அனுப்பி செவ்வாய், வியாழன் முதலான கிரகங்களை ஆராய்ந்துள்ள அமெரிக்க, ரஷிய விஞ்ஞானிகள்கூட புதன் பக்கம் திரும்பியது இல்லை. செவ்வாய் கிரகத்துக்கு இதுவரை பல ஆளில்லா விண்கலங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இப்போதும் ஓரிரு விண்கலங்கள் செவ்வாயைச் சுற்றிச்சுற்றி வந்து கொண்டிருக்கின்றன.வியாழன் கிரகத்தை கலிலியோ விண்கலம் 1995 முதல் 14 ஆண்டுகள் ஆராய்ந்தது. 2004-ம் ஆண்டில் போய்ச் சேர்ந்த காசினி விண்கலம் இன்னமும் சனி கிரகத்தை ஆராய்ந்து கொண்டிருக்கிறது. வெள்ளி (சுக்கிரன்) கிரகமும் நன்கு ஆராயப்பட்டுள்ளது. ஆனால், புதன் கிரகத்தை 1973-ம் ஆண்டில் மாரினர் 10 விண்கலம் எட்டிப்பார்த்ததோடு சரி. அதன் பிறகு புதன் கிரகத்தை நோக்கி விண்கலம் அனுப்பப் பெரிய முயற்சி எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. மற்ற கிரகங்களுக்கு ஆளில்லா விண்கலங்களை அனுப்புவதில் பெரிய பிரச்னை இல்லை. ஆனால், புதன் கிரகத்துக்கு ஒரு விண்கலத்தை அனுப்புவதில் பல பிரச்னைகள் உண்டு. பூமியானது சூரியனிலிருந்து சுமார் 15 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இத்துடன் ஒப்பிட்டால் புதன் கிரகம் சூரியனிலிருந்து சுமார் 6 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சூரிய மண்டலத்திலேயே புதன் கிரகம்தான் சூரியனுக்கு மிக அருகில் உள்ளது. ஆகவே, புதன் கிரகத்தை நோக்கி ஒரு விண்கலம் செலுத்தப்படுமானால் அது சூரியனை நோக்கிச் செல்வதாக இருக்கும்.இதில் இரண்டு பிரச்னைகள் உள்ளன. முதலாவதாக, புதன் கிரகத்தை(சூரியனை) மேலும் மேலும் நெருங்கும்போது விண்கலத்தைக் கடும் வெப்பம் தாக்கும். இரண்டாவது பிரச்னை நாம் அனுப்பும் ஆளில்லா விண்கலத்தின் வேகம் மேலும் மேலும் அதிகரிக்கும். இது திருப்பதி அல்லது ஏற்காடு மலை உச்சியிலிருந்து ஒரு லாரி அல்லது பஸ் கீழே இறங்குவதற்கு ஒப்பானது. புதனை நோக்கிச் செல்கிற விண்கலத்தின் வேகம் அதிகமாக இருந்தால் அதில் என்ன சிக்கல் என்று கேட்கலாம். வேகமாக வருகிற எக்ஸ்பிரஸ் ரயில் வண்டி ரயில் நிலையத்தை நெருங்கும்போது அதன் வேகம் குறைக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால், அது ரயில் நிலைய பிளாட்பாரத்தில் நிற்காமல் வேகமாகப் போய்க் கொண்டிருக்கும்.புதன் கிரகத்தை நெருங்கி புதன் கிரகத்தின் ஈர்ப்புப் பிடியில் சிக்குகிற அளவுக்கு விண்கலத்தின் வேகம் குறைந்தால்தான் விண்கலம் புதன் கிரகத்தைச் சுற்ற ஆரம்பிக்கும். விண்கலத்தின் வேகத்தை எப்படிக் குறைப்பது?ஒரு ராக்கெட் உயரே கிளம்புகையில் நெருப்பும் சூடான வாயுவும் பின்னோக்கிப் பீச்சிடுவதன் விளைவாகவே ராக்கெட் முன்னோக்கி அதாவது உயரே பாய்கிறது. அதே ராக்கெட்டில் (அல்லது விண்கலத்தில்) முன்னோக்கிப் பீச்சிடும் வகையில் ராக்கெட் எஞ்சின் பொருத்தப்பட்டு குறிப்பிட்ட கட்டத்தில் அது முன்னோக்கிப் பீச்சினால் ராக்கெட்டின் வேகம் குறையும்.சந்திரனுக்கு அனுப்பப்பட்ட விண்கலங்கள் அனைத்திலும் இவ்வித ஏற்பாடு உண்டு. அதன் பலனாகத்தான் சந்திரனை நெருங்கும் விண்கலங்களின் வேகம் குறைந்து அந்த விண்கலங்கள் சந்திரனால் ஈர்க்கப்பட்டு சந்திரனைச் சுற்ற முற்பட்டன. புதனுக்கு அனுப்பப்படும் விண்கலத்தில் இவ்வித ஏற்பாடு செய்வது என்றால் நிறைய எரிபொருளை வைத்தாக வேண்டும்.இதன் விளைவாக, ராக்கெட் மற்றும் விண்கலத்தின் எடை கூடும். புதனை ஆராய்வதற்கான எல்லாக் கருவிகளையும் விண்கலத்தில் வைத்து அனுப்ப இயலாது என்ற நிலை ஏற்படும். ஆகவே, புதன் கிரகத்தை ஆராய 2004-ம் ஆண்டு ஆகஸ்டில் மெசஞ்சர் என்னும் சுருக்கமான பெயர் கொண்ட விண்கலம் செலுத்தப்பட்டபோது அதன் வேகத்தைப் படிப்படியாகக் குறைக்க வேறு வழி கையாளப்பட்டது.இத் திட்டப்படி மெசஞ்சர் விண்கலம் சூரியனை ரவுண்டு அடித்துவிட்டு மறு ஆண்டு ஆகஸ்டில் பூமியை நெருங்கியது. அப்போது அதன் வேகம் சற்று மட்டுப்பட்டது. அதாவது பூமியின் ஈர்ப்பு சக்தியானது அந்த விண்கலத்தின் வேகத்தை ஓரளவு குறைத்தது.ஒரு விண்கலம் ஒரு கிரகத்தைக் கடந்து செல்லும்படி செய்ய முடியும். அக் கட்டத்தில் அது அக் கிரகத்தை எந்தப் பக்கமாகக் கடந்து செல்கிறது என்பதைப் பொறுத்து விண்கலத்தின் வேகம் குறையும் அல்லது அதிகரிக்கும். மெசஞ்சர் விண்கலம் பூமியை மாற்றுப் பக்கமாகக் கடந்து சென்றதால் அதன் வேகம் குறைந்தது. பின்னர் மெசஞ்சர் விண்கலம் மேலும் சில தடவை சூரியனைச் சுற்றி விட்டு சுக்கிரன் (வெள்ளி) கிரகத்தை 2006-ம் ஆண்டிலும், பின்னர் 2007-ம் ஆண்டிலும் கடந்து சென்றது.இதன் பலனாக வேகம் மேலும் குறைந்தது. பின்னர், அந்த விண்கலம் சூரியனைச் சிலதடவை சுற்றிவிட்டு புதன் கிரகத்தை மூன்று முறை கடந்து சென்றது. இதற்குள்ளாக அதன் வேகம் நன்கு குறைந்துவிட்டதால் இந்த ஆண்டு மார்ச் 18-ம் தேதி அந்த விண்கலம் புதனின் பிடியில் சிக்கி அக் கிரகத்தைச் சுற்ற ஆரம்பித்தது.அமெரிக்க நாஸா விண்வெளி அமைப்பைச் சேர்ந்த சென் வான் யென் என்ற நிபுணர் தான் மெசஞ்சர் விண்கலம் செல்ல வேண்டிய பாதையை வகுத்துக் கொடுத்தார். இதன் விளைவாக, அந்த விண்கலம் சூரியனை மொத்தம் 15 தடவை சுற்ற வேண்டியதாகி கடைசியில் புதன் கிரகத்தை அடைந்தது.2004-ம் ஆண்டில் விண்ணில் செலுத்தப்பட்ட மெசஞ்சர் விண்கலம் சுமார் ஆறரை ஆண்டுக்காலம் விண்வெளியில் அங்குமிங்குமாக வட்டமடித்து புதனை அடையும்போது அது பயணம் செய்த மொத்த தூரம் சுமார் 790 கோடி கிலோ மீட்டர். இத்துடன் ஒப்பிட்டால் பூமியிலிருந்து புதன் கிரகத்துக்கு உள்ள அதிகபட்ச தூரம் சுமார் 22 கோடி கிலோ மீட்டர். பூமிக்குள் 18 புதன் கிரகங்களைப் போட்டு நிரப்பிவிடலாம். அந்த அளவுக்குப் புதன் கிரகம் சிறியது என்பதால் அதற்கு ஈர்ப்பு சக்தி குறைவு. ஆகவே, மெசஞ்சர் விண்கலத்தைப் புதனின் பிடியில் சிக்க வைப்பதில் மேலும் பிரச்னை இருந்தது.நல்லவேளையாக எல்லாம் திட்டமிட்டபடி நடந்து மெசஞ்சர் விண்கலம் புதன் கிரகத்தைச் சுற்றுகிறது. வருகிற மாதங்களில் மெசஞ்சர் விண்கலம் புதன் கிரகம் பற்றி ஏராளமான தகவல்களையும் படங்களையும் அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இப்போது மெசஞ்சர் விண்கலம் புதன் கிரகத்தை வட்ட வடிவப் பாதையில் சுற்றாமல் நீள் வட்டப் பாதையில் சுற்றுகிறது. அந்த அளவில் அது ஒருசமயம் புதன் கிரகத்தின் மேற்பரப்பிலிருந்து 200 கிலோ மீட்டர் உயரத்திலும் இன்னொரு சமயம் புதன் கிரகத்திலிருந்து 15 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்திலும் அமைந்தவாறு புதன் கிரகத்தைச் சுற்றி வருகிறது.ராஜ சகவாசம் ஆபத்து என்பார்கள். அந்த மாதிரி சூரியனின் பார்வையால் புதன் கிரகத்தில் பகலாக உள்ள பகுதியில் வெப்பம் சுமார் 450 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும். இரவாக உள்ள பகுதியில் கடும் குளிர். மைனஸ் 200 டிகிரி செல்சியஸ்.புதனில் பகலாக உள்ள பகுதியிலிருந்து மேலே கிளம்பும் வெப்பம் மெசஞ்சர் விண்கலத்தைத் தாக்குகிற ஆபத்து உண்டு என்பதால்தான் புதனை மெசஞ்சர் விண்கலம் நீள்வட்டப் பாதையில் சுற்றுகிறது.மெசஞ்சர் விண்கலத்தை சூரியனின் வெப்பமும் புதன் கிரகத்திலிருந்து மேல்நோக்கி வரும் வெப்பமும் தாக்காதபடி ஒருவகையான காப்புக் கேடயம் காப்பாற்றுகிறது. இந்தக் காப்புக் கேடயத்தையும் இதைத் தயாரிப்பதற்கான பொருளையும் உருவாக்குவதற்கு மட்டுமே ஏழு ஆண்டுகள் பிடித்தன.மெசஞ்சர் விண்கலத்தை உருவாக்குவதற்கான திட்டம் வகுக்கப்பட்டு அதைச் செய்து முடிக்கவும் அதன் பாதையை நிர்ணயிக்கவும் தகுந்த உத்திகளை உருவாக்குவதற்கும் மொத்தம் 20 ஆண்டுகள் ஆனது. புதனுக்கு ஒரு விண்கலத்தை அனுப்புவதில் உள்ள விசேஷ பிரச்னைகளே அதற்குக் காரணம். விண்வெளி விஞ்ஞானிகளும் புதனை நீண்ட காலம் சீந்தாததற்கு இதுவே காரணம்.

வியாழன், 28 ஏப்ரல், 2011

புலிகளின் தளபதி இரமேசு சித்திரவதைக்குப் பின் சுட்டுக்கொலை?

இது போன்ற  கொடூரக் கொலைகளுக்குப் பொறுப்பு சிங்கள அரசு மட்டுமன்று; இந்திய அரசும் தமிழக ஆட்சியாளர்களும் அனைத்துக் கட்சிகளும்தான். தங்கள் பெருமையைக் காட்ட பல நேர மணிநேர ஊர்வலத்தையும் கூட்டத்தையும் கூட்டும்  இவர்களால் இனப்படுகொலைநடக்கும் முன்னரே தமிழக மக்களை ஒருங்கிணைத்துப் போராடி இவற்றைத் தடுத்திருக்க முடியுமே! இப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் சட்ட மன்ற உறுப்பினர்க்ளும் அவர்களது ௩ தலைமுறை குடும்பத்தினரும் தேர்தலில் போட்டியிடவும் அரசின் பதவிகளை  வகிக்கவும் தடை விதிக்க வேண்டும். உடந்தையாயிருந்த அதிகாரிகளின் சொ்த்துகளைப் பறிமுதல் செய்து தண்டிப்பதுடன் அவர்களது  3 தலைமுறையினர் ஆட்சிப் பொறுப்பில்  வருவதற்கும் தடை விதிக்க வேண்டும். சிங்களத் தலைவர்களையும் படைத்தலைவர்களையும் கூட்டுக் கொலையாளிகளாக இருந்த இந்தியத்தலைவர்களையும்
அதிகாரிகளையும் தண்டிக்க வேண்டும்.  கடவுளே நடைப்பிணங்களாக உள்ள எங்களையும் மன்னியுங்கள.! 
வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


புலிகளின் தளபதி ரமேஷ் சித்திரவதைக்குப் பின் சுட்டுக்கொலை?

First Published : 28 Apr 2011 01:13:09 PM IST

Last Updated : 28 Apr 2011 01:54:15 PM IST

கொழும்பு, ஏப்.28:  விடுதலைப்புலிகளின் தளபதி ரமேஷ் சித்திரவதை செய்யப்பட்ட பின்னர் சீருடை அணிந்து சுட்டுக் கொல்லப்பட்ட படம் போர்க்குற்ற ஆதாரப் படங்களில் இடம்பெற்றுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்கள் தெரிவித்துள்ளன.ரமேஷ் ராணுவத்திடம் சரணடைந்த பின்னர் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்படும் வீடியோவும், ராணுவ வாகனம் ஒன்றில் வைத்து விசாரிக்கப்படும் வீடியோவும் முன்னதாக வெளியாகி இருந்தன.எனினும் ரமேஷ் எங்கே என அவரது குடும்பத்தினர் விசாரித்தபோது அவர் குறித்து எதுவும் தெரியாது என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நடேசன், புலித்தேவன் ஆகியோருடன் ரமேஷ் சேர்ந்தே சரணடைந்தார் என்றும் கூறப்பட்டது.இந்த நிலையில் தற்போது வெளியாகி உள்ள போர்க் குற்றப் படங்களில் ரமேஷ் சுட்டுக்கொல்லப்பட்ட படம் இடம்பெற்றுள்ளதாக இணையதளச் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் ரமேஷ் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட பின்னர் கொடூரமான முறையில் அவர் கொல்லப்பட்டுள்ளது அந்த புகைப்படம் மூலம் தெரியவருவதாக அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்

சீன்கள ராணுவ நாயே உன் அழிவு என் கையில்
By ராஜேஷ் trichy
4/28/2011 5:50:00 PM
பாருங்கள் இந்தக் கொடூரத்தை , இத்தாலிக்காரியின் பழிவாங்கும் வெறியால் தீயில் சுட்டு கருக்கப்பட்டு கொல்லப்பட்ட நடேசன் ,புலித்தேவன் படங்கள் வெளிவந்தது ,இப்போது ரமேஷின் சவக்கோலத்தைப் பாருங்கள் ! இங்கு இன்னமும் தி.மு.க . வையும் ,இனத்துரோகி ,ஈழம் கொன்றவனை ,நம்பிக்கை துரோகியை ,தன்குடும்ப மக்களுக்காக எம் தமிழ்க்குலம் கருவறுத்த கயவனை ,கருணாநிதியை ஆதரிப்பவர்களே என்ன செய்யப்போகிறீர்கள் ? இலங்கையில் மட்டுமா ? இங்கும் இவன் குடும்பம் ஒன்று சேர்ந்து வாழ மதுரையில் மூன்று பேரை பலி கொடுத்தார்களே ? கொலைகார ராஜபக்ஷேவை ," பிணவெறியன்" என்றும் , தமிழின துரோகி கருணாநிதியை "பண வெறியன்" என்றும் சீமான் சொல்வதில் என்ன தவறு ?
By பொன்முத்து
4/28/2011 5:30:00 PM
எப்படி ஈவிரக்கமின்றி பிற இயக்கத்தவர்களை இவரும் ஏனைய புலிகளும் சித்திரவதை செய்து அழித்தார்களோ அதே வழியில் தாமும் அழிந்தனர். வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பது முன்னோர் வாக்கு. நந்தன்.
By Nandan
4/28/2011 5:26:00 PM
போர்களின் பொது பின்பற்ற வேண்டிய எந்த ஒரு நடைமுறைகளையும் கொடியவன் ராஜபட்சே பின்பற்றவில்லை.
By venkatesan.k,vaiyapuri
4/28/2011 4:31:00 PM
RAJABHAKSAY AND HIS CRUIAL TEAM HAS TO ANSWER FOR THIS UNHUMAN ACT!
By RANGARAJMANGAL
4/28/2011 3:37:00 PM

சிங்கள ராணுவம், மிருகத்தை விடவும் மோசமாக நடந்துள்ளது. தனது நாட்டின் பிரஜைகளை, ஈவு, இரக்கம் இல்லாமல் கொன்று குவித்துள்ளது. யுத்த நெறிகளை மீறி, விடுதலை புலி தலைவர்களை சித்திரவதை செய்து கொன்றுள்ளனர். இந்த படுபாவ செயல்களுக்கு , இந்தியாவின் பங்கும் உள்ளது தான் வேதனை அளிக்கும் விஷயம். மத்தியில் ஆளும் சோனியா அரசும், தமிழ்நாட்டில் ஆளும் திமுக வும் இதற்கு பதில் சொல்லியாக வேண்டும். தூதரக உறவுகளை துண்டிப்பதோடு, ஐ நா சபைக்கு இந்திய அரசு ஒத்துழைப்பு தர வேண்டும். தமிழினம் அழிந்து போகுமோ என்ற அச்சம் இப்போது வந்திருக்கிறது.
By பி.டி.முருகன் திருச்சி
4/28/2011 3:21:00 PM
ரமேஷை ஓர் இராணுவ வாகனத்தில் வைத்து விசாரிக்கப்படும் வீடியோவை நானும் பார்த்தேன். அவருக்கு ஆங்கிலம் தெரியாததால், அவருக்கு தெரிந்த ஏதோ ஒருசில ஆங்கில வார்த்தைகளை வைத்து பதில் கூறினார். (அந்நிலையிலும்கூட மரண பயம் துளியும் இல்லாதாதுதான் அவரது உண்மையான வீரம்). மொழி தெரியாத ஒருவரை விசாரிக்கும்போது ஒரு மொழி பெயர்ப்பாளரை வைத்து விசாரிக்க வேண்டும் என்ற ஓர் அடிப்படை அறிவு - நாகரீகம் - பண்பு இல்லாதவர்களிடம் நாம் நீதியை எதிர்பார்ப்பது நமது அறிவீனம்.
By Abdul Rahman - Dubai
4/28/2011 1:48:00 PM
ரமேஷை ஓர் இராணுவ வாகனத்தில் வைத்து விசாரிக்கப்படும் வீடியோவை நானும் பார்த்தேன். அவருக்கு ஆங்கிலம் தெரியாததால், அவருக்கு தெரிந்த ஏதோ ஒருசில ஆங்கில வார்த்தைகளை வைத்து பதில் கூறினார். (அந்நிலையிலும்கூட மரண பயம் துளியும் இல்லாதாதுதான் அவரது உண்மையான வீரம்). மொழி தெரியாத ஒருவரை விசாரிக்கும்போது ஒரு மொழி பெயர்ப்பாளரை வைத்து விசாரிக்க வேண்டும் என்ற ஓர் அடிப்படை அறிவு - நாகரீகம் - பண்பு இல்லாதவர்களிடம் நாம் நீதியை எதிர்பார்ப்பது நமது அறிவீனம்.
By Abdul Rahman - Dubai
4/28/2011 1:47:00 PM
ஸ்ரீலங்காவின் அழிவு தமிழனின் சாபத்தால்!
By eerere
4/28/2011 1:39:00 P

views about the change of religion

திரு இலக்குவனார் கூறுவது சாலச்சிறந்த கருத்து. மத மாற்றம் சம நோக்கு சமுதாயத்தைப்படைக்காது. மனமாற்றமே இதனை சாதிக்க முடியும். மனமாற்றம் உடனடியாக ஏற்படாது. அனைவரும் தத்தம் ஆதி மதத்தில் இருப்பதே சிறப்பு. ஜாதி மத பேதமற்ற சமுதாயத்தை உறுவாக்க முனைந்துள்ளதாக கூறும் அரசே ஜாதி மத இன மொழி அடிப்படையில் சலுகைகளை அறிவிப்பது வெறும் ஓட்டு வங்கி அரசியலல்லவா? திரு இலக்குவனார் கூறும் ஈழ இஸ்லாமியர்கள் ஒரு மத மாற்றம் சமுதாயத்தில் ஏற்படுத்தும் சிக்கல்களுக்கு மிகச சிறந்த உதாரணம். அறியாது செய்வது மடமை. அறிந்தே செய்வது கொடுமை. மடமை எது கொடுமை எது என்பதை சிந்தித்து உணர்ந்து செயல்படுவதே மக்களின் கடமை. இரா.நீல.வரதராஜன், புதுச்சேரி
By N.Varadharajan
4/4/2010 5:30:00 AM
mr.Radha krishnan, are you in the foreign country? As though you know nothing about the christian community, you are speaking? Think of the problem that happenned in many places in christian community like Eraiyur, mandai kadu. Please go and ask the people in the villages what is real situation of the christian community. Don't bluff as you wish. Why don't you give equel status among the Hindu society? the people are same but you the politician encouraging to continue. what I say is give the benefit to all the low caste people with out seeing the religion or erradicate all the caste and help the all the poor people. Don't speak partially that only to the Hindu Dalit can be given assistence. Think when you speak. speak the justice.
By augi
4/4/2010 5:23:00 AM
பிற சமயம் மாறுபவர்கள் அந்தப் பழக்க வழக்கங்களைப்பின்பற்றுவதால் காலம் காலமாகப்பின்பற்றி வந்த மண்ணின் பண்பாட்டை உதறுகிறார்கள். (ஈழத்தில் இசுலாமியச் சமயத்தைப்பின்பற்றியதாலேயே தமிழர்களும் இசுலாமியர்களும் என வேறுபடுத்திக் காட்டி நடந்து கொள்வதை மறக்க வேண்டா.) சமய, சாதி வேறுபாடின்றி அனைவருக்கும் எல்லா வாய்ப்பும் கிடைக்க உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை. அதே நேரம் சமயம் மாறுபவர்களுக்குச் சலுகைகள் நீடிப்பது மடமை என உணர வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
4/4/2010 4:39:00 AM
Iam a hindu and I was attracted to Christianity. I Loved a christian girl. Though I was a christian. Her parents ensured my caste is on par then only they agreed for the marriage. Tamil chritians, though they forsake the religion they are not giving up the religion. So descrimnation continues to them even after they convert ...
By ahuja
4/4/2010 3:50:00 AM
+++++++++++++++++++++++++++++++++
[By Ilakkuvanar Thiruvalluvan 4/4/2010 4:39:00 ] (அதே நேரம் சமயம் மாறுபவர்களுக்குச் சலுகைகள் நீடிப்பது மடமை என உணர வேண்டும்). உங்கள் பல நல்ல கருத்துக்களை படித்தவன். பிறப்பின் ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. உலகில் உள்ள எந்த மதத்தையும் எப்போதும் யார் வேண்டுமானாலும் போடலாம். கழற்றலாம். ஒரு மதத்தை ஒருவன் ஏற்று கொள்வதால், அவன் ஜாதி எப்படி மாறுகிறது, அவனுடைய சலுகைகள் ஏன் ரத்து செய்யப்பட வேண்டும் என்று விளக்கினால் புரிந்து கொள்வேன்.
By Kannan
4/4/2010 11:45:00 AM

என்ன ஒரு காமெடி ஆர் ஸ் ஸ் ஜாதியினை ஒழிக்கிறதா பிறகு ஏன் தாழ்த்தப்பட்டவர்களை கோவில் கருவறையில் அனுமதிப்பதில்லை சங்கராச்சரியரும் தழ்த்தப்பட்டவனும் ஒரே தட்டில் சாப்பிடுவார்களா பி ஜெ பி யில் பார்ப்பனரல்லாத எவரும் தலைவனாக முடிவதில்லை. அவரவர்கள் ஆதி மதத்தை பின்பற்றவேன்டும் என்றால் உங்களின் ஆதி மதம் எதுவென்று உன்களுக்கு தெரியுமா, இந்து மதம் என்றால் யாறாவது இந்து என்ற வார்த்தை வேதங்களில் எங்கு உள்ளது என்று காட்ட முடியுமா. சகோதரர் இலக்குவனார் அவர்கள் இந்து மத வெதங்களை படிதால் இஸ்லாத்தைப் பற்றி அறியலாம்.
By salal
4/4/2010 8:27:00 AM


Dinamani editorial about D.M.K.stand on genocide issue: தலையங்கம்: தமிழினத் துரோகிகள்..!

பாராட்டுகள். அனைவருக்கும் தெரிந்த உண்மைகளைத்தான எழுதி உள்ளீர்கள். ஆனாலும் என் செய்வது? மக்கள் கட்சித்தலைமைகளுக்குக் கொத்தடிமைகளாக உள்ளனர். கட்சித் தலைமையோ காங்.கிற்குக் கொத்தடிமையாக நடந்து கொள்கிறது. தி.மு.க.எதிர்க்கட்சியாக இருந்தால்தான் தமிழ்நலக் கட்சியாகச் செயல்படும்.  இல்லாவிட்டால் இந்த நிலைதான்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! /
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

தலையங்கம்: தமிழினத் துரோகிகள்..!

First Published : 28 Apr 2011 01:19:11 AM IST


இலங்கை அரசு திட்டமிட்டு இனப்படுகொலை நடத்தி வருகிறது என்று 2009-ல் எல்லோரும் கூறியதைத்தான் இப்போது ஐக்கிய நாடுகள் குழு அறிக்கை உறுதிப்படுத்தி இருக்கிறது. அப்போது, இந்தியா எப்படி, இந்த இனப்படுகொலை குறித்து எல்லோரும் குரல் எழுப்பியபோதும் அமைதி காத்ததோ, அதே அமைதியை இப்போதும் கையாள்கிறது. இலங்கை அதிபர் ராஜபட்ச ஒரு போர்க் குற்றவாளி என்று தண்டிக்கப்படுவதற்கான அனைத்துக் காரணிகளும் இந்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இலங்கை அரசு இதுபற்றித் துளியும் கவலை கொள்ளவில்லை. மாறாக, முழு அறிக்கையை வெளியிட்டால் இலங்கையில் நடைபெற்றுவரும் தமிழர்களின் இணக்கமான வாழ்க்கைக்கான அரசின் முயற்சிகள் பாதிக்கப்படும் என்று எதிர்ப்புத் தெரிவிக்கிறது.நம் ஒற்றுமையைக் காட்டும் விதமாக மே முதல் தேதி ஐ.நா. அறிக்கைக்கு எதிரான விளக்கம் தருவதாக மே தின ஊர்வலம் அமையட்டும் என்று அறைகூவல் விடுகிறார் அதிபர் ராஜபட்ச. இந்த அளவுக்கு இலங்கை எனும் சிறிய நாட்டுக்குத் தைரியம் இருக்கிறது என்றால் அதற்குக் காரணம் இந்தியா தரும் துணிவும், ஆதரவும்தான் என்றால் மிகையில்லை. துணையோடு அல்லது நெடுவழி போகேல் என்கிறது நீதிநூல். ராஜபட்சவின் வழித்துணை இந்தியா.இலங்கைக்கு எதிராக ஐ.நா. சபையில் ஜெனீவா மாநாட்டில் தீர்மானம் கொண்டுவந்தால் அதை எதிர்ப்பதும், சர்வதேச நிதியத்தில் நிதிபெற்றுத் தருவதும் என எப்போதும் அன்பு காட்டி ஆதரவு தந்துகொண்டிருப்பது இந்தியாதான். இலங்கை நடத்திய தாக்குதல், போர்ப்பயிற்சி, ஆயுத சப்ளை, கண்ணிவெடி அகற்றம் என எல்லாவற்றிலும் இந்திய அரசின் நேரடியான - மறைமுகமான உதவிகள் இருந்துள்ளது என்கிற குற்றச்சாட்டுகள் மறுக்கப்படவே இல்லை.இந்த ஆதரவு தரும் மனவலிமையால், இப்போதும் எங்களை ஐ.நா. ஒரு போர்க் குற்றவாளியாகச் சித்திரிக்குமானால், இந்தியா தடுத்துக் காப்பாற்றும் என்று வெளிப்படையாக அந்நாட்டு உயர் அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள் என்றால், இந்தியா குறித்து அவர்களது மதிப்பீடு என்னவாக இருக்கிறது என்பது வெளிப்படை.ஐ.நா. பாதுகாப்பு சபையில் தாற்காலிக உறுப்பு நாடாக இந்தியா இடம்பெற்றிருக்கிறது. உறுப்பு நாடுகள் கேட்டுக்கொண்டால்தான், இலங்கையில் நடந்த மனிதஉரிமை மீறல் மற்றும் பல்லாயிரம் பேர் கொல்லப்பட்டது தொடர்பாக ராஜபட்ச மீது சர்வதேச விசாரணை நடத்தப்படும் என்கிறார் ஐ.நா. சபை பொதுச் செயலர் பான் கீ மூன். இந்தியாவோ மெüனம் காக்கிறது. இந்திய அரசின் சார்பில் ஐ.நா. குழுவின் அறிக்கை பற்றி அதிகாரப்பூர்வமான கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.தமிழ்நாட்டிலிருந்து எதிர்க்கட்சியான அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா, இலங்கை அதிபர் ராஜபட்சவை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்கிறார். தேமுதிக, பாமக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் என்று காங்கிரஸ் தவிர, ஏனைய கட்சிகள் அனைத்துமே ஐ.நா. குழுவின் அறிக்கையின்மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று குரலெழுப்பி இருக்கின்றன.ஆனால், மத்திய அரசில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் முக்கிய அங்கமாக இருக்கும் தி.மு.க.வின் உயர்நிலைக் குழு கூடியது. விவாதித்தது. தமிழினத்தின்மீது தொடுக்கப்பட்ட மிகப்பெரிய இனப்படுகொலையை எதிர்த்துச் சிலிர்த்தெழ வேண்டிய இயக்கம், தயக்கத்துடன் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றித் தனது கடமையை முடித்துக் கொண்டுவிட்டது.""(ஐ.நா. குழு) விசாரணை இன்னும் அதிகாரப்பூர்வமாக, முழுமையாக வெளியிடப்படவில்லை. நமது இந்திய அரசு இந்த அறிக்கை மீது எப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்கப்போகிறது என்ற விவரமும் வரவில்லை'' என்று அதற்குக் காரணம் கூறியிருக்கிறார் முதல்வர் கருணாநிதி.இலங்கைத் தமிழருக்காக இவர் நடத்திய 2 மணி நேர உண்ணாவிரதத்தை ஜெயலலிதா கபடநாடகம் என்று சொன்னதைத் தமிழருக்கு நினைவூட்டத் தவறாத முதல்வர், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ""இப்போதாகிலும் செயல்படுங்கள்'' என்று நினைவூட்டினாரா என்றால் இல்லை. பிரதமரிடமும் சோனியாவிடம் நினைவூட்டுவதற்குத் தமிழினத்தைப் பாதிக்கும், தமிழனுக்கு இழைக்கப்பட்ட அநீதியைச் சுட்டிக்காட்டும் ஐ.நா. குழு விசாரணையைவிடத் தனது குடும்பத்தினரைப் பாதிக்கக்கூடிய முக்கியமான விசாரணைகள் நடைபெற்று வருவதுகூட அதற்குக் காரணமாக இருக்கலாம்.இந்திய அரசும், தன்னைத் தமிழினத் தலைவர் என்று அழைத்துப் பெருமை தட்டிக்கொள்ளும் முதல்வர் கருணாநிதி கூறுவதைப்போல, இன்னும் அறிக்கை முழுமையாக அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்று சொல்லக்கூடும். அதைவிட ஒருபடி மேலேபோய், போர்க் குற்றங்களில் விடுதலைப் புலிகளும் ஈடுபட்டனர், மக்களைக் கேடயமாகப் பயன்படுத்தினர் என்று ஐ.நா. அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி, நடுநிலை வகிப்பதற்குக் காரணம் தேடக்கூடும்.இந்த வாதங்களை இந்திய அரசு முன்வைக்கும்போது அதை மறுக்கவோ எதிர்க்கவோ துணிவில்லாத கூட்டணிக் கட்சியாக, தமிழகம் இந்தியாவின் ஒரு பகுதிதான் என்றும், தமிழர்களும் இந்தியர்கள்தான் என்றும் தமிழர் நலனைப் பாதுகாப்பதன் மூலம் மட்டுமே இந்தியாவின் ஒற்றுமையைப் பாதுகாக்க முடியும் என்றும் மத்திய அரசுக்கு உணர்த்தும் கட்சியாக இன்றைய தி.மு.க. தலைமை இல்லை என்பதுதான் தமிழினத்துக்கு ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய பின்னடைவு.தமிழர் குரல் தில்லியில் ஒலியிழந்து போனதற்குக் காரணம் தமிழினத்துக்காகக் குரல் கொடுக்க வேண்டியவர்கள் தங்கள் சுயநலத்துக்காகக் கைகட்டி, வாய்பொத்தி, தலைகுனிந்து நிற்பதால்தானே? இலங்கை அதிபர் ராஜபட்ச மீது சர்வதேச விசாரணை வேண்டும் என்று களத்தில் இறங்கிப் போராட வேண்டிய நேரத்தில், இவர்கள் சம்பந்தப்பட்ட வேறு விசாரணை நடந்து கொண்டிருக்கிறதே, இவர்கள் அதைப்பற்றித்தானே கவலைப்படுவார்கள்.இவர்களே குற்றவாளிகளாக இருக்கிறபோது யாரைப் போர்க் குற்றவாளியாக்குவதற்காகப் போராடுவது?தமிழினத் துரோகி ராஜபட்ச அல்ல...

டென்மார்க்கின் அரசவைப் பாடல் குழு இந்தியா வருகை

தமிழ் நாட்டிலிருந்தும் இவ்வாறு உலக நாடுகளுக்கு அனுப்பலாம். ஆனால் அதில் தமிழிசை இருக்காது; தமிழ்க்கலை இருக்காது; தமிழ்ப்பண்பாட்டை  எதிரொலிக்காது. என்றாலும் அப்படி ஒரு காலம் வராமலா போகும்? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! /
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
 
டென்மார்க்கின் அரசவை பாடல் குழு இந்தியா வருகை

First Published : 28 Apr 2011 12:49:00 AM IST


புது தில்லி, ஏப். 27: டென்மார்க்கின் அரசவை பாடல் குழுவினர், முதன் முறையாக இந்தியாவுக்கு வருகை தர உள்ளனர். அங்குள்ள கோபன்ஹென் ராயல் பிரார்த்தனைக்கூடத்தின் புகழ்பெற்ற இப்பாடல் குழுவினர், இந்தியாவின் டென்மார்க் தூதரகத்துடன் இணைந்து, வரும் மே 10-ம் தேதி இந்தியாவில் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளனர். இதற்கு முன்னர் நான் இந்தியாவுக்கு வந்ததில்லை என்றாலும், இங்கு, பாடல் குழு என்பது அதிக அளவில் பிரபலமில்லாத ஒன்று என கேள்விப்பட்டுள்ளேன். இருப்பினும், இந்திய மக்கள் எங்கள் இசையை ரசிப்பார்கள் என நம்புகிறேன் என்கிறார், இந்த இசைக்குழுவின் இயக்குனரும், நடத்துனருமான எபிமுன்க். சைனா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நாடுகளில் நடைபெற்றுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருந்தாலும், இந்தியாவில் உள்ள இசைக்கலைஞர்களுடன் சேர்ந்து நிகழ்ச்சி நடத்துவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது பெரிய விஷயம் என்று குறிப்பிட்ட அவர், இந்தியாவின் இசை மேதைகளான பாலமுரளி கிருஷ்ணா, பண்டிட் ரவிஷங்கர் ஆகியோருடன் சேரும் வாய்ப்பு அமையும் என்றும் தெரிவித்தார். உலகப்புகழ்பெற்ற தாஜ்மஹாலைப் பார்க்க எங்கள் குழுவினர் ஆவலாக உள்ளோம். அந்த காதல் நினைவுச் சின்னம் முன்பாக இசைக்க வேண்டும் என்பது எங்கள் பேராவல். அடுத்த முறை இந்தியா வரும்போது அது நிறைவேறும் என எபிமுன்க் நம்பிக்கை தெரிவித்தார். கடந்த 1924ம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த பாடல்குழு தற்போது பல்வேறு நாடுகளுக்கும் சென்று இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. புகழ்பெற்ற கிராமி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை இந்த பாடல்குழு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பழமையான பாரம்பரியமிக்க பாடல் குழுக்களில் ஐரோப்பிய நாடுகளில் உள்ள பேராலய இசைக்குழுக்களும், இசைப்பள்ளிகளும் முக்கியமானவை. இவற்றில் டென்மார்க், நார்வே, ஸ்வீடன் ஆகிய வடக்கு ஐரோப்பிய பகுதியின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் செயல்பட்டு வரும் பாடல் குழுக்களில் கோபன்ஹென் பேராலய இசைக்குழு முக்கிய ஒன்றாக திகழ்கிறது.

Charge sheet against kanimozhi - D.M.K. stand : கனிமொழி மீது குற்றப்பத்திரிகை: சட்டப்படி நடவடிக்கை: திமுக உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவு

தேசியத் தந்தை வேலுப்பிள்ளை அவர்களின் மறைவிற்கோ தேசிய அன்னை பார்வதி அம்மாள் மறைவிற்கோ இரங்கல் தெரிவித்தால் ஆட்சி இருக்காதோ? 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

கனிமொழி மீது குற்றப்பத்திரிகை: சட்டப்படி நடவடிக்கை: திமுக உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவு

First Published : 28 Apr 2011 02:00:55 AM IST


சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற திமுக உயர் நிலை செயல் திட்டக் குழு கூட்டத்துக்குப் பின் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி, பொதுச் செய
சென்னை, ஏப். 27: 2ஜி அலைக்கற்றை வழக்கில் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், உண்மையை நிலைநாட்ட சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் துணைக் குற்றப்பத்திரிகை தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. அதில் மாநிலங்களவை திமுக உறுப்பினரும் முதல்வர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி மீது கூட்டுசதியாளர் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது. வரும் மே 6-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கனிமொழிக்கு சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது.இந்த நிலையில் 2ஜி அலைக்கற்றை வழக்கு விவகாரம் குறித்து விவாதிக்க திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டம் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் புதன்கிழமை நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:2ஜி அலைக்கற்றை வழங்கியதில் பின்பற்றப்பட்ட நடைமுறையால் அரசுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டது என்ற குற்றச்சாட்டின் மீது சிபிஐ விசாரணை தொடங்கப்பட்டு அது தொடர்பாக தொலைத்தொடர்பு துறை அமைச்சராக இருந்த ஆ.ராசா கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக பல்வேறு நிறுவனங்களின் இயக்குநர்களையும் கைது செய்துள்ள நிலையில் அவற்றில் ஒரு நிறுவனத்திடமிருந்து கலைஞர் தொலைக்காட்சிக்காக ரூ. 200 கோடி கடன் பெறப்பட்டு பின்னர் வட்டியுடன் திரும்பச் செலுத்தியுள்ள விவரத்தை வருமான வரித் துறையிடம் சான்று ஆவணங்களுடன் சமர்ப்பிக்கப்பட்டது. இருப்பினும் கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தின் பங்குதாரரான மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியையும் இயக்குநர் சரத் குமாரையும் இந்த வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த இரண்டாவது குற்றப் பத்திரிகையில் சேர்த்திருக்கும் செய்தி இந்த குழுவை வியப்பில் ஆழ்த்துகிறது.2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான குற்றச்சாட்டுகள் வெளிவரத் தொடங்கியதிலிருந்தே எப்படியாவது திமுக தலைமை மீது பழி சுமத்துவதற்கு கிடைத்த அரிய வாய்ப்பாகக் கருதி, இதை ஒரு அரசியல் பிரச்னையாக்கி மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணியினரிடையே அவநம்பிக்கையை உருவாக்கவும் பிரச்னையைப் பெரிதுபடுத்தி மாறுபாடுகளை வளர்த்து கூட்டணியை உடைக்கும் நோக்கத்துடனும் சில அரசியல் தலைவர்கள் செயல்பட்டு வருகின்றனர். அதுபோல் முதல்வர் கருணாநிதியை அரசியல் தலைமையில் இருந்து வீழ்த்திவிட வேண்டும் என்னும் அபிலாஷை கொண்டு அலையும் பத்திரிகைகளும் இந்தச் செய்தியை மூலதனமாகக் கொண்டு கட்சிக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி, அதைக் கலகலக்கச் செய்யலாம் என்னும் உள்நோக்கத்துடன் பலவகையிலும் செயல்பட்டு வருகின்றன.அப்படிப்பட்ட ஒரு பிரசார மாயைக்கு திமுக இரையாகாது. 2ஜி அலைக்கற்றை வழக்கில் உண்மையை நிலைநாட்ட முடியும் என்று நம்புவதுடன், அதற்குரிய சட்டப்படியான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.இலங்கைப் பிரச்னை:இலங்கைப் போர்க் குற்றங்கள் பற்றி ஐ.நா. குழு பரிந்துரைத்துள்ளவாறு சர்வதேச விசாரணை ஆணையத்தை அமைத்து விசாரணை நடத்த வேண்டும். இந்தக் குற்றங்களுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதற்கு வேண்டிய அனைத்து முயற்சிகளிலும் இந்திய அரசு உடனடியாக ஈடுபட வேண்டும்.மேலும் இது தொடர்பாக தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் தோழமைக் கட்சியினருடன் கலந்து பேசி முடிவு செய்யப்படும்.சாய்பாபாவுக்கு இரங்கல்:வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தும் புட்டபர்த்தி சத்ய சாய்பாபா மறைவுக்கு இரங்கல் தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

thiruma about u.n.o.committee report: ஐ.நா. அறிக்கை குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும்: தொல். திருமாவளவன்

ரியான வேண்டுகோள்- இந்தியம் நடுநிலை நாடாகச் செயல்பட்டால். காங்கிரசு அரசுதான் உலகெங்கும் சிங்களத்திற்கு வால்பிடித்து அலைவதுடன் ஐ.நா.விலும் சிங்களத்திற்கு எதிராக முடிவெடுக்கக் கூடாது என்றும் அறிக்கை குறித்து விவாதிக்கக்கூடாது என்றும் பரப்புரை மேற்கொண்டு தடுப்பு வேலைகளில் ஈடுபட்டு வருகிறதே! தானே குற்றவாளியாக இருக்கும் பொழுது எங்ஙனம் காங். அரசு இதனை ஒப்புக்  கொள்ளும். எனவே, நாடாளுமன்ற  உறுப்பினர்களை ஓரிடத்தில் கூடச் செய்து - போட்டி நாடாளுமன்றம் போல் அமைந்தாலும்  சரிதான் - அங்கே இது குறித்துஉரையாடிக் குற்றவாளிகளைத் தண்டிக்கக் கோர வேண்டும்,. இனப்படுகொலை செய்த காங்.அரசு  மீது நம்பிக்கையில்லாத் தீர்மானமும் கண்டனத் தீர்மானமும்  கொண்டு வந்து ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும். முன்னதாக அனைத்துக் கட்சி உறுப்பினர்களையும் மனித நேய ஆர்வலர்கள சந்தித்து இனப் படுகொலைகள் குறித்த விழிப்புணர்வை  ஏற்படுத்த வேண்டும். காங். அகற்றப்பட்டதும் தமிழ் ஈழ ஏற்புத் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்,. ஆனால், தமிழகக் கட்சிகள் காங்.கிற்கு அடிமையாக இருக்கும் வரை  எதற்குமே வாய்ப்பில்லை என்பதைப் புரிந்து கொண்டு இப்பொழுதாவது திருமாவும் பிறரும் காங்.கிற்கு எதிர்ப்பு நிலையை எடுக்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 
ஐ.நா. அறிக்கை குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும்: தொல். திருமாவளவன்

First Published : 28 Apr 2011 02:36:10 AM IST


சென்னை, ஏப். 27: இலங்கை அரசின் போர்க் குற்றங்கள் குறித்து ஐ.நா. குழு வெளியிட்ட அறிக்கை பற்றி விவாதிப்பதற்காக மத்திய அரசு நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.இது பற்றி அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை ஐ.நா. அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. இலங்கை அரசு ஈவிரக்கமற்ற முறையில் தமிழர்களைக் கொன்றதையும், உலக நாடுகளை ஏமாற்றியதையும், செஞ்சிலுவைச் சங்கம், ஐ.நா. மன்றம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளை அங்கே செயல்பட விடாமல் தடுத்ததையும் ஐ.நா. அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.இந்நிலையில், இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலைகளை விசாரித்து, அதற்கு காரணமான அதிபர் ராஜபட்ச உள்ளிட்டவர்களை தண்டிப்பதற்கு சர்வதேச அளவிலான நடவடிக்கைகள் அவசியம் என்பதையும் ஐ.நா. அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.இந்நிலையில், இந்திய அரசும், இங்குள்ள அரசியல் கட்சிகளும், தமிழ்த் தேசிய அமைப்புகளும் உறுதியாகக் குரல் எழுப்பி, ஈழத் தமிழர்களின் உரிமைகளைக் காப்பாற்றிட முன்வர வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது.பாதுகாப்புக் காரணம் என்று சொல்லி சர்வதேச அரங்குகளில் இலங்கையை இந்தியா ஆதரித்து வருகிறது. இனி அந்த நிலை தொடரக் கூடாது. இலங்கையுடனான வெளியுறவுக் கொள்கையை மறு ஆய்வு செய்ய தமிழக அரசோடும், தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளோடும் மத்திய அரசு கலந்தாலோசிக்க வேண்டும்.எனவே, இந்த அறிக்கை பற்றி விவாதிப்பதற்காக நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

புதன், 27 ஏப்ரல், 2011

இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடை: செயலலிதா வலியுறுத்தல்

நல்ல அறிக்கை. எனினும் காங்.அரசிற்குஅஞ்சி அல்லது இந்தியச் சிக்கலைக் கருத்தில் கொண்டு ஒரே நிலத்தில் இரண்டு  இன மக்களும் சேர்ந்து வாழ வேண்டும் என்ற பொருளில் மக்கள் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பது  தவறாகும். நிழல் நீரும்  இன்னாத இன்னா தமர்நீரும் இன்னாவாம் இன்னாசெயின் (குறள் ௮௮௧) என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர். இன்பம் பயக்கும் நிழலும்  நீரும் நோய் செய்யும் நிலைக்கு மாறினால் தீயனவாகும்.  நமக்கு உதவ வேண்டிய நம்மைச் சேர்ந்தவர்களும் தீமை செய்தால் தீயவரே. மேலும் அவர் உடம்பாடு இலாதவர்  வாழ்க்கை குடங்கருள் பாம்போடு உடன் உறைந்தற்று (குறள் ௮௯௦) என்கிறார். மனப்பொருத்தம் இல்லாதவருடன்  சேர்ந்து வாழ்வது குடிலில் பாம்புடன் வாழ்வது போன்று உயிரை இழக்கச் செய்யும் எனத் தெளிவு படுத்துகிறார். எனவே, உறுதியாகவும் துணிவாகவும் மனித நேயத்துடனும் தமிழர்கள் தாய்நிலத்தில் உரிமையுடன் வாழத் தமிழ்  ஈழத்தை ஏற்க வேண்டும் என அவர் கோர வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! /
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

 
 
இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடை: ஜெயலலிதா வலியுறுத்தல்

First Published : 27 Apr 2011 12:09:30 PM IST

Last Updated : 27 Apr 2011 12:46:49 PM IST

சென்னை, ஏப்.27:  இலங்கையில் உள்ள மக்கள் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதை உறுதி செய்ய அந்நாட்டு அரசை நிர்ப்பந்திக்கும் வகையில் சர்வதேச இயக்கம் ஒன்றைத் தொடங்க இந்தியா முன்னின்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா வலியுறுத்தினார். தேவைப்பட்டால் எதற்கும் அடிபணியாத இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்த வேண்டும் என்றார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: இலங்கை அரசின் பொறுப்புடைமை குறித்த ஐக்கிய நாடுகள் சபை வல்லுநர்கள் குழுவின் அறிக்கை இறுதியாக வெளியிடப்பட்டுள்ளது. “அப்பாவி மக்களுக்கு சேதமின்மை” என்ற கொள்கையின் அடிப்படையில் “மனிதாபிமான மீட்புப் பணி” நடத்தப்பட்டதாக தெரிவிக்கும்  இலங்கை அரசின் வாதத்தினை 214 பக்கங்கள் கொண்ட ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை தவிடுபொடி ஆக்கியுள்ளது. இந்தோனேஷியாவைச் சேர்ந்த மார்சுகி டாருஸ்மேன், அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டீவன் ராட்னர், தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த யாஸ்மின் சூகா ஆகியோர் அடங்கிய மூன்று நபர் குழு 16.9.2010 அன்று தனது பணியை தொடங்கியது. இலங்கை ராணுவத்திற்கும், டுகூகூநு-க்கும் இடையேயான போரின் உச்சகட்ட பகுதியான செப்டம்பர் 2008 முதல் மே 2009 வரையிலான காலத்தையும், அப்போது பல்வேறு திசைகளில் இருந்து வந்த துப்பாக்கிச் சூட்டில் சிக்கிக் கொண்ட பெரும்பாலான அப்பாவி தமிழர்களின் நிலைமையையும் இந்தக் குழு தன்னுடைய ஆழ்ந்த கவனத்தில் எடுத்துக் கொண்டது.  குண்டு மழை பொழிவிலிருந்து தமிழர்கள் தங்களை காத்துக் கொள்வதற்காக இலங்கை அரசால் அறிவிக்கப்பட்ட “குண்டு மழைக்கு விலக்களிக்கப்பட்ட பகுதி” மற்றும் மருத்துவமனைகள் ஆகியவற்றின் மீதே இலங்கை அரசின் ராணுவ படைகள் குண்டு மழை பொழிந்ததை நம்பிக்கையூட்டும் ஆதாரங்களுடன் மூன்று நபர் வல்லுநர் குழு கண்டறிந்துள்ளது. மிகப் பெரிய ஆயுதங்களையும், வெடி மருந்துகளையும் பயன்படுத்த மாட்டோம் என்று இலங்கை அரசு அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தாலும், அப்பாவி தமிழ் மக்கள் அதிகமுள்ள பகுதிகளில் திட்டமிட்டு குண்டு மழை பொழிந்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் இறப்பதற்கு காரணமாக இலங்கை ராணுவம் இருந்தது என்று வல்லுநர் குழு முடிவு செய்துள்ளது. மிகப் பெரிய பீரங்கிகளையும், குண்டுகளையும் பயன்படுத்தியதோடு மட்டுமல்லாமல், மனிதாபிமான அடிப்படையில் நிவாரணப் பொருட்கள் மக்களை சென்றடையா வண்ணம் வட இலங்கையில் உள்ள வன்னி பகுதியைச் சுற்றி மிகப் பெரிய தடையை இலங்கை அரசும் அதன் படைகளும் உருவாக்கின.  மயக்க மருந்து அல்லது வலியை இழக்கச் செய்யும் மாத்திரைகள் எதுவும் இல்லாமல், மருத்துவ காரணங்களுக்காக தேக உறுப்புகளை வெட்டி எடுக்கும் மருத்துவ மனைகள் மீதும்; மருத்துவ மனைகள் மீது குண்டுகள் வீசப்பட்டதால் மரங்களுக்கு கீழ் அறுவை சிகிச்சை நடத்தப்பட்ட பகுதிகளிலும் குறி வைத்து இலங்கை ராணுவம் குண்டு மழை பொழிந்துள்ளது. உணவு மற்றும் குடிநீர் பற்றாக்குறை காரணமாக நூற்றுக்கணக்கானவர்கள் மரணமடைந்துள்ளனர்.  உணவுப் பொருட்கள், தண்ணீர் மற்றும் மருந்துப் பொருட்கள் போர்ப் பகுதிக்கு சென்றடையக் கூடாது என்பதற்காகவே, போர்ப் பகுதியில் சிக்கிக் கொண்ட அப்பாவி தமிழ் மக்களின் எண்ணிக்கையை வேண்டுமென்றே இலங்கை அரசு குறைத்து மதிப்பீடு செய்ததாக இந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.  அப்பாவி தமிழர்களை கேடயமாக பயன்படுத்துதல், குழந்தைகளை கட்டாயப்படுத்தி படையில் சேர்த்தல், தன்னுடைய கட்டுப்பாட்டிலிருந்து தப்ப நினைக்கும் அப்பாவி தமிழர்களை கொல்லுதல் மற்றும் கூலி வேலை செய்யுமாறு கட்டயாயப்படுத்துதல் உட்பட பல மனித உரிமை மீறல்களை எல்டிடிஇ நிகழ்த்தியுள்ளதாகவும் இந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.  அதே சமயத்தில், போர் நடந்த கடைசி மாதங்களில், எல்டிடிஇ மிகவும் குன்றிய நிலையில் இருந்ததாகவும், எனவே, எல்டிடிஇயின் மனித உரிமை மீறல்களை காரணம் காட்டி, தன்னுடைய சொந்தக் குடிமக்களான தமிழ் மக்கள் மீது விபரீத அளவு தாக்குதல் நடத்தியதை இலங்கை அரசு நியாயப்படுத்த முடியாது என்றும்,  இது இனப் படுகொலை தான் என்றும்,  நாகரிகம் மற்றும் பண்பாடுள்ள மக்கள் இதை இனப் படுகொலை என்று கருத்தில் கொள்வது தான் பொருத்தமாக இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. இந்த அறிக்கை வெளி வராமல் இருப்பதற்கு தன்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் இலங்கை அரசு மேற்கொண்டது.  ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை வெளியிடப்பட்டால், தற்போது இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சமரச முயற்சிகளுக்கு தடையாக அமைந்துவிடும் என்ற வாதத்தை இலங்கை அதிபர் ராஜபட்ச முன்வைத்தார். ஐ.நா. அறிக்கையை வெளியிடாமல் தடுப்பதற்காக ராஜபட்சவின் சகோதரர் கோத்தபைய ராஜபட்ச அமெரிக்காவிற்கு சென்றதாகவும் தகவல்கள் கூறுகின்றன.  ஐ.நா. அறிக்கை வெளியிடப்படாமல் இருக்க தன்னால் இயன்ற உதவியை செய்யுமாறு ராஜபட்ச பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தொலைபேசி மூலம் பேசியதை இலங்கை அரசு உறுதி செய்ததாக ஊடகங்களிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இத்தனை நிர்ப்பந்தங்களுக்கு மத்தியில் ஐ.நா. குழுவின் அறிக்கை பொதுமக்கள் தெரிந்து கொள்வதற்காக வெளியிடப்பட்டுள்ளது.      இந்தப் பிரச்சினையில் இனிமேலும் இந்தியா மவுன பார்வையாளராக வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்கக் கூடாது.  மொழி, மதம் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தில் ஒற்றுமையுடன் திகழும் இலங்கைத் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களுக்கும் இடையே தொப்புள் கொடி உறவு உள்ளது.  தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக, கடலுக்கு அப்பால் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நமது சகோதர, சகோதரிகள் தங்களது சொந்த நாட்டிலேயே ஆற்றொணா துயரத்திற்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்பது தாங்க முடியாத வேதனையை அளிக்கிறது. இலங்கையில் உள்ள மக்கள் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும்; கண்ணியத்துடன் வாழ அனைவரும் அனுமதிக்கப்பட வேண்டும் என்பதை உறுதி செய்ய இலங்கை அரசை நிர்ப்பந்திக்கும் வகையில், சர்வதேச இயக்கம் ஒன்றை தொடங்க இந்தியா முன்னின்று நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைப்படின், எதற்கும் அடிபணியாத இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்த வேண்டும். இலங்கையில் அடக்குமுறை என்பது யூகத்தின் அடிப்படையில் சொல்லப்படுவது, ஒருதலைபட்சமானது என்ற முந்தைய கூற்றினை தகர்த்தெறிந்து, இலங்கையில் மனித உரிமை மீறல்களும், மிருகத்தனமான அடக்குமுறைகளும் நடைபெற்றதை ஐ.நா. குழு உறுதி செய்துள்ளது.  எனவே, ஐ.நா. குழுவின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, போர்க் குற்றங்கள் மற்றும் இனப் படுகொலையை நிகழ்த்தியதற்காக ராஜபட்ச, அவருடைய ராணுவத் தளபதிகள், மூத்த அமைச்சர்கள் மற்றும் இதில் தொடர்புள்ள இதர நபர்களை சர்வதேச நீதிமன்றத்தின் முன்பு விசாரணைக்காக நிறுத்த  நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையை இந்தியா வலியுறுத்த வேண்டும்.  இதைச் செய்யாமல், தற்போது போல் தொடர்ந்து இந்தியா மவுனம் சாதிக்குமேயானால், கண்ணியத்துடன் வாழ்வதற்குரிய உரிமை உட்பட இலங்கை தமிழர்களுக்கான அனைத்து உரிமைகளையும் தடுப்பதோடு மட்டுமல்லாமல், இலங்கையில் வாழும் தமிழர்களை தன்னுடைய நாட்டிலேயே அகதிகளாக மாற்றும் ராஜபட்சவின் கொள்கைக்கு இந்தியா முழு ஆதரவு அளிக்கிறது என்று தற்போது கூறப்படும் கூற்றிற்கு வலு சேர்ப்பதாக அமைந்துவிடும். இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  தற்போதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்!இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.