சனி, 22 ஜனவரி, 2011

thamizh lawyer kayalvizhi arrested in Ilangai: pazha.nedu and vaiko condemned

தமிழக வழக்கறிஞர் கயல்விழி ஓமந்தையில் கைது

tamil-nadu-map
மனித உரிமைப் போரளியும் சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞருமான கயல்விழி மற்றும் அவரது உதவியாளர் திருமலை ஆகியோர்  சிறிலங்கா  ராணுவத்தால் ஓமந்தையில் வைத்து  கைது செய்யப்பட்டுள்ளார்  . முறையான கடவுச் சீட்டு, சிறிலங்கா  அரசினால் வழங்கப்பட்ட விசா ஆகியவற்றுடன் சென்று இருந்த வேளை இச் சம்பவம் இடம் பெற்று இருக்கிறது . முகாம்களில் வாழும் தமிழர்களின் அவல நிலைமையை அறிந்து  திரும்பும் வழியில் ஓமந்தை பாதுகாப்பு அரணில் வைத்து  சிங்கள இராணுவத்தினால் கைது செய்யப்பட்டனர் . இவர் தமிழறிஞர் பெருஞ்சித்திரனார் அவர்களின் பேத்தியும், தமிழறிஞர் இறைக்குருவனாரின் மகளும் ஆவர்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வழக்கறிஞர் கயல்விழி சிறிலங்காவில் கைது. பழ. நெடுமாறன், வைகோ கண்டனம்

Vaiko Nedumaran
தமிழறிஞர் பெருஞ்சித்திரனார் அவர்களின் பேத்தியும், தமிழறிஞர் இறைக்குருவனாரின் மகளும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான கயல்விழி, தனது உதவியாளர் திருமலையுடன் இலங்கைக்குச் சென்று முகாம்களில் வாழும் தமிழர்களின் அவல நிலைமையை அறிந்து திரும்பும் வழியில் ஓமந்தை எனும் இடத்தில் சிங்கள இராணுவத்தினால் கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள செய்தி அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைகிறோம்.
முறையான கடவுச் சீட்டு, இலங்கை அரசினால் வழங்கப்பட்ட விசா ஆகியவை இருந்தும் அவரை கைது செய்தது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். எனவே இந்த பிரச்னையில் இந்திய அரசு குறிப்பாக பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாகத் தலையிட்டு அவர்களை விடுவித்து தமிழகத்திற்கு கொண்டு வருவதற்கு வேண்டிய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி வலியுறுத்துகிறோம்.
இது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா ஆகியோருக்கு தந்திகளையும் அனுப்பி வைத்திருக்கிறோம். தமிழகமெங்கும் உள்ள பல்வேறு தமிழ் அமைப்புகளின் சார்பிலும் தந்திகள் அனுப்பும்படி வேண்டிக் கொள்கிறோம்.
}

Attempt to eradicate thamizh culture in Ilangai: இலங்கையில் இந்து சமயம், தமிழர் பண்பாட்டை அழிக்க முயற்சி: அர்சுன் சம்பத்

இலங்கையிலும் ஈழத்திலும் உளள்வர்கள் ஆரிய சமயத்தவராக  இருந்தால் இந்நேரம் இந்துசமயத் தலைவர்கள் எனக் கூறப்படுபவர்கள் கிளர்ந்தெழுந்திருப்பார்கள். அவ்வாறில்லாமையால் சிங்கள ஆரியருக்குத் துணை நிற்கிறார்கள்.  இந்து சமயத்தையும் தமிழர் பண்பாட்டையும் காப்பாற்ற வேண்டும் என்பவர்கள் இந்து சமயத்தில் சீர்திருத்தம்  வேண்டிய தந்தை பெரியாரின் சிலையை உடைப்பதைக்  கைவிட வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்


இலங்கையில் இந்து சமயம், தமிழர் பண்பாட்டை அழிக்க முயற்சி: அர்ஜுன் சம்பத்

First Published : 21 Jan 2011 01:01:12 PM IST


திருச்சி, ஜன. 20: இலங்கையில் இந்து சமயத்தையும், தமிழர் பண்பாட்டையும் அழிக்கும் நடவடிக்கைகளில் அந்நாட்டு அரசு ஈடுபட்டு வருகிறது. இது கண்டனத்துக்குரியது என்றார் இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் தலைவர் அர்ஜுன் சம்பத்.  பெரியார் சிலை இடிப்பு வழக்குக்காக, திருச்சி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜரான அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:  "தமிழகத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில், இந்து வாக்கு வங்கி துவக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவைத் தொகுதிக்கு 5 ஆயிரம் இந்து வாக்குகளைச் சேர்க்கத் திட்டமிட்டு, அதற்கான விண்ணப்பங்கள் வீடு, வீடாக வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.  இலங்கையில் இந்து கோயில்களை, புத்த மதக் கோயிலாக மாற்றும் முயற்சியில் அந்த நாட்டு அரசு ஈடுபட்டு வருகிறது. இதற்கு உடன்படாத 3 சிவாசாரியர்கள் இலங்கை ராணுவத்தினரால் அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.  இலங்கை அரசு இந்து சமய, தமிழர் பண்பாட்டை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதை இந்திய அரசு வேடிக்கை பார்த்து வருகிறது.  இந்த பிரச்னை குறித்து சிவசேனை கட்சித் தலைவர் பால்தாக்கரேக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளேன். பா.ஜ. கட்சியினருடன் கலந்து பேசி, மக்களைவையில் இதுகுறித்து பிரச்னை எழுப்பப்படும் என சிவசேனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை யாத்திரை, திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து தருவதில்லை. இதன் காரணமாக சபரிமலையில் ஏற்பட்ட விபத்தில் 100-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இதற்கு சபரிமலை தேவஸ்தானம், கேரள மாநில அரசு ஆகியவைதான் பொறுப்பேற்க வேண்டும். வரும் காலத்தில் பக்தர்களை ஒழுங்குபடுத்த ராணுவத்தைப் பயன்படுத்த வேண்டும்.  பழனியில் தைப்பூசத் திருவிழாவுக்காக 10 லட்சத்துக்கும் அதிமான பக்தர்கள் குவிந்துள்ளனர். இவர்களுக்கு குடிநீர், சுகாதார வசதி போன்றவற்றை தமிழக அரசு செய்து தரவில்லை. திருச்சி திருவானைக்கா அருள்மிகு அகிலாண்டேஸ்வரி ஜம்புகேசுவரர் கோயிலில் மாசி சிவராத்திரிக்குள் பூஜை முறைகளை ஒழுங்குபடுத்தி, யானை வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யவேண்டும். இல்லாவிட்டால், இந்து மக்கள் கட்சி போராட்டம் நடத்தி, யானையை வைத்து பூஜை, வழிபாடுகளை நடத்தும்.  ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயில் வழிபாட்டு முறைகளில் அரசியல் கட்சிகள் தலையிடுவதைக் கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் ஜன. 24-ம் தேதி பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது' என்றார் அவர். பேட்டியின் போது, இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் நா. பால்ராஜ்சாமி, மாநகரச் செயலர் டி. நாகராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

Fine for students who extended pongal leave:பொங்கலுக்கு மேலும் ஒருநாள் விடுப்பு எடுத்த மாணவிகளுக்கு அபராதம்: இந்து முன்னணி கண்டனம்

உடனடியாகக் கல்லூரிக்குப் பெருமளவு தண்டத் தொகை விதித்தும் அதன் சலுகைகளை நிறுத்தியும் நடிவடிக்கை எடுக்க வேண்டும். போக்கி நாளுக்கு விடுமுறை விடப்படுவது நிறுத்தப்பட்டதால் அதனையும் சேர்த்துப் பொங்கல் திருநாளுக்கு 1 வார விடுமுறை அளிக்க வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
 
பொங்கலுக்கு மேலும் ஒருநாள் விடுப்பு எடுத்த மாணவிகளுக்கு அபராதம்: இந்து முன்னணி கண்டனம்


சென்னை, ஜன.21- திருச்சி ஹோலி கிராஸ் பெண்கள் கல்லூரியில் பொங்கல் பண்டிகைக்கு மேலும் ஒரு நாள் விடுமுறை எடுத்த மாணவிகள் 500 பேருக்கு தலா 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதற்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து அதன் மாநில அமைப்பாளர் நா. முருகானந்தம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:திருச்சி ஹோலி கிராஸ் பெண்கள் கல்லூரியில் பொங்கல் பண்டிகைக்கு மேலும் ஒரு நாள் விடுமுறை எடுத்த மாணவிகள் 500 பேருக்கு தலா 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கல்லூரிக்கு உள்ளே அனுமதிக்காமல் மன உளைச்சலும் கொடுத்துள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஜனவரி 24ஆம் தேதி பெற்றோருடன் வந்து மீண்டும் கல்லூரியில் சேர வேண்டும் என்று கூறியதுடன், விடுதி மாணவிகள் 50 பேரையும் வெளியேற்றி, அம்மாணவிகள் பெற்றோருடன் வந்து சந்திக்கும்படியும் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.ஒரு நாள் விடுமுறை எடுத்த மாணவிகளை வகுப்புக்குச் செல்லவிடாமல், ஒருநாள் முழுவதும் அலையவிட்டதுடன் அடுத்த ஒரு வாரம் வகுப்பிற்கு வருவதற்கும் அனுமதிக்காமல் தண்டித்துள்ள கல்லூரி நிர்வாகத்தின் போக்கு விசித்திரமானது. கிறிஸ்தவக் கல்வி நிறுவனங்களில் இந்துக்கள் பாரபட்சமாக நடத்தப்படுவது இது முதல்முறையில்லை. பூ, பொட்டு வைப்பவர்களைத் தண்டிப்பதும், சபரிமலைக்கு மாலை போடும் மாணவர்களைக் கேலி செய்வதும், பள்ளி, கல்லூரிகளில் அனுமதி மறுப்பதும் தொடர்ந்து நடந்து வருவதை எதிர்த்து இந்து முன்னணி போராடி வருகிறது.திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரி செய்துள்ளதை மனிதாபிமானம் உள்ள எவரும் சகித்துக் கொள்ளமாட்டார்கள். கிறிஸ்தவக் கல்வி நிறுவனங்கள் இந்துப் பண்டிகைகளை எந்த அளவு உதாசீனமாக எண்ணுகிறார்கள் என்பதற்கு இது எடுத்துக்காட்டு. பொங்கல், தமிழர்களின் வாழ்வில் இணைந்த பண்டிகை. இந்நிலையில் விடுமுறைக்கு கூடுதலாக ஒரு நாள் விடுப்பு எடுத்ததற்கு மனதளவில் பாதிக்கும் அளவுக்கு மாணவிகளை மன உளைச்சலுக்கு ஆளாக்குவது கண்டிக்கத்தக்கது.இதுபோல மதக் காழ்ப்புணர்ச்சியோடு செயல்படும் கிறிஸ்தவக் கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தைக் கல்வித் துறை உடன் ரத்து செய்து, அரசே அக்கல்லூரிகளை எடுத்து நடத்த வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.மாணவிகளின் மனதிற்கும், கௌரவத்திற்கும் ஊறு விளைவித்த கல்லூரி முதல்வர், ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி கேட்டுக் கொள்கிறது.இவ்வாறு அந்த அறிக்கையில் நா. முருகானந்தம் கூறியுள்ளார்.
கருத்துகள்

அவங்க தப்பு பண்ணீட்டாங்க. தமிழ் புத்தாண்டுக்கு (அப்படின்னு சொல்லி) லீவு எடுத்து இருந்தா கலைஞர் அரசாங்கமே அவங்களுக்கு லீவு கொடுத்து ஊக்கத்தொகையும் கொடுத்து இருப்பாங்க
By கிங் விஸ்வா
1/21/2011 10:15:00 PM
பொங்கல் தமிழர்களின் திருநாள். இதனை கிருஸ்துவர்கள் எதிர்கிறார்கள். ஆகையால் இவர்கள் தமிழர்கள் அல்ல என்பது தெளிவாகிறது.தமிழ் நாட்டில் முதல்வரும் பிற அரசியல் தலைவர்களும் தமிழர்களுக்குத்தான் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள். கிருஷ்த்துவர்களும் முஸ்லீம்களும் பொங்கல் திருநாளை கொண்டாடுவதில்லை. இவர்களை எப்படி தமிழர்கள் என்று கூற முடியும்.
By மு.நாட்ராயன்
1/21/2011 8:13:00 PM
இதைசற்று மாற்றி யோசித்துப்பாருங்கள்.ஒரு ஹிந்து கல்விசாலையில் ,ஒரு கிருஸ்தவ மாணவியோ அல்லது ஒரு முஸ்லிம் மாணவியோ துன்புருத்தப்பட்டிருந்தால் ,ஒரு கட்சி விடாமல் அனைத்து கட்சிகளும் அவர்களுக்காக போராட்டத்தில் இறங்கியிருப்பார்கள் .ஆனால் ஹிந்து மாணவ, மானவிகலேன்றால் நாதியற்றவர்கள்.ஹிந்துக்களுக்கு மதப்பற்று வரும்வரை இப்படித்தான் ஏமாற்றப்படுவார்கள்.
By ரமேஷ்
1/21/2011 6:47:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *


Chenaai lawyer arrested in Ilangai: சென்னை வழக்கறிஞர் இலங்கையில் கைது: தலைமையமைச்சர் தலையிட வைகோ கோரிக்கை

தமிழரல்லாத வேறு யாரும் கைது செய்யப்பட்டால் உடனே  இந்தியத்தூதரகம் தலையிட்டுத் தளையிட்டமையை (கைது செய்தமையை)    விலக்கி விடுதலைக்கு வழி வகுக்கும். ஆனால் தமிழர் என்பதால் எப்படிப் போனால் என்ன ன்று உயி்ர்  காக்கும் நடவடிக்கையைப் புறக்கணிக்கிறது. சிங்களக் கொடுமை பாரறிந்தது. மறித்து மறைத்து வைக்கப்பட்டவரோ பெண்.  எனவே, அவருக்கு   எவ்வகையிலும் ஊறு நேராமல் காக்க உரிய நடவடிக்கை எடுக்க முதல்வர் அவர்களே நேரடியாகத் தலையிடவேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
 
 


சென்னை வழக்கறிஞர் இலங்கையில் கைது: பிரதமர் தலையிட வைகோ கோரிக்கை

First Published : 21 Jan 2011 03:28:52 PM IST

Last Updated : 21 Jan 2011 07:16:36 PM IST

சென்னை, ஜன.21- பாவலர் ஏறு பெருஞ்சித்திரனாரின் பேத்தியும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான கயல்விழியை இலங்கை ராணுவம் கைது செய்துள்ளது. அவரை விடுதலை செய்ய பிரதமர் மன்மோகன் சிங் தலையிட வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.இதுதொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங்குக்கும், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவுக்கும் வைகோ கடிதம் எழுதியுள்ளார்.அக்கடிதத்தில் வைகோ கூறியிருப்பதாவது:பாவலர் ஏறு பெருஞ்சித்திரனார் பேத்தியும், தமிழ் அறிஞர் இறைக்குருவனாரின் மகளுமான கயல்விழி, ஜனவரி 19-ம் தேதி, இலங்கை ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணிபுரிகின்ற கயல்விழி, போரினால் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளைப் பார்ப்பதற்கும், ஈழத்தமிழ் மக்களைச் சந்திப்பதற்காகவும், உரிய ஆவணங்களுடன், இலங்கைக்குச் சென்று இருந்தார். தமது பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பும் வழியில், இலங்கை ராணுவம் அவரைக் கைது செய்துள்ளது. தற்போது, அவர் எங்கு இருக்கிறார் என்ற விவரம் தெரியவில்லை.கயல்விழியின் உயிருக்கு ஆபத்து நேருமோ என்று அஞ்சுகிறோம். எனவே, பிரதமர் உடனடியாகத் தலையிட்டு, கயல்விழியைப் பாதுகாப்பாகத் தமிழகத்துக்குக் கொண்டு வந்து சேர்த்திட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு வைகோ தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்

பால் விலை மட்டுமா ? இப்போது ஜெராக்ஸ் விலையையும் சென்னையில் கூட்டிவிட்டார்கள் . ஒரு காப்பி ரூபாய் 2 க்கு போடுகிறார்கள். கேட்டால் விலைவாசி ஏறிவிட்டது என்று கூறுகிறார்கள்
By thakshinamoorthi
1/21/2011 10:00:00 PM
இந்தியாவிற்கு உள்ளேயே அவர் சொல்லுக்கு மரியாதை இல்லை பாவம் அவரைப்போய் ராஜபக்சேயுடன் மோதச்சொல்கிறார்
By குசும்பன்
1/21/2011 9:55:00 PM
The Lankan Tamils are not like Punjab, Gujarat and UP migrants to other countries. The Tamils were the original people of Sri Lanka since the land was a part of Tamil Nadu in pre historic days. In the later part when Buddhism expanded the people from Eastern India moved to Sri Lanka. In the history we can see, always the native people are marginalised some times there are hunted like what happened in USA, Australia. The later emigrants Buddhist Sinhala is trying to annihilate the original people and they are opposing it. Sri Lanka can do anything but unfortunately there are neighbour to Tamils and hence to answer the neighbours’ question. Let me first tell you guys that we, the Tamil are first Tamil then only Indians. We can not keep quit when your race is getting annihilated. If you support Tamils struggle, we think we are part of India if not we also need to think about India.
By Tamilan
1/21/2011 5:01:00 PM
அங்கு புகைப்படம் எடுக்ககூடாது என்று தெரிந்தும் ஏன் எடுத்தார்கள். பிரச்சினை உண்டு பண்ணவே இவர்கள் இருக்கிறார்கள். செய்வதை செய்துவிட்டு இப்போது பிரதமர் தலை இட வேண்டுமா.
By மனோகரன்
1/21/2011 4:46:00 PM
ஐயா வைகோ அவர்களே, தமிழர்களைப்பற்றி காங்கிரசும் அதன் பிரதமரும் ஒருபோதும் கவலைப்படமாட்டார்கள், உங்களின் ஆதங்கம் புரிகிறது. எங்களைபோன்ற சாமான்யர்கள் என்ன செய்யமுடியும்? தேர்தல் வரட்டும்... தஞ்சை ராஜு
By தஞ்சை ராஜு
1/21/2011 4:41:00 PM
இந்தியாவே! உன் உயிர் நண்பன் சிக்கலில் மாட்டி விடாமல் உடனே காப்பாற்று. இந்தியா இருக்கும் வரை ராஜபக்ஷே தமிழக முதல்வரை கூட கைது செய்வான்.
By kannan
1/21/2011 4:07:00 PM

வெள்ளி, 21 ஜனவரி, 2011

Right to hide information act? : வெளிப்படைத்தன்மை இல்லாத விசாரணை!

பதவி தநததற்குக் கைம்மாறு செய்ய வேண்டாவா? செய்ந்நன்றி உணர்வைப் பாராட்டுவோம்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்


வெளிப்படைத்தன்மை இல்லாத விசாரணை!

First Published : 21 Jan 2011 02:32:57 AM IST


சென்னை,ஜன.20: அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும்  என்பதற்காகவே தகவல் அறியும் உரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், அந்தச் சட்டத்தின் அடிப்படையையே கேள்விக்குள்ளாக்கும் வகையில் மாநிலத் தலைமை தகவல் ஆணையர் கே.எஸ்.ஸ்ரீபதி புதன்கிழமை விசாரணை மேற்கொண்டுள்ளார்.சென்னை ஐ.ஐ.டி.யில் ரூ.300 கோடியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் ஆராய்ச்சி வளாகம் தொடர்பான தகவல்கள் கேட்டு மாநிலத் தகவல் ஆணையத்திடம் முரளிதரன் மேல்முறையீடு செய்துள்ளார்.சென்னை அண்ணாசாலையில் உள்ள மாநிலத் தகவல் ஆணையத்தில் இந்த மனு மீதான விசாரணை புதன்கிழமை பிற்பகல் மாநிலத் தலைமைத் தகவல் ஆணையர் கே.எஸ்.ஸ்ரீபதி அறையில் இந்த விசாரணை நடைபெற்றது.மனுதாரர் முரளிதரன், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் பொதுத் தகவல்  அலுவலர் ஆகியோருடன் "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நிருபர் கங்காதர் எஸ்.பாட்டீலும் உடன் சென்றுள்ளார்.அப்போது கே.எஸ்.ஸ்ரீபதி அவரிடம், "நீங்கள் யார்?' என்று கேட்டுள்ளார். பத்திரிகை நிருபர் என்று கங்காதர் பாட்டீல் தன்னை அறிமுகம் செய்துகொண்டார். மனுதாரர், பொதுத் தகவல் அலுவலர் ஆகியோரைத் தவிர வேறு யாரையும் மேல்முறையீட்டு விசாரணையின்போது அனுமதிக்க முடியாது என்று ஸ்ரீபதி தெரிவித்துள்ளார்.தகவல் உரிமை ஆணையத்தின் அனைத்து விசாரணைகளிலும் பொதுமக்கள் பங்கேற்கலாம், இங்கே என்ன ரகசியம் நடக்கிறது என்று கங்காதர் பாட்டீல் வினவியுள்ளார்.ரகசியம் எதுவுமில்லை என்று கூறிய ஸ்ரீபதி, ஆனால், விசாரணையின்போது உங்களை அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக, விதிகள் ஏதேனும் உள்ளதா என்று கேட்டதற்கு, உங்களுடன் விவாதிக்க விரும்பவில்லை. நீங்கள் வெளியேற வேண்டும் என்று கூறியுள்ளார் ஸ்ரீபதி.அனைவரும் பங்கேற்கலாம்: இந்த சம்பவம் தொடர்பாக மத்தியத் தலைமைத் தகவல் ஆணையர் சைலேஷ் காந்தியிடம் தொடர்புகொண்டு கேட்டபோது,  "தகவல் ஆணையத்தின் அனைத்து விசாரணைகளிலும் பொதுமக்கள் பங்கேற்கலாம். விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தினால் ஒழிய, அங்கிருந்து யாரையும் வெளியேற்ற முடியாது' என்றார்.தகவல் ஆணையத்துக்கு வரும் மேல்முறையீட்டு மனுக்களை விசாரிப்பதற்கு தனியாக அரங்கம் இருந்தும் இந்த மனுவைத் தனது அறையிலேயே ஸ்ரீபதி விசாரித்துள்ளார்.அவரது நியமனத்தின்போது, தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் பலரும் ஆணையத்தின் வெளிப்படைத்தன்மை பாதிக்கப்படும் என்று எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. தகவலறியும் உரிமைச் சட்டத்தின்படி, தகவல் கோரும் மேல்முறையீட்டு மனுக்களை விசாரிப்பது தொடர்பான விதிமுறைகளை பல மாநிலங்கள் வகுத்துள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் இந்த விதிமுறைகள் இதுவரை வகுக்கப்படவில்லை. இதைச் சாதகமாக வைத்துக்கொண்டு, பல சந்தர்ப்பங்களில் தகவல் கோரும் மனுதாரரே இல்லாமல் மேல்முறையீட்டு மனுக்களை விசாரிப்பது, வெளிப்படைத்தன்மை இல்லாத அணுகுமுறை என பல்வேறு நடவடிக்கைகள் நடப்பதாக தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் வேதனையோடு தெரிவிக்கின்றனர்.ஒவ்வொரு குடிமகனுக்கும், அரசு நிர்வாகம் எப்படி நடக்கிறது என்பது தெரிய வேண்டும் என்றும், அந்தத் தகவல்களே ஊழலுக்கு எதிரான ஆயுதமாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதும் இந்தச் சட்டத்தை அறிமுகப்படுத்தியபோது அரசு தெரிவித்தவை.ஆனால், தகவல் ஆணையர்களே வெளிப்படைத்தன்மை இல்லாமல் விசாரணை நடத்துவது அந்த ஆயுதத்தைப் பறிப்பதுபோல் ஆகாதா?


singhala looted : இலங்கை கடற்படை அட்டூழியம்: மீனவர்களிடம் மீன்கள் பறிமுதல்

இன்றைய நிலவரம் என நாளும் சிங்கள அட்டூழியங்கள் குறித்துச் செய்திகள் வந்தாலும அசையா உறுதி கொண்டது இந்தியம். தமிழர்களின் கொலை கொள்ளை குறித்து அதன் மனம் சலனம் அடையாது. நாம் பெற்ற பேறு அது! அதற்குத்தான் வால் பிடிக்கின்றன தமிழகக் கட்சிகள்! கச்சத் தீவைத்தாரை வார்த்த இந்தியா ,  தமிழின அழிப்பைப் பாராட்டி. இராமேசுவரத்தையும்  சிங்களத்திற்குப் பரிசாகக் கொடு்த்தாலும் கொடுக்கும். 
வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இலங்கை கடற்படை அட்டூழியம்: மீனவர்களிடம் மீன்கள் பறிமுதல்

First Published : 21 Jan 2011 01:19:29 AM IST


ராமேசுவரம், ஜன. 20: கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்களிடம் இலங்கை கடற்படையினர் இறால் மீன்களைப் பறித்துக் கொண்டு விரட்டியடித்தனர் என்று வியாழக்கிழமை மீனவர்கள் தெரிவித்தனர்.இது குறித்து பாதிக்கப்பட்ட மீனவர்கள் செய்தியாளர்களிடம் கூறியது:ராமேசுவரத்தில் இருந்து ஜனவரி 19-ம் தேதி சுமார் 400 விசைப் படகுகள் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றன. இந்தப் படகுகள் இந்தியா, இலங்கை கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தன. அப்போது 4 போர் கப்பல்களில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி விரட்டி அனுப்பினர்.பின்னர் தங்கச்சிமடம் செல்வம், ரமேஷ் ஆகியோருக்குச் சொந்தமான விசைப் படகுகளைப் பிடித்த இலங்கை கடற்படையினர் அதில் இருந்த விலை உயர்ந்தஇறால் மீன்களைப் பறித்துக் கொண்டனர். பின்னர் மீனவர்களிடம் இனிமேல் இந்தப் பகுதியில் மீன் பிடிக்க வரக் கூடாது என எச்சரிக்கை விடுத்தனர். இதனால் பலத்த நஷ்டத்துடன் மீனவர்கள் கரையை நோக்கித் திரும்பினர் என அந்த மீனவர்கள் வேதனையுடன் கூறினர்.

jan 25 voters day and thamizh language day: சனவரி 25 தேசிய வாக்காளர் நாள்

சனவரி ௨௫ அன்று மொழிப்போர் நாள் என்பதையும் நாம் மறக்கக்கூடாது. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

வியாழன், 20 ஜனவரி, 2011

Amnesty compels to inquire war criminal rajapakshe

அமெரிக்க வல்லரசு தன் கொலைகளுடன் ஒப்பிட்டு அமைதி காக்காமலும் பெரிய நாடான இந்தயாவின் சிறுபான்மை அரசின் வலியுறுத்தலுக்கு இரையாகாமலும் பேரினப் படுகொலை செய்த போர்க்கொலையாளி இராசபக்வேவையும் உடன் வந்தவர்களையும் கைது செய்து வெளிப்படையான விசாரணை மேற்கொள்ள வேண்டும். மனித நேயம் மிகுந்த  அமெரிக்கர்கள்  தங்கள் நாட்டு அரசை வலியுறுத்தி ஆவன செய்ய வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

ராஜபட்ச மீது போர்க்குற்ற விசாரணை: அம்னஸ்டி வலியுறுத்தல்

First Published : 20 Jan 2011 05:51:55 PM IST

Last Updated : 20 Jan 2011 05:55:25 PM IST

வாஷிங்டன், ஜன.20: இலங்கை அதிபர் மஹிந்த ராஜபட்ச மீது போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணையை துவங்கவேண்டும் என்று அமெரிக்காவை, மனித உரிமைகள் அமைப்பான அம்னஸ்டி இன்டர்நேஷனல் வலியுறுத்தியுள்ளது.இலங்கை அதிபர் திடீர் பயணம்: 10 நாள் பயணமாக அமெரிக்காவுக்கு ராஜபட்ச வந்துள்ள நேரத்தில் இந்த கோரிக்கையை அம்னஸ்டி எழுப்பியுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.இலங்கை அதிபர் ராஜபட்சவின் திடீர் பயணம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இது அதிபரின் தனிப்பட்ட பயணம் என்று கொழும்புவிலுள்ள அதிபரின் அலுவலக தலைமை இயக்குநர் பண்டுல ஜெயசேகரா குறிப்பிட்டுள்ளார்.இந்த நிலையில் வாஷிங்டனில் அம்னஸ்டி அமைப்பின்ர் ஆசிய பசுபிக் பிராந்திய இயக்குநர் சாம் ஜரிபி  கூறியதாவது:இலங்கை பாதுகாப்புப் படை வீரர்களால் ஏராளமான மக்கள் துன்புறுத்தப்பட்டுள்ளனர். இதேபோல புலிகள் அமைப்பினரும் மனித உரிமையை மீறியுள்ளனர். அங்கு ஏராளமான அளவில் மனித உரிமை மீறல் சம்பவங்கள் நடந்துள்ளன.எனவே அதிபர் ராஜபட்ச மீதான போர்க்குற்றம் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க அதிபர் ஒபாமா உத்தரவிடவேண்டும்.போர்க்குற்றங்களில் ஈடுபடும் நாடுகளிடம் விசாரணை நடத்துவதற்கும், அவர்கள் மீது வழக்குத் தொடர்வதற்கும் சர்வதேச சட்டத்தின் கீழ் அமெரிக்கா உரிமை பெற்றுள்ளது. இதன்படி ராஜபட்ச மீதான விசாரணையைத் துவங்கவேண்டும் என்றார் அவர்.
கருத்துகள்

ஆமா இதை நான் வலியுறுத்துகிறேன்.
By கோயில்ராஜ்
1/20/2011 6:39:00 PM
இந்த கொடிய கொலைகாரன் அமெரிக்காவிலேயே கைது செய்யப்பட்டு மரணதண்டனை வழங்கவேண்டும்,
By தஞ்சை ராஜு
1/20/2011 6:08:00 PM

dinamalar cartoon about rajiv g.h.

human rights: மனித உரிமைகள் பிழைக்குமா?

மனித உரிமைகள் பிழைக்குமா?


1950-ம் ஆண்டு, அமெரிக்காவின் அலபாமா நகரில் பொதுப் பேருந்தில் வெள்ளையர்களும் கருப்பர்களும் ஒதுக்கப்பட்ட இடங்களில்தான் அமர்ந்து செல்லவேண்டும் என்பது விதி. ஆம், அந்தக் காலகட்டத்தில் பேருந்துகளில் கருப்பர்கள், வெள்ளையர்களோடு கலந்துசெல்ல முடியாது. கருப்பர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில்தான் அமரவேண்டும். இனப்பாகுபாடுகளின் உச்சகட்டம். ஆனால், ரோஸô பார்க்ஸ் என்ற பெண்மணி துணிந்து ஒரு முடிவுக்கு வந்தார்.1955-ம் ஆண்டு டிசம்பர் 1 அன்று வெள்ளையர்களுக்கான இருக்கையில் அமர்ந்தார். பஸ்ஸில் இருந்த வெள்ளையர்கள் அதிர்ந்தனர். அதில் செல்லமாட்டோம் என்று கீழே இறங்கினர். அந்தப் பெண்மணியின் துணிச்சல் தொடர்ந்தது. அவரது வைராக்கியம், பயந்து ஒதுங்கியிருந்த மற்ற கருப்பர்களுக்கு நாமும் குரல் கொடுக்க வேண்டும் என்ற துணிச்சல் பிறந்தது.  நல்லுள்ளம் படைத்த சில வெள்ளையர்களைச் சிந்திக்க வைத்தது. கேள்வி கேட்கத் துணிந்த  அந்தப் பெண்மணியின் செயலால் போராட்டம் வெடித்தது. கருப்பர்களது சமஉரிமைக்குரல் ஒலித்தது. "ரேஷியல் டிஸ்கிரிமினேஷன்' என்ற இனப் பாகுபாடு தடுப்புச் சட்டம் ஒழிக்கப்பட்டு ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளாக அமெரிக்காவுக்குக் கொண்டுவரப்பட்ட கருப்பர்களுக்கு சட்டப்படி சமஉரிமைகள் வழங்கப்பட்டன. உயிர் உடைமைகளுக்குப் பாதுகாப்பு, சுதந்திரம், சமத்துவம், கண்ணியம் போன்ற அடிப்படை மனித உரிமைகளுக்குப் பாதுகாப்பு தருவது அரசின் பொறுப்பு. வாழ்வாதாரம், உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம், சுகாதாரம், மருத்துவ வசதி, தரமான கல்வி இவையாவும் முக்கியமான உரிமைகளாகக் கருதப்பட்டு மக்களுக்கு அளிக்க வேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் அறிக்கையில் கூறியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம் இந்த ஆண்டு உரிமைகளை நிலைநாட்டப்  போராடும் மனித உரிமை ஆர்வலர்களைப் போற்றும்வகையில் அனுசரிக்கப்பட வேண்டும் என்று அறிவித்துள்ளது.  பாகுபாடுபடுத்துதல், பிரித்துப்பார்த்தல், பகுத்துப்பிரித்தல் எல்லா சமுதாயத்தையும் பீடித்திருக்கக்கூடிய கொடிய நோய். நமது நாட்டிலோ எவ்வளவுதான் ஒழிக்க முயற்சித்தாலும் கிளர்ந்தெழும் நோய். ஒருவரது தரம் பொருட்டல்ல, இனம்தான் முக்கியம். திறமை, ஆளுமை, நேர்மை என்ற "மை'களுக்கல்ல வரவேற்பு.  ஜாதி, இனம், தோலின் நிறம், மனசாட்சியற்ற வளைந்து கொடுப்பதில் திறமை போன்றவைதான் வசியம்வைக்கும் மை. சிந்தனை, சொல், செயல் ஒன்றி இருப்பதில்லை. இந்த முரண்பாடுகளால்தான் வண்மைகள் அழிகின்றன. வன்மைகள் முளைக்கின்றன. 2005-ம் ஆண்டு தகவல் அறியும் சட்டம் நடைமுறைக்கு வந்தது. பெருவாரியாக மக்கள் வரவேற்பைப் பெற்றது. ஆனால், நடைமுறையில்தான் எவ்வளவு சிக்கல்கள். வளர்ந்து வரும் தொழில் நுட்பத்திலும் தகவல் பரிமாற்றப் புரட்சியிலும் ரகசியக் கோப்புகள் என்ற வரைமுறையை நடைமுறைப்படுத்த முடியாது என்பதை விக்கிலீக்ஸ் நிரூபித்துள்ளது. சர்வதேச அளவில் நிலவும் வெளிப்புறமான சம்பிரதாய உரையாடல்களின் போலித்தனத்தையும், இலைமறைவு காய் மறைவாகப் பரிமாறப்படும் ரகசியக் கணிப்புகளையும் வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது. விக்கிலீக்ஸ் பொறுப்பாளர் ஜுலியன் அசாஞ் லண்டனில் காவல் விசாரணையில் உள்ளார். இதனுடைய தாக்கம் நாளடைவில்தான் தெளிவாகும். வெளிப்படையான நிர்வாகமின்றித் தகவல்கள் மறைக்கப்பட்டு மறுக்கப்பட்டால் இத்தகைய தகவல் கசிவுகள் ஏற்படும் என்பது பொறுப்பில் உள்ளவர்கள் கற்க வேண்டிய பாடம்.  ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கழகம் முன்நிறுத்தியுள்ள ஒரு முக்கிய மனித உரிமை பிரச்னை இனம், மதம், சிறுபான்மை, குலம், ஜாதி போன்ற பிரிவுகளின் அடிப்படையில் சமுதாயத்தைப் பிளவுபடுத்தி இழைக்கப்படும் கொடுமைகள். ஒவ்வொரு நாட்டிலும் அங்கு காலம்காலமாக வசித்து வரும் ஆதிஇனத்தவர் பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர். நாட்டின் முன்னேற்றத்தின் பயனளிப்பு அவர்களைச் சென்றடைவதில்லை. பெரிய அளவில் திட்டமிடும்போது ஆதிஇனத்தவர் பாதிக்கப்படுகின்றனர். அவர்களது வாழ்வாதாரம் குலைகிறது. அவர்களைச் சென்றடைய வேண்டிய ஈட்டுத்தொகை உரிய நேரத்தில் கிடைப்பதில்லை. அபகரிக்கப்பட்ட நிலம் அங்கு ஏற்படும் முன்னேற்றத்தால் விலை உயரும். அதன் பயன் அவர்களுக்கில்லை. வருங்கால விலைவாசி உயர்வுக்கான ஈடும் கொடுக்கப்படுவதில்லை. உலக அளவில் 370 மில்லியன், அதாவது 37 கோடி மக்கள் இவ்வாறு கொடுமைக்கு ஆளாகின்றனர். வறுமைக்கோட்டின் கீழ் நிரந்தரமாக வாழ்கின்றனர்.  வேலைதேடி நாடுவிட்டுப் போகும் மக்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டு வருகிறது.  உலக மக்கள்தொகையில் சுமார் 3 சதவிகிதம் அதாவது 20 கோடி மக்கள் தமது சொந்த நாட்டிலிருந்து பிரிந்து வேறுநாடுகளில் பணிபுரிகின்றனர். வேலை வாங்கிக் கொடுப்பதாக ஏமாற்றி மனிதர்களை வைத்து நடத்தப்படும் இழிவணிகம் மிகப்பெரிய மனித உரிமைப் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. தத்தெடுத்த நாடுகளில் அடிப்படை வசதிகூட இல்லாத வாழ்க்கை. அதிக வேலைப்பளு, குறைந்த ஊதியம் என்று அவர்கள் அடிமைகளாக நடத்தப்படுவது வேதனைக்குரியது. அதிலும், இந்தியாவிலிருந்து வேலைதேடி அரபு நாடுகளுக்குச் சென்றவர்களில் தமிழர்கள் அதிகமாக அவதியுறுகிறார்கள் என்பது உண்மை. கேரள  மாநிலத்திலிருந்து சென்றவர்களிடம் காணப்படும் ஒற்றுமை, வரிந்து கட்டிக்கொண்டு விட்டுக்கொடுக்காது உதவும் உணர்வு தமிழர்களிடம் இல்லை என்று கூறப்படுகிறது. சந்தர்ப்பவசத்தால் சட்டத்தின் பிடியில் சிக்கியவர்களுக்கு உரிய சட்ட உதவியும் மனித நேய ஆறுதலும் கிடைப்பதில்லை. இவ்வாறு வெளிநாட்டுக்கு வேலை நிமித்தமாகக் குடிபெயர்பவர்களுக்குப் பாதுகாப்புக் கொடுப்பதற்கு அரசுத்துறை உள்ளது. அதில் உள்ள சிலர் ஊழல் குற்றச்சாட்டுக்கு சமீபத்தில் ஆளாகியிருக்கின்றனர் என்பது ஊழலின் வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டு.  எல்லா நாடுகளிலும் இனம், மொழி, மதம் அடிப்படையில் வேறுபட்ட சமூகத்தினர் உள்ளனர் என்பது உண்மை நிலை. இத்தகைய சிறுபான்மையினரின் நலன் பேணுவது அரசு மற்றும் சமுதாயத்தின் கடமை. சிறுபான்மையினரின் கலாசாரம் வேறுபடும். கடவுள் வழிபாட்டுமுறை தனித்திருக்கும். பேசும் மொழியில் வித்தியாசம் இருக்கலாம். ஆனால்,  அவர்களுக்கு வாழ்வாதாரம், பொருளாதாரம், அரசியலமைப்பின்பால் வழங்கப்பட வேண்டிய உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு மேலோங்கியுள்ளது பற்றி ஐக்கிய நாடுகள் சபை வருத்தம் தெரிவித்துள்ளது. 1992-ம் ஆண்டு மொழி, இனம், மதம் அடிப்படையில் சிறுபான்மையினருக்கு அளிக்கப்பட வேண்டிய உரிமைகள் அடங்கிய பிரகடனத்தை ஐக்கிய நாடுகள் சபை நிறைவேற்றியது. முக்கியமாக சிறுபான்மையினரின் தனித்துவம் பாதுகாக்கப்பட வேண்டியது அரசின் பொறுப்பு.  நமது நாட்டிலேயே மகாராஷ்டிர மாநிலத்தில் பிகாரிலிருந்து வந்து பணி செய்யும் இந்தி பேசும் மக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். கொல்கத்தா நகரில் கொத்தடிமைகளாக கைவண்டி இழுத்து வயிற்றைக் கழுவும் ஒரிசா, ஜார்க்கண்ட், பிகார் மாநில பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்தவரின் வாழ்க்கை கொடுமையானது. சொந்த நாட்டிலேயே உரிமைகள் மறுக்கப்பட்டு, மறைக்கப்பட்டு அதைப்பற்றிய உணர்வுமின்றி ஜீவிக்கும் இத்தகைய சிறுபான்மையினரின் நிலை எப்போது சீராகும் என்பது கேள்விக்குறி.  உலக நாடுகளில் மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கை சுமார் 65 கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது. கஷ்ட ஜீவன அடிமட்டத்துக்கும் ஒரு கீழ்நிலை உண்டு என்றால் அதில் உழல்பவர் மாற்றுத் திறனாளிகள் என்றால் மிகையில்லை.  உலகில் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் பலர். அவர்களில் இருபது சதவிகிதம் மாற்றுத் திறனாளிகள். வளர்ந்து வரும் நாடுகளில் 98 சதவிகித மாற்றுத் திறனாளிகளின் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதில்லை. எழுதப்படிக்கத் தெரிந்த மாற்றுத் திறனாளிகள் மூன்று சதவிகிதம். அதிலும், பெண்கள் ஒரு சதவிகிதம்.  2008-ம் ஆண்டு மே மாதம் மாற்றுத் திறனாளிகளுக்கு அளிக்கப்பட வேண்டிய உரிமைகள், சலுகைகள் அடங்கிய பிரகடனம் ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்டது. அவர்களுக்கு  உரிமைகள் பெற்றுத் தருவதில் இந்தியா உள்பட பல நாடுகளில் முரண்பாடுகள் உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. பணிபுரியும் இடத்தில் சகஊழியர்களே மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி புரிவதில்லை என்பது அவசர உலகில் மனிதநேய வறட்சியின் அடையாளம்.  பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்களைக் களைவேன் என்ற சூளுரை பல கேட்டிருக்கிறோம். வாயுரை நடைமுறைக்கு வருவதில்தான் எவ்வளவு சிக்கல்கள். உத்தரப் பிரதேசம் கான்பூர் நகரில் உள்ள ஒரு பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவி திவ்யா பள்ளி நிர்வாகியின் மகனால் கற்பழிக்கப்பட்டு பின்பு உயிரிழந்தாள். உண்மையான குற்றவாளிக்குப் பதில் பக்கத்து வீட்டு நபர் கைது செய்யப்பட்ட நிலையில் பல போராட்டங்களுக்குப் பிறகு உண்மையான குற்றவாளி கைதானார். சமீபத்தில், அதே மாநிலத்தில் சீலு என்ற சிறுமி கற்பழிக்கப்பட்டாள். ஆனால், அந்தச் சிறுமி மீதே திருட்டு வழக்கு ஜோடிக்கப்பட்டு சிறையிலிடப்பட்டாள். மனித உரிமைகள் ஆர்வலர்கள், ஊடகங்களின் விழிப்புணர்வால் சந்தேகிக்கப்பட்ட மாமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டார். நமது பின்தங்கிய நிலைமையை விளக்க நெஞ்சை உறையவைக்கும் இந்த இரண்டு உதாரணங்களே போதும். 2009, 10 ஆகிய இரண்டு ஆண்டுகளில் 12 மனித உரிமை ஆர்வலர்கள் நமது நாட்டில் சமூக விரோதிகள் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். அவர்கள் செய்த ஒரே குற்றம் தகவல் ஆணையத்திடம் தகவல் அறியும் சட்டத்தின்கீழ் கேள்வி கேட்டது. அவர்கள் கேட்டது இடைஞ்சலான கேள்வி, ஆனால் நியாயமானது.  ஊழலைத் தட்டிக் கேட்டார்கள், அவ்வளவுதான். ஊழலால் அடிப்படை உரிமைகளான உயிர், உடைமை, கண்ணியம், சமத்துவம் பறிபோகின்றன. சமுதாய விழிப்புணர்வுதான் இதற்கு நிரந்தரத் தீர்வு.

Vallalar Ramalinga adigal: சோதியில் கலந்த வள்ளலார்

௧.வள்ளலார் அறச்சாலையை  சிறப்பான முறையில் அரசு அமைக்க வேண்டும். 2.மூட நம்பிக்கைகளுக்கு எதிராகக் குரல் கொடுதததால், வள்ளலாரை எரித்து விட்டு ஒளியில்கலந்ததாகக் கூறப்படுவதையும் குறிப்பிட்டிருக்க வேண்டும். 3. வள்ளலார் புகழை உலகெங்கும் பரப்பவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

ஜோதியில் கலந்த வள்ளலார்
 
 

19-ம் நூற்றாண்டில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் மருதூர் கிராமத்தில் 5-10-1823-ம் ஆண்டு அவதரித்தவர்தான் வள்ளலார் என்றழைக்கப்படும் ராமலிங்க அடிகளார். தகப்பனார் ராமையா பிள்ளை, தாயார் சின்னம்மையார். வடலூர் வள்ளலார் தெய்வநிலையம் என்பது அவர் உருவாக்கிய ஞானசபை, தருமச்சாலை, ஜோதியாய் மறைந்த சித்தி வளாகம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். சத்திய ஞானசபையில் வள்ளலார் 18-7-1872 அன்று ஏற்படுத்திய வழிமுறைகளின்படி ஜோதிவழிபாடு இன்றும் நடைபெறுகிறது. வள்ளலார் தான் கண்ட சுத்த சன்மார்க்கத்துக்குத் தனிப்பெயர், தனிக்கொள்கை, தனிக்கொடி, தனிஇடம் ஏற்படுத்தி அவற்றுக்கு திருமந்திரம், சபை, சாலை, வழிபாட்டு விதிகள், கட்டளைகள், நூல்கள், உரைகள், பாடல்கள் முதலியவற்றை வழங்கியுள்ளார். வள்ளலாரின் கருத்துகள் அனைத்து நாட்டவர்களிடமும் மிகுந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, உலகத்தார் அனைவரையுமே ஒருகுடையின்கீழ் ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமை கொண்டு வாழ வழிவகை செய்கிறது. வள்ளலார் தன் கைப்பட எழுதிய அருட்பெருஞ்சோதி அகவல் மூலப்பிரதி இன்றும் வடலூர் தருமச்சாலையில் உள்ளது. வள்ளலார் சமரச வேத சன்மார்க்க சங்கத்தை 1865-ம் ஆண்டில் நிறுவினார். பின்னர் 1872-ல் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் எனப் பெயர் மாற்றம் செய்தார். சத்திய ஞானசபை கட்டடம் கட்டும்பணி 1871-ல் தொடங்கப்பட்டு 1872-ல் முடிவடைந்துள்ளது. ஞானசபையில் முதல் தைப்பூச விழா 25-1-1872 அன்று நடைபெற்றிருக்கிறது. 18.4.1872 அன்று அருட்பெருஞ்சோதி அகவலை அடிகளார் அருளினார். அவர் ஜாதி வேற்றுமையைக் கண்டித்துப் பேசியதால் அனைவரது பெரும் பாராட்டுக்கு உரியவராக இல்லை. ஆயினும், எல்லா ஜாதியினரும் பெருந்திரளாக அவரைச் சூழ்ந்திருந்தனர். ஜோதிதீபம் தகரக்கண்ணாடியில் தான் காட்ட வேண்டும் என்றும், எண்ணெய் ஊற்றி மட்டுமே தீபம் ஏற்றிக் காட்ட வேண்டும் என்றும், மக்கள் அமைதியாக நின்று சப்தம் செய்யாமல் அருட்பெருஞ்ஜோதி தாரக மந்திரத்தை ஓதவேண்டும் என வள்ளலார் கூறியுள்ளார். வள்ளலார் சிறுவயதில் சென்னைக்கு பெற்றோர்களுடன் சென்றார். தனது 9-வது வயதில் பல தெய்வப் புலவர்கள் எழுதிய பாடல்களை மனப்பாடமாகப் பாடும் ஆற்றல் பெற்று இருந்தார். 12 வயதிலேயே தனது இறைப்பணி வாழ்வைத் தொடங்கினார்.அன்று சென்னையில் பெரும்புலவராக விளங்கிய தொழுவூர் வேலாயுதனார் 1849-ம் ஆண்டு வள்ளலாரின் மாணவரானார். 1850-ம் ஆண்டு தனது உறவினர்களின் வற்புறுத்தலால் தனது சகோதரியின் மகளான தனம் அம்மாளைத் திருமணம் செய்துகொண்டார்.  தனது வாழ்வில் மாமிச உணவை வெறுத்தார். 1858-ம் ஆண்டு வள்ளலார் தனது வாழ்க்கையைத் துறந்து இறைப்பணி யாத்திரையைத் தொடங்கினார். அப்போது சிதம்பரம் வந்தார். அதன்பிறகு வடலூர் அருகே உள்ள கருங்குழி கிராமத்தில் மணியக்காரர் இல்லத்தில் தங்கினார். 1867-ம் ஆண்டு வரை வடலூரில் தர்மசாலையை நிறுவும்வரை கருங்குழி கிராமத்தில் இருந்தார். வள்ளலார் என்ற புரட்சித்துறவி செய்த புதுமைகள் பல. அவர் மடத்தைச் சங்கமாக்கினார். சத்திரத்தை தர்மச்சாலையாக்கினார். கோயிலை ஞானசபையாக்கினார். முதல் திருக்குறள் வகுப்பு, முதல் முதியோர் கல்வி, முதல் மும்மொழிப் பாடசாலை, முதல் ஆன்மிகக் கொடி, முதல் ஜோதி வழிபாடு செய்தவர் ராமலிங்க அடிகளார். மனத்தூய்மையும், தீய குணங்களும் நீங்கிய மனிதன் ஜீவகாருண்யச் செயல்களால் இறை நிலை அடைய வேண்டும் என்பதே வள்ளலாரின் கோட்பாடு. ஜாதிமத பேதமின்றி, ஏற்றத்தாழ்வு இல்லாது, எல்லா உயிர்களிடத்தும் அன்பை முன்னிலைப்படுத்திய ஒரு கொள்கையை அடிப்படையாக வைத்து அதனையே தனது அமைப்பாக அறிவித்தார். ஞானசபையானது ஜாதி மதம் கடந்த உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்ற ஏற்றத்தாழ்வு அற்ற கொலை, புலால் தவிர்த்தவர்கள், மனிதநேயமும், அன்பு உள்ளமும் கொண்டவர்கள் கூடி உருவம் இல்லாத ஜோதி தீப வடிவமாக இருக்கிற இறைவனைத் தரிசிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட இடமாகும்.  வள்ளலார் வடலூரில் ஏற்படுத்திய சத்திய ஞானசபையில் தம் கைப்பட ஒரு திருவிளக்கை ஏற்றி அதற்கு முன்பாக ஐந்தடி உயரமுள்ள ஒரு கண்ணாடியையும் அமைத்தார். கண்ணாடிக்கு முன்னால் 7 திரைகள் உள்ளன.அவை 1. கருப்பு 2. நீலம் 3. பச்சை 4. சிவப்பு 5. பொன்மை 6. வெண்மை 7. கலப்பு நிறம் கொண்டவை. தைப்பூசத் திருவிழாவின்போது 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்படுகிறது.  வள்ளலார் பதிப்பித்த நூல்கள் ஒழிவிலொடுக்கம் (1851) தொண்டைமண்டல சதகம் (1855) சின்மய தீபிகை (1857) மனுமுறை கண்டவாசகம். வள்ளலார் நடத்திய பத்திரிகை சன்மார்க்க விவேக விருத்தி. அன்னதானத்துக்காக அமைக்கப்பட்ட நெருப்பு அணையாமல் எரிவதை வடலூர் தருமச்சாலையில் காணலாம். வருகிறவர்களுக்கெல்லாம் இல்லையென்று கூறாது பசிபோக்கும் தாய்வீடாக வடலூர் தருமச்சாலை இயங்குவதையும் காணலாம். 1867-ம் ஆண்டு மே மாதம் 23-ம் நாள் வடலூரில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலையைத் தொடங்கினார். அன்று  வள்ளலார் திருக்கரத்தால் ஏற்றப்பட்ட அடுப்பு இன்றுவரை தொடர்ந்து எரிந்து வருகிறது குறிப்பிடத்தக்கது. ஞானசபையைச் சுற்றி இரும்புச் சங்கிலி ஒன்று கட்டப்பட்டுள்ளது. 137 ஆண்டுகளாக அந்தச் சங்கிலி மழை, வெயில் என இயற்கைச் சீற்றங்களைச் சந்தித்து வருகிறது. ஆனால், அது துருப்பிடிக்காமல் இன்றுவரை உள்ளது குறிப்பிடத்தக்கது. மேட்டுக்குப்பம் சித்தி வளாகத் திருமாளிகையில் சத்திய ஞான தீப வழிபாட்டுக்கு 1873-ம் ஆண்டு கார்த்திகை மாதம் திருவண்ணாமலை தீபதினத்தன்று உள்ளிருந்த விளக்கைத் திருமாளிகைபுறத்தில் வைத்து தடைபடாது ஆராதியுங்கள் எனக் கூறினார்.  அந்த விளக்கு இன்றுவரை எரிந்து கொண்டிருக்கிறது.  வள்ளலார் இம்மண்ணுலகில் 50 ஆண்டுகள் 3 மாதங்கள் 25 நாள்கள் வாழ்ந்தரரார்.30-1-1874 அன்று தைப்பூசத் திருநாளில் அன்பர்களிடம் இன்று உங்கள் கண்களுக்குத் தெரியாமல் சிறிது நேரத்தில் இறைவன் அருளால் அருட்பெருஞ்சோதியாக விளங்கும் அச்சோதியில் கலந்துவிடப் போகிறேன் என்று கூறி அறைக்குள் நுழைந்து சென்றார். அவர் கேட்டபடி அறை பூட்டப்பட்டது வள்ளலார் ஜோதியில் கலந்தார்.

jaya: never said about cong.alliance: காங்கிரசுடன் கூட்டணி வைப்போம் என்று கூறவில்லை: செயலலிதா

காங்.முடிவு தெரியாமல், இவராக எப்படிக் கூட்டணி வைப்போம் என்று சொல்ல முடியும்? கூட்டணிப் பிச்சை கேட்டார். தரவில்லை அவ்வளவுதான். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்


காங்கிரஸுடன் கூட்டணி வைப்போம் என்று கூறவில்லை: ஜெயலலிதா

First Published : 19 Jan 2011 07:36:47 PM IST


சென்னை, ஜன.19- வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொள்வோம் என்று தான் எப்போதும் கூறவில்லை என அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் கூறியதாவது:2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான பிரச்னை வெடித்தபோது, காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக வெளியேறினால் அதிமுக ஆதரவு தரும் என்று தெரிவித்தது கூட்டணிக்காக அல்ல.பொது நலத்துக்கு எதிராக மத்திய அரசு எந்த நடவடிக்கை எடுத்தாலும் அதை எதிர்த்து குரல் கொடுக்கத் தவறியது இல்லை.வரும் பேரவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக மற்ற அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் கூட்டணி அறிவிப்புகளை வெளியிடுவோம்.திமுக ஆட்சியில் மின் பற்றாக்குறை மற்றும் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு காரணமாக மக்கள் மிகவும் வெறுத்துப் போயுள்ளனர். மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். வரும் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். மாநிலத்தின் பொருளாதாரம் வளம் பெறச் செய்வோம்.இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.
கருத்துகள்

மத்திய, மாநில கூட்டு கொள்ளையர்களை விரட்டி அட்டிக்கும் காலம் மிக அருகில் உள்ளது .உங்கள் பணி இந்த நாட்டுக்கு தேவை
By sekar
1/19/2011 9:06:00 PM
chee chee intha palam pulikkum ithe kathai than amma unakku ini cong unnidam varathu enru therithathum ippadi pesukiraya unakku rendu naakui
By ragu
1/19/2011 9:05:00 PM
வரும் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.
By jasrian
1/19/2011 8:55:00 PM

முழு பூசணிக்காயை எப்படி ஒரே ஒரு அரிசி பருக்கையில் மறைக்கமுடியும் என்பதை இவரிடம் தான் கற்றுக்கொள்ளவேண்டும் இவர் கட்சியை சேர்ந்த ராஜ்யசபா உறுப்பினர் கூட தி பல் இன் தி காங்கிரஸ் கோர்ட் என்று சொன்னது அனைத்து தொலை கட்சி சேனல்களிலும் ஒளிபரப்பாது admk தலைவியும் சரி இவரின் தொண்டர்களும் சரி உண்மையை பேசுவதில்லை என்று முடிவு எடுத்துவிட்டனர் . இவர்கள் என்ன நாடகமாடினாலும் இப்பொழுதே ஆரம்பித்து விட்டனர் மின் அனுவக்கு எந்திரம் சென்னையிலும் மற்ற இடங்களிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது சந்தேகத்துக்கு இடமளிகிறது என்று சொல்ல ஆரம்பித்துவிட்டனர். admk விற்கு மற்றும் அதன் தோழமை கட்சிகளுக்கு தோல்வி பயம் தொற்றுக்கொண்டுவிட்டது மீண்டும் பச்சையம்மா தேர்தல் முடிந்தவுடன், தில்லு முள்ளு செய்து மோசடி செய்து வெற்றி பெற்றனர் என்று ஒரு அறிக்கை விட்டு கொடநாடு சென்று விடுவார். அடுத்த ஆட்சி திமுக தான் இதில் சந்தேகமே வேண்டாம்
By swathi
1/19/2011 8:32:00 PM
நீ என்னா சொன்னாலும் வரும் தேர்தலில் சங்கு தான் உனக்கு
By அறிவு
1/19/2011 7:53:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *