வெள்ளி, 7 மே, 2010

"வெட்டப்பட்ட தீர்மானம்!'நாட்டு மக்களை அல்லற்படுத்தும் விலைவாசிகளின் உயர்வைக் கண்டிக்கும் வகையில், மானிய ஒதுக்கீடுகளுக்கான ஆதரவைப் பெற மத்திய அரசாங்கம் மக்களவையை எதிர்கொள்ளும்போது, வெட்டுத் தீர்மானம் மூலம் தங்களது கண்டனத்தைத் தெரிவிக்க எதிர்க்கட்சிகள் முனைந்தன.மக்களின் அன்றாட வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளான உணவுப் பண்டங்களின் விலைகள் இதற்குமுன் எப்போதும் இல்லாத அளவுக்குக் கடந்த ஓராண்டில், நாளொரு விலையும் பொழுதொரு ஏற்றமுமாக வளர்ந்து கொண்டே தீவிரமடைந்து வந்திருக்கிறது.விலைவாசிகள் நூறு நாள்களில் குறைந்துவிடும், இரண்டு மாதத்தில் பஞ்சம் என்பது பறந்துவிடும், தேவையான அளவுக்கு உணவு தானியங்களின் சேமிப்பு இருக்கிறது என்று மன்மோகன் சிங்கின் அமைச்சர் பெருமான்கள் நிர்வாக மந்திரங்களை ஓதியபடி இருந்தனர். மானிய ஒதுக்கீடுகள் மக்களவையில் ஏப்ரல் 27-ம் நாள் வரப்போகின்றன, அப்பொழுது நாங்கள் தரும் வெட்டுத்தீர்மானங்களின் மூலம் விலைவாசிகளைக் கட்டுப்படுத்தத் தவறிய அரசாங்கத்தைக் கட்டுப்படுத்தி விடுவோம் என்று எதிர்க்கட்சிகள் ஆரவாரத்துடன் அறிவித்தன.அதே நாளன்று அக்கட்சிகள் நாடு தழுவிய கடையடைப்புப் போராட்டத்தையும் நடத்தின. இத்தகைய முயற்சிகள் மூலம் ஏதாவது உருப்படியான பலன் கிடைக்காதா என பாவப்பட்ட மக்களும் மிக்க ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருந்தனர்.ஏப்ரல் 27 வந்தது. பல மாநிலங்களில் கடையடைப்புவேலை நிறுத்தப் போராட்டங்கள் நடைபெற்றன. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் ஏராளமான வெட்டுத்தீர்மானங்களும் தரப்பட்டிருந்தன. கடைசியாக, நடைபெற்ற வாக்கெடுப்பில் எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தந்த வெட்டுத்தீர்மானத்துக்கு ஆதரவாக 192 வாக்குகளும், எதிராக 276 வாக்குகளும் கிடைத்தன. அடுத்து, நாடாளுமன்றத்தின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா தந்த அதேவிதமான வெட்டுத்தீர்மானத்துக்கு ஆதரவாக 201, எதிராக 289 வாக்குகளும் போடப்பட்டன, மற்ற எதிர்க்கட்சிகள் தந்த வெட்டுத்தீர்மானங்களும் ஒட்டுமொத்தமான வாக்கெடுப்புக்கு விடப்பட்டதில் அவைகளும் தோற்கடிக்கப்பட்டன. அதன் பின்னர் மத்திய அரசாங்கம் தந்த மானியங்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, வரிவிதிப்புகள் பற்றிய நிதி மசோதா நிறைவேற்றப்பட்டது. மத்தியக் கருவூலத்திலிருந்து அரசாங்கச் செலவினங்களுக்கான 45 லட்சம் கோடி ரூபாய்க்கான நிதி ஒதுக்கீட்டு மசோதாவும் நிறைவேற்றப்பட்டது. 2010-11-ம் ஆண்டு அரசாங்கத்தின் செலவுகளுக்கான பிரமாண்ட நிதிவசதிகள் அனைத்தும் எத்தகைய விவாதமும் இன்றி நொடிப்பொழுதில் ஒப்புதல் பெற்றுவிட்டன. நம்பிக்கையில்லாத் தீர்மானத்தையொத்த முக்கியத்துவம் வெட்டுத்தீர்மானத்துக்கு இருக்கிறது என்றாலும், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் அனைத்துக் கட்சியினரும் விரிவாகப் பேசுவதற்கு கிடைக்கும் நேரமும், வாய்ப்பும் ஏப்ரல் 27-ல் வெட்டுத்தீர்மானங்களின்போது எதிர்க்கட்சிகளுக்கு கிடைக்கவில்லை. மக்களவையில் தற்பொழுது 34 கட்சிகள் உள்ளன. 545 உறுப்பினர்களையுடைய அந்த அவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 207 உறுப்பினர்களை மட்டுமே பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு தனிப்பட்ட பெரும்பான்மை பலம் இல்லை. ஆயினும் அதன் தலைமையில் அமைந்துள்ள கூட்டணி அமைச்சரவையில் திரிணாமுல் காங்கிரஸ் (19), திமுக (18), தேசியவாத காங்கிரஸ் (9), ஜம்முகாஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி (3), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (2) ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இவ்வாறு கூட்டணியில் இணைந்து உள்ளிருந்து ஆதரவளிக்கும் கட்சிகளின் உறுப்பினர் எண்ணிக்கை 258. அமைச்சரவையில் இடம்பெறாமல் ஆட்சிக்கு மக்களவையில் ஆதரவு தரும் கட்சிகளின் விவரம்: சமாஜ்வாதி கட்சி (22), ராஷ்ட்ரீய ஜனதா தளம் (4), சிக்கிம் ஜனநாயக முன்னணி (1), கேரளா காங்கிரஸ் (1), ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா (1), விடுதலை சிறுத்தைகள் கட்சி (1), ஆக மொத்தம் 30 உறுப்பினர்கள்.எண்ணிக்கையளவில் 288 உறுப்பினர்களின் ஆதரவை மன்மோகன் சிங் அமைச்சரவை பெற்றிருந்தாலும், சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் ஆகிய இருவரும் தொடர்ந்து ஆளுங்கட்சியை எதிர்த்து, பலவகைகளில் இடையூறு விளைவித்து வந்ததுடன், நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்ற முடியாதபடி இதுவரை அல்லற்படுத்தி வந்திருக்கிறார்கள். மேலும், இந்த விலைவாசி உயர்வைக் கண்டிப்பதில் அவர்களும் முனைப்பாக இருந்தார்கள். ஏப்ரல் 27 அன்று விலைவாசி ஏற்றத்தைக் கண்டித்து இவ்விரு தலைவர்களும் கடுமையாகப் பேசிவிட்டு, வெட்டுத்தீர்மானத்துக்கான வாக்கெடுப்புக்கு வருவதற்கு முன்னதாக அவையிலிருந்து வெளியேறிவிட்டனர். இதுவரை வெளியிலிருந்து அவர்கள் ஆதரவு தந்தார்கள், வெட்டுத்தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின்போது அவையை விட்டு வெளியேறியது, ஒருவகையில் வெளியே இருந்து மறைமுக ஆதரவு தந்ததாக இருந்தது போலும். விலைவாசிப் பிரச்னையில் அரசாங்கத்தை எதிர்த்தார்கள், அதேசமயம் அரசாங்கம் விழாதபடி பாதுகாத்தார்கள்.காங்கிரûஸ அதுவரை கடுமையாக எதிர்த்துவந்த உத்தரப்பிரதேச முதல்வர் மாயாவதி திடீரென்று ஓர் அரசியல் மாயாஜால முடிவை எடுத்தார். வெட்டுத்தீர்மானம் வந்த ஏப்ரல் 27 அன்று, 21 மக்களவை உறுப்பினர்களையுடைய தமது பகுஜன் சமாஜ் கட்சி ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவளிக்கும் என்று அறிவித்தார்.அதற்கு முக்கிய காரணம் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறையில், முலாயம் சிங் எடுக்கிற முடிவை எதிர்ப்பதுடன், மத்திய ஆட்சியின் ஆதரவைப் பெற்று தமக்கு வரும் பல இடர்ப்பாடுகளை நீக்கிக்கொள்வதற்கும் ஒரு வழிமுறையாக அது இருந்தது.2008 ஜூலை மாதத்தில் எதிர்க்கட்சிகள் ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொடுத்தபொழுது, எதிர் வரிசையைச் சேர்ந்தவர்களே ஆளுங்கட்சிக்கு ஆள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டதை யாரும் மறந்துவிட முடியாது. அகில இந்திய அளவில் மத்தியக் கூட்டணி ஆட்சியை எதிர்ப்பதைவிட, மாநில அளவில் தமக்குள் இருக்கும் போட்டியில் ஒன்றையொன்று எதிர்ப்பதில்தான் பல எதிர்க்கட்சிகள் முனைப்புடன் இருக்கின்றன. அதனையொட்டி, அக்கட்சித் தலைவர்கள் திகைப்பூட்டும் வகையில் திடீர் முடிவுகளை எடுத்து வருகிறார்கள். ஏப்ரல் 27 வெட்டுத்தீர்மானத்திற்குப் பிறகு எதிர்க்கட்சிகள் முன்னைவிட பலவீனமாக காட்சி அளிக்கின்றன. எதிர்க்கட்சிகளின் பலவீனம் ஆளுங்கட்சியின் பலத்தை அதிகமாக்கியிருக்கிறது. வெட்டுத்தீர்மானத்தால் எதிர்க்கட்சிகளுக்கு ஏற்பட்ட காயங்கள் அதிகமாக இருக்கின்றன. அதற்கும் மேலாக மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் நெறிமுறைக்கு படுகாயம் ஏற்பட்டுவிட்டது. 1969-ல் காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்த பிறகு, இந்திரா அரசாங்கம் சிறுபான்மை பலமுள்ளதாக ஆனது. இருப்பினும் 1971 பொதுத்தேர்தலில், இந்திரா காங்கிரஸ் 342 இடங்களில் வெற்றிபெற்றது. அதற்கு மேலும், இந்தியா செய்த உதவியினால், பாகிஸ்தான் ஆதிக்கத்தில் இருந்த பங்களாதேஷ் விடுதலை அடைந்ததும், இந்திரா காந்தியின் செல்வாக்கு உச்சக்கட்டத்தை அடைந்தது. அதை வைத்து 1975 ஜூன் மாதத்தில் நெருக்கடிக்கால அறிவிப்பைப் போட்டு, அடிப்படை உரிமைகளை ஒடுக்கிடும் ஓர் எதேச்சாதிகாரம் தலைதூக்கியது. அப்பொழுது ஜெயப்பிரகாசர் தலைமையில் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் இணைந்து போராடின.1971 தேர்தலில் கிடைத்த பெரும்பான்மை பலத்தை வைத்து இந்திரா காந்தியின் ஆட்சி அப்பொழுது இருந்தது என்றாலும், கடைசியில் 1977 தேர்தலில் இந்திரா காங்கிஸ் படுதோல்வி அடைந்தது.1984 தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 415 தொகுதிகளில் - அதற்குமுன் ஜவகர்லால் நேரு காலத்தில்கூட கிடைக்காத அளவில்-பெருவெற்றி கிடைத்து, ராஜீவ் காந்தி பிரதமராக ஆனார். கிடைத்த பெரும் வெற்றி அவருக்கு தொடர்ந்து தேர்தல் வெற்றியைத் தரவில்லை. போபர்ஸ் ஊழல் வெளிப்பட்டதும், அதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டுப் போராடின; ஒரு கட்டத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தமது மக்களவை உறுப்பினர் பதவிகளைவிட்டு வெளியேறினார்கள். கடைசியில் 1989 நவம்பர் பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது.ஒரு தேர்தலில் கிடைக்கும் ஆதரவை வைத்து ஒரு கட்சி அல்லது கூட்டணி ஆட்சி அமைத்தாலும், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற அந்த ஆட்சி தவறினால், அடுத்த தேர்தலில் அது படுதோல்வி அடையும் நிலைமை நிச்சயமாக ஏற்படும்.அதற்காக, மறு தேர்தல் வரும்வரை எதிர்க்கட்சிகள் செயலற்று இருந்துவிடக்கூடாது. அரசாங்கம் செய்யும் குறைபாடுகளையும் குற்றங்களையும் நாடாளுமன்றத்தில் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திச் சுட்டிக்காட்டுவதுடன், இடைவிடாத பிரசாரத்தாலும் போராட்டங்களாலும், மக்களின் கவனத்தையும் ஆதரவையும் எதிர்க்கட்சியினர் திரட்டினால், அடுத்த தேர்தலில் ஆளும் மக்கள் விரோத அணியை வீழ்ச்சியடையச் செய்துவிடலாம். 1977-ல், 1989-ல் மக்கள் சக்தியை நம்பிய அரசியலால்தான் மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கையை எளிதில் மாற்றியமைக்க முடிந்தது. வெட்டுத்தீர்மானம் வெற்றுத்தீர்மானமாக ஆனதற்குக் காரணம், அதற்கான ஆதரவை மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கைகளை மட்டும் வைத்துப் பார்க்காமல், நாடாளுமன்றத்துக்கு அப்பாற்பட்டு, வெட்ட வெளியில் இருக்கும் கோடானு கோடி மக்களின் ஆதரவை எதிர்க்கட்சியினர் பெற்றிருக்க வேண்டும்.
கருத்துக்கள்

வெட்டுத் தீர்மானம் வெற்றுத் தீர்மானம் ஆனது குறித்துச் சிறப்பாக விளக்கியுள்ளார். மூத்த மேனாள் நா.ம.உறுப்பினர் என்ற முறையில் வெட்டத் தீர்மானம் என்றால் என்ன அதன் முதன்மை என்ன நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கும் இதற்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமை என்ன என்பதை அடுத்தொரு கட்டுரையில் செழியனார் விளக்கினால் பலருக்கு உதவியாக இருக்கும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/7/2010 2:56:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு செல்லும்: உச்ச நீதிமன்றம்

புது தில்லி, மே 6: நாடாளுன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையிலான ஐந்து பேரடங்கிய பெஞ்ச், இத்தகைய பரபரப்பான தீர்ப்பை வியாழக்கிழமை வழங்கியது. எம்.பி.க்களின் தொகுதி மேம்பாட்டுக்கு ஆண்டு தோறும் ரூ. 2 கோடி ஒதுக்கப்படுகிறது. இந்தத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கு நாடாளுமன்றத்துக்கு முழு அதிகாரம் உள்ளதும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.அரசியல் சாசன விதி 282-ன் கீழ் இத்தகைய அதிகாரத்தை நாடாளுமன்றத்துக்கு அளிக்கிறது என்று குறிப்பிட்ட தலைமை நீதிபதி, இதற்கு தடை விதிக்கமுடியாது என்று குறிப்பிட்டார்.இந்த திட்ட செயல்பாடு முழு திருப்தியளிப்பதாக நீதிமன்றம் கருதுகிறது. இதில் அதிகார பகிர்வு விதி மீறல் ஏதுமில்லை. எனவே இதில் நீதிமன்றம் குறுக்கிட வேண்டிய அவசியம் இல்லை என்றும் நீதிபதி தெரிவித்தார். இருப்பினும் இத்திட்டத்தை மேலும் சிறப்பாகச் செயல்படுத்த சில வழிமுறைகளை வகுக்க வேண்டியது அவசியம் என்று நீதிமன்றம் கருதுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.இந்த திட்டத்தில் முறைகேடு நடப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் அடிப்படையில் இத்திட்டத்தை ரத்து செய்ய முடியாது. நாடாளுமன்றத்தில் உள்ள மாநிலங்களவை மற்றும் மக்களவையின் நிலைக்குழுக்கள் இத்திட்ட செயல்பாடுகளை கண்காணிக்கின்றன. அதில் அங்கிங்கு சிறு மாறுபாடுகள் இருக்கக்கூடும். இருப்பினும் உள்ளூர் மேம்பாட்டுக்கான இத்திட்டம் மூலம் பல பகுதிகளில் குடிநீர் வசதி, நூலகம் அமைத்தல், உடற்பயிற்சி அரங்கு அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றுள்ளன.இத்தகைய தொகுதி வளர்ச்சி நிதியால் குறிப்பிட்ட தொகுதி எம்.பி. தனது அரசியல் செல்வாக்கை அதிகரித்துக் கொள்வதோடு எதிரிகளை ஓரங்கட்ட இது பயன்படுத்தப்படுகிறது என்பதை ஏற்க முடியாது. அதேபோல தொகுதி மேம்பாட்டு நிதியால் செயல்படுத்தப்படும் திட்டங்களை மாவட்ட அதிகாரிகள் கண்காணிப்பதில்லை என்பதையும் ஏற்க முடியாது. இது பொதுமக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட திட்டமாகும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.டிவிஷன் பெஞ்சில் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் மற்றும் நீதிபதிகள் ஆர்.வி. ரவீந்திரன், டி.கே. ஜெயின், பி. சதாசிவம், ஜே.எம். பாஞ்சால் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இத்திட்டத்தை செயல்படுத்தும் ஒப்பந்ததாரர்களிடமிருந்து பணம் கேட்பதாக 2005-ம் ஆண்டில் நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதிலிருந்தே இந்த திட்டம் பெரும் சர்ச்சைக்குள்ளானது.முதன்முதலில் 1999-ம் ஆண்டு இத்திட்டத்தை எதிர்த்து ஜம்மு காஷ்மீரில் உள்ள தேசிய சிறுத்தைகள் கட்சித் தலைவர் பீம் சிங் மற்றும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமும் வழக்கு பதிவு செய்தது. இந்த நிதியைப் பயன்படுத்துவதற்கு எவ்வித வழிகாட்டுதலும் இல்லாததால் எம்.பி.க்கள் இந்நிதியை முறைகேடாகப் பயன்படுத்துகின்றனர் என்று குறிப்பிட்டனர்.2006-ம் ஆண்டு மூன்று பேரடங்கிய டிவிஷன் பெஞ்ச் இந்த பிரச்னையை 5 பேரடங்கிய டிவிஷன் பெஞ்ச்சுக்கு மாற்றியது. இந்த வழக்கில் அப்போது சொலிசிட்டர் ஜெனரலாக இருந்த ஜி.இ. வாஹன்வாதி ஆஜரானார்.
கருத்துக்கள்

தொகுதி நிதியில் மேற்கொள்ளப்படும் திட்ட அறிவிப்புப் பலகையிலும் பெயர்ப்பலகையிலும் தொகுதியின் உறுப்பினர் பெயர் மிகப் பெரிதளவில் விளம்பரத்தப்படுகின்றது. அவ் வுறுப்பினரின் சொ ந்தப்பணத்தில் மேற் கொள்ளப்படும் திட்டம் அல்ல. எனவே, நா.ம./ச.ம. /மாமன்ற உறுப்பினர்களின் பெயர்களைப் பெரிதாகக் குறிப்பிடாமல் தொகுதியின் பெயரை மட்டும் குறித்தால் போதுமானது. நிகழ்ச்சி விவரததில் தொகுதி உறுப்பினர் பெயர் வரும். அதுவே போதுமானது. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/7/2010 2:43:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
ஐ.ஏ.எஸ். தேர்வு முடிவு வெளியீடு: தமிழகத்தைச் சேர்ந்த 127 பேர் தேர்ச்சிசென்னை, மே 6: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (யு.பி.எஸ்.சி.) சார்பில் நடைபெற்ற ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். நேர்காணல் தேர்வில் அகில இந்திய அளவில் 875 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இதில் தமிழகத்தைச் சேர்ந்த 127 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பாக சென்னையைச் சேர்ந்த லலிதா (12-வது ரேங்க்), கனகவல்லி (15-வது ரேங்க்) ஆகிய 2 பேர் முதல் 25 இடங்களுக்குள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். அகில இந்திய அளவில் டாக்டர் ஷாபேசல் என்பவர் முதலிடம் பெற்றுள்ளார். முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ள இவர், ஸ்ரீநகரில் மருத்துவப் பட்டம் பெற்றவர்.தில்லியைச் சேர்ந்த பொறியாளர் பிரகாஷ்ராஜ் புரோஹித் 2-ம் இடம் பிடித்துள்ளார்.இது குறித்த விவரம்:யு.பி.எஸ்.சி. நடத்திய ஐ.ஏ.ஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிக்கான நேர்காணல் முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன. அகில இந்திய அளவில் 875 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 195 பேர் பெண்கள். மேலும், இதில் 30 பேர் மாற்றுத் திறன் படைத்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்களில் 5 பேர் பார்வையற்றவர்களாவர்.சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 127 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 2 பெண்கள் முதல் 25 இடங்களில் இடம்பிடித்து சாதனை புரிந்துள்ளனர். இதில், 15-வது ரேங்க் பெற்ற கனகவல்லி, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-1 தேர்வில் வெற்றிபெற்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக மேம்பாட்டுத் துறையில் பயிற்சி உதவி இயக்குநராகப் பணிபுரிந்து வருகிறார்.திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியைச் சேர்ந்த இவர், 3 முறை சிவில் சர்வீஸ் தேர்வு நேர்காணல் வரைச் சென்றுள்ளார். ஆனால் வெற்றி கிட்டவில்லை. கடைசி முயற்சியாக வீட்டில் இருந்தபடியே படித்த கனகவல்லி, நாட்டிலேயே 15-வது ரேங்க் பெற்றுள்ளார்.சென்னையில் உள்ள அரசு ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் மாதிரி நேர்காணல் பயிற்சி பெற்றேன். டேவிதார், உதயசந்திரன் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் ஆலோசனைகள், நேர்காணலின்போது உதவியாக இருந்தது என்றார் கனகவல்லி.மனிதநேயம் ஐ.ஏ.எஸ்., மையம்: சென்னையில் உள்ள சைதை சா.துரைசாமியின் மனிதநேயம் இலவச ஐ.ஏ.எஸ்., கல்வியகத்தின் மூலம் 83 மாணவர்கள் நேர்காணலுக்குச் சென்றனர். இதில் 43 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அகில இந்திய அளவில் 12-வது ரேங்க் பெற்று சிறப்பிடம் பிடித்த லலிதா, இம்மையத்தில் பயிற்சி பெற்றவர்.முதன்முறையாக தேர்வெழுதிய சண்முகப்ரியா (36-வது ரேங்க்), சிவகுமார் (38-வது ரேங்க்), நிவாஸ் (45-வது ரேங்க்), வினோத்ப்ரியா (62-வது ரேங்க்) ஆகியோர் வெற்றிபெற்றதன் மூலம் சிறப்பு சேர்த்துள்ளனர் என்று மையத்தின் தலைவர் சைதை துரைசாமி, பயிற்சி இயக்குநர் வாவூசி தெரிவித்துள்ளனர்.மேலும், சென்னையில் உள்ள சங்கர் ஐ.ஏ.எஸ்., அகாதெமியில் படித்த சுமார் 50 பேரும், பி.எல்.ராஜ் மெம்மோரியலில் படித்த 22 பேரும், ஃபோகஸ் அகாதெமியில் படித்த செந்தில், சங்கர் கணேஷ் உள்ளிட்ட 15 பேரும், ஸ்டேடஜி அகாதெமியில் படித்த 41 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தேர்ச்சி பெற்றவர்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட மையங்களில் வெவ்வேறு பாடங்களுக்கு பதிவு செய்து படித்திருப்பதால், எண்ணிக்கை மாறுபடும்.

தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கு வாழ்த்துகள். எங்குப் பணியாற்றியானாலும் நேர்மையாகவும் மக்கள் நலப்பணிகளில் கருத்து செலுத்தியும் தமிழ் மொழி,இலக்கிய, நாகரிக, பண்பாட்டுச் சிறப்புகளைப் பரப்பியும் பணியாற்றும் பகுதியின் மொழியைக் கற்றும் ஒப்பிலக்கியத்தில் ஈடுபட்டும் மாமனிதர்களாகப் பணியாற்றுக. உயர் பதவிகளில் செல்லச் செல்ல அடக்கத்திலும் உயர்க. குறுக்கு வழியாளர்களின் செல்வாக்குகளுக்கு இரையாகாமல் நேர்மையானவர்களின் துணைக்கொண்டும் ஆன்றோர்கள் சான்றோரகள் வழிகாட்டினைப் பெற்றும் நாட்டு முன்னேற்றததை உலக அளவில் கொண்டு போகும் வண்ணம் செயலாற்றுக! தினமணி இணைய நேயர்கள் சார்பில் வாழ்த்தும் அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/7/2010 2:33:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

வியாழன், 6 மே, 2010

என் எழுத்தின் மீது இன்னும் நம்பிக்கை இருக்கிறது: முதல்வர் கருணாநிதி"பெண் சிங்கம்' படத்தின் பாடல் குறுந்தகடை கருணாநிதி வெளியிட, பெற்றுக் கொள்கிறார் நடிகர் கமல்ஹாசன். உடன் ஏவி.எம்.சரவணன், இசையமைப்பாளர் தேவா, கவிஞர் வைரம
சென்னை, மே 1: எழுதும் வல்லமை உள்ளதால் என் எழுத்தின் மீது இன்னும் நம்பிக்கை இருக்கிறது என முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். முதல்வர் கருணாநிதி கதை, திரைக்கதை, வசனத்தில் உருவாகியுள்ள புதிய படம் "பெண் சிங்கம்'. இது கருணாநிதியின் 75-வது படம். இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கருணாநிதி மேலும் பேசியதாவது: இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் ஜெயமுருகனும், முருகேசனும் எளிமையானவர்கள். படங்களின் மூலம் நல்ல கருத்தை மக்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணமுடையவர்கள்.÷என் கலையுலக வாழ்க்கையில் தொடக்கத்தில் சில ஏமாற்றங்கள் ஏற்பட்டன. அபிமன்யு, ராஜகுமாரி, மருதநாட்டு இளவரசி போன்ற படங்களின்போது அவை நடைபெற்றன. அதன்பிறகே நிலையான இடம் கிடைத்தது. ஒரு சமயம் என்னுடைய பெயரை தலைப்பில் போட மறுத்தவர்கள், பிற்காலத்தில் நீங்கள் கதை எழுதாவிட்டாலும் உங்கள் பெயரைப் பயன்படுத்திக் கொள்கிறோம் என கூறியதுண்டு. திரைப்படத் துறையில் எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன் ஆகியோரோடு பழகியதையும் உரையாடியதையும் இப்போதும் நினைத்துப் பார்க்கிறேன். கலைவாணரையும் மறக்கவில்லை. கலைவாணர் அரங்கம் பல கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்படவுள்ளது. நான் நீண்ட நாள் வாழ வேண்டும் என கமல், வைரமுத்து, வாலி உள்ளிட்ட பலரும் தெரிவித்தனர். என் மீது அவர்களுக்கு கோபம் ஏன் எனத் தெரியவில்லை. நான் வாழ்ந்தது போதாதா? 86 வயதில் இடையிடையே பட்ட துன்பங்கள் போதாதா? என்னால் இயன்ற அளவு நற்காரியங்களை செயல்படுத்தியுள்ளேன். இளைஞர்களுக்கு வழிவிட்டு நான் விலக நினைத்தாலும் நான் சார்ந்திருக்கும் துறையினர் என்னை விடுவதில்லை.÷நான் சிறுவயது முதல் எழுத்தில் தீராத ஆர்வம் கொண்டிருந்தேன். அதுதான் என்னை இந்த நிலைக்கு உயர்த்தியிருக்கிறது. சில நேரங்களில் என்னை உணராதவர்கள், என் எழுத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள் அன்றும் இருந்தார்கள், இன்றும் இருக்கிறார்கள். ஆனால் நான் தமிழால் உயர்ந்தேன். நான் இந்த அளவுக்கு வளர கலையுலகினரான நீங்கள்தான் காரணம் என்பதை மறக்க முடியுமா? இன்று பலருக்கும் ஏராளமான நன்மைகளைச் செய்ய உத்தரவிடும் அளவுக்கு என் பேனா என்னை உயர்த்தியிருக்கிறது.÷உயிர் காப்பீட்டுத் திட்டங்களின் மூலம் ஆயிரக்கணக்கானோர் பயன் பெற்றிருக்கிறார்கள். அவர்களது குடும்பத்தினரின் வாழ்த்துகளோடும் லட்சக்கணக்கானோரின் வாழ்த்துகளோடும் பணி தொடரும். "பெண் சிங்கம்' படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
கருத்துக்கள்

உங்கள் எழுத்தின் மீது நம்பிக்கை இருக்கின்ற காரணத்தால்தான் தமிழரின் தாய்நிலத்தைமீட்கவும் ஈழத்தமிழர்கள் விடுதலை பெறவும் அதனைப் பயன்படுத்த வேண்டுகிறோம். இடையிடையே துன்பங்கள் பட்டது நீங்கள்மட்டும் அல்லர்; பேரழிவிற்கு ஆளாகி இதுவரை சந்திக்காத துன்பங்கள் அடைந்தது ஈழத்தமிழ் மக்களும்தான். அவர்கள் பேரழிவின்பொழுது கண்டும்காணமால் அல்லது நேரிடையாக அல்லது வாய்வாளாதிருந்து ஒத்துழைத்ததாக உள்ள பழியைப் போக்க எழுத்துக் திறமையைப் பயன்படுத்தி வாழ்வினில் அவர்கள் அடைந்த துயரத்தைப் பழிகளை நீக்கி இருக்கின்ற உயிர்களையாவது காப்பாற்றுங்கள் என வேண்டுகிறோம். உங்கள் எழுத்தாற்றல் தமிழ்ப்பகைக்குத் துணை போகக்கூடாது. தமிழ் வாழ்விற்குத் துணை போக வேண்டும் என விழையும் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/6/2010 1:06:00 PM

பல கோடிகணக்கில் மக்கள் வரி பணத்தை சூறை ஆடிய வெட்கத்துக்கு உரிய இவரை இனியாவது நிம்மதியாக தூங்க இறைவன் அருள் புரியட்டும்

By thamizh
5/3/2010 10:15:00 PM

நீ இலங்கைத் தமிழர்களுக்கு செய்த துரோகத்திற்கு இன்னும் அனுபவிக்க இருக்கு அதை அவர்களும் (கமல், வைரமுத்து, வாலி) ஏனைய தமிழர்களும் பார்க்கவேண்டும் என்று விரும்புகிறார்கள் போலும். செய்த தொரோகம் உன்னையும் உன் சந்ததியையும் சும்மா விட்றுமா என்ன? நீ கதை எழுதிகிட்டே இருக்கிறே ஆனால் படம் பார்க்கத்தான் இப்ப யாரும் வர்றதில்லை. கடைசியா எந்த படம் 100 நாள் ஓடிச்சு?

By வாடா மன்னாரு
5/3/2010 4:57:00 AM

very nice corton,

By somasundaram n
5/2/2010 10:38:00 PM

Who cares about your writings?? It will die with you. You will go down as a man who did nothing to save hundreds of thousands Tamils from a genocide in your period. Let your writings die with you too, we dont want our children to read it.

By Anton
5/2/2010 4:43:00 PM

உன் எழுதில் யாருக்கும் நம்பிக்கை இருக்கலாம் ஆனால் எனக்கு உன்மேல் நபிகையே இல்லை

By Natraj
5/2/2010 12:00:00 PM

very good

By p. Sekar
5/2/2010 11:38:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
மரியாதை இல்லாத கூட்டணி தேவையில்லை: கார்த்தி சிதம்பரம்திண் ​டுக்​கல்,​​ மே 4:​ தமி​ழகத்தில் குறைந்தது 78 சட்டப் பேரவைத் தொகுதிகள் வரும் தேர்தலில் காங்கிரஸýக்கு ஒதுக்கப்பட வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி ப.​ சிதம்பரம் கேட்டுக் கொண்டார்.÷இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் வெற்றிபெற்ற நிர்வாகிகளுக்கு திண்டுக்கல்லில் திங்கள்கிழமை நடைபெற்ற பாராட்டுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:÷ஆட்சிக்கு வர வேண்டும் என்ற ஆசை மட்டும் இருந்தால் போதாது.​ அதற்கேற்ற திட்டத்தை வகுத்துச் செயல்படுத்த வேண்டும்.​ ​÷நியமனம் செய்யப்படும் பழக்கத்தை மாற்றி,​​ ஜனநாயக அடிப்படையில் தேர்தல் நடத்தி பொறுப்பாளர்களைத் தேர்வு செய்துள்ளதால் புரட்சி என்ற பட்டம் ராகுல் காந்திக்கு மட்டுமே பொருந்தும்.÷கல்வியின் மூலம்தான் சமுதாயத்தை உயர்த்த முடியும் என்பதனால்,​​ கல்விக் கடனை வழங்கி வருகிறோம்.​ ஆனால்,​​ கல்விக் கடன்,​​ தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி அளிப்பு என பல திட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தாலும்,​​ அதில் காங்கிரஸ் கட்சியின் பெயர் தெரிவதில்லை.​ ​÷வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி,​​ காப்பீட்டுத் திட்டம் என்று மாநில அரசு தனது கட்சியின் பெயர் தெரியும் வகையில் நலத் திட்ட உதவிகளை வழங்கி வருகிறது.​ ஏதோ மாநில அரசுதான் எல்லா நலத் திட்ட உதவிகளையும் செய்வது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள்.÷இதுபோன்ற திட்டங்களை காங்கிரஸ்தான் செயல்படுத்தி வருகிறது என்பதை இளைஞர் காங்கிரஸôர் ஊர் ஊராகப் பிரசாரம் செய்ய வேண்டும்.​ அப்போதுதான் மக்களின் ஆதரவு கட்சிக்குக் கிடைக்கும்.÷தேர்தல் கூட்டணி அமைத்து ஆட்சிக்கு வந்த கட்சியினை அப்படியே வழிமொழியத் தேவையில்லை.​ அனைத்தையும் ஆமோதிப்பதாக இருந்தால்,​​ கூட்டணி கட்சியைப் பிரதிபலிப்பதாக இருந்தால்,​​ நாம் தனிக் கட்சி நடத்த வேண்டிய அவசியமில்லை.​ ​÷தற்போது நிலவி வரும் மின் தட்டுப்பாடு குறித்து விவாதிக்க வேண்டும்.​ ஆட்சிக்கு ஆதரவுதானே தவிர,​​ ஆட்சியில் பங்கு இல்லை.​ எனவே,​​ ஆளும் கட்சியின் தவறை சுட்டிக் காட்டுவதும்,​​ சிறப்பான திட்டங்களைப் பாராட்டுவதும் தவறில்லை.÷தி.மு.க. ​ -​ காங்கிரஸ் கூட்டணி தொடர வேண்டும் என்பதே எனது விருப்பம்.​ ​ ​வரவிருக்கும் சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸýக்கு குறைந்தது 78 தொகுதிகளாவது ஒதுக்கப்பட வேண்டும்.​ ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் 2 இடங்களில் காங்கிரஸ் போட்டியிட வேண்டும்.​ மரியாதை இல்லாத கூட்டணி காங்கிரஸýக்கு இனி தேவையில்லை என்றார் அவர்.
கருத்துக்கள்

காங்கிரசிற்குத்தான் தமிழ்நாட்டில் மரியாதை இல்லையே! வேறு எங்காவது ஓடிவிடவேண்டியதுதானே! இன்னும் தமிழ் மக்கள் குருதியைக் குடிப்பது ஏனோ? இன்னொரு கோவன் ஆக உருவாகி அரசியல் வாழ்வைக் கெடுத்துக் கொள்ள வேண்டா. அரசியலில் மரியாதை என்பது என்ன? தன் விருப்பத்திற்கு ஏற்பக் கட்சித் தலைமை நடக்க வேண்டும் என்பதுதான். இந்திரா காந்தி காலத்தில் சிவகங்கையில் போட்டியிடும் வாய்ப்பு தராத பொழுது-தனக்கு மரியாதை இல்லை எனக்- கட்சியை வி்ட்டு வெளியேறினார் அப்பா சிதம்பரம். அண்மையத் தேர்தலில் மக்கள் தோற்கடித்த பின்பும்,தனக்கு மரியாதை இல்லை என அரசியல் துறவறம் போகாமல் குறுக்கு வழியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கச் செய்து அமைச்சராகவும் திகழ்கிறார் அதே அப்பா சிதம்பரம். கூட்டணியைத் தலைமையைத் தாக்கிப் பேசிவி்ட்டு அதே தலைமையுடன்தான் கூட்டணி என முடிவானதும் காலில் விழுந்து பாராட்டி இடம் கேட்பதும் காங்.கின் மரியாதைப் பண்புதான். வன்முறையும் இழிமுறையும் கால்கள் எனக் கொண்டு இயங்கும் கட்சியில் இருநது கொண்டு மரியாதை பற்றிப் பேசி செல்வாக்கு தேட எண்ணுபவர்கள் மறைந்து ‌போவார்கள்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By ilakkuvanar Thiruvalluvan
5/6/2010 2:28:00 AM

Hahaha...Semma Comedy da Kaarthi..koppan eppadi yeyithaan enpathu unakku gyabagam irukkirathaa????....

By R.Babu
5/5/2010 4:44:00 PM

KARTHI CHIDAMPARAM SHOULD KNOW THAT THERE IS NO CONGRESS IN TAMILNADU WITHOUT DMK OR AIADMK.BUT THE PAST EXPERIENCE PROVED THAT DMK ALLAIANCE IS ALWAYS BETTER FOR THEM.

By h .selvaraj
5/5/2010 4:43:00 PM

புதன், 5 மே, 2010

தமிழினத்திற்கு அதிகமான தலைவர்கள் தேவையில்லை சிறந்த தலைமைத்துவமே வேண்டும் – பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி

மலேசியத் தலைநகர் அம்பாங்கில் உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டின் எழுச்சி முகாம் சந்திப்புக் கூட்டத்தில் உரையாற்றிய பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி.இராமசாமி தமிழினத்திற்கு அதிகமான தலைவர்கள் தேவையில்லை சிறந்த தலைமைத்துவமே வேண்டும் என்றார்.

உலகத் தமிழினத்திற்கு முற்போக்குச் சிந்தனை மிகவும் அவசியமாகும். அதேவேளை சிந்தனைப் பரிமாற்றங்களை உலகளாவிய நிலையில் உள்ள தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட வேண்டும் தமிழினத்திற்கு அதிகமான தலைவர்கள் தேவையில்லை.சிறந்த தலைமைத்துவமே வேண்டும் என்று பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி.இராமசாமி கூறினார்.

உலக தமிழர் பாதுகாப்பு இயக்கத் தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி தெரிவிக்கையில் உலகெங்கும் வாழ்கிற தமிழர்களுக்குச் சொந்த நாடும் அரசாங்கமும் இல்லாதது பெரும் குறையாகும், இலங்கைத் தமிழர்கள் கொடூரமாக நடத்தப்படுகிறார்கள். இதனைக் கண்டு ஐக்கிய நாட்டு நிறுவனம் மெளனம் சாதிக்கிறது. மூன்று லட்சம் தமிழர்கள் நிலை குறித்து உலக நாடுகள் கவலைப்படுவதாகத் தெரியவில்லை என்றார். தமிழர்களுக்குச் சொந்த நாடு வேண்டும் என்று போராடிய தலைவனின் தாயாருக்கு மருத்துவம் பார்க்கக்கூட அனுமதி இல்லை.இந்த அவலம் கண்டு மனம் வேதனைப்படுகிறது.

6 கோடி மக்களால் 3 லட்சம் மக்களைக் காப்பாற்ற முடியாமல் போனது வேதனை மிக்க கொடுமையாகும் என்று டாக்டர் கிருஷ்ணசாமி குறிப்பிட்டார்.

நாட்டின் பல பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பேராளர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம். குலசேகரன்.சுங்கை சட்டமன்ற உறுப்பினர் ஏ.சிவநேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

(Visited 72 times, 72 visits today) }


உலகத்தலைமைப் பொறுப்பை ஏற்பதற்கு முற்றிலும் தகுதியுடையவர் முனைவர இராமசாமி. தமிழக மக்கள் கட்சித்தலைமைகளிடமும் கலையுலகினரிடமும் கொத்தடிமைகளாக உள்ளனர். அவர்களை நம்பினால் எப்பயனும விளையாது. எனவே, உணர்வும் ஆற்றலும் மிக்க முனைவர் இராமசாமி உலகத தமிழர்களை ஒன்றிணைத்துத் தாய்மண் விடுதலைக்கு வழி வகு்கக வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்.

தமிழின அழிப்பின் ஓராண்டுக் கொண்டாட்டங்களில் யாழ் வவுனியாவில் தமிழக சின்னத்திரையினர்

கடந்த ஆண்டு வன்னியில் மேற்கொள்ளப்பட்ட மிகப் பாரிய இன அழிப்பு நடவடிக்கை நடைபெற்று ஆண்டு ஒன்று நிறைவடைந்து வருகின்ற இந்த மாதத்தில் தமிழகத்தின் சின்னத்திரை நட்சத்திரங்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்திற்காக யாழ்ப்பாணம், வவுனியா வருகின்றனர் என்ற செய்தி தாயக மக்களை மிகக் கவலைக்குள் தள்ளியுள்ளது.

வன்னி அழிப்பின் ஓராண்டினை பாரிய விழாக்களாக ஏற்பாடு செய்து சிங்கள அரசு முன்னெடுத்துவருகின்ற நிலையில் அதன் ஒழுங்குபடுத்தலில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்படாடு செய்யப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில் இந்திய திரைப்படங்களை உலக கவனத்திற்கு கொண்டு செல்லும் நோக்கோடு நடாத்தப்படும் சர்வதேச இந்திய திரைப்பட விருதுகள் வழங்கும் (International Indian Film Academy – IIFA Awards) விழாவினையும் இலங்கையில் நடத்த சிங்கள அரசு மேற்கொண்ட முயற்சி கைக்கூடியுள்ளது.

ஆனாலும் அந்த நிகழ்வினை தமிழ் உணர்வுள்ள தமிழக திரைத்துறையினர் தமது நலனினை தூக்கியெறிந்து புறக்கணித்துள்ளனர். இதேபோன்று தமிழக அரசியல் தலைவர்களும் இந் நிகழ்வினை இலங்கையில் நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு நடவடிக்கைகளையும் முன்னெடுத்தனர்.

ஆனால் தமிழ் மக்கள் தமது உயிர்களை பல்லாயிரக்கணக்கில் பறிகொடுத்த வடக்கு மண்ணில் அந்த பலி கொடுப்பின் ஓராண்டு நிறைவு நடக்கும் அதே மாதத்தில் சிங்கள அரசு மேற்கொள்ளும் கேளிக்கை நிகழ்வில் பங்குகொள்ள தாய்த் தமிழகத்தில் இருந்து சின்னத்திரை நட்சத்திரங்கள் படை எடுத்திருப்பது தாயக மக்கள் மனங்களில் வேதனையைத் தோற்றுவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள தமிழ் உணர்வாளர்களுக்கும், திரைத்துறையினருக்கும் தெரியாமலேயே இந்தநிகழ்வில் பங்கெடுக்க சின்னத்திரையினர் இலங்கை வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து தமிழகத்தின் தமிழ் உணர்வாளர்களும், திரைத்துறையினரும் தலையிட்டு உடனடியாக இந்நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ள சின்னத்திரையினரை தடுத்து நிறுத்தி ஆவன செய்வதுடன், இலங்கைத் தமிழர்களின் வலி சுமந்த மாதமாக நினைவுகூரவுள்ள மே மாதத்தில் அவர்களின் வேதனையிலும் பங்குகொள்ள முன்வருவார்களா?

(Visited 177 times, 177 visits today) }
You can leave a response, or trackback from your own site.பல்லாயிரக்கணக்கான மக்களை வஞ்சக முறைகளில் கொன்று இனப்படுகொலை புரிந்த நாளை மீதுயர் நாள் எனத் துயரமாக நினைவில் கொள் ள வேண்டும். இதனை மீறி ஆட்டம் பாட்டங்களில் ஈடுபடுபவர்களும் அத்றகென இங்கிருந்து வருபவர்களும் மனிதப் பிறவிகள் அல்லர். இவர்களைஅடையாளம கண்டு வாய்ப்பு வரும் பொழுது சிறையில தள்ளுங்கள். இன்றைய நிலையில் இவரக்ளையும நிகழ்ச்சிகளையும் புறக்கணியுங்கள். உணர்வுள்ளவர்கள் மே 18ஆம் நாளைத் தாய்மண் விடுதலை ஈகிகள் நாள் எனக் கொண்டாடுவோம். களத்திலும் நிலத்திலும் போர்முனையிலும் தத்தம் மனையிலும் வீர மரணம் அடைந்தவர்களுக்கு வீர வணக்கம் செலுத்துவோம். வெல்க தமிழ் ஈழம்! வீரர்கள் விதைத்த விளை நிலம் விடுதலை பெறும் விரைவில்! தமிழ்ஈழத் தேசிய ஞாலத் தலைவர் மேதகு பிரபாகரன் புகழ் ஓங்குக! அவர் தலைமையில விரைவில் ஈழக் குடியரசு அமைக! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
Thiruvalluvan. I. 5/5 5:43am இந்த இடுகையை நீக்கு

நுரை பொங்கப் பாயும சாயக் கழிவு! விழிக்குமா தமிழகம்!

தொடரும் பாசிச நெடும்பயணம்...மிகச்சிறந்த நீதிபதிகளும் சட்ட நுணுக்கங்களில் துறைபோகிய வழக்கறிஞர்களும் சென்னை உயர் நீதிமன்றத்துக்குப் பெரும்புகழை ஈட்டிக்கொடுத்திருக்கிறார்கள். இந்தியாவில் உள்ள பிற உயர் நீதிமன்றங்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்த பெருமைக்குரிய சென்னை உயர் நீதிமன்றம் இன்று சிறுமைப்பட்டுக் கிடக்கிறது. உயர் நீதிமன்ற வளாகத்துக்குள்ளேயே நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் காவல்படையினாலும், கட்சிக் குண்டர்களாலும் மிருகத்தனமாகத் தாக்கப்படுகிறார்கள். உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் சுதந்திரமாகச் சென்றுவரவே அனைவரும் அஞ்சும் நிலை உருவாகிவிட்டது.கடந்த 25-4-10 அன்று உயர் நீதிமன்றத்தில் அம்பேத்கரின் சிலை திறப்பு விழா நடைபெற்றது. சென்னை உயர் நீதிமன்றத்தில் 15,000-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களும் இதர அலுவலர்களும் பணியாற்றி வருகிறார்கள். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி, முதலமைச்சர், சட்ட அமைச்சர் ஆகியோர் கலந்து கொள்ளும் இதுபோன்ற விழாவில் சில ஆயிரம் வழக்கறிஞர்களாவது பங்கேற்றிருக்க வேண்டும். ஆனால் அன்றைய விழாவில் 50-க்கும் குறைவான வழக்கறிஞர்கள் மட்டுமே பங்கேற்றனர். மிகப்பெரும்பாலான வழக்கறிஞர்கள் விழாவைப் புறக்கணித்துவிட்டனர்.உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் நடக்கும் விழாக்களில் கலந்து கொள்ளும் வழக்கறிஞர்களின் அடையாள அட்டை பரிசோதிக்கப்பட்டே அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், அன்றைய தினம் இந்தப் பரிசோதனையை நடத்தாமல் காவல்துறையினர் அமைதி காத்தனர். வழக்கறிஞர்கள் அல்லாத பலர் இவ்விழாவில் பங்கேற்பதற்கு வசதியாகவே இவ்வாறு செய்யப்பட்டதாகக் கருதப்படுகிறது.கடந்த 19-02-09 அன்று நீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகளும் வழக்கறிஞர்களும், காவல்துறையினரால் தாக்கப்பட்ட நிகழ்ச்சிக்குப் பிறகு முதல்முறையாக முதலமைச்சர் உயர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்குகொள்ள வருகை தந்தார். எனவே, காவல்துறைத் தலைவர் உள்பட உயர்காவல் அதிகாரிகள் மற்றும் சீருடை அணியாத ஏராளமான காவலர்களும் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.முதலமைச்சர் பேசத்தொடங்கியதும் மனித உரிமைப் பாதுகாப்புக் குழு என்ற அமைப்பைச் சேர்ந்த ஐந்தாறு வழக்கறிஞர்கள் தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் கருப்புக்கொடி காட்டினார்கள். விரல்விட்டு எண்ணக்கூடிய இவர்களை அங்கிருந்த காவல்படை எத்தகைய அமளியும் இல்லாமல் அப்புறப்படுத்தியிருக்கலாம். ஆனால் காவல்துறைத் தலைவர் உள்பட சீருடையில் வந்திருந்த காவலர்களும், சீருடை அணியாமல் வந்திருந்த ஏராளமான காவலர்களும் எவ்வித நடவடிக்கையிலும் ஈடுபடாமல் அமைதி காத்தனர்.ஆனால் திட்டமிட்டு உள்நுழைந்திருந்த தி.மு.க. ஆதரவாளர்கள் அந்த ஐந்தாறு பேர் மீது பாய்ந்து காட்டுமிராண்டித்தனமானத் தாக்குதல் தொடுத்தனர். அதுமட்டுமல்ல, நாற்காலிகள் வீசப்பட்டன. இந்தத் தாக்குதலைப் படம்பிடிக்க முயன்ற ஊடகக்காரர்களின் கேமராக்கள் பறித்தெடுக்கப்பட்டு உடைக்கப்பட்டன. கேமராக்காரர்களும் தாக்குதலுக்குத் தப்ப முடியவில்லை. அவர்களுக்கு ஆதரவாக வந்த செய்தியாளர்களும் தாக்கப்பட்டனர்.உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி, முதலமைச்சர் உள்ளிட்டவர்கள் கண்முன்னாலேயே நடைபெற்ற இந்தத் தாக்குதலை காவல்துறை முழுமையாக வேடிக்கை பார்த்தது. காவல் துறையின் செயலற்ற தன்மை இத்துடன் நிற்கவில்லை. படுகாயமடைந்த வழக்கறிஞர்கள் மீது கொலைமுயற்சி உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்குகளைப் பதிவு செய்த காவல்துறை தாக்குதலுக்குள்ளான செய்தியாளர்களின் புகாரைப் பதிவு செய்யவே மறுத்தது.செய்தியாளர்கள் எழும்பூரில் உள்ள காவல்துறை ஆணையர் அலுவலகத்துக்குச் சென்று உயர்அதிகாரிகளைச் சந்தித்து முறையிட நடைபெற்ற முயற்சிகளும் வெற்றிபெறவில்லை. எனவே அனைத்து செய்தியாளர்களும் ஒன்றுதிரண்டு முதலமைச்சர் இல்லத்துக்குச் சென்று ஆர்ப்பாட்டம் செய்வதாக முடிவெடுத்ததன் காரணமாக மாலை 6 மணியளவில் புகார் பதிவு செய்யப்பட்டு, முதல் தகவல் அறிக்கையின் நகல் வழங்கப்பட்டது.அது மட்டுமல்ல, உயர் நீதிமன்றத்தில் நடந்த இந்தத் தாக்குதல் நிகழ்ச்சி குறித்து பெரும்பாலான ஊடகங்களிலோ, பத்திரிகைகளிலோ எத்தகைய செய்தியும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.தி.மு.க. குண்டர்களால் தாக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வழக்கறிஞர்களை காவல்துறை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திக் கைதுசெய்து இழுத்துச் சென்றது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களை இவ்வாறு செய்வது சட்டவிரோதம் மட்டுமல்ல, மனிதநேயமற்றதுமாகும்.கருப்புக்கொடி காட்டிய விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரை காவல்துறை அப்புறப்படுத்தியிருந்தால் இந்தப் பிரச்னை வந்திருக்காதே என்று ஓர் உறுப்பினர் குறிப்பிட்டபோது முதலமைச்சர் கருணாநிதி அளித்த பதில் பல தகவல்களை அம்பலப்படுத்திவிட்டது.உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் காவல்துறையினர்தான் வரக்கூடாதே என முதலமைச்சர் பதிலளித்திருக்கிறார்.காவல்துறையினர் வரமுடியாத நிலையில்தான் தி.மு.க. குண்டர்கள் உள்ளே கொண்டுவரப்பட்டார்கள் என்பதை முதலமைச்சர் மறைமுகமாக ஒப்புக்கொண்டிருக்கிறார்.தனக்கு வழக்கறிஞர்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பும் என்பதை உணர்ந்தே அந்த எதிர்ப்பை அடக்குவதற்கு கழகத் தொண்டர்களை பயன்படுத்த வேண்டும் என்று முன்கூட்டியே திட்டமிட்டுள்ளது அம்பலமாகியுள்ளது. ""நான்கைந்து பேர் முதல்வருக்குத் திருட்டுத்தனமாக கருப்புக்கொடி காட்டுவார்கள். அதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க வேண்டுமா, தி.மு.க.வினருக்கு உணர்ச்சி கிடையாதா, மானமுள்ளவன் இல்லையா, இரண்டு தட்டு தட்டமாட்டானா'' என்று தலைமை நீதிபதிகள் முன்னிலையில் வழக்கறிஞர்களைத் தாக்கியதை நியாயப்படுத்தும் வகையில் சட்ட அமைச்சர் பேசுகிறார்.ஜனநாயகத்தில் ஆட்சியாளருக்கு கருப்புக்கொடி காட்டுவதென்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு முறையாகும். இந்தியாவில் முதல்முதலாக பிரிட்டிஷ் அரசின் சார்பாக அனுப்பப்பட்ட சைமன் கமிஷன் வந்தபோது காங்கிரஸின் சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டங்கள் இந்தியா முழுவதும் நடைபெற்றன. ஆங்கிலேய அரசு அதை அனுமதித்தது.பிரதமர் நேருவுக்கு எதிராக தி.மு.க. கருப்புக்கொடி காட்டியதை முதலமைச்சரே குறிப்பிட்டிருக்கிறார். பிரதமருக்கு மட்டுமல்ல, தமிழகம் வந்த மத்திய அமைச்சர் பலருக்கும் எதிராக தி.மு.க. கருப்புக்கொடி காட்டியது. அப்போதெல்லாம் சட்டம் ஒழுங்கு மீறப்படும் கட்டத்தில் கருப்புக்கொடி காட்டியவர்களை கைது செய்து அப்புறப்படுத்தியுள்ளது. ஆனால் நேருவுக்கே கருப்புக்கொடியா என்று காங்கிரஸ்காரர்கள் கொதித்தெழுந்து தி.மு.க. தொண்டர்களுக்கு எதிராக தாக்குதல்களை ஒருபோதும் நடத்தவில்லை.ஆட்சியில் இருப்பவர்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் குறிப்பிட்ட பிரச்னைகளுக்காக கருப்புக்கொடி ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது மரபு. எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களுக்கு எதிராகக் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவது இதுவரை இல்லாத மரபாகும்.1978-ம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தமிழகம் வந்தபோது அவருக்கெதிராக தி.மு.க. கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் அவரை மதுரையில் கொலை செய்ய முயன்றது என்பது மறைக்க முடியாத வரலாறு ஆகும். அந்தக் கொடூரத் தாக்குதலில் இருந்து அவரைக் காப்பாற்றியவன் என்ற முறையில் இதை நான் சொல்கிறேன். இவ்வாறு தாக்கிய தி.மு.க.வினருக்கு எதிராக எதிர்த்தாக்குதல்களை நாங்கள் நடத்தவில்லை.ஆட்சிக்கு வருவதற்கு முன் அறிஞர் அண்ணா கலந்துகொண்ட ஒரு கூட்டத்தில் அவருக்கு முன் தி.மு.க.வின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான என்.வி. நடராசன் காங்கிரஸ் அமைச்சர்களை கல்லால் அடிக்க வேண்டும் என்று பேசியபோது அண்ணா உடனடியாக எழுந்து பகிரங்கமாக அவரைக் கண்டித்ததோடு மன்னிப்பும் கேட்க வைத்தார்.ஜெர்மனியில் தனக்கு எதிரான கருத்துக்கொண்டவர்களையும், யூதர்களையும் காவல்படையை வைத்து இட்லர் ஒடுக்கவில்லை. மாறாக, நாஜிக் கட்சியைச் சேர்ந்த எஸ்.எஸ். படை என்ற குண்டர் படையை வைத்து சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டவர் இட்லர். அதனால்தான் நாஜிகள் பாசிஸ்ட்டுகள் என்று வர்ணிக்கப்பட்டனர்.தனக்கு எதிராகக் கருப்புக்கொடி காட்டிய ஐந்தாறு பேரைத் தாக்குவதற்கு முயன்ற தனது கட்சிக்காரர்களைத் தடுத்து அமைதி காக்கும்படி வேண்டுகோள் விடுத்திருந்தாலோ அல்லது காவல்படையினரை வைத்து அந்தச் சிறு கும்பலைப் பத்திரமாக வெளியே அனுப்ப முதலமைச்சர் ஆணை பிறப்பித்திருந்தாலோ அவருடைய மதிப்பு உயர்ந்திருக்கும்.தமிழ்நாட்டில் ஜனநாயகத்தையும் தனிநபர் சுதந்திரத்தையும் நிலைநாட்டுவதற்காக எண்ணற்ற தலைவர்கள் தங்கள் வாழ்வை முழுமையாக அர்ப்பணித்திருக்கிறார்கள். அவர்கள் எழுப்பிய ஜனநாயக மாளிகையை கருணாநிதியின் பாசிசப் படை தகர்க்க முயல்கிறது என்பதைத்தான் உயர் நீதிமன்ற நிகழ்வுகள் வெளிப்படுத்துகின்றன.
கருத்துக்கள்

வன்முறையால் துன்புற்ற கட்சிகள் வாய்ப்பு வரும்பொழுது வன்முறையையும் ஆயுதமாகக் கொண்டனர் என்பதே உண்மை. எல்லா வகை வன்முறைகளும் அடக்குமுறைகளும் ஒழிய விரும்பும் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/5/2010 5:08:00 AM

இச்செயதி இருட்டடிப்பு செய்யப்பட்டதுடன் வெளிவந்த செய்திகளும் ஏதோ கருப்புக் கொடி காட்டியவர்கள வன்முறையி்ல ஈடுபட்டது போன்ற முறையில்தான் வெளிவந்தன. எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்கள் சிலரின் கருப்புக்கொடிக்கும மதிப்பளித்திருக்கலாமே தவிர அஞ்சி அடக்குமுறையில் ஈடுபட்டிருக்கக்கூடாது. ஒருவேளை கருப்புக் கொடி காட்டடியதைத் தனக்கு இழைக்கப்பட்ட பெருத்த அவமானமாக முதல்வர் கருதினாரோ எனத் தெரியவில்லை. எவ்வாறிருப்பினும் அடக்குமுறைக்கு எதிரான உரிமைக் குரலையும் அடக்கி ஒடுக்குவது தவறுதான். அதே நேரம் காங்கிரசுக்காரர்கள் வன்முறையற்றவர்கள் என்ற தொனியில் நெடுமாறன் எழுதியுள்ளதும் தவறுதான். அனைத்துக் கட்சிகளின் வன்முறைக்கும் அரச வன்முறைகளுக்கும் ஆசானே காங்கிரசுக்கட்சிதான். வன்முறைக்கட்சியில் இருந்தவர் என்ற முறையில் அவருக்கே இது நன்றாகத் தெரியும். தான் வன்முறையாளன் அல்லன் என நிறுவுவதற்காகத் தான் சார்ந்திருந்த வன்முறைக்குப்பிறப்பிடமான கட்சியை வன்முறையற்ற கட்சியாகப் பொய்யாக எழுதுவதும் ஒரு வகையில் அடக்குமுறைக்குத் துணை போவதே. வன்முறையால் துன்புற்ற கட்சிகள் வாய்ப்ப வரும்பொழுது வன்முறையையும் ஆயுதமாகக் கொண்டனர் என

By Ilakkuvanar Thiruvalluvan
5/5/2010 5:07:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
இலங்கை தமிழ்ப் பத்திரிகையாளருக்கு அதிபர் ராஜபட்ச பொது​ மன்​னிப்புகொழும்பு, ​​ மே 3:​ இலங்கை தமிழ்ப் பத்​திரிகையாளர் ஜெய பிரகாஷ் சிற்றம்பலம் திசைநாயகத்துக்கு பொது மன்னிப்பு வழங்கினார் அதிபர் மகிந்த ராஜபட்ச.
.இத்தகவலை அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் பெரிஸ் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.உலக பத்திரிகை சுதந்திர தினத்தை முன்னிட்டு திசைநாயகத்துக்கு மன்னிப்பு வழங்க முடிவெடுத்தார் ராஜபட்ச என்று பெரிஸ் தெரிவித்தார்.திசைநாயகத்தை மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது இலங்கை பத்திரிகையாளர்கள் மட்டுமல்லாது உலகம் முழுவதும் வாழும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.​ ராஜபட்சவின் முடிவை பத்திரிகையாளர்கள் வரவேற்றுள்ளனர்.இலங்கையில் அரசை விமர்சித்தும்,​​ விடுதலைப் புலிகளின் செயலை ஆதரித்தும் பத்திரிகையில் எழுதியதாக திசைநாயகம் கைது செய்யப்பட்டார்.​ பத்திரிகையில் கட்டுரைகளை எழுதி பயங்கரவாதத்தை ஊக்குவித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஆகஸ்ட் 31,​ 2009-ல் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.திசைநாயகம் மீது தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம்,​​ அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டது.​ நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு உலகம் முழுவதும் வாழும் தமிழர்களும்,​​ பத்திரிகையாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.மகிந்த ராஜபட்ச தலைமையிலான அரசு பத்திரிகை சுதந்திரத்தை நசுக்குவதாக பத்திரிகையாளர்கள் குற்றம்சுமத்தினர்.​ திசைநாயகத்தை விடுவிக்க வேண்டும் என்றும் தொடர்ந்து குரல் கொடுத்துவந்தனர்.இந்நிலையில் திசைநாயகத்துக்கு அதிபர் மகிந்த ராஜபட்ச பொது மன்னிப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்கள்

உலகின் குரல்களுக்குக் கொடுங்கோலனும் (வேறு பின்னணி எதுவும் இருந்தாலும்)பணிந்துள்ளான். ஈழ மக்கள் விடுதலைக்கான உலகின்குரல்கள் இன்னும் வலுவாக ஒலிக்க வேண்டும். திசைநாயகத்தின் தொண்டு மேலும் தொடரட்டும்! வெல்க தமிழ் ஈழம்! ஓங்குக மனித உரிமை!

(மே 3 இல் இச்செய்தி வெளியிடப் பெற்று இக்குறிப்பும் இடம் பெற்றிருந்தது. இப்பொழுது அதே செய்தியை மே 4 இல் வெளியிடுவதாகக் குறிப்பிட்டு இக் கருத்து நீக்கப்பட்டுள்ளனது ஏன்? தினமணிக்கு என்னவாயிற்று?)

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/5/2010 4:36:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *